Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 4 December 2017

ஒரு பக்கத்தில் ஒரு வருட நாட்காட்டி 2018



NEW BANK CHARGES





2ND TERM EXAMINATION TIME TABLEDECEMBER -2017 | Tiruvallur




09.12.2017 அன்று நடைபெற இருந்த NMMS தேர்வு 16.12.2017 அன்று மாற்றப்பட்டுள்ளது -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் மீளாய்வு கூட்ட அறிக்கை!!!(STATE TEAM VISIT - VILLUPURAM DISTRICT REVIEW REPORTS - SCHOOL WISE & CLASS WISE REPORTS

Click here 

https://drive.google.com/file/d/1cQrg5pehEM7jVEstkSiaN9RkKcrfGQII/view?usp=drivesdk

ALM - படைப்பாற்றல் கல்வி முறை பற்றிய தொகுப்பு.

தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு

படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology)

அறிமுகம் :

படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் *ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு* கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. 

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளடைவில் பிறபாடங்களும் இம்முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

படைப்பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி *ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.*

*படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும்.*

அவை, 

*அறிமுகம் : (10 நி)*

முந்தைய பாடங்களில் தொடர்புடைய கருத்துகள் இருப்பின் அதனை நினைவுகூர்ந்தும், ஆர்வமூட்டும் செயல்பாடுகளின் வாயிலாகவும் பாடத்தினை அறிமுககப்படுத்துதல்.

*படித்தல்: (10 நி)*

பாடப்பகுதியை முதலில் ஆசிரியர் படித்தல். பின்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவர் படித்தல். மாணவர் அடிக்கோடிட்ட புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். (மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்).

*மனவரைபடம்: (15 நி)*

பாடக்கருத்துக்கு ஏற்ற மன வரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மன வரைபடத்தை வழங்குதல். விடுபட்ட கருத்துகளுடன் ஆசிரியர்தம் மன வரைபடத்தினை வழங்குதல்.

*தொகுத்தலும் வழங்குதலும்(10 நி)*

பாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் *தொகுத்தல்*

1.வார்த்தை வலை(Word web

2. அட்டவணை(Tables).

3. குறிப்புகள்(Hints).

4. வரிசைமுறையில் எழுதுதல்.

5. படங்கள் வரைதல்.

6. உண்மைத் தகவல்கள்.

7. காலங்கள்.

8. மீன்முள்

9.தகவல் பலகை

மாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.

*வலுவூட்டுதல்: (15 நி)*

பாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல்.

*மதிப்பீடு: (15 நி)*

மாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.

*குறைதீர் கற்றல்: (15 நி)*

கற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.

*எழுதுதல்:*

பாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.

*தொடர்பணி*

பாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

*சிறப்புக்கள்:*

படைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாகவும் இம்முறையானது கருதப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனியாக வழித்தடம் உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 ஆகிய 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓ கி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு  பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) சார்பில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்த, கல்வித்துறைஉத்தரவிட்டுள் ளது.

அரசுப் பள்ளிகளில்கல்வித்தரத்தை மேம்படுத்தி, தேர்ச்சி விகிதங்களை அதிகப்படுத்த,கல்வித்துறை முனைப்புக் காட்டி வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், கல்வி போதிப்புப் பணியில் தொய்வு தென்படுகிறது, என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

குறிப்பாக கூடலுார், பந்தலுார் வட்டங்களில் உள்ள பள்ளிகளில், அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக, சில நாட்களுக்கு முன், அரசியல் கட்சியினர் மற்றும் பெற்றோர் சார்பில் ஆர்ப்பாட்டம் உட்பட போராட்டங்கள் நடத்தப்பட்டன..

விளைவாக, ’கூடலுார் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிடிஏ., சார்பில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிடங்களை, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும்’ என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

’அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விபரத்தை, உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்’ எனவும்,உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், குன்னுார் உட்பட பிற இடங்களில் உள்ள பள்ளிகளில் மிகுதியாக உள்ள ஆசிரியர்கள், ’டெபுடேஷன்’ அடிப்படையில் கூடலுார் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு அவசியம்

பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:

காலிப் பணியிடங்களை நிரப்பும் கல்வித்துறையின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதே நேரம், பெரும்பாலான அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளிகளில் ஆர்வமுடன் வகுப்பு நடத்த, தங்கள் மாணவ, மாணவியரை ’கரை சேர்க்க’ வைப்பதை காட்டிலும், காலை, மாலை நேரங்களில், தங்கள் வீடுகளில், ’டியூஷன்’ நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரு சில ஆசிரியர்கள், தங்கள் வகுப்பில், கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ, மாணவியரை, தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து, அவர்களுக்கு கூடுதல் நேரம் பயிற்சி வழங்குகின்றனர்; இதற்கு, அவர்கள் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. 

