Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 29 November 2017

திருப்பூர் CEO-BLO'S கணக்கெடுப்பு பணிக்கு 1மணிநேரம் முன்னதாக செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒரேநேரத்தில் அரையாண்டு தேர்வு

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்துக்கும், 200 லிருந்து, 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு, முன்னோட்டமாக, அனைத்து பாடங்கள் உள்ளடக்கி, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிசம்பர், 7 முதல், 23 வரை, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.

வழக்கமாக, பிளஸ் 1 வகுப்புக்கும், பிளஸ் 2வுக்கும், வேறு வேறு தேதிகளிலும், காலை, மாலை என மாற்றி நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2வுக்கு தேர்வு நடக்கும், அதே நாளில், அதே நேரத்தில்,பிளஸ் 1க்கும் தேர்வு நடத்தப்படுகிறது, டிசம்பர், 7 - தமிழ் முதல்தாள், டிசம்பர், 8- தமிழ் இரண்டாம்தாள், டிச., 11- ஆங்கிலம் முதல்தாள், டிசம்பர் 12- ஆங்கிலம் இரண்டாம்தாள், டிச., 14- கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டிச., 15- உயிரியல், தாவரவியல், வரலாறு, டிச., 18 - கணிதம், விலங்கியல், டிச., 19 - வணிகவியல், புவியியல்,டிச., 21- வேதியியல், கணக்கு பதிவியல், டிச., 23- இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடக்கின்றன.பிளஸ் 2, பிளஸ் 1 இரு வகுப்புகளுக்கும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:15 மணி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் விருது!

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவுக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இந்த விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. 
வருகிற டிசம்பர் 3ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கவுள்ளார்.குடியரசுத் தலைவர் விருது பெறவுள்ள மாவட்ட ஆட்சியர்வீரராகவ ராவுக்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு, தூய்மை பாரதம் ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது


இன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும் - மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவுமுறை சீர்குலைந்துவருகிறது.

உதாரணமாக, சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால், அரக்கோணம் அருகே அரசுப் பள்ளியின் 4 மாணவிகள், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

       

திருவள்ளூரில் பள்ளிக் கழிப்பறையை மாணவிகளே சுத்தம் செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதிக முடி வளர்த்து பள்ளிக்கு வந்த திருவாரூர் அரசுப்பள்ளி மாணவனின் தலைமுடியை வெட்ட வைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். இத்தகைய சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன, இவற்றுக்கு என்ன தீர்வு இருக்க முடியும்?

எவ்வளவுதான் அன்பாக இருப்பது?- கிருஷ்ணவேணி, அரசுப்பள்ளி ஆசிரியர்

இன்றைய மாணவர்களின் மனநிலைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே காரணம். முன்னரெல்லாம் பெரும்பாலான இருதரப்பினருமே குழந்தைகளை அடித்து, கண்டித்து வளர்த்தார்கள். ஆனால் இன்று அது சாத்தியமில்லை.

கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களைத்தான் இன்று பார்க்க முடிகிறது. வீட்டில் எல்லையற்ற சுதந்திரம், கையில் செல்போன் என்று கட்டற்ற மனநிலையில் குழந்தைகள் வளர்கிறார்கள்.

அவர்களிடம் ஆசிரியர்கள் எவ்வளவு தூரத்துக்குத்தான் அன்பாகவே இருக்க முடியும்? இவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்களே, மாணவர்களை எழுதவைக்க, தேர்ச்சிபெற வைக்க முடியாதா என்ற அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமே!

இன்னொரு முக்கியப் பிரச்சினை மதிப்பெண் எல்லை. இத்தனை மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற அமைப்பு முறை. ஏன், யாருக்காக இந்த அளவுகோல்? மனப்பாடம் செய்ய முடியாத மாணவன் மோசமானவனா? இதுமாதிரியான கேள்விகளுக்கு நம்முடைய கல்வித்திட்டம் பதிலளிக்க வேண்டும்.

கழிப்பறையைச் சுத்தப்படுத்திய மாணவிகள் விவகாரம் என்னுள் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்முடைய வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கப்படுத்துவது தவறா?, நம்முடைய அம்மாவோ, அப்பாவோ அந்த வேலைகளைச் செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா, அதேபோலத்தானே அப்பணியாளர்களின் குழந்தைகளும் யோசிப்பார்கள்.

ஆசிரியர்களின் கழிப்பறைகளை ஆசிரியர்களும், மாணவர்களின் கழிவறைகளை அவர்களே சுத்தப்படுத்துவதிலும் என்ன தவறு?

பெற்றோர்களின் முதலீடா குழந்தைகள்?- ஆயிஷா நடராசன் - எழுத்தாளர், கல்வியாளர்


ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உணர்த்துவது ஒரேயொரு விஷயத்தைத்தான். அவர்கள் பேசுவதை, பேச விரும்பதை யாரும் கவனித்து, காது கொடுத்துக் கேட்பதில்லை. அதிகாரிகள் கேட்கும் 'அனைவரும் தேர்ச்சி' அழுத்தம் தலைமை ஆசிரியருக்கும் அவர் வழியாக ஆசிரியர்களுக்கும் அவர்கள் மூலம் மாணவர்களுக்கும் கடத்தப்படுகிறது. மையப்புள்ளியான மாணவர்கள் இதில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

இன்றைய காலத்தில் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள். முற்காலங்களில் ஊரின் முக்கியப் புள்ளியாக ஆசிரியர் இருப்பார். அவரிடம் ஆலோசனை பெற்றுத்தான் அனைத்து முக்கியக் காரியங்களும் மேற்கொள்ளப்படும். அந்த உறவு இப்போது அறுக்கப்பட்டுவிட்டது. பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை.

