Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 11 December 2017

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி!!!

ஜாக்டோ -ஜியோ கிராப்பிலிருந்து அரசு பணியாளர் சங்கம் விலகல், மாநில தலைவர் அறிவிப்பு6,7,8 பணியிடங்களை கையாளாத , அறிவியல் , ஆங்கிலம் , கணித பாடங்கள் படிக்காத , குறைவான தர ஊதியம் பெறும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக தகுதி இல்லை ..வழக்கின் அபிடவிட்!!!


நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளி்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு இடம் ஒதுக்குவதுடன், தடையில்லா சான்றும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டின் கிளையின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் மனுவில் கேட்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய - மாநில அரசுகள் மற்றும் மனுதாரர்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


"EMIS" ENTRY THROUGH YOUR SMARTPHONE!!!


https://youtu.be/8vhCOeDIsBc

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு,


DSE PROCEEDINGS-HIGH SCHOOL HM PANEL PREPARATION REG

TNPSC - குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்வாணையம் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்வாணையம் தகவல் அளித்துள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் 9,500 பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. 


11DEC2017 | விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | PLAY STORE PAID APPS FOR FREE | #PAGF 00005


விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம்
"Paid Apps Gone Free (#PAGF)" is a list of paid Android apps that have gone free for a limited time on Play Store.| #STORIESINTAMIL |

தமிழ் வாசிப்பு பயிற்சி

Tamil For Slow Learners

கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்கு ஐ கோர்ட் தடை!!!

மறுமதிப்பீடு,விடைத்தாள் நகல் வழங்கும் முறை அடுத்த ஆண்டில் அறிமுகம்-தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு!முனைவர் மற்றும் பட்டதார்களுக்கு யுஜிசி சலுகை!EDUCATIONAL ABBREVIATIONS

*AEEO* - Assistant Elementary Educational Officer,

*APO **- Assistant Project Officer, 

*ALM*- Active Learning Methodology, 

*SABL* - Simplified Activity Based Learning,

*SALM* - Simplified Active Learning Methodology,

*BRC* - Block Resource Center, 

*BRTE*- Block Resource Teacher Educator,

*CEO* - Chief Educational Officer,

*CRC* - Cluster Resource Center,

*CAL* - Computer Aided Learning ,

*CCE*- Continuous & Comprehensive Evaluation,

*CWSN*- Children With Special Need ,

*FA*- Formative Assessment, 

*SA*- Summative Assessment,

*DEO* - District Educational Officer,

*DEEO* -  District Elementary Educational Officer,

*DEE* - Directorate of Elementary Education

*DSE* - Directorate of School Education,

*DGE* - Directorate of Government Examinations,

*DTERT* -   Directorate of Teacher Education Research and Training,

*DIET* - District Institute of Education & Training

*DPEP* - District Primary Education Programme,

*DPO* - District Project office,

*DPI* - Directorate of Public Information,

*DISE* - District Information System for Education,

*EER*- Elementary Education Register,

*EMIS* - Educational Management Information System,

*IE*- Inclusive Education ,

*JD* - Joint Director,
*JRC*- Junior Red Cross,,

*KGBV*- Kasturba Gandhi Balika Vidyalaya,

*LSRW*- Listening Speaking, Reading & Writing,

*NMMS* - National Means cum Merit Scholarship,

*NCERT* - National Council of Education Research & Training ,

*NSS* - National Service Scheme,

*NCC* - National Caded Crops ,

*NCTE* - National Council of Teacher Education ,

*NCPCR* - National Commission for Protection of Child Rights,

*NIC* - National Informatics Center,

*NCF* - National Curriculum Framework,

*NUEPA* -  National University of Educational Planning and Administration,

*OSC*- Out of School Children,

*PINDICS*- Performance Indicators,

*PA* - Periodical Assessment,

*PTA* - Parents Teachers Association ,

*PET* - Physical Education Teacher,

*QMT*- Quality Monitoring Tools,

*RMSA* - Rashtriya Madyamik Shiksha Abhiyan,

*RTI*- Right to Information

*RTE* - Rights to Education,

*RSTC*- Residential Special Training Centre, 

*SSA* -  Sarva Shiksha Abhiyan,

*SPD*- State Project Director,

*SLAS*- State Level Achievement Survey,

*NAS*- National Achievement Survey,

*SLM kit*- Self Learning Materials kit,

*SVP* - Swachh Vidyalaya Puraskar,

*SCERT* - State Council of Education Research & Training,

*SMC* - School Management Committee,

*UDISE* - Unified District Information System for Education ,

*UNICEF* - United Nations International Children Education Fund ,

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை பாடல்கள், எளிய வார்த்தைகள் மூலமாக ஆங்கிலத்தை சரளமாகப் பேச வைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்னர் வெளியான புதிய வரைவுப் பாடத் திட்டம் குறித்து இணையதளம் மூலம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறுகருத்துகள் பெறப்பட்டன. அதில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவேமேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன், அனைவருக்கும் கல்வித் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு செய்துள்ளோம்.

90 தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி:

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது.அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பர்.

ஆசிரியர்கள் மாணவர்களை எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர். புத்தகங்கள் - சி.டி.க்கள்... ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றனர்.

மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு

மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடுஎட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.

கல்வியில் சிறந்த மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவி தொகைகளை பெற, மாநில அளவில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, தேசிய ஊரக மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு, மாவட்ட அளவிலான, 'மெரிட்' தேர்வு என, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர். இதில், அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற, சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, மாவட்ட அதிகாரிகள், அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும், இயக்குனர், கார்மேகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதம்:கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற, சிறப்பு பயிற்சி தரப்படும். இதற்காக, மாவட்ட வாரியாக மாணவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். பயிற்சியுடன், கையேடுகளும் வழங்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.


பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்!!!வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’
குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது.

அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

சென்னை: பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.


தமிழகத்தில் பொது தேர்வை போல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வும், பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 7ல் அரையாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, இன்று துவங்க உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும், மாவட்ட வாரியாக, இன்று முதல் அரையாண்டு தேர்வும், இரண்டாம் பருவ தேர்வும் துவங்க உள்ளன.
இந்த தேர்வுகள், வரும், 23ல் முடிகின்றன. பின், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.


செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,

பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடியும்.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி, ஜன., 16ல் செய்முறை தேர்வு துவங்கி, 25ல் முடிகிறது.


பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள் : துணை ஜனாதிபதி விருப்பம்!!!

சென்னை: ''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''

என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.

வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று பதிவு!!!

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் 

தனித்தேர்வர்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத முடியும்.
வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பிளஸ் 2 பொது தேர்வில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இந்த ஆண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அடுத்த ஆண்டில் இருந்து, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 வை நேரடியாக எழுத, இந்த ஆண்டே கடைசி வாய்ப்பு என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், இன்று முதல் வரும், 16 வரையிலும், பின், 18 முதல், 20ம் தேதி வரையில், அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.


வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது!!!

ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' 

தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.

'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.

தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்


TRB மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) பாடவாரியாக எழுதியவர்கள் விபரம் RTI பதில்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) கோவை மையத்தில் பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்: ஓவியம் - 750, இசை -176, தையல் - 903, உடற்கல்வி - 2074
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!