Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 27 November 2017

வரைவு பாடத்திட்டம் : அவகாசம் நீட்டிப்பு



வரைவு பாடத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கால அவகாசம் 
நீட்டிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி வெளியிட்டார். புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னரும் பாடம் மாற்றியமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் அரசு தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.27 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 7 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.


இன்றைய வகுப்பறை கற்பித்தல், தேர்வை மையமாகக் கொண்டிருப்பதால் தேர்வுச் சீர்திருத்தமின்றி எவ்வித மாற்றமும் பயனளிக்காது ...





DGE- மார்ச் 2018 மேல்நிலைத் தேர்வு - பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பு



TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 195 பணி நாடுநர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய கலந்தாய்வு நாளை 28.11.17 நடைபெறுகிறது

5 ஆம் வகுப்பு நவம்பர் மூன்றாம் வாரத்திற்கான பாடக்குறிப்பு அனைத்து பாடத்திற்கும் pdf வடிவில்

பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும், பங்களிப்பாக செலுத்திய பணம் கூட கிடைக்கவில்லை என்றும், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு, அரசு ஊழியர், - ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த கூட்டமைப்பு, செப்டம்பரில் நடத்திய, தொடர் வேலை நிறுத்த போராட்டம்,உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. அப்போது, நவ., 30க்குள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து,நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 'குறித்த நாட்களுக்குள் நிபுணர் குழு அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்தபடி, நிபுணர் குழுவின் அறிக்கை, நவ., 30ல் வெளியிடப்பட வேண்டும். அதன்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். அறிக்கை வராவிட்டால், டிச., 4ல், உயர்மட்டக்குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இது குறித்த வழக்கு, டிச., 8ல் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தமிழக அரசு தாமதிக்காமல், கோரிக்கையை நிறைவேற்றமுன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம் தயாரித்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில்நேற்று கூறியதாவது:
பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க,பல்வேறு சட்டம், விதிகள் அமலில் உள்ளன. இருப்பினும், நாடு முழுவதும்பல்வேறு இடங்களில், பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்கள்நடப்பது குறித்த புகார்கள் வந்தபடி உள்ளன.எனவே, குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல், தீய தொடுதல் எது என்றபாடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களை தடுக்க, பல அரசு சாராஅமைப்புகளுடனும், சமூக ஆர்வலர் குழுக்களுடனும், பேச்சு நடந்து வருகிறது.பள்ளி மட்டத்தில், பாலியல் அத்துமீறல்கள், பலாத்காரங்களை தடுக்க,விரைவில் சிறப்பான திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது. 
ஆசிரியர் - மாணவர் உறவை வலுப்படுத்த, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களை எந்த வகையிலும், கண்டிக்க அனுமதிக்காமல், நுாறு சதவீத மதிப்பெண் பெற வலியுறுத்துவது சாத்தியமில்லை என்பதையும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, மாணவர்களை மனம் புண்படும்படி திட்டவோ, அடிக்கவோ கூடாது. இதை, கல்வியாண்டு துவங்கும் போதே, ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில், ஆண்டுதோறும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை கண்டிக்குமாறு, பெற்றோரே ஆசிரியரிடம் முறையிடுவதும் உண்டு. ஆசிரியரின் கண்டிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.வேலுார், பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாதாந்திர கணிதத்தேர்வில் தோல்வியை தழுவிய காரணத்திற்காக, பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதால், நான்கு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்திற்காக, தலைமையாசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகிய இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'பள்ளிக்கு தாமதமாக வரும், மாணவர்களை எதுவும் கூறாமல் இருந்தால், ஒழுக்கம், கீழ்படிதல் ஆகிய, நற்பண்புகள் எப்படி வளரும், தோல்வியை தழுவிய மாணவிகளின், கற்றல் நிலையை, பெற்றோரிடம் எடுத்து கூற, அழைத்து வரும்படி உத்தரவிட்டது, ஆசிரியரின் கடமையல்லவா, இப்படி எல்லா நிலைகளிலும், ஆசிரியரின் கைகள் கட்டப்பட்ட பின், நுாறு சதவீத தேர்ச்சியை எதிர்பார்ப்பது நியாயமா' என, அடுக்கடுக்கான கேள்விகணைகளை தொடுத்து, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தோல்வியை எதிர்கொள்ளவும், கண்டிப்பை ஏற்கவும் கூட, முடியாத அளவுக்கு, தற்போதைய கல்விமுறை இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

இது சார்ந்து, அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைத்து, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பயம்,பதட்டமில்லாமல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது, தற்கொலை எண்ணங்களை தவிர்க்க, மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுவது அவசியம் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:ஆசிரியர்-மாணவர் உறவில், விரிசல் இருப்பதை,உறுதி செய்யும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன.

