01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.
சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது விலைக்கு வாங்குவதற்கோ ‘HBA (House Building Advance)’ எனப்படும் முன்தொகை, கடனாக அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த முன்தொகை பெறுவதற்கு ரூ.30 லட்சமாக இருந்த சொந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்தொகை கடனுக்கு 9.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இந்த வட்டிவிகிதம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கப்பட்டு வந்தது. இதை சற்று தளர்த்தி இருவரில் ஒருவர் பெயரில் அல்லது இருவரது பெயரிலும் கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சொந்த வீட்டுக்காக ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பணியாளர்கள், முன்தொகையான ரூ.25 லட்சம் அன்றி வங்கியிலும் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் தங்கள் வீடுகளின் பத்திரங்களை அடமானமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' விடம் கூறும்போது, ''மத்திய அரசுப் பணியாளர்கள் சொந்தமாக வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் அரசிடம் பெறும் கடனுக்கான தவணைத் தொகை, தனியார் வங்கிகளை விடக் குறைவு என்பதே அதற்கானக் காரணம்.சொந்த வீடு வாங்குவதற்கான முன்தொகை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. எனவே தற்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அதை விரிவுபடுத்த அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 34 மடங்கு அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனாக அளிக்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடுகட்ட அதன் விலையில் 80 சதவீதம் வரை முன்தொகை அளிக்கப்படுகிறது. இதில் கட்டப்படும் வீடு கிராமப்புறத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி
இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது .மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும். அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit) வசதி செய்யப்பட்டுள்ளது
சென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.
மத்திய அரசின், 'நீட், ஜே.இ.இ.,' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, அரசு பள்ளி மாணவர்களுக்கு,தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.நடவடிக்கை : முதற்கட்டமாக, சென்னை உட்பட, 100 இடங்களில், இந்த பயிற்சி துவக்கப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 25 இடங்களில் பயிற்சியைதுவங்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.பொது தேர்வில் தரப்பட்டியல் ஒழிப்பு, எஸ்.எம்.எஸ்., வழியே தேர்வு முடிவு அறிவித்தல், பிளஸ் 1க்கு பொது தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 2,373 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புதல் என, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.இந்த பயிற்சி திட்டத்தில், 73 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, பயிற்சி நடக்கும்.தேர்வு விடுமுறை மற்றும் பொது தேர்வு விடுமுறையில், தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மொத்தம், 30 புத்தகங்கள் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பு : இந்த பயிற்சிக்கு, 'ஸ்பீட் அகாடமி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. முதலில், 100 மையங்கள் திறக்கப்படுகின்றன; பின், கூடுதலாக, 312 மையங்கள் திறக்கப்படும்.நாங்கள் தரும் இலவச பயிற்சியை பெற்று, நீங்களும் முயற்சித்து, மத்திய அரசின் எந்த தேர்வானாலும், அதில், தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர்பேசினார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''மத்திய அரசு எத்தனை நுழைவு தேர்வுகளை நடத்தினாலும், அதை தகர்த்தெறிந்து, தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், இந்த திட்டத்தில் பயிற்சிஅளிக்கப்படும்.''வகுப்பில் மட்டுமல்ல, வீட்டிலும் பயிற்சி பெறும் வண்ணம், பயிற்சி வகுப்புகள் அடங்கிய, சி..,யும், மாணவர்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், மாணவியர் பங்கேற்றனர்.'ஜெட் வேகத்தில் கல்வித்துறை' - துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், தற்போதைய போட்டி தேர்வு பயிற்சியும், மாணவர்களை முன்னேற்றும்.பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஜெட் வேகத்தில், துறையில் வளர்ச்சிபணிகளை மேற்கொண்டு வருகிறார்,'' என்றார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்
தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட,79.69 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.இந்தாண்டு, அக்., 31 வரையிலான, பதிவு விபரங்களை அரசு, வெளியிட்டுள்ளது.
இவர்களில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.35 லட்சம்; கல்லுாரி மாணவர்கள், 30.60 லட்சம் பேரும் உள்ளனர். 35 முதல், 56 வயதிற்குஉட்பட்டோர், 11.57 லட்சம்; 57 வயதிற்கு மேற்பட்ட, 5,685 பேரும் உள்ளனர். கலைப் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், 4.56 லட்சம்; அறிவியலில் பட்டம் பெற்றவர்கள், 6.06 லட்சம்; வணிகவியலில் பட்டம் பெற்றவர்கள், 3.27 லட்சம்; இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், 3.90 லட்சம்; பொறியியல் பட்டம் பெற்றவர்கள், 2.44 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர்.
