Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 9 December 2017

21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிளஸ் 1, 2 அரையாண்டு தேர்வு நாள் மாற்றப்படுமா?- இதுவரை மாற்று தேதி அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 21-ம் தேதி அத்தொகுதிக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ்2 தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவது குறித்து இதுவரை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ளன. இத்தேர்வுகள் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதேபோல், எஸ்எஸ்எல்சி அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது.

இதற்கிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் நாளான டிசம்பர் 21-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகளும், பிளஸ்2 வகுப்புக்கு வேதியியல், கணக்குப்பதிவியல் பாட தேர்வுகளும், எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருப்ப மொழி தேர்வும் (சிறுபான்மை மாணவர்களுக்கு) நடைபெற உள்ளன.எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய 3 தேர்வுகளையும் பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்தான் வழங்கப்படும்.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் காரணமாக டிசம்பர் 21-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே, அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் வேறு தேதிக்குமாற்றப்படுவது குறித்தும், மாற்று தேதி குறித்தும் பள்ளிக்கல்வித் துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மாற்றுத் தேதி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில்...

கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில்...


அந்தந்த மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாநாடு சிறப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

வெ.குமரேசன்,
9626545446 ,9789180422,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.



2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த நமது வழக்கு-28558/2017 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறு நாள்-11.12.2017 அன்று விசாரணை பட்டியலில்-61 வழக்காக வருகிறது.....

09DEC2017 | விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | PLAY STORE PAID APPS FOR FREE | #PAGF 00003


விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | PLAY STORE PAID APPS FOR FREE | EP-00003 #PAGF 0003 

DA from January 2018 for Central Government Employees and Pensioners is estimated to be 7%

DA from January 2018 payable Central Government

Employees and Pensioners is estimated to be 7% – 2% increase in Dearness Allowance is expected from the Month of January 2018

Calculation DA from January 2018 based on All India Conumer Price Index for the months from January 2017 to October 2017 with estimated index for November and December 2017

After witnessing a static level of Consumer Price Index for the months from July 2017 to September 2017, we have two point increase in CPI (IW) for the month of October 2017.
DA from July 2017 – Govt has recently released All India Consumer Price Index (Industrial Workers) for the month of May 2017 (AICPI – IW)Labour Bureau press release on All India Consumer Price Index (Industrial Workers) for the month of Oct 2017

On the basis of actual Consumer Price Index for 10 Months and projected CPI (IW) for the months of November 2017 and December 2017, we have estimated here the DA from January 2018 applicable to Central Government Employees including Railway Employees and Defence Personnel and all Pensioners.
Projected CPI for Nov and Dec 2017
Actual Moderate
Inflation
High
Inflation
Negative
Inflation
Month CPI CPI CPI CPI
Jan-2017 274 274 274 274
Feb-2017 274 274 274 274
Mar-2017 275 275 275 275
Apr-2017 277 277 277 277
May-2017 278 278 278 278
Jun-2017 280 280 280 280
Jul-2017 285 285 285 285
Aug-2017 285 285 285 285
Sep-2017 285 285 285 285
Oct-2017 287 287 287 287
Nov-2017 — 287 293 280
Dec-2017 — 287 295 276
DA from Jan 18 7% 8% 6%
Moderate increase or Static CPI (IW) in the months of November and December 2017:

DA with effect from 1st January 2017 = [ (274+274+275+277+278+280+285+285+285+287+287+287]-(261.4)X100/261.4
= 7 %
As you could see from the table and calculation above, with the actual consumer price index from January 2017 to October 2017 and statically projected CPI for November 2017 and December 2017, DA from January 2018 for Central Government Employees is estimated to be 7%.
High Inflation and consequent increase in CPI (IW) in the months of November and December 2017:

DA with effect from 1st January 2017 = [ (274+274+275+277+278+280+285+285+285+287+293+295]-(261.4)X100/261.4
= 8 %
Only if Consumer Price Index touches 293 and 295 in the months of November 2017 and December 2017 respectively, DA from January 2018 would increase to 8% .
So 3% increase in DA from January 2018 is possible only if very High Inflation in the price of essential commodities is noticed and consequent increase in CPI (IW) in the months of November and December 2017.
Since actual CPI for October 2017 is at 287, 5 point increase in CPI (IW) for the month of November 2017 and further 2 point increase in December 2017 is not expected.
Negative Inflation and consequent decrease in CPI (IW) in the months of November and December 2017:

