Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 8 December 2017

RMSA - SSA ஆகிய இரு திட்டங்களையும் இணைக்க முடிவு!!!

FLASH NEWS : JACTTO-GEO காலவரையற்ற தொடர் மறியல் போராட்டம் அறிவிப்பு!!!

*JACTTO-GEO போராட்ட அறிவிப்பு :

பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!

வணக்கம்.

☀ஜாக்டோ-ஜியோ மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.

☀ *2009-ல் இருந்து* பெருத்த பாதிப்பைச் சந்தித்து இன்னலில் இருந்து வரும் *இடைநிலை ஆசிரியர்கள்* மாதந்தோறும் சுமார் *ரூ.14,500/- வரை இழப்பைச் சந்தித்து* வருகின்றனர். எனவே, *இடைநிலை ஆசிரியர்களுக்கான* ஊதிய முரண்பாடு குறித்த *ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி* ஜாக்டோ-ஜியோ சார்பாகவோ அல்லது கூட்டமைப்பில் உள்ள டிட்டோஜாக் உறுப்பு சங்கங்களின் சார்பாகவோ *வலிமையான தனித்த போராட்ட நடவடிக்கை மேற்கொள்ள* வலியுறுத்தி அனுமதி கோரப்பட்டது.

☀ஆனால், தனித்த கோரிக்கை கோருவதோ, தனிப்பிரிவாக நடவடிக்கையில் இறங்குவதோ, நீதிமன்றத்தில் தனித்து வழக்குப் போட்டுள்ளதோ கூட்டமைப்பிற்கு ஏற்புடையது அல்ல. எனவே, *கூட்டமைப்பின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு* இதுபோன்ற நடவடிக்கைகளில் *ஈடுபட வேண்டாமென* ஜாக்டோ-ஜியோ சார்பாக வலியுறுத்தப்பட்டதோடு,

*📢புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்தல்*

*📢இடைநிலை & முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல்*

என்ற *இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி,*

*☀21.12.2017* வியாழன் அன்று,

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள *மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்,*

*⚡மாவட்டத் தலைமை நீதிபதி*களிடத்திலும்

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,*

*⚡சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி* / பதிவாளரிடத்திலும்

*☀முறையீட்டு மனு அளித்தல்☀*

மேலும்,

*30.12.2017-ற்குள் தமிழக அரசு* இக்கோரிக்கைகளை *நிறைவேற்றாவிடில்,*

*☀31.12.2017* ஞாயிறு அன்று *திருச்சியில்*

உரிமைப் போராட்டங்களில் நீதிமன்றங்களின் தொடர் தலையீடுகள் குறித்தும், தொடர் இயக்க நடவடிக்கை குறித்தும்,

*⚡ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து,*

*☀கருத்தரங்கு நடத்துதல்☀*

இதனைத் தொடர்ந்து,

*☀சனவரி 4-வது வாரத்தில்* இருந்து,

*⚡ஜாக்டோ-ஜியோ*வின் அனைத்து உறுப்பு சங்கங்களும் மாவட்டம் வாரியாக *சுழற்சி முறையில்,*

*⚡சென்னையில்*

*☀காலவரையற்ற தொடர் மறியலில் ஈடுபடுதல்☀*

உள்ளிட்ட மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளை அறிவித்து முடிவாற்றப்பட்டுள்ளது.

☀மேலும், *கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நிதியுதவி* செய்வது எனவும் முடிவாற்றப்பட்டுள்ளது.

☀இன்றைய கூட்டத்தில் *ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினுள்,*

1. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம்

2. தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்

3. தமிழக பகுதிநேரத் தொழிலாசிரியர் முன்னேற்ற சங்கம்

உள்ளிட்ட *3 இயக்கங்கள் புதிதாக இணைந்துள்ளன.*

☀நீதிமன்றத் தலையீடுகள் உள்ள காலகட்டத்தில், ஜாக்டோ-ஜியோவின் மூன்று கட்ட போராட்ட நடவடிக்கைகளில் நமது இயக்கத் தோழர்களும் தீரத்துடன் கலந்து கொள்வதற்கான கள நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

*ஒன்றுபட்ட போராட்டம், வென்று காட்டும் நிச்சயம்.*

விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | PLAY STORE PAID APPS FOR FREE | EP-00002 #PAGF 0002


விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம்
| PLAY STORE PAID APPS FOR FREE | EP-00002 #PAGF 0002

SALEM CEO PROCEEDINGS REGARDING S.P.D TEAM VISIT ON 11-12-2017PRESS RELEASE-Extend date for linking of Aadhaar with PAN till 31.03.2018.