இது, வரவேற்கத்தக்கது என்ற நிலையில், பல ஆசிரியர்கள், பிற பள்ளி மாணவ, மாணவியருக்கு பெரும் தொகையை கட்டணமாக வசூலித்து ’டியூஷன்’ நடத்துவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.எனவே, அரசுப் பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ள மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும், கல்வி போதிப்பில் அக்கறை காட்டாத ஆசிரியர்களையும் கண்காணிப்பது அவசியம்.இவ்வாறு, பெற்றோர்கள் கூறினர்.

தாசில்தார், பி.டி.ஓ.க்களுக்கு புதிய ஊதிய நிர்ணயத்தில் குழப்பம்!!!



பிளஸ்1 பொதுத்தேர்வு அரையாண்டு பரீட்சைக்காக 32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரி வினாத்தாள் தயார்: மாவட்ட வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத 32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயார் செய்து, அவற்றை மாவட்ட வாரியாக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மட்டுமே அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டது. பிளஸ் 1 தேர்வு சாதாரணமாக நடத்தப்பட்டது.இதனால் சில பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களை நடத்தாமலே, பிளஸ் 2 பாடங்களை நடத்தியுள்ளனர்.

 இந்நிலையில் மருத்துவபடிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து பல கேள்விகள் இடம் பெற்றிருந்து. இதை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் பெயிலாகினர். எனவே தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வும் 2017-2018ம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். இதைபோக்க 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் 7ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் பொதுத்தேர்வு வடிவில் 32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்களை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணி நாளை தொடங்குகிறது.மேலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை பொதுத்தேர்வுபோல் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த வேண்டும். இந்த தேர்வை பள்ளி ஆசிரியர்களையே கண்காணிக்க செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பரவு பணியாளர்கள் சம்பளம் இழுத்தடிப்பு அரசு பள்ளிகளில் கேள்விக்குறியாகிறது சுகாதாரம்! !!



10 Income Tax rules you need to know

1. Tax saving on house rent allowance

House rent allowance, commonly known as HRA, is a major chunk of a salaried individual's total pay. Under Section 10 (13A) of the Income Tax Act, you can save tax on the rent you pay to your landlord. However, you get partial tax benefit on the rent you pay. 
The amount that is allowed for exemption under HRA is calculated as the minimum of:i) Rent paid annually minus 10 per cent of basic salary plus dearness allowanceii) Actual HRA receivediii) 40 per cent of basic and dearness allowance (50 per cent in case of metro cities).Your HRA allowance will be taxable if you are not paying any rent or you stay in your own house. But those who stay with their parents can also claim HRA benefits by paying rent to their parents.

2. Deductions under Section 80C

One can claim tax benefit on investments up to Rs 1.5 lakh under Section 80C of the Income Tax Act. If you fall in the highest tax slab (30 percent), by investing Rs 1.5 lakh you can save tax for up to Rs 46,350 (including cess charges.) per year. Investments that qualify for tax benefitunder this section are Employees' Provident Fund (EPF), Public Provident Fund (PPF), Sukanya Samriddhi Account, National Savings Certificate and tax-saving fixed deposits. The premium paid for life insurance plans, National Pension Scheme (NPS) and tax-saving mutual funds (ELSS) also qualify for deduction under Section 80C.One can also claim tuition fees paid for up to two children, principal repayment on home loan, stamp duty and registration cost on the house bought as a deduction under Section 80C.Read: Save income tax through mutual fund investment. All you need to know

3. Deductions under Section 80CCD(1B)

This section was introduced in Budget 2015-16. Under this section, one can get tax benefits on investments up to Rs 50,000 in NPS tier 1 account. This is over and above the Rs 1.5 lakh limit under Section 80C. An individual in highest tax bracket can save Rs. 15,450 by investing Rs.50,000 in NPS under Section 80CCD(1B).

4. Deduction under Section 80E

If you have taken an education loan for yourself, spouse or children, then the interest paid on the loan qualify for tax benefit under Section 80E. The best thing here is that there is no upper limit on the amount of deduction. But the criteria is that the loan must have been taken from a financial institution or approved charitable institution and for full-time higher education.

