Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 5 December 2017

TNTET Paper 2 VACANCIES : தமிழ்நாடு பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2265 - CM CELL REPLYஇடைத்தேர்தலை முன்னிட்டு டிச.21-ம் தேதி ஆர்.கே.நகரில் பொது விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

இடைத்தேர்தலை முன்னிட்டு டிச.21-ம் தேதி ஆர்.கே.நகரில் பொது விடுமுறை - மாவட்ட ஆட்சியர்


30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!தொலைநிலை கல்வி திட்டம் மூலம் 
பொறியியலபடித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கான ஒரே தீர்வாக மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேர்வு நடத்தப்படவுள்ளது. அதை எழுதுவதற்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் பட்டங்களை செல்லுபடி ஆக்க அவர்களுக்கு இதுவே ஒரே வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.Important Days (National & International)
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவிப்பு.TNTET 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி

செய்யப்பட்டுவிட்டது ( Status /stage : Disposed (motion hearing (fresh(for admission) -civil cases)dismissed-ord dt:05/12/2017 (disposal date:05;12/2017 month 12, year 2017)

Jactto Geo - Strike Postponed to 17.12.2017

ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ம் தேதிக்கு பதில் டிசம்பர் 17 ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது. 
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஆணைதஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் M.PHIL,விடுமுறைக்கால படிப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது புவியியல் மற்றும் வரலாறு பாடம் அங்குள்ளது எனவே நம் ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யவும்

Click here


Application 


Download pdf


Prospectus download here


https://drive.google.com/file/d/1zwWilkYGOpdcBfzW0Wki8K5v0QeMGBou/view?usp=drivesdk

தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்!!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழி மாணவர்களுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் 

ஆக்கப்பட்டதில், இந்த ஆண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் பிற மொழி மாணவர்களுக்கு, அவர்களின் தாய்மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஹிந்தி மற்றும் அரபிக் போன்ற மொழிகளிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் என்ற சட்டம், 2006ல்அமலுக்கு வந்தது. அப்போது முதல், பிற மொழி மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என, ஒவ்வொரு வகுப்புக்கும், படிப்படியாக, தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது.

உத்தரவு

இதையடுத்து, 2006ல், ஒன்றாம் வகுப்பு படித்தவர்கள், 2016ல், 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். அவர்களுக்கு, மொழி பாடத்தில் தமிழை கட்டாயமாக எழுத,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.அதனால், பிற மொழி பாட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெயரளவில் அறிமுகம் செய்யப்பட்ட, தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தில், முறையாக தமிழ் பயிற்றுவிக்கப்படவில்லை என, புகார் எழுந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவில், அந்த மாணவர்களுக்கு, தமிழ் பாடம் எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டும், பிற மொழி மாணவர்கள், 10ம் வகுப்பில், தமிழை கட்டாய பாடமாக எழுத உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும், தமிழில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது.
வேலை மற்றும் வணிக ரீதியாக, பிற மாநிலங்களில் இருந்து, குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்த, அரசு மற்றும் தனியார் துறையினரின் பிள்ளைகள்,

ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில், தமிழகத்தில் சேர்ந்திருந்தால், அவர்கள் மட்டும், தமிழ் தேர்வு எழுத விலக்கு தரப்பட்டு உள்ளது.சிறப்பு மதிப்பெண்இந்த அறிவிப்பால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. எட்டு, ஏழு, ஆறு என, மற்ற வகுப்புகளில் சேர்ந்த, பிற மொழியினர் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுத்து, 10ம் வகுப்பில், தமிழ் தேர்வு யாருக்கு கட்டாயம்; ஒன்பதாம் வகுப்புக்கு கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு உண்டா...இல்லையென்றால், அவர்களுக்கு தமிழ் பாட தேர்வில், சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


ஆதாருடன் இணைக்க வேண்டிய 'ஆறு'மோடி தலைமையிலான மத்திய அரசு,
பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவறறின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.
முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் ஆகிய ஆறு சேவைகளை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இணைப்பது?

