Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 16 December 2017

ஜப்பானை சுற்ற தயாராகும் ஆசிரியர், மாணவர் பட்டியல்

தமிழகத்தில் கல்வி பரிமாற்றம் திட்டத்தின்

கீழ் ஜப்பான் செல்ல தகுதியுள்ள ஆசிரியர், மாணவர் பட்டியல் தயாரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இரு நாட்டின் ஒப்பந்தம் அடிப்படையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 96 மாணவர்கள், 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக தமிழக கல்வித் துறையில் ஐந்து மாணவர்கள், ஒரு ஆசிரியரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு நாட்டின் கலாசாரம், பண்பாடு, கல்வி முறை குறித்து தெரிந்து கொள்வதற்கு திட்டம் வகை செய்துள்ளது. மாணவர்கள் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 வகுப்பை சேர்ந்தவராகவும் அதிக மதிப்பெண் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். ஆங்கில புலமையும், தேசிய மற்றும் ஊரக திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்று உதவி தொகை பெறுபவராகவும், பாஸ்போர்ட்
பெற்ற மாணவராகவும் இருக்க வேண்டும். ஆசிரியரை பொறுத்தவரை அவர் முதுகலை பிரிவில்
ஆங்கிலம் நன்கு தெரிந்து, மத்திய நல்லாசிரியர் விருது பெற்றவராகவும், ஜப்பானுக்கு இதுவரை செல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு மாவட்டத்திற்கு தலா 32 ஆசிரியர், மாணவர் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் தயாரித்து, அதில் இருந்து தமிழகம் சார்பில் ஐந்து மாணவர், ஒரு
ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு வரும் ஏப்., அல்லது மே மாதத்தில் ஜப்பான் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். இதுபோல் ஜப்பானில் இருந்தும் ஆசிரியர், மாணவர்கள் இந்தியா வரவுள்ளனர், என்றார்.


EMIS - Official Android App Published Now- EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது

EMIS - Official Android App Published Now

EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

செயலியை தரவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை தொடவும்


https://play.google.com/store/apps/details?id=com.emis.schooleducation

புதிதாக மாணவர்களை சேர்க்கும் வசதி இதில் இல்லை. Student id card தயாரிக்க photo update செய்யவும், இரத்த வகை சேர்க்கவும் பிற விவரங்களை சரிபார்க்க மட்டுமே முடியும்.

கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம்எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.மாணவ - மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும். 

இதற்கானசர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும்சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்கவேண்டும்.மேலும் தகவல்களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


ஆசிரியர் பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கானஇட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும்--தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு!பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை.என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்!!!


ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு!!!

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, 

தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.


தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி!!!

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க,

4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.


கிராமப்புற மாணவர்களும் புதிய தொழில்நுட்ப கல்வி கற்கும் வகையில் அரசுப்பள்ளியில் "ஸ்மார்ட் வகுப்பறை" தொடக்கம்


"SMART CLASS " திறப்புவிழா 13.12.2017 அன்று
கிராமப்புற மாணவர்களும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் கல்வி கற்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - கருங்குழி,குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கடலூர் மாவட்டத்தில் ஏ.சி வசதியுடன்
 கூடிய." SMART CLASS" உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சவரிமுத்து அவர்களின் தலைமையில், பள்ளி தலைமைஆசிரியர் திரு.அந்தோணி ஜோசப் அவர்களின் முன்னிலையில்தொழிலதிபர் திரு.TRM சாந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.தொழிலதிபர் திரு. TRM அவர்கள், பள்ளி தலைமைஆசிரியர்,உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு  பங்களிப்போடு இவ்வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்
நன்றி! நன்றி!

🌹18-08-14 தஞ்சை மாநகரில் கல