இதுபோன்ற தருணங்களில், சம்பவத்தின் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின், நடவடிக்கை எடுப்பது அவசியம். மாணவர்களை வழிநடத்தும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு, நடத்த வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை மட்டும் இலக்காக முன்னிறுத்தி, பணிபுரியும் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி சூழலை ஆரோக்கியமானதாக்க, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். இதை உருவாக்க வேண்டியது, கல்வித்துறையின் முக்கிய கடமையாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்!!

பிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை 

வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அடுத்த ஆண்டில், பிளஸ் 2 எழுத உள்ள தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எழுத்து தேர்வு மட்டும் உள்ள பாடங்களையே தேர்வு செய்ய முடியும். பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, 100 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும், 10 மதிப்பெண் அகமதிப்பீடாகவும், 70 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வும் நடத்தப்படும். இந்நிலையில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டே செய்முறை தேர்வு நடக்குமா அல்லது முந்தைய அரசாணையில் கூறியபடி, பிளஸ் 2வில் சேர்த்து நடத்தப்படுமா என, குழப்பம் இருந்தது. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே செய்முறை தேர்வு நடத்தப்படும்' என, அக்டோபரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும்; அதற்கான வழிமுறைகள் என்ன; இதுவரை நடத்தப்பட்டது போல், பெயரளவில் நடத்தப்படுமா அல்லது மற்ற பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக அமர்த்தப்பட்டு, முழு கட்டுப்பாட்டுடன் நடக்குமா என, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வித் துறை இது குறித்து ஆலோசித்து, பிளஸ் 1 செய்முறை தேர்வு குறித்து, குழப்பங்கள் இல்லாத சரியான வழிகாட்டுதலை, விரைவில் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


TNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது!!

1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும்

திருமணமாகி 
இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும்
விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.

2. பிறந்த தேதி, ஜாதி பிரிவு, ஜாதி உள் பிரிவு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் போன்றவை கவனமாக பதிவிட வேண்டியது மிகவும் முக்கியம்.

தவறாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் இவற்றால்
திருத்தங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது.

3. எப்போதும் அறிவிப்பு வந்த உடன் விண்ணப்பம் செய்ய வேண்டாம். இரு நாட்கள் கழித்து விண்ணப்பம் செய்வது நலம். ஏனெனில், கணினி சர்வர் பிரச்சினை, ஆன் லைன் பணப்பரிவர்த்தனை சம்பந்தமாக சில
பிரச்சினைகள் வரலாம்.

4. அதே சமயம்,மாதம் முழுவதும் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் கடைசி இரு நாட்களில் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். ஒட்டு மொத்தமாக அனைவரும் இறுதி கட்டத்தில் விண்ணப்பிப்பதனால் கணினி சர்வரின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உங்களால் விண்ணப்பிக்க இயலாமல் போகலாம்.

6. கூடுமானவரை மொபைலில் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். வீட்டில் கணினி இருந்தால் பயன்படுத்தவும், அல்லது ஏதுனும் கணினி மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். மொபைலில் விண்ணப்பிக்கும் பொழுது, உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் எண்கள் அல்லது எழுத்துக்கள் கூடுதலாக அச்சாகி விடலாம்அல்லது தவறுகளை கண்டுபிடிப்பது கடினம்.

7. விண்ணப்பத்தில் மின்-அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்யும் பொழுது உங்களுக்கு சொந்தமான மின் அஞ்சல் மற்றும், நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் அலைபேசி எண்களைக் கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் எண்களை, மின் அஞ்சலைக் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில், நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வேளையில் உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற தகவல்களை - அழைப்புகளை உங்களால் பெற முடியாமல் போகலாம்.

8. தேர்விற்கு தேர்வு கட்டணம் கட்டுவது என்பது மிகவும் முக்கியம். SC, ST பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், மற்றும் மாற்று திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்க்கு திறனாளிகளின் குறைபாட்டு சதவீதம் நாற்பது மற்றும் அதற்க்கு அதிகமான குறைபாடு உடையார்க்கு மட்டும் நிரந்தர கட்டண விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே உங்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த சந்தேகம் இருப்பின் கட்டணத்தை கட்டிவிடுவது மிகவும் நன்று.

9. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையை பயன்படுத்தி இருந்தால் சான்றிதழ் சரிபார்ப்பில் பொது போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.

10. சான்றிதழ் எண்கள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதிகளை நன்கு கவனித்து பதிவு செய்ய வேண்டும்.

11. உங்களது விண்ணப்பித்தினை நீங்கள் பூர்த்தி செய்வது நன்று. கணினி மையங்கள் மற்றும் உங்களது நண்பர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின் நீங்கள் அருகில் இருக்க வேண்டும்.

உங்களது சான்றிதழ் எண், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி போன்றவற்றை பதிவு செய்யும் பொழுது சிறிது தவறு நேரிட்டாலும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது நீங்கள்தானே தவிர விண்ணப்பிக்க உதவியர்கள் அல்ல.