பான் கார்டு: ஆதாருடன் பான் கார்டை இணைக்க https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html என்ற இணையதளத்தில் பான்கார்டு, ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : வருமான வரி தாக்கல் செய்ய இயலாது

வங்கிக்கணக்கு
கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஆதார் எண்ணை வழங்கி இணைக்கலாம் அல்லது இன்டர்நெட் பேங்கிங்,மொபைல் பேங்கி்ங் மூலம் ஆதார் அப்டேட் லிங்கை கிளிக் செய்து இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு முடக்கப்படும்

மியூச்சுவல் பண்ட்சி.ஏ.எம்.எஸ் மற்றும் கார்வி கம்ப்யூட்டர்ஷேர் இணையதளங்கள், உங்கள் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உதவுகிறது.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்குகள் நிறுத்தப்படும்
இன்சூரன்ஸ் பாலிசிஇன்சூரன்ஸ் பாலிசிகளை இணைப்பதற்கு அந்தந்த நிறுவன கிளைகளுக்கு நேரடியாக சென்று, பாலிசி எண், பிறந்த தேதி, ஆதார் எண் வழங்கி இணைக்கலாம்.

எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ், மேக்ஸ் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 'ஆன்லைன்' மூலம் இணைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : காப்பீட்டு திட்டங்களை தொடர முடியாது
தபால் திட்டங்கள்தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், ஆதாரை இணைப்பதற்கு, இந்தியா போஸ்ட் இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கணக்கு வைத்திருக்கும் கிளையில் வழங்குவதன் மூலம் இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு முடக்கப்படும்

அலைபேசி எண்தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு சென்று, அலைபேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம். கடைசி தேதி : 2018 பிப்., 6நடவடிக்கை : அலைபேசி எண் செயலிழக்கப்படும்


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘ரெயின் கோட்’ வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மழை காலங்களில் பாதிக்கப்பட்டு 

வருகின்றனர். குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 11ம் தேதி இதற்கான கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்படும். 3.52 கோடி ரூபாய் செலவில் 1,17,236 ரெயின் கோட் வாங்கப்படும். 28 இன்ச் அளவில் 21,383 ரெயின் கோட், 30 இன்ச் அளவில் 23,832 ரெயின் கோட், 32 இன்ச் அளவில் 29,806 ரெயின் கோட், 34 இன்ச் அளவில் 42,215 ரெயின் கோட் வாங்கப்படவுள்ளது.

இந்த ரெயின் கோட் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, நாமக்கல், சேலம், தேனி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை

உயர்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டண சலுகையினை ஒரேகுடும்பத்தைச் சார்ந்த முதல் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்குதல் குறித்த தெளிவுரை.


பாடத்திட்டம் குறித்த கருத்து : ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆர்வம்

தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவது குறித்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள்

மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகத்தினர், நிறைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு, தமிழக அரசின் சார்பில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கலைத் திட்டக் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.

வரைவு அறிக்கை : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர், அறிவொளி ஒருங்கிணைப்பில், பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தகம் எழுதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, பாடத்திட்ட வரைவு அறிக்கையை, நவ., 20ல், பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிப்போர், எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், www.tnscert.org என்ற இணையதளத்தில், கருத்துக்களை பதிவு செய்யலாம். இதுவரை, 7,500 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில், தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், ஏராளமான ஆலோசனைகளை ஆர்வத்துடன் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் ஊக்கம் : சென்னை, மும்பை, கான்பூர், டில்லி உள்ளிட்ட, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து, பேராசிரியர்கள் கருத்து தெரிவித்திருப்பது, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு, கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளது. சில மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், தங்களின் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, பாட வாரியாக ஆய்வு செய்து, புதிதாக சேர்க்க வேண்டிய அம்சங்களையும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, பாடத்திட்ட தயாரிப்புக்கு முன்பும், பாடத்திட்ட வரைவு அறிக்கை மீதும், நமது நாளிதழ் சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு, ஏராளமான கருத்துக்கள் வழங்கப் பட்டுள்ளன.


பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்

, தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
மேலும், தேர்வுக்கான அட்டவணைகளையும் வெளியிட்டது. இதையடுத்து, மேற்கண்ட வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம் பெற உள்ளன. தற்போது கேள்வித்தாள்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. இதையடுத்து நாளை மறுநாள் 7ம் தேதி தேர்வுகள் தொடங்குகிறது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 7ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23ம் தேதியுடன் முடிகிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிகிறது. அதற்கு பிறகு கிறஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்படும். 


பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு!!!

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில்

தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடந்தது.
அதில் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது அந்த பணிகள் முடிந்து முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் விவரங்கள் www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். 


தேசிய மாசுக் கட்டுபாட்டு தினம் மற்றும் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!