மருத்துவம் படித்தோர், 3,680 பேர்; முதுகலை பட்டதாரிகள், 798; வேளாண்மை இளங்கலை பட்டதாரிகள், 5,683; முதுகலை பட்டதாரிகள், 595; இளங்கலை சட்டம் படித்தவர்கள், 1,287; முதுகலை சட்டம் படித்தவர்கள், 219; இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தோர், 1,287; முதுகலை முடித்தோர், 181 பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
குரூப் - IV (CCSE -IV) தேர்வு அறிவிக்கை.
* தேர்வு அறிவிக்கை நாள்: 14.11.2017
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017.
* தேர்வு நாள்: 11.02.2018.
* காலிப்பணியிடங்கள்: 9351
இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவையர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் அடங்கும். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏறத்தாழ 10000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு இப்போது வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
TNPSC CCSE-IV (Group 4 & VAO Combined) Notification Date of Examination: 11.02.2018
Last Date for Apply: 13.12.2017
Junior Assistant - 4349
VAO - 494
SURVEYOR - 74
DRAFTSMAN - 156
TYPIST - 3463
STENO - 815
TOTAL VACANCY - 9351
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.
இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
தேனி: வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு
ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் தொடர்ச்சியாக, வாக்காளர் விபரங்கள் செம்மைப்படுத்தப்பட்ட பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக (பி.எல்.ஓ.,) கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் பணியில் உள்ளனர்.
அலைபேசி செயலி அறிமுகம்
அவர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய அலைபேசி செயலி (மென்பொருள் செயலியை) 'பிஎல்ஓ., நெட்' என்ற பெயரில் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் ஆன்ட்ராய்டு போன் வாங்க விருப்பமுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார்களிடம் தங்களின் முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாத ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலை வைத்துக் கொண்டு, வீடு வீடாக சென்று விபரங்களை சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:
வாக்காளர்களின் முழுமையான விபரங்களை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி நாளை (நவ.,15) முதல் நவ., 30 வரை நடக்க உள்ளது. இதில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இப்பணியில் இணைய செலவுக்காக தலா ரூ.250 வழங்கப்படும். அந்த அலுவலர்களின் விருப்பத்தின் படியும், அவர்களுக்கு பயன்படுத்தும் முறைகள் குறித்து தெரிந்திருந்தால் மட்டுமே ஸ்மார்ட் போன் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது, என்றார்.
சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு
மனுவில் கூறியிருந்ததாவது:&
பெருமாநல்லூரை சேர்ந்த ஏ.ரவி என்பவர் தன் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது மகன், பிளஸ்&2&வில் 59 சதவீத மதிப்பெண்தான் எடுத்துள்ளார். ஆனால், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். இதனால் அவரது மகனின் விண்ணப்பத்தை நிராகரித்தோம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ரவியின் மகனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று 2013&ம் ஆண்டு ஜூன் 20&ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் விதமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடனை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த கல்விக்கடன் என்பது இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறைந்த வட்டியில் திருப்பிச் செலுத்தும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. இது, சமுதாயத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் விதமாக செயல்படும் சமூக பொறுப்புள்ள திட்டமாகும்.
இந்த திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக, நியாயமான கல்விக்கட்டணத் தொகையை கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.
நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது.
கல்விக்கடன் எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து 2012&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27&ந் தேதி மத்திய நிதி மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து, அந்த தகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில், கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, இவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு குறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
எதிர்மனுதாரர் ஏ.ரவியின் மகனுக்கு 2 வாரத்துக்குள் கல்விக்கடன் வழங்கும்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உயர் தொடக்கநிலைஆசிரியர்கள் :
தமிழ் & ஆங்கிலம் :
நவம்பர்15 & 16
அறிவியல் & கணக்கு :நவம்பர் 20 & 21
சமூக அறிவியல் : நவம்பர் 22 & 23
*தொடக்கநிலை
ஆசிரியர்கள்:*
50% : நவம்பர் 22 முதல் 25வரை
50% : நவம்பர் 27 முதல் 30வரை