DA with effect from 1st January 2017 = [ (274+274+275+277+278+280+285+285+285+287+280+276]-(261.4)X100/261.4
= 6 %
In the case of negative projection of CPI (IW) for November 2017 and December 2017, DA from January 2018 will be 6% i.e 1% increase in DA from January 2018, only if CPI decreased to 280 and 276 in November 2017 and December 2017 respectively. This scenario is also extremely unlikely conisdering the inflationary trend in prices.


பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் : தத்கல் வாய்ப்பு கிடையாது

'பிளஸ் 2 பொது தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 பொது தேர்வில், மார்ச், 2018ல், பள்ளிகள் வழியே இல்லாமல்,

நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.நேரடி தனித்தேர்வர்கள், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, வரும், 11 முதல், 16ம் தேதி வரையிலும், பின், அபராத கட்டணத்துடன் வரும், 18 முதல், 20ம் தேதிவரையிலும், விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிக்க, தத்கல் வாய்ப்பு வழங்கப்படாது.

ஆண், பெண் தேர்வர்கள், தேர்வுத்துறையால் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.நேரடி பிளஸ் 2 இதுவே கடைசி : இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 பொது தேர்வை, தனித்தேர்வர்கள் நேரடியாக எழுத முடியாது. பிளஸ் 1 முடித்த பிறகே, பிளஸ் 2 தேர்வு எழுத முடியும்.

இந்த ஆண்டு, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு, நேற்று வெளியானது. அதில், '2016 ஜூலை தேர்வுக்கு முன், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகள் கடந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத, வரும் மார்ச் தேர்வு தான் கடைசி வாய்ப்பு' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு: டிச.11 முதல் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை (டிச.11)முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-

கடந்த 2016 மார்ச் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் இடைநிலைக் கல்வியில் முழுமையாக தேர்ச்சி பெற்று இரண்டாண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நேரடித் தனித்தேர்வர்களாக மார்ச் 2018-இல் நடைபெறும் தேர்வை எழுத முடியும். மேலும் இதுவே கடைசி வாய்ப்பாகும்.தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று 11-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பத்தை அபராதக் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.கால அவகாசத்தைத் தாண்டி, விண்ணப்பிக்க விரும்புவோர் டிச.18-ஆம் தேதி முதல் டிச.20 வரை உரிய அபராதக் கட்டணத்துடன் (ரூ.1,000), விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

 தட்கலில் விண்ணப்பிக்க அவகாசம் இல்லை: இந்த முறை தட்கலில் விண்ணப்பிக்க தனியாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களைப் பெறலாம் .

தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வெழுதுவோர் (ஹெச் வகை) ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன்இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் (ஹெச்பி வகை) தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல்- பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187 மற்றும் ஆன்லைன் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை, சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பதை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிற்ககம் செய்ய முடியும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும் என்றார் வசுந்தராதேவி.


பதிவேடுகள் பராமரிப்பா? மாணவர்களுக்கு பாடமா? - ஆசிரியர்கள் தவிப்பு.


தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள். 

அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது.

முதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ‘லிப்ட் யுவர் ஹேண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினால் உடனே மாணவர்கள் தங்களின் கைகளை உயர்த்தவேண்டும். இதுபோல் சிறு சிறு வார்த்தைகளை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். மேலும் பாட்டு மூலமும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆங்கிலத்தை கற்பிப்பார்கள்.

இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒரு நாள் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற பயிற்சியை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பார்கள்.

ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிய பாடத்திட்டவரைவிலும் ஆங்கிலத்தில் மாணவர்களை எளிதில் பேச வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


RMSA - SSA இணைக்க முடிவு



முழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு ( NIOS) பயிற்சி









புத்தகப் பூங்கொத்து பதிவேடு



08.12.2017 நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்ட முடிவுகள்.

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை  மதுரைஅரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. 

 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரியநிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்

2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக  அரசுஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிகபணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யஅனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 21 - 12-17 அன்றுமுறையீடு செய்வது

3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்றதலைப்பில்  கருத்தரங்கம் திருச்சியில் 31.12.17. அன்று  ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.

