Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 December 2017

DEE PROCEEDINGS-Aided schools Teachers Fixation based on EMIS Enrollement
RTI - முதுகலை ஆசிரியர்கள் (PG TEACHERS) 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு பாடம் நடத்தலாமா?நாளை முண்டாசு கவிஞன் பாரதியாரின் 135 வது பிறந்த தினம்

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.


நாளை - மகாகவி பாரதியாரின் 135வது பிறந்ந தின விழா.

மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதி பிறப்புசுப்பையா (எ) சுப்பிரமணியன்
திசம்பர் 11, 1882
எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், 
இந்தியாஇறப்புசெப்டம்பர் 11, 1921(அகவை 38)
சென்னை, இந்தியாஇருப்பிடம்திருவல்லிக்கேணிதேசியம்இந்தியாமற்ற பெயர்கள்பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]பணிசெய்தியாளர்அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதிகுறிப்பிடத்தக்க படைப்புகள்பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.பின்பற்றுவோர்பாரதிதாசன்அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்சமயம்இந்து சமயம்பெற்றோர்சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்வாழ்க்கைத் துணைசெல்லம்மாள்பிள்ளைகள்தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையைதமது குருவாகக் கருதினார்.

HSE March 2018-Private Candidates -Instructionsடீம் விசிட் என்ற பெயரில் ஆசிரியர்களை கசக்கி பிழியும் அதிகாரிகள்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - கோரிக்கை!பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்-உபரி ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தம்!!!

தேசிய திறனாய்வுத் தேர்வு மாணவர்கள் குழப்பம்

10DEC2017 | விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | PLAY STORE PAID APPS FOR FREE | #PAGF 00004

10DEC2017 | விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | #PLAYSTORE PAID #APPS FOR #FREE | #PAGF 00004

EMIS STUDENT ID CARD தயார் செய்தல் பணி சார்பான விளக்கப்படங்கள்

DSE PROCEEDINGS- அங்கீகாரமின்றி தொடங்கி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!!!OTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..3 லட்சம் ஆசிரியர்களுக்கு சிக்கல் 'டெட்' தகுதி தேர்வை முடிக்க கெடு!!!

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், 

பணியில் நீடிக்க, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களை உஷார்படுத்தும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த, 2010 முதல், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்திலும் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு அறிமுகமானது.

கட்டாயம்
'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், 'டெட்' தேர்வை முடிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, 1 - 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பு முடிக்காவிட்டால், அவர்கள், மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியின், 'டிப்ளமா'
கல்வியியல் படிப்பை, 'ஆன்லைனில்' முடிக்க, புதிய படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான, டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. வரும் வாரங்களில், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. 'இந்த படிப்பை முடித்த பின், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வையும் முடிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அறிவுறுத்தல்
அதே போல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பி.எட்., படிப்பை முடித்திருந்தாலும், அவர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவுறுத்தப்படு உள்ளது.
இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்
ஆகியோர், 'டெட்' தேர்வு விதிமுறைகள் குறித்து, தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்க
வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் இயக்குனரகமும் அறிவுறுத்தி உள்ளது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!