பெற்றோர், ஆசிரியர், மாணவர் என்ற முக்கோணத்தில் பெற்றோர் விடுபடுகின்றனர். பள்ளி மட்டுமே ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்காது. காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும்வரை ஒரு குழந்தை மேற்கொள்ளும் அனைத்துமே அவருக்கான பாடம்தான். முன்னெல்லாம் குழந்தைகளிடம் கண்பார்த்து, மனம் விட்டுப் பேசப் பெரியோர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்கள் சொத்தாக.. முதலீடாக நினைக்கிறார்கள். அதுதான் இப்போதைய பிரச்சினைக்கான ஆணிவேர்.

என்ன செய்யலாம்?

* வகுப்பறை விதிகளை மாணவர்களே உருவாக்க ஆசிரியர் வழிவகை செய்யவேண்டும்.

* சின்னச் சின்ன (silly) விஷயங்களில் முடிந்தளவு ஆசிரியர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

* வகுப்பறைக்குள் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட மாணவர் குழுக்களை அமைக்க வேண்டும். அவ்வப்போது குழுவிலுள்ள மாணவர்களை மாற்றவேண்டும்.

* ஆசிரியர்கள் பொதுவாக மாணவர்களுக்கிடையே பாகுபாடு, வேறுபாடு காட்டாமல் பழக வேண்டும்.

* ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை வகுப்பறைகளில் ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டும்.

அச்சத்தால் ஒடுக்கப்படும் ஆசிரியர்கள்: ஜான் ஆரோக்கிய பிரபு, தனியார் பள்ளிகள் சங்க துணைத் தலைவர்


மாணவர் உரிமையைப் பற்றிப் பேசும் நாம், ஆசிரியரின் பாதுகாப்பு குறித்தும் உரிமை பற்றியும் பேசுவதில்லை. பலமுறை அறிவுறுத்தியும் முடிவெட்டாமல் வந்த மாணவனுக்கு முடி வெட்டிவிட சொன்னது தவறா? இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடை நீக்கம் செய்வீர்களா?

இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால், ஆசிரியர்கள் மாணவரைப் பார்த்தே பேசக்கூடாது என்ற நிலை ஏற்படும் போலிருக்கிறது. மாணவர் ஒருவர் ஆசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? அதைப்பற்றி யாராவது இப்போது பேசுகிறோமா? அந்த மாணவர் இப்போது வெளிநாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் புத்தரும் ஏசுவுமே ஆசிரியராக இருக்கமுடியும். சாதாரண மனிதர்களால் முடியாது. இப்போது ஆசிரியர்கள் அச்சத்தால் ஒடுக்கப்படுகின்றனர். சத்தமாக ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத நிலையில்தான் அவர்கள் இருக்கின்றனர்.

இந்நிலை மாற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முறையான உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

நுரைக்குமிழ் மனநிலையில் மாணவர்கள்: அசோகன், மனநல ஆலோசகர்


இந்த நவீன காலகட்டத்தில் மாணவர்களைத் திட்டுவதே தவறா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய இளைய சமுதாயமே நுரைக்குமிழ் (Bubble) மனதைக் கொண்டிருக்கிறது. சுமுகமாக விஷயங்கள் நடக்கும்வரை எதுவும் பிரச்சினையில்லை. ஆனால் சின்னத் தோல்வி ஏற்பட்டால்கூட மாணவர்கள் உடைந்துபோகின்றனர். இதற்கு பொத்தாம்பொதுவாக பெற்றோரைக் குறை சொல்வது சரியல்ல. குழந்தைகளை நாம் வளர்க்கவில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள்.

முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் புதிதுபுதிகாகக் கற்றுக்கொள்வது, ஆடம்பரமான வாழ்க்கை, அனைத்துமே எளிதில் கிடைத்துவிடும் தன்மை ஆகியவை இன்றைய தலைமுறையின் முக்கியப் பிரச்சினை. நாம் குழந்தைகளுக்கு எதிர்மறைப் பார்வையைக் கற்பிக்க மறந்துவிட்டோம்.

முன்னெல்லாம் அனைத்து சுப, துக்க காரியங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். அப்போது அவர்கள் உறவின் அருமையை, இழப்பின் வலியை உணர்ந்தார்கள். ஆனால் இன்றைய சமுதாயம் அதை அவர்களுக்கு அளிப்பதில்லை.

கடுமையாகிவிட்ட பணி

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியப் பணி மிகவும் கடுமையாகிவிட்டதாகத் தோன்றுகிறது.

