Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 3 December 2017

ஓய்வூதிய தாரர்கள் இணைய வழியில் ஓய்வூதியம் தன் கணக்கில் சேர்ந்துவிட்டதா என பார்ப்பது எவ்வாறு!

Maternity Leave Clarification - இனி மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் - ஆணை வெளியீடு
CPS - சில மாற்றங்களுடன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தகவல்.

CPS News:


CPS - வல்லுநர் குழு தனது இறுதி அறிக்கையை வரும் 04.12.2017 அன்றோ அல்லது 06.12.2017 அன்றோ முதல்வரிடம் சமர்பிக்கிறது.

* சில மாற்றங்களுடன் CPS தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தகவல்.

அட்மிஷனுக்கு தடை.ஏஐசிடிஇ அதிரடி-மாணவர் சேர்க்கை குறைவு!!!வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ!

ரூ.1 கோடிக்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதத்தைஸ்டேட் பேங்க் ஆஃப்இந்தியா உயர்த்தி அறிவித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), 

இரண்டு வருட கால வரம்புக்கான ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையில்டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான வட்டி தொகையை 3.75 சதவிகிதத்திலிருந்து 4.75 சதவிகிதமாகவும், 4.25 சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகிதமாகவும் உயர்த்தியுள்ளது. அதேபோல மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமானது 5.75 சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு நடைமுறைநவம்பர் 30 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இத்திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்னர் பணத்தை திரும்பப் பெற்றால் விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதத் தொடக்கத்தில் மேற்கூறிய டெபாசிட்களுக்கான வட்டித் தொகையை எஸ்பிஐ வங்கி 0.25 சதவிகிதம் குறைத்திருந்தது. இந்நிலையில் தற்போது டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.எஸ்பிஐ வங்கியின் இந்த வட்டி உயர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் பிற வங்கிகளும் வட்டித் தொகையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பள்ளிகள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கே தவிர பொருட்காட்சிகள் நடத்த அல்ல-சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயார்!!!கணினி அறிவியல் பாடம் ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில்   பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உறுதி...

மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க ஆசிரியர்களுக்கு "சிஇஓ" வலியுறுத்தல்!!!G.O 303 ன்படி ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் 1208 பக்கங்கள் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.அதில் தேதி வாரியாகவும்,துறை வாரியாகவும் உள்ளது. 1-1-2016 முதல் 30-9-2017 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்

செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் - ஆதார் எண்

இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி பயன்படுத்தி வரும் அனைவரும் தங்கள் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் உள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவன மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

எனினும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், நோய்வாய்பட்டிருப்பவர்கள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமம் உள்ளது.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர செல்லிடப்பேசி செயலி, இணையதளம் மூலம் ஆதாரை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வசதிகளைப் பயன்படுத்தி ஆதார் எண் பெறும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை மிக எளிதாக இணைக்க முடியும்.

ஏனெனில் ஆதார் எண் பெறும்போது சுமார் 50 கோடி பேர் தங்கள் செல்லிடப்பேசி எண்ணை அளித்துள்ளனர். அவர்கள் அந்த எண்ணை மிக எளிதாக ஆதாருடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதாரணமாக வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எளிதாக ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.

செல்போன் செயலியில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்?
எந்த செல்போன் நிறுவனத்தின் சிம்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அந்த நிறுவனத்தின் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அந்த செயலியை திறந்து, அதில்  KYC என்ற வசதியை க்ளிக் செய்து, அதில் 10 இலக்கங்கள் கொண்ட உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யுங்கள். தொடர்ந்து உங்கள் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி என்பது, நீங்கள் ஆதார் அட்டை பெறும் போது அதில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத்தான் அனுப்பி வைக்கப்படும்.

செயலியில் அளிக்கப்படும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடிபியை பதிவு செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஓடிபியை பதிவு செய்ததும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான குறுந்தகவலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!