Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 20 November 2017

Children's Dictionary

அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா

அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த
கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா நடைபெற்றது.குழுவின் உறுப்பினர்திரு s.அழகேசன் EX.ARMY தலைமையுரையில் நம் நோக்கம் குறித்தும் மிக சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் பேசினார். பொறுப்புள்ள அந்த உரை அமைப்பின் அடையாளம்.


வாழ்த்துரை வழங்கிய.
.மு.ஆதவன் பத்திரிகையாளர்...அவர்கள்

எழுத்தாளர்.மோ கணேசன்.புதிய தலைமுறைக் கல்வி ,அவர்கள்

கோ.செந்தில்குமார்.திண்ணை பயிற்சிப்பள்ளி  ஒருங்கிணைப்பாளர் அவர்கள்
N.சிவக்குமார் மாவட்ட நன்னடத்தை அலுவலர்.தேனி அவர்கள்

A.மோகன் தலைமை ஆசிரியர்.அவர்கள்..அ.மே.நி.பள்ளி .
சில்வார்பட்டி.

M.மகேஷ் .தலைமைஆசிரியர் அவர்கள்
அ.மே.நி.பள்ளி. T.சுப்புலாபுரம்..
N.செந்தில் குமார் தலைமைஆசிரியர் அவர்கள்..அ.க.மே.நி.பள்ளி.முத்தையன் செட்டிபட்டி... உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும்,
தலைமையாசிரியர்களும்  நம் அடுதத்த கட்டத்திற்கான நம்பிக்கையை அதிகப்படுத்தினர்.

NSKP தலைமையாசிரியர் கதிரேசன் சார்.  வழக்கம் போல மிகச்சரியான நேரத்திற்கு வந்திருந்தார். நாம் நிகழ்ச்சியை தொடங்க  தாமதமானதால் ஒருமணிநேரம் காத்திருந்து விட்டு அங்கிருந்த நம் உறுப்பினர்களுகு வாழ்த்து சொல்லிவிடு கிளம்பினார்.சிறப்புவிருந்தினர்
இயக்குனர் பிரபுசாலமன் உரை முகநூலில் பகிர்ந்திருந்தேன். மிகுந்த கவனத்திற்குறிய உரை. சிறப்பான ஊக்கம் கிடைத்தது எம் குழுவினருக்கு...எனக்கும் டி-ஸர்ட் கொடுங்கள் நானும் உங்களோடு இணைகிறேன் என்று இயக்குனர் பிரபு சாலமன் சொன்னது நம்பிக்கை வார்த்தைகள்....

ஒருபடி மேலேபோய் புதிய தலைமுறை உதவி ஆசிரியர் திரு மோ.கணேசன் அவர்கள் டி-சர்ட் பெற்றுக்கொண்டு அடுத்தபள்ளிப் பணிக்கு எனது முன் பங்களிப்பு என்று 500 ரூபாயை வழங்கித் துவக்கிவிட்டார் அடுத்த பள்ளிப் பணியை அவரின் பேச்சு எங்களின் பணியை அர்த்தப்படுத்தியது என்றே எண்ணுகிறேன்.....

இதையெல்லாம்  யூ டியூப்பில் பதிவேற்ற உள்ளேன் உங்கள் பார்வைக்காக...

நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தியதில்.. நன்றி தெரிவிப்பில்
விடுபடுதல் இருந்திருக்கலாம் அவற்றை எங்கள் ஊர்மக்களும் நண்பர்களும் மன்னித்திருப்பர் என்றே நினைக்கிறேன்... ஒருங்கிணைப்பில்  பலப்படுத்த வேண்டியவற்றை உணர்ந்து செயலாற்றுவோம் என்பதை பதிவு செய்து கொண்டு ,அடுத்தடுத்த நிகழ்வுகள் திட்டமிடலில்,  நிதி பற்றாக்குறை சரிசெய்தலில் நீங்களும் இணைந்தால் முற்றிலும் நிறைவான விழா அமையும்.

மற்றபடி மனம்நிறைந்த நன்றிகளுடன் எங்கள் குழு உறுப்பனர்கள் சார்பாக.....


இராஜசேகரன்...
அரசுபள்ளிகளைக் காப்போம் இயக்கம்.

NEET EXAM 2018 - Tentative Exam Dates - Registration Deadlines..

Swach Vidyalaya Puraskar Results published, Check your scores in App!SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்!புதிய பாடத்திட்ட வரைவு வெளியீடு

ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய பாடத்திற்கான வரைவை முதல்வர் பழனிச்சாமி இன்று (நவம்பர் 20) வெளியிட்டார்.

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் 2018 ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு www.tnscert.orgஎன்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கலாம் என பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

 கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.