4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான  

1)புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல்  பழைய ஓய்வூதியத்தைஅமுல்படுத்தல்

 2) 21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்

3) சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறைஊதியம் வழங்க வேண்டும்

 4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதியமுரண்பாடுகளை களைதல்

 6)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல்,

7) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை  அமுல்படுத்துதல்,

8) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைரத்து செய்தல், 

9) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்டநிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லைஎன்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர்மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


DEE PROCEEDINGS-Aided schools Teachers Fixation based on EMIS Enrollement



ஆதார் எண்னை இணைப்பதற்கு அனைத்துவகையான இணைப்புகள்(LINKS) கொடுக்கப்பட்டுள்ளது!!!

*Aadhaar Update Link*

https://ssup.uidai.gov.in/web/guest/update

*Link Aadhaar & Pan*
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

*Link Aadhaar To Lic Policy*
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy

*Link Aadhaar With Indane Gas*
https://indane.co.in/aadhaar-seeding.php

*Link Aadhaar With HP Gas*
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx

*Link Aadhaar With Bharat Gas*
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp

*Link Aadhaar To SBI Bank*
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

*Link Aadhaar To Indian Bank*
https://apps.indianbank.in/ekyc_otp/

*Aadhaar Official Website*
https://uidai.gov.in/

*Link To Download Aadhaar Card*
https://eaadhaar.uidai.gov.in/#/popup

*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1

*Link Aadhaar With Airtel Mobile Number*
https://www.airtel.in/link-aadhaar-mobile

*Link Aadhaar With India Post*
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding


FA (b)1 & 2 Standard Question all subjects

Click here


First standard 



STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!

1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை-

வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,

வெற்றியின் விழுதுகள் , துளிரின் தொடக்கம், STEP INTO ENGLISH, PHONETICS BOOKS .

SG  ,MG செலவினம் தெளிவாக கூற வேண்டும்

அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்க பட்டிருக்க வேண்டும்

EER ,SMC பதிவேடு updatedவேண்டும்

2.பள்ளி வளாகம்,கழிப்பறை தூய்மை, water tank ,Toilet சுத்தமாகவும் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.

3.கரும்பலகையில் நாள்,தேதி,வருகை,பதிவு எழுதி இருக்க வேண்டும்

4. *SABL*-ஆரோக்ய சக்கரம் காலநிலை, அட்டவணை,கீழ்மட்ட கரும்பலகை , TRAY,பாய்,KITBOX,புத்தக பூங்கொத்து, action plan assesment note , CCE records இருக்க வேண்டும்

5.periodical assesment results assessment registerல் ஒட்ட வேண்டும்
6.CAL CENTRE பள்ளிகளில் CAL  time  table ,syllabus மற்றும் கணினிகள் சுத்தமாக இருக்க வேண்டும் .

7.periodical test பற்றி அனைத்து ஆசிரியர் களும் தெரிந்து இருக்க வேண்டும்.

8.TV,  DVD, CD பயன்பாடு இருக்க வேண்டும் .

9.மதிய உணவு Hand washing solution இருக்க வேண்டும்.

10. C,D மாணவர் களுக்கான செயல் திட்டம்/test papers / பதிவேடுகள்

11.SALM,ALM- MIND MAP,தொகுத்தல் ALM படிநிலைகள் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

12.Class work note,home work,composition  note ,Test note , two ruled , four ruled திருத்தம் செய்து இருக்க வேண்டும் .

13.SLm kit box ,Science kitbox பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து இருக்க வேண்டும்.

14.TLM PROJECT WORKS
 FA (a ) ,FA (b) ,files ,port folios காட்சி படுத்த வேண்டும்.

15.ICT வகுப்பறைக்கள் பாராட்டுக்குரியவை.

16. *சிறப்பான நிகழ்வுகள்*
மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,
பள்ளியில் செயல்படுத்தி வரும் புதுமைகள்மற்றும்  செயல்பாடுகளை பார்வை அதிகாரிகளிடம் முன்னிலைப்படுத்தலாம்.

*Important:* ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் பதில் கூறும் பொழுது நேர்மறையாக பதில் கூற வேண்டும்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!