தற்போது எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம் மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம் பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில் ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன் என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள் முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும் பதிவேற்றலாம்.
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Thursday, 7 December 2017
EMIS FLASH NEWS
தமிழகத்தில் 26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்.
*தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 26,000 பேர்
தகுதியில்லாதவர்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தகுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*மேலும்,நடுநிலை,ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் தனியார் பள்ளியில் பணியாற்றி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.*
நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பி.எட் ஊக்க ஊதியஉயர்வை ரத்துசெய்து, மிகை ஊதிய பிடித்தம் செய்திட வழங்கப்பட்ட ஆணைக்குத்தடை*
பி.லிட், பட்டம் பெற்று நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு, பின்னர் பி.எட் பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெற்று வந்த தலைமையாசிரியர்களுக்கு அவர்களின் ஊக்க ஊதியம் ரத்து செய்ததுடன், அவர்களின் மிகை ஊதியமும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட ஆணையை எதிர்த்து தஞ்சாவூர் ஊரகத்தில் பணியாற்றும் 6 தலைமைஆசிரியர்களும், பூதலூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஒரு தலைமைஆசிரியரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இன்று (07.12.2017) தடையாணை பெற்றுள்ளனர்
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு!!
தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மிகவும் பிற்பட்டோர் ஆணையம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று விரைவில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.
'ஆன்லைன்' முறையில் பள்ளிகள் அங்கீகாரம்
அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது; விதிகளை மீறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காது.தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன.
அவற்றில்,நர்சரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன. இந்த அங்கீகாரத்துக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த,சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களை தீர்க்க, வரும் கல்வி ஆண்டு முதல், 'ஆன்லைன்' அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.,யை போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, 'சாப்ட்வேர்' கேட்கும்ஆவணங்களை வழங்கிய பின், பள்ளிகள் பதிவு செய்ய முடியும். அதனால், விதிமீறிய பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் பெற முடியாது என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊதியப்பதிவேட்டில் ஊதிய விபரம் குறிப்பிடுதல் சார்ந்த கருத்துப் பார்வை
முந்தைய ஊதிய குழுக்கள் மற்றும் ஆறாவது ஊதிய குழுவில் Scales of Pay என
இருந்தது, தற்போதைய ஊதிய குழுவில் Levels of Pay என உள்ளது.
எனவே தற்போது முந்தைய Pay Band க்கு இணையாக அந்தந்த பதவிகளுக்குரிய Level of Pay ஐ குறிப்பிட்டு எழுதலாம்.
PB - 1ல் GP 2800 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு Level 10 (20600 - 65500) என Level of Pay என்பதை ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு ஊதிய தொகையையும் குறிப்பிடலாம்.
*உதாரணமாக*
*Level 10 (20600 - 65500*) *Cell 34 Pay 54900 என எழுதலாம்.*
PB - 2 ல் GP 4300 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு LEVEL 12 ( 35600 - 112800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
PB - 2 ல் GP 4500 லிருந்த தொ.ப. த.ஆசிரியர்களுக்கு LEVEL 15 ( 36200 - 114800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
PB - 2 ல் PB 4600 லிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு Level 16 ( 36400 - 115700 ) என ( ) ல் Level of Pay குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
PB - 2 ல் GP 4700 லிருந்த ந.நி.ப. த.ஆசிரியர்களுக்கு Level 17 ( 36700 - 116200 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.