அரசாணை விபரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும்!!!7 ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும்..மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாடு அதன் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயர்கல்விக்கு இந்த இரு வகுப்புகள் அடித்தளமாக இருக்கும். எனவே மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 நலத்திட்டங்களை செம்மைப்படுத்தவும், கற்றல்- கற்பித்தல் பணிகளை திறம்படச் செய்யவும் நலத்திட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பொருளியல், வணிகவியல் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நேரடி நியமனம் மூலம்மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறுதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்கவழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொது தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில், 12 லட்சம் பேரும்;பிளஸ் 2வில், ஒன்பது லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தஆண்டு, தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பாடமாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளனர். அதேபோல், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., தேர்வு,சி.ஏ., படிப்பதற்கான நுழைவு தேர்வு என, பல தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக, பொது தேர்வுகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை சோதிக்கும் கேள்விகளை இடம் பெறச்செய்ய, தேர்வுத்துறை முயற்சித்து வருகிறது.

எனவே, இந்த ஆண்டு, பிளஸ் 2 வினாத்தாளில், 5 சதவீதம் அளவுக்கு, சிந்தனைத்திறனை ஊக்குவிக்கும், சிக்கலான கேள்விகள் இடம் பெறலாம்.வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம், போட்டி தேர்வுக்கு ஏற்ற வினாக்களை இடம் பெற செய்ய, ஏற்கனவே, அறிவுறுத்தப்பட்டு இருந்தது.தற்போது, தோராய வினாத்தாள் வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், இறுதி வினாத்தாளை ரகசியமாக இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது.


'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள்,
பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களைதேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன


தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கட்சியின் மாவட்ட 9ஆவது மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:கட்சியின் மாநில மாநாடு வரும் பிப். 17, 18 ஆகிய 2 நாள்கள் தூத்துக்குடியிலும், அகில இந்திய 22ஆவது மாநாடு ஹைதராபாதில் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன.தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெüனம் காப்பது ஏன்? அது சட்ட விரோத மணல் என்றால் உரிய விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தரமான கல்வி இல்லை. அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளுநரின் ஆய்வு என்பது இந்திய அரசியல் சட்டத்தை அத்துமீறும் செயல். சட்டம் என்ன உரிமை அளித்துள்ளதோ, அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். சட்ட உரிமை மீறலைப் பொறுத்துக்கொள்ள முடியாது.தமிழகம், புதுச்சேரியில் ஆளுநரை வைத்து ஆய்வு செய்யும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ஏன் செய்யவில்லை?சிறந்த முதல்வர்கள் இருந்த மாநிலம் தமிழகம். இப்போதுஅதன் பெருமை தாழ்ந்து வருகிறது என்றார் அவர்.


புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவுஅறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.


SABL & ALM TIME TABLE

SABL & ALM TIME TABLE

SABL TIME TABLE
8.50-9.10 CLEANING
9.10-9 .30 PRAYER
9.30-9.35 MEDITATION
9.35-12.10 SUBJECT 1
12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC
12.40-1.15 LUNCH
1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.
1.45-3.50 SUBJECT 2
3.50-4.10 COMPUTER, GAMES etc.
4.10 CLASSROOM PRAYER.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)
ALM  Time table
8.50-9.10  CLEANING
9.10-9 .25 PRAYER
9.25-9.30 MEDITATION
9.30-11.00 SUBJECT1
11.00-12.30 PERIOD  2
12.30-12.40 YOGA
12.40-1.15 LUNCH
1.15-1.45 ACTIVITIES
1.45-3.15 PERIOD 3
3.15-4.00  PERIOD 4
4.00-4.10 EVENING ACTIVITIES.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
 20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)
www.rkkalvisiragukal.blogspot.com

School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்.

🔴காலை வழிபாட்டுக் கூட்டம்

( As per G O )

🔴பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.
(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)

🔴C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் மற்றும் மெல்லக் கற்றல் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் விபரம்
(பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)

🔴SABL,  SALM, ALM, Maths kit  பயன்பாடு.

🔴வாசிப்புத் திறன்.

🔴புத்தகப் பூங்கொத்து வாசிப்புத்திறன் பதிவேடு.

🔴2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.

🔴Dictation in Tamil & English

🔴Simple Test in Maths

🔴CCE பதிவேடுகள் (Update), F(a), F(b) மதிப்பெண்கள் வழங்கியதற்குரிய முழு விபரம்

🔴SMC பதிவேடு, பள்ளி மேலாண்மைப் பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.

🔴TV, Computer பயன்பாடு பதிவேடு.*

🔴கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, காலநிலை அட்டவணை, கம்பிப் பந்தல். ( நடப்பு மாதம்)

🔴தொடக்க நிலை வகுப்புகளில் SABL முறைப்படி வகுப்பு ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை கற்றல் - கற்பித்தல் செயல்பாடு, ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எழுதப்பட்டுள்ள பாடத்திட்டப்படி கற்பித்தல் உற்றுநோக்கல்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!