ஆசிரியரின் கண்டிப்பு எல்லை மீறக் கூடாது என்பதற்காக அவர் மாணவரைக் கண்டிக்கவே கூடாதா? இந்த நேரத்தில் பாம்பு- முனிவர் கதை நினைவுக்கு வருகிறது. முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் இருந்த பாம்பைக் கண்டு அனைவருமே நடுங்கினர். அந்த ஊருக்கு வந்த முனிவரிடம் பாம்பு பற்றிய அச்சத்தை வெளியிட்டனர். முனிவர் பாம்பிடம் சென்று, 'இனிமேல் மக்கள் யாரையும் கடிக்காதே' என்று அறிவுரைத்துச் சென்றார். சில காலங்கள் கழித்து அதே ஊருக்கு வந்தார் முனிவர். அப்போது பாம்பு அடிபட்டு, சோர்வாகப் படுத்திருந்தது. காரணம் கேட்ட முனிவரிடம், 'நீங்கள் யாரையும் கடிக்காதே என்று சொன்னீர்கள், நானும் அதைக் கேட்டு அமைதியானேன். ஆனால் நான் கடிப்பதில்லை என்று உணர்ந்த மக்கள், என்னை அடிக்கத் துவங்கினார்கள். உங்களின் பேச்சை மதித்து அமைதி காக்கிறேன்' என்றது பாம்பு.

அப்போது முனிவர் அமைதியாகச் சொன்னார், 'உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதானே சொன்னேன். சீற்றம் கொள்ள வேண்டாம் என்றேனா?' என்றார்.

அதேநிலைதான் இன்றைய ஆசிரியர்களுக்கும். ஆசிரியர்கள் நிச்சயம் சீறவேண்டும். ஆனால் துன்புறுத்தக் கூடாது. பொதுவாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் அளவுக்கு மீறித் தங்கள் மாணவர்களைக் கையாள்வதில்லை. ஒருசிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது களங்கம் ஏற்படுகிறது.

மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

ஆசிரியர்கள் அவமானப்படுத்தினர் என்று கூறித் தற்கொலை செய்வதற்குப் பின்னால் பல்வேறு உளவியல் காரணங்கள் இருக்கின்றன. தனது உயிரைத் துச்சமாக மதிக்க பிறரால் ஏற்பட்ட அவமானம், வெட்கம், ஏழ்மை, உணர்ச்சி மிகுந்த நிலை, அழுத்தம், மனவருத்தம் ஆகிய உணர்வுகள் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.

பிரச்சினையில் இருந்து தப்பிக்க இதுதான் தீர்வு என்று தீர்க்கமாக நம்புவது, பிரச்சினையைத் தள்ளிப்போடும் மனநிலையை உருவாக்காமல் இருப்பது, கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுக்கு அடிமையாவது ஆகியவையும் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள்.

பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களையும் பெற்றோரையும் மிரட்ட, விளையாட்டாகத் தற்கொலைக்கு முயற்சிப்பதும் விபரீதத்துக்கு வழிவகை செய்கிறது.

ஆசிரியர்கள் என்ன செய்யலாம்?

* ஆசிரியர்கள், மாணவர்கள் செய்யும் தவறைக் கண்டிப்பதற்கு முன்னால், அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும்.

* பாலியல் சார்ந்த விவகாரங்களைக் குறிப்பாக திருமணம், ஆசை, உணர்வுகள், எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து, எல்லை மீறாத அளவுக்கு மாணவர்களிடம் விவாதிக்கலாம்.

* இப்போது குழந்தைகள் அனைவரும் பெரியவர்களைப் (adult) போல நடந்துகொள்கிறார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

* பெற்றோர்களிடம்கூடக் கூற முடியாததை ஆசிரியர்களிடம் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

தினம் ஒரு ஆசனம்- 1.வஜ்ராசனம்வேலூர் மாவட்டத்தில் 20 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரம்!!!
Upper primary maths kit box

4 மாணவியர் தற்கொலை 18 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்


8 - வது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்தல் ஜனவரி 1 - இல் ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கு 31.12.2015 அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு அறிவுரை!

English - IV STD TERM -II VIDEO LESSONSCLICK HERE - A Night In June - william wordsworth - 1


CLICK HERE - A Night In June - william wordsworth - 2


CLICK HERE - MOTHER THERESA - PIECE ON EARTH


CLICK HERE - A NATIONS STRENGTH


SABL, ALM, SALM TIMETABLE - PRINTOUT MODEL TO PASTE IN CLASSROOMS

TNPSC - குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு!!!

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசுத் துறைகளில்,
குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில்,49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE

JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH

( Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )


தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...

வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை.


ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்? இதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம்.

இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். 

ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது. 2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம்.

காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும்! பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்! அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய்! சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா?

இரத்த அழுத்தம் இருக்கிறதா? நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை? பணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது?

பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள்? ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே.

உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா? சற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா? ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான். இவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும்.

அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா? நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள்.

இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான்.

இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம்.

குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள். ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு.

இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள். இப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்' இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.

மனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். 

வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது? அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது? கஷ்டங்கள் எதில் தான் இல்லை?

இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.

- சந்தோஷ் ஸ்ரீ

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!