Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 22 November 2017

கட்டுரைப்போட்டியில் பெற்ற பரிசுத்தொகையை பள்ளி வளர்ச்சி நிதிக்கு அளித்த ஏழாம் வகுப்பு மாணவி நிவேதா


நிவேதா...

எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி.கூரை வேய்ந்த வீடு.பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு  பொருளாதார வசதி இல்லை.ஆனால் எதையும் தெளிவான பார்வையோடு அணுகும் திறமையான பெண்...படிப்பில் படு சுட்டி.. கணக்கு பாடத்தில் மிக மிக கெட்டி..

எங்கள் ஒன்றியத்தில் சென்ற வாரம் நடைபெற்ற RTE தொடர்பான  போட்டிகளில் உயர் தொடக்கப்பள்ளி நிலையில் *நிவேதாவை* கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள தயார் செய்திருந்தோம்...
போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், விளையாட்டாய் "நிவேதா, நீயோ ஏழாம் வகுப்பு தான் படிக்கிறாய்..எட்டாம் வகுப்பு  மாணவர்களுடன்  போட்டியிட வேண்டியிருக்கும்..முதல் பரிசுவாங்குவது சற்று கடினம்தான்..குறைந்தது மூன்றாவது பரிசாவது பெற முயற்சி செய்வோம் நிவேதா" என்றேன்..
அதற்கு சிறிதும் தாமதிக்காதவளாய் "சார்  ,நாம முதல் பரிசுதான் வாங்குறோம் சார் " என்று உறுதியாக  சொன்னாள்...
 அவள் தன்னம்பிக்கைக்கு தகுந்தார்போல் போட்டியில்  இரண்டாம்  பரிசை வென்று பரிசுத்  தொகையாக ₹1300 பெற்றாள்.

அதுக்கப்புறம்தான் நடந்ததுதான் ஹைலைட்டு...வங்கிக்கு சென்று பரிசுத்தொகைக்கான
காசோலையை  பணமாக மாற்றிய கையோடு நேராக பெற்றோரோடு பள்ளிக்கு வந்தவள் தான் பெற்ற பரிசுத் தொகையை எங்கள் பள்ளியின் த ஆ  யிடம் வழங்கி இதை பள்ளியின் வளர்ச்சிக்கு தன் பங்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி எங்களை வியப்புக்குள்ளாக்கினாள்..

பெற்றோரிடம் என்னங்க இதெல்லாம் என்று விசாரித்த போது,"அவள் பெரியவளாகி வேலைக்கு சென்று சம்பாதிக்க துவங்கியதும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள்....அதற்கான வாய்ப்பு இப்போதே கிடைத்துவிட்டது.என் மகள் விருப்பபடியே பரிசுத் தொகையை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பெற்றோரும் தலைமையாசிரியரிடம் வற்புறுத்த  துவங்கி விட்டனர்..

 தலைமையாசிரியருக்கு  என்ன செய்வது என்று புரியவில்லை.., அவர்களிடம் எவ்வளவு எடுத்துகூறியும்  நிவேதாவும் அவள் பெற்றோரும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நிற்கின்றனர்.

இந்த பெருமித மனநிலையில் இருந்து மீளாத தலைமை ஆசிரியை அவர்கள்  காலை இறைவணக்க கூட்டத்தில் *நிவேதாவின்* செயலை எடுத்துக்கூறி  அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாராட்டினார்..

அவளின் உழைப்பால்  கிடைத்த பரிசு அவளுக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் உறுதியாக இருந்தாலும் அவர்களின் உறுதிக்கு முன் என்ன செய்வதென்று அறியாத நிலையில், அருமையான மாணவியை வளர்த்தெடுத்த பெருமிதத்தோடு
*ஊ ஒ ந நி பள்ளி,வடசிறுவளூர்,ஒலக்கூர் ஒன்றியம்,விழுப்புரம் மாவட்டம்.*

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் பட்டியல் - தர்மபுரி மாவட்டம்


TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம்
பின்புறம் உள்ளது.

ஒரு நபருக்கு ரூ  100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்

044-24351116

7299722103

 காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள  அட்டையுடன் செல்லவும்.
 குடும்பத்தினருக்கும் அனுமதி உண்டு.

ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்..

சென்னை- 044-24351116
திருச்சி- 94871 57922

NET - ' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. 'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது.

பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமையான பேராசிரியர்களைதேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


சைனிக் பள்ளியில் சேர மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.

அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம். 6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் 'முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டோ, அல்லது இணையதளத்தை (www.sainikschoolamaravathinagar.edu.in) பார்த்தோ தெரிந்துகொள்ள லாம் என்று பாது காப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 11 முதல் 15-ஆம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று பயனடையலாம். மொத்த காலியிடங்கள்: 1270 

பணி: Assistant Professor 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil Engg and allied - 190 
2. MechanicalEngg and allied - 191 
3. Electrical Engg and allied - 158 
4. Electronics Engg and allied - 155 
5. Computer Engg/IT and equivalent - 177 
6. Chemical Engg and allied - 59 
7. English: 34 Posts Physics - 59 
8. Mathematics - 77 
9. Chemistry - 52 
10. Geology - 5 
11. Food Technology - 14 
12. Metallurgy and allied - 11 
13. Mining Engg and allied -13 
14. Textile Engg and allied - 4 

சம்பளம்: மாதம் ரூ.70,000 

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் எம்.இ, எம்.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி., எம்.ஏ., பட்டம் பெற்று NET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2017 முதல் 15.12.2017 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தமிழகத்தில் திருச்சி என்ஐடி-ல் நடைபெறும். மற்ற மையங்கள் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை:www.npiu.nic.inஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.


All CBSE Entrance Exams (UGC NET, JEE, NEET, CTET) in 2018 Will Be Conducted by National Testing Agency (NTA)

All CBSE Entrance Exams (UGC NET, JEE, NEET, CTET) in 2018 Will Be Conducted by National Testing Agency (NTA) | CBSE conducted all entrance examination will now be handed over to the National Testing Agency soon as per the direction of the Union cabinet. 

The Central Board of Secondary Education (CBSE) approved the proposal of creating a separate National Testing Agency (NTA) that will take over all the entrance tests that are currently conducted by the Central Board of Secondary Education (CBSE).

As per the guidelines of the Union Cabinet, CBSE will now conduct only board examinations for class 10 and 12. The other five entrance examinations of CBSE including National Eligibility and Entrance Test (NEET), Joint Engineering Entrance (JEE), University Grants Commission (UGC) National Eligibility Test (NET), tests of Jawahar Navodaya Vidyalayas and Central Teacher Eligibility Test (CTET). Now all these five entrance tests will be handed over to the NTA who will take charge of conducting them. NTA will initially begin conducting these five entrance examinations and would gradually take over all other all India level entrance and admission examination as per the roadmap set by the Union cabinet. The NTA conducted CBSE 2018 entrance examinations across India will now be conducted online and that too at least twice in a year so that a large number of students can appear for the test and can get equal opportunity. Not only this, all the students residing in the rural and semi-urban areas will have the facility of getting centres at their nearby sub-districts.National Testing Agency (NTA) was established as a self-sustaining and autonomous body to conduct all sorts of entrance tests in India required seeking admission once the schooling is over.

 The thumbs up that NTA has got from the Union cabinet for conducting all five entrance examinations in 2018 that are till date conducted by CBSE, will benefit over 4 million students who seek admission in India's well reputed and prestigious colleges. NTA is also guided to take over other prestigious all India level entrance exams over the period of time soon including IITs, AICTE and IIMs. The decision was taken by the Union cabinet to relieve CBSE from conducting all the entrance examinations 2018 and help focus on the core board examination of class 10 and 12.


100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் நேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் செங்கோட்டையன், பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2,676 விலையில்லா மடிக்கணினிகளை வழங் கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். நார்வே, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு, 25 பேர்கள் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். ரூ.3 கோடி செலவில் அந்த நாடுகளில் ஒவ்வொரு தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக அவர் கள் அனுப்பப்படவுள்ளனர்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்தை தமிழகம் உருவாக்கி இருக்கிறது. இந்த பாடதிட்டத்தை படிப்பதன் மூலம் எந்த நுழைவுத் தேர்விலும் தமிழக மாணவர்கள் பங்கு பெறலாம்.தமிழ் மொழி வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ் ஒன் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் தலா 15 மாணவர்களை தேர்வு செய்து, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.


தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.

இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஏழை எளிய கிராமப்புறத்தை சார்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்விய பெற அனைவரும் உதவுங்கள் ..

கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்பாடமாக அரசு பள்ளியில் கொண்டுவர அனைவரும் உதவுங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமமான கல்வியறிவும் கிடைக்கும் வரை..

இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில்.

 புதிய பாடத்திட்டம் சார்ந்த மேலான கருத்துக்களை பெற தமிழக அரசு தற்போது ஒரு இணைய பக்கத்தை அறிவித்துள்ளது...