5. Deduction of interest on housing loan (Section 24B)

If you have taken a housing loan to buy a house, then the interest you pay on your housing loan qualify for tax benefit under Section 24B. Interest paid up to Rs 2 lakh in a financial year on housing loan is allowed as deduction from your income. If you have taken a home improvement loan, then interest up to Rs 30,000will be allowed as deduction under this section.

6. Deduction under Section 80EE

Re-introduced in Union Budget 2016, an additional deduction of Rs. 50,000 is available under this section, which is over and above the limit of Section 24B on interest paid on home loans if a person is buying a house for the first time. But there is a condition to avail this benefit. The cost of the property must be below Rs 50 lakh and the loan amount must be less than equal to Rs 35 lakh.Also, the property mustbe bought after April 1, 2016.

7. Deduction under Section 80D

Premiums paid for health insurance for self, spouse, children, and parents qualify for deduction under Section 80D. One can claim deduction of Rs. 25,000, if he is below 60 years of age, and Rs. 30,000 if he is above 60 years of age, towards medical insurance premium paid for self, spouse and children. Under this section,additional deduction of Rs. 25,000 is available ifone buys medical insurance for his parents. This deduction can go up to Rs. 30,000 per year if parents are above the age of 60 years. So the total deduction you get under Section 80D is up to Rs 60,000.

8. Deduction under Section 80DD

If a tax payer has dependent parents, spouse, children or siblings who are differently-abled, then he can claim deductions up to Rs. 75,000 for expenses on their maintenance and medical treatment under this section. If the disability is severe in nature, then the deduction can increase to Rs 1.25 lakh.

9. Deduction under Section 80DDB

Under this section, one can claim deduction of Rs. 40,000 for medical treatment of specified disease or ailment for self and dependents. The deduction can go up to Rs. 60,000 if the tax payer is above 60 years of age and if he is above 80 years of age, then the deduction amount is up to Rs. 80,000. The diseases have been specified in Rule 11DD. To claim this benefit a certificate in form 10 I is to be furnished by the taxpayer from any registered doctor.Also Read: Mutual fund: Should you opt for regular plan or direct plan for wealth creation

10. Tax benefit under Section 80TTA

Under this section, interest income up to Rs 10,000 per annum from savings account is allowed as deduction from taxable income. However, interest earned from fixed deposits, term deposits does not qualify for deduction under this.

English through pictures

பான் - ஆதார் இணைக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு???

பான் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன் 

ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம் ஏற்றது.
இதையடுத்து, ஆதாருடன், பான் எண்ணை இணைக்க, மூன்று முதல்ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.போலி பான் எண்களை ஒழிக்கும் நோக்கிலும், கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கிலும், பான் எண்ணை, ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, இம்மாதம், 31 வரை அவகாசம் தரப்பட்டுஉள்ளது.மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:போலி பான் எண்களை ஒழிப்ப தால், பினாமி பரிவர்த்தனைகள் ஒழிக்க படும். ஆதாருடன், பான் இணைப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றதால், இவற்றை இணைப்பதற் கான அவகாசத்தை, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்க, மத்திய அரசு விரும்புகிறது.

கருணை அடிப்படையில் அளிக்கப்படும் அவகாசத்திற்கு பின்பும், ஆதாருடன் இணைக் கப்படாத பான் எண்கள் செல்லாததாகி விடும்.போலி பான் எண்கள், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்து கின்றன. இந்த எண்களை பயன்படுத்தி வங்கி கணக்குகள் துவங்கப்படுகின்றன.அவற்றில் நடக்கும் போலி பரிவர்த்தனைகள் குறித்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதில்லை. எனவே, போலி பான் எண்களால் ஏற்படும்அபாயம் குறித்த கவலை, அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


டிசம்பர் 31-க்குள் இதை எல்லாம் நீங்கள் செய்தே ஆக வேண்டும்?

2017-ம் ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள்

இதை எல்லாம் நீங்கள் ஆதார் எண் கொண்டு இணைக்க வேண்டும். சில சேவைகளுக்கு மத்திய அரசு 2018 மார்ச் 31 வரை காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் பல சேவைகள் டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். எனவே எந்தச் சேவைகளை எல்லாம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பான் கார்டு பான் கார்டுடன் வருமான வரி இணையதளத்தில் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒருவேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் செயல்படுத்தப்படாது.