தற்போது TNPSC -விண்ணப்பத்தில் எடிட்டிங் வாய்ப்பையும் கொடுப்பது அரிதாகி வருகிறது. சில தகவல்களை மாற்ற முடியாமல் செய்து விடுகிறார்கள்.

12. நீங்கள் நிரந்தர பதிவில் சில தவறுகள் ஏற்கனவே செய்து இருந்தாலும், விண்ணப்பத்தில் சரியாகக் கொடுக்க முயற்சியுங்கள்.

TNPSC-ல் எந்த ஒரு தேர்விற்கும், அதற்க்காக விண்ணப்பிக்க பட்ட விண்ணப்பத்தின் தகவல்களிலே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதனை நினைவில் கொள்க.

13. எந்த தேர்விற்கு விண்ணப்பித்தாலும், அந்த தேர்விற்க்கென்று கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளை நன்கு படித்துப் பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும். படிக்காமல் விண்ணப்பிப்பது தவறு.

14. தமிழ் வழியில் படித்து இருப்பின் அதனை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்தால் நீங்கள் குரூப் -4 மற்றும் VAO தேர்வுகளுக்கு மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்.

இளநிலை தமிழ் வழியில் படித்து இருந்தால் குரூப் -1, குரூப் -2 மற்றும் குரூப் -2A போன்ற தேர்வுகளுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற தகுதியானவர். இந்த தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழி சான்றிதழை பயன்படுத்த கூடாது.

15. புகைப்படம் அண்மையில் எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்துதல் நலம்.

16. கட்டண தேர்வினை Credit Card/ Debit Card போன்றவற்றின் மூலம் செலுத்துதல் நலம். உங்களுக்கு விரைவாக கட்டணம் அவர்களிடம்
(TNPSC) சென்று விட்டதற்கான ஒப்புதல் கிடைக்கும்.

17. தபால் அலுவலகம் மூலம் கட்டண சலுகை செலுத்துபவர்கள் இறுதி நாட்களில் விண்ணப்பம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தபால் மூலம் கட்டணம் செலுத்தும் பொழுது உங்களது பணம் அவர்களிடம் சென்றடைய மூன்று வேலை நாட்கள் ஆகும்.

18. விண்ணப்பித்து முடிந்த உடன் வரும் உங்கள் விண்ணப்பத்தின் கோப்பினை, உங்கள் மின் அஞ்சலில் சேமித்து வைத்துக் கொள்வது நலம். பின்னாளைய தேடுதல்களுக்கு உதவும்.

19. தமிழ் வழி, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவ வீரர், ஆதரவற்ற விதவை, ஏற்கனவே அரசு ஊழியர் போன்ற தகவல்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

இவற்றை குறிப்பிட தவறி விட்டு, பின்னாளில் அதற்கான அத்தாட்சியைக் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் அதற்கு உண்டான சலுகையை இழக்க நேரிடும்.

20. ஒவ்வொரு தேர்விற்கும் உரிய கல்வி தகுதி மற்றும் தொழில் நுட்பத் தகுதியினை அறிவிப்பு வந்த தேதிக்கு முன்னாள் முடித்து இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் சான்றிதழ் சரி பார்ப்பில் நீக்கப் படுவீர்கள்.


புதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை 

கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அவகாசம் வழங்க, பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 14 ஆண்டுகள்; 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளுக்குப்பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்காக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, துறை செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி ஒருங்கிணைப்பில், புதிய பாடத்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை, நவ., 20ல், முதல்வர் பழனிசாமியால் வெளியிடப்பட்டது. நவ., 21ல், tnscert.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில், பாடத்திட்ட நோக்கம், தயாரித்த முறை, பாடங்களின் வகைகள், பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் போன்றவை, தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் கருத்துகளை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம், நாளை முடிகிறது. அதே நேரம், பாடத்திட்டம் குறித்து கருத்து கூற, இன்னும் ஒரு வாரம் வரை கூடுதல் அவகாசம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.


தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகம் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில், நிலை கொண்டுள்ளது. 
இது, தென் மேற்காக நகர்ந்து, லட்சத்தீவு அருகே, அரபிக்கடலில் நுழைந்து வலுவிழக்கும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியதாவது:

தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும். அதையொட்டிய, மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கு, ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படலாம் என, கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க, சி.பி.எஸ்.இ.,யின், நீட் தேர்வு கமிட்டி, விரைவில் கூடுகிறது. டிச., மூன்றாம் வாரம் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள், முழுமையாக, நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதனால், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை, 11.35 லட்சத்திலிருந்து, 13 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களை குற்றவாளி போல் அதிகாரிகள் மிரட்டுவதா?" - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை



எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!