---->கருத்துக்களை பதிவு செய்வதற்கான இணைய முகவரி_*

வழிமுறைகள் :

 http://tnscert.org/webapp2/syllabusfb.aspx

ICT தேர்வு செய்ய:

வகுப்பு/student class:க்கு சென்று 

POSITION PAPER தேர்வு செய்த பின்

பாடத்திட்டம் /subject ல் 

ICT தேர்வு செய்த பிறகு தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

  இதில், 28-ஆம் தேதி வரை இணையத்தின் வாயிலாக கருத்துக்கள் பெறப்படும்... பிறகு, இவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வரும் பிப்ரவரி (2018) மாதம் முழுமையான பாடத்திட்டம் வெளியிடப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது...

இன்னும் 6 நாட்களே உள்ளதால், புதிய பாடத்திட்டத்தில் *கணினி அறிவியலும்* ஒரு பாடமாக இடம்பெறும் வகையில் 

பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள்,ஆசிரியர் சங்கங்கள்,மாணவர்கள் ,கணினி ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....

 தற்போது, மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை 40,000 கணினி ஆசிரியர்களும் சரியாக பயன்படுத்திக்கொண்டால் புதிய பாடத்திட்டதில் *கணினி அறிவியலையும்* ஒரு பாடமாக நிச்சயம் இணைத்துவிடலாம்...

 விடாமுயற்சி வெற்றி

 தரும்  ..

 இந்த, இறுதி வாய்ப்பை நழுவவிடாதீர்  குழுவில் உள்ள ஒவ்வொரு கணினி ஆசிரியரும் இன்றைய நவீன உலகில் கணினி அறிவியலின் அவசியம் அரசிற்கு புரியும் வண்ணம் தொடர்ச்சியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

இதில், அலட்சியம் செய்ய வேண்டாம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 கருத்துக்களையாவது பதிவு செய்து பள்ளிக்கல்வியில் *கணினி அறிவியல்* நிரந்தரமாக இடம்பெற உதவிடவும்...

 நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்களை குழுவில் பதிவு செய்யவும்; இது அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக / வழிகாட்டுதலாக அமையும்...

 அனைவரும் உதவினால்
**
அரசுப்பள்ளி இனி கணினி பள்ளியே!

இணைய ஆசிரியர்:ராஜ்குமார்.

வெ.குமரேசன்  ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம்655/2014.

G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issuedபுரட்சிக்கு வித்திடுமா புதிய வரைவு பாடத்திட்டம் : கல்வியாளர்கள் கணிப்பு என்ன

'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்துறை வெளியிட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தில் 20 சதவீதம் வரையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு கூறுவது போல் புதிய வரைவு பாடத்திட்டம் புரட்சியை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே' என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறையில் மாற்றங்கள், அறிவியல் தொழில் நுட்பத்திற்குமுக்கியத்துவம், தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு,கலாசாரம் மற்றும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என புறப்பட்ட புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அதற்கான வரைவு பாடத்திட்ட அறிக்கையைவெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வகை பாடங்களையே மீண்டும் மீண்டும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு வடிவமைத்த இந்த வரைவு அறிக்கை குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:

சாந்தி, முதல்வர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி,மதுரை: பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் அடிப்படையில் தான் வரைவு திட்டத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 1- 5 வகுப்புகளுக்கு ஏற்கெனவே மெட்ரிக் பள்ளிகளில் இருந்த பாடங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.கணிதம் பாடத்தில் 'ஜாமெட்ரிக்' பகுதியில் கிராம மாணவர்களும் எளிதில் புரிந்து படம் வரையும் வகையில் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.மூன்று- ஐந்தாம் வகுப்புகளின் சமூக அறிவியலில் சமச்சீர்பாடத் திட்ட பாடங்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி பாடங்களை மேலும் தரமானதாக மாற்றியிருக்கலாம். மேல்நிலை அறிவியல் பாடம், மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தரமானதாக உள்ளது.பத்தாம் வகுப்பு அறிவியலில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பகுதி சம அளவில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பிளஸ் 1 பாடங்கள் இனி மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.பிளஸ் 2 பயாலஜி பகுதியில், மாணவர்கள் படிக்க தயங்கும் 92 பக்கம் கொண்ட 'மனித உடற்கூறுகள்' பாடத்தை ஐந்து பாடங்களாக பிரித்து மாணவர்கள் எளிமையாக படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் சுற்றுச்சூழல் பகுதியில் 'இ வேஸ்ட்' உட்பட புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1ல் 'வகைப்பாட்டியல்' (டாக்ஸ்சானமி)உட்பட புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆசிரியரின் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சரவணன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வியாளர், மதுரை: புதிய பாடத் திட்டம் வடிவமைப்பு என்பது தேசிய கலைத் திட்டம் (என்.சி.எப்.,) 2005ம் ஆண்டு வகுத்துள்ள வழிகாட்டுதல் படிதான் மாற்றம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மத்திய பட்டியலில் கல்வித்துறைஇருப்பதே இதற்கு காரணம். மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்படாத வரை சுதந்திரமான முறையில் பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. நிபந்தனைக்கு உட்பட்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.புதிய வரைவு திட்டத்தில், பழைய பாடத் திட்டத்தில் இருந்து 20 சதவீதம் வரையே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரோபோட்டிக், நானோ சயின்ஸ், பாலியல் பேதங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து புதிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன.உதாரணமாக 'மொழித்திறன்' என்ற தலைப்பில் பேசுதல், எழுதுதல்... என உட்தலைப்புகள் உள்ளன. அவை தற்போதைய நிலையில் இருந்து எவ்வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது பாடப் புத்தகங்கள்வெளியான பின் தான் தெரியும். மதிப்பீடு செய்வதன் மூலம் மட்டுமே மாற்றங்களை உணர முடியும். இயற்கையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் படைப்பாக்கல் திறன் அதிகம். ஆனால், விளையாட்டிற்கு என தனி கலைத் திட்டம் உருவாக்கப்படவில்லை.

சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்: வரைவு பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழி கற்பதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி.,- சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களை ஆய்வு செய்து தேவையான பகுதிகள்உள்ளீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.தேர்வு முறைகள் மற்றும் மதிப்பீடு முறைகள், அகில இந்திய போட்டித் தேர்வுகள், உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளில் நம் மாணவர்கள் எளிதாக வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுபாராட்டுக்குரியது. உடற்கல்வி மற்றும் கைத்தொழில், ஓவியம், நெசவு போன்ற தொழில்கல்வி, கணினி கல்விக்கான புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அறிவியலில் தற்போதைய தொழில் நுட்பத்திற்கேற்ப பல வகை பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் தரமான தாள்களில் பல வண்ணங்களில் அச்சிட்டு வழங்க வேண்டும்.

பேட்ரிக் ரெய்மாண்ட், பொதுச் செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்: கலாசாரம், பண்முக தன்மை மற்றும் தமிழக சமய நல்லிணக்கம் பேணும் வகையில் இடம் பெற்ற மொழிப் பாடங்கள் வரவேற்கத்தக்கது. பயன்பாட்டு முறையிலான இலக்கணம் கற்பித்தல் என்ற புதிய விதிமுறை மூலம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தல் என்பது எளிதாகும். பாலினம் சமத்துவம், மாற்றுத்திறனாளிக்கு மாற்று கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறை, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெற செய்த முயற்சிவரவேற்கத்தக்கது.மெய்நிகர் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) முறையால் கருவிகள் மூலமான கற்பித்தல் முறையில் கற்றலை முழுமையாக்கும் முயற்சியாக உள்ளது. தேர்வு பயத்தை போக்கும் வகையில் மாணவர்களின் அனைத்து திறன்களையும் மதிப்பிட மாற்று மதிப்பீட்டு முறை அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.பள்ளி மதிப்பீட்டு முறைகளில் ஓபன் புக், ஓபன் ரிசோர்சஸ் எனும் திறந்த வெளி புத்தக முறை மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவியலில் நானோ தவிர புதிய வரவுகள் குறைவாக உள்ளன. தமிழ், சமூக அறிவியல் தவிர அனைத்து வரைவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.

நாராயணசாமி, முன்னாள் பாடநுால் ஆசிரியர் (சமச்சீர் கல்வி), பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, காமாட்சிபுரம், தேனி: புதிய பாடத்திட்ட மாற்றத்திற்கான வரைவு அறிக்கையில், 'நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் அளவில் பாடங்கள் இணைக்கப்படும்' என தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மத்திய பாடத்திட்டத்துடன் தமிழக பாடத்திட்டம் ஒத்துவராத ஒன்றாக இருந்தது. தற்போது மத்திய பாடத்திட்டத்திற்குஇணையாக வேதியியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் கணித பாடங்களின் விபரங்கள் மாற்றியமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. குறிப்பாக வேதியியலில் 'சுற்றுச்சூழல் வேதியியல்' பாடங்களை புதிதாக இணைத்துள்ளனர்.இது மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும். நடப்பு நிகழ்வுகளை பாடவாரியாக சேர்த்திருப்பதும் நன்மையே. தமிழில் ஏற்கனவே உள்ள இலக்கண, இலக்கியம் தவிர்த்து 'வாழ்வியல் நெறிகள்' சார்ந்து புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் மொழியியல் குறித்த புரிதல் மேம்படும். எனினும் பாடத்தின் முழுமையான வடிவம் வெளிவந்த பின்தான் விரிவான கருத்துக்கள் வெளிவரும்.

பெர்ஜின், இயற்பியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,சாயல்குடி: அறிவியல் பாடத்தை பொறுத்தவரை உணவு, பருப்பொருள், உயிரினங்கள், நகரும் பொருட்கள், பொருட்கள் செயல்படும் விதம், இயற்கை வளங்கள், இயற்கை நிகழ்வுகள் என ஏழு பிரிவாக பிரித்துள்ளனர். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இப்படித்தான் உள்ளது. என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இருந்து முழுமையான பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.முன்பு கருத்துருவாக இருந்த பாடங்களை தற்போது 'அப்ளிகேஷன் ஓரியன்ட்டடு' முறையில் படிப்பதை நடைமுறை வாழ்க்கையோடு நேரடி தொடர்புபடுத்தியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டை நேரடி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தில் முன்பு விடுபட்ட பாடங்கள் எல்லாம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. எல்லா பாடங்களுக்கும் தகவல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் விதமாக உள்ளன. நிறைய பாடங்களை மொபைல் ஆப்ஸ், ஸ்மார்ட் கிளாஸ் உடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.இதன்மூலம் ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், வேறு ஆசிரியர் உதவியுடன் அல்லது உபகரணங்கள் உதவியுடன் ஸ்மார்ட் கிளாசில் பாடங்களை படிக்க முடியும். இதே போல் மாணவர் வர முடியாத நிலையில், மொபைல் ஆப்ஸ் மூலம் பாடங்களை படிக்கலாம்.கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து, அங்கு இல்லாத சில பாடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்

 பாஸ்கர், வித்யாகிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர், காரைக்குடி : சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது, புதிய வரைவு பாடத்திட்டம் தரமுள்ளதாகஉள்ளது. போட்டி தேர்வுகளுக்கான எல்லா வித அம்சங்களும் புகுத்தப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களும், அடிப்படை கல்வியுடன் கூடிய தொலை நோக்கு கல்வியும் சேர்த்து உள்ளது. எந்தவிதமான போட்டி தேர்வுகளாக இருந்தாலும், இந்த வரைவு பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை கற்பிப்பதற்கான கால நேரத்தில், அதற்கான தேர்வுகளுக்கு மாணவர்களை தயாரிப்பது ஆசிரியர்களின் பெரும் பங்காக உள்ளது. வரும் காலங்களில் மாணவர்கள் இந்திய அளவில் உள்ள எந்த தேர்வையும் எதிர்கொள்ள முடியும். ஒவ்வொரு பாடத்திற்கான வெயிட்டேஜ் (புளூபிரின்ட்) மதிப்பெண் கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நடப்பதால் இரண்டு ஆண்டில் பாடத்திட்டத்தை முழுமையாக படிக்க வாய்ப்பு உள்ளது. மாணவரை முழு தகுதியாக்கும் பாடத்திட்டமாக இது உள்ளது. மதிப்பெண்ணின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தும் போது இதில் மாற்றம் வரலாம். கடந்த 2006-ம்ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தும்போது வரைவு பாடத்திட்டத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

முருகேசன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, வீரசோழன்: மாணவர்கள் சிந்தித்து செயல்பாட்டுடன் படிக்கும் வகையில் புதிய பாடத் திட்ட வரைவுகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொருபாடத்திற்கும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும்வகையில் உள்ளது. சூத்திரங்கள், வரைபடங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதாக கற்கும் முறையில் உள்ளது. பாடப் புத்தகங்களை இணையதளத்தில் பி.டி.எப்.,வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறையும் எளிதாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களை அலைபேசியிலேயே கூட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியிடப்படும் புதிய பாடத் திட்ட வரைவு தேசிய அளவில் பிற பாடத் திட்டங்களுக்கு நிகராகவும், தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!