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக்கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 க்கு ஒத்திவைப்பு

ஜாக்டோ ஜியோ வழக்கு டிசம்பர் - 21 அன்று விசாரணைக்கு ஒத்திவைப்பு*

ஆசிரியர்களைக் குழப்பலாமா? "தமிழ் இந்து" நாளிதழ் கட்டுரைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

☀4.12.2017 அன்று வெளியான தமிழ் இந்து வணிக வீதி பகுதியில் புதிய ஓய்வூதியத் திட்டம் லாபமா? என்ற தலைப்பில் நீரை மகேந்திரன் அவர்கள் எழுதியிருந்தார்.

☀அதில் கட்டுரையின் தலைப்பிற்கும், கட்டுரையின் கருத்திற்கும் தொடர்பின்றி இருந்தது.

☀மேலும் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பதற்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அறியாமல் கட்டுரை வெளிவந்தது புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதோடு மன வருத்தத்தையும் அளிக்கிறது.

☀புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது கடந்த 1.1.2004 முதல் மத்திய மற்றும் மாநில அரசில் புதிதாக பணியேற்பவருக்கு பொருந்தும்.

☀1.5.2009 முதல் இது அனைத்து குடிமக்களுக்கானத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

☀இதை PFRDA ஆணையம் மூலம் நிதி மேலாளர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

☀ஆனால் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்ட ஓய்வூதியம் என்பது 1956 முதல் நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலத்திட்டமாகும். இதில் அவ்வப்போது சில மாற்றங்களுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

☀இதனை EPFO என்ற அமைப்பு மூலம் இந்தியா முழுவதும் உள்ள மண்டல அலுவலகங்கள் வழியாக நிர்வகிக்கப்பட்டு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

☀இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் 4.7 கோடி தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.

*☀அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை.*

☀மேலும், இதற்கான சட்டம் என்பது 19.9.2013 அன்றுதான் நிறைவேற்றப்பட்டது.

☀எனவே இக்கட்டுரை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கடுமையாகப் போராடி வரும் இச்சூழலில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

☀அதிக விழுக்காடு ஆசிரியர்கள் வாசிக்கும் தமிழ் இந்து நாளிதழில், கட்டுரை வெளியிடும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வெளியிட்டால் தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்கும்.

TN 7th PAY COMMISSION : SALARY BILL & ACQUITTANCE BILL - PRIMARY & MIDDLE SCHOOLS (PDF)

4G வசதியுடன் லேப்டாப்!Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை 
தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதுவரை அதிக பேட்டரி வசதிகள்கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை உற்பத்தி செய்துவந்த இந்த நிறுவனம், முதன்முறையாக புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர் 6) Asus நிறுவனம் NovaGo என்ற புதிய மாடல் மடிக்கணினி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக 4G நெட்வொர்க் வசதியுடன் செயல்படும் வகையில் இந்த மடிக்கணினி வெளியாகி உள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ஸ்னேப்டிராகன் 835 ப்ராசெஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4GB RAM மற்றும் 64GB அல்லது 256GB இன்டெர்னல்கள் கொண்டு இரண்டு விதமான மாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் சிம் பயன்படுத்துவதற்காகத் தனியே வசதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே வைஃபை இல்லாத நேரங்களிலும் இதில் இன்டர்நெட் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்தப் புதிய மடிக்கணினியானது முக்கியமாக 4G நெட்வொர்க் வசதியின் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் மெல்லியதாகவும், எடைக்குறைந்த ஒன்றாகவும் இந்த மடிக்கணினி உள்ளதால் இதை எளிதில் எங்கும் எடுத்து செல்ல இயலும். இதன் பேட்டரி சக்தியைக்கொண்டு சுமார் 22 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதன் விற்பனையை விரைவில் தொடங்கவும் Asus நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, 'ஹெல்ப்லைன்' திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.

புதியபாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், 'ரேங்கிங்' முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, 'ஹெல்ப்லைன்'திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களைதெரிவிக்கலாம்.

அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும்கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல்நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.


JACTTO - GEO வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...

ஜாக்டோ ஜியோ வழக்கு இன்று  08.12.2017 பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை நீதிமன்றத்தில் முதல் கோர்டில் விசாரணைக்கு வருகிறது..

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க

👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income taxகணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை. 

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன 

👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .

👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா? 

👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில் 

1.ஜூன் 15 க்கு முன்னதாக 15% 

2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45% 

3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75% 

4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும். 

👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular taxpayer list ல் வைக்கப்படுவோம். 

👉அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும். 

👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும். 

👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு. 

👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம் 

👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக 

👉விழிப்படைவோம். 

👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற
அபராதத்தையும் தவிர்ப்போம்
-கல்விச்சிறகுகள்

Epayslip site is opening nowRTI-HRA-மாநகராட்சி வீட்டு வாடகைப்படியை 16 கி.மீ ஆர எல்லை பெற்று அரசாணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரே வழங்கலாம்
'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி!!!

மத்திய, மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான

, திறனறி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. தேசிய அளவில் நடக்கும் இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 7,219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, திறனறி தேர்வுக்கு பயிற்சி தரப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கி, முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை துவங்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும், போட்டி தேர்வு பயிற்சிக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும், 3,000, 'ஸ்மார்ட்' வகுப்புகளும், திறனறி தேர்வு பயிற்சி மையங்களாக செயல்பட உள்ளன.
இதற்காக, தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது முயற்சி : திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி, இணையதளத்தில், 'யூ டியூப் லிங்க்' வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தொடக்க கல்வித்துறை சார்பில், புதிய இணையதளம் துவங்கப்பட உள்ளது. அதில், முந்தைய தேர்வுகளின் வினாத்தொகுப்புகள், விடைக்குறிப்புகள் இடம்பெறும். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், திறனறி தேர்வுக்கான கையேடுகள் வழங்கப்படும். திறன் தேர்வில் அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியை, தொடக்க கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.


4 மாணவியர் மரணத்திற்கு பின் பள்ளிக்கு 100 சதவீத வருகை

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் பலியான பனப்பாக்கம்

பள்ளியில், மாணவியர் வருகை, 100 சதவீதமாகியுள்ளது.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்த, நான்கு மாணவியர், ஆசிரியர் திட்டியதால் கடந்த மாதம், 24ல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த பள்ளியில், 1,322 மாணவியர் படித்து வந்தனர். நான்கு மாணவியர் தற்கொலை சம்பவத்தையடுத்து, பயத்தால் மாணவியர் வருவது பாதியாக குறைந்தது.
இதையடுத்து, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உளவியல் நிபுணர்கள் தலைமையில், மாணவியருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
இதனால், 1,290 மாணவியர் பள்ளிக்கு வந்தனர். அதேசமயம், தற்கொலை செய்து கொண்ட மாணவியருடன், பிளஸ் 1 படித்து வந்த, 32 மாணவியர் மட்டும் வரவில்லை.
இதையடுத்து, சென்னை குழந்தைகள் நலம் உளவியல் ஆலோசகர் யசோதா தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு வந்து மூன்று நாட்கள், 32 மாணவியருடன் பேசி, அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர்.
அதேபோல், அவர்களது பெற்றோருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
பின், அந்த மாணவியரும் நேற்று முதல் பள்ளிக்கு வரத்துவங்கினர். இதனால் பள்ளியில் மாணவியர் வருகை, 100 சதவீதமானது.


குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்சென்னை:மத்திய அரசின் 
அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று துவங்குகிறது. சோழிங்கநல்லுாரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது.தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட, 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் செய்முறை திட்டங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.இன்று மாலை, 4:00 மணிக்கு, அறிவியல் விழிப்புணர்வு பேரணியை, மாணவர்கள் நடத்த உள்ளனர். இதில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, மாநாடு துவங்குகிறது.


தமிழாசிரியர் ஊக்க ஊதிய உயர்வு குறித்த CM CELL Reply
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!