2017-ம் ஆண்டு முடிவதற்குள் மற்றும் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இதை எல்லாம் நீங்கள் ஆதார் எண் கொண்டு இணைக்க வேண்டும். சில சேவைகளுக்கு மத்திய அரசு 2018 மார்ச் 31 வரை காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் பல சேவைகள் டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். எனவே எந்தச் சேவைகளை எல்லாம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். பான் கார்டு பான் கார்டுடன் வருமான வரி இணையதளத்தில் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒருவேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் செயல்படுத்தப்படாது. கிரெடிட் கார்டுகள் கிரெடிட் கார்டு சேவைகளைப் பயன்படுத்தி வருபவர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது கிரெட்ட் கார்டு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
காப்பீடு திட்டங்கள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களும் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் பாலிசியை இணைக்க வேண்டும். இல்லை என்றால் தேவைப்படும் போது பாலிசியை அணுக முடியாது.

மியூச்சுவல் ஃபண்டுகள் / பங்குச் சந்தை பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

வங்கி கணக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் கணக்கு செயல்படாது.

பிபிஎப் / கிசான் விகாஸ் பத்ரா போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் ஆதார் எண் இணைப்பினை செய்ய வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

எல்பிஜி மற்றும் பொது விநியோக திட்டங்கள் எல்பிஜி மானியம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் நன்மைகளைத் தொடர்ந்து பெற 2017 டிசம்பர் மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் மானியம் போன்றவை கிடைக்காது.

மொபைல் எண் மொபைல் எண் பயன்படுத்தி வருபவர்கள் அனைவரும் 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் சிம் கார்டிற்கான சேவைகள் துண்டிக்கப்படும்.


புதிய வரைவுப் பாடத் திட்டம்: இணையத்தில் இதுவரை 25 லட்சம் பேர் பார்வை, 7,500-க்கும் மேற்பட்டோர் கருத்து!!!

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒன்று முதல் 

பிளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் பாடத் திட்டம் குறித்து 7,500-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டம் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய வரைவுப் பாடத் திட்டத்தை வடிவமைத்தனர்.
இதற்கான வரைவு தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவ.20-ஆம் தேதி வெளியிட்டார். இதையடுத்து இந்த வரைவுப் பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் என்ற வலைதளத்தில் கடந்த நவ.21-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 29-ஆம் தேதி வரை என இருந்த நிலையில் இதை மேலும் நீட்டிக்க வேண்டும்
என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதனால் டிச.5 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த கால அவகாசத்தை மேலும் சில நாள்கள் நீட்டிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13 நாள்களில் புதிய வரைவுப் பாடத் திட்டத்தை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டு அது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
2.5 லட்சம் முறை பதிவிறக்கம்: இணையதளம் மூலமாக பெறப்பட்ட கருத்துகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2.5 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 7,500-க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பாடத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) , சிபிஎஸ்இ, பிற மாநிலங்களின் பாடத் திட்டங்களை ஆய்வு செய்து தேவையான பகுதிகளை உள்ளீடு செய்திருப்பது, ஒவ்வொரு பாடத்துக்கும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகம், ஜாமெட்ரிக் பாடத்தின் எளிமை, மெய்நிகர் வகுப்பறை ("வெர்ச்சுவல் கிளாஸ்'), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) போன்ற விஷயங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ரோபோடிக், நானோ சயின்ஸ், பாலியல் பேதங்கள் மற்றும் பிரச்னைகள் மற்றும் மேல்நிலைப் பாடத் திட்டங்களுக்கு பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் பரிசீலனை: அதேபோன்று தொடக்கக் கல்வியில் மேலும் சில புதிய விஷயங்களைச் சேர்க்க வேண்டும். புதிதாக இடம்பெற்ற விஷயங்கள் அனைத்தும் நடைமுறையிலும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக இணையதளம் மூலமாக பெறப்பட்ட கருத்துகளில் ஏற்கத் தகுந்தவை உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
தரமான தாள்களில் அச்சிட வேண்டும்...
இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கூறுகையில், புதிய வரைவு பாடத் திட்டம் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் இந்தப் பாடங்களை கற்பிக்கவும், கற்கவும் ஏற்ற சூழலை அனைத்து பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும். புதிய பாட நூல்களை எழுதுவதற்கு தகுதியான ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்ய வேண்டும். தொடக்க கல்வி பாடநூல்கள் வண்ணமயமாகவும், அனைத்து புத்தகங்களும் தரமான தாள்களிலும் அச்சிடப்பட வேண்டும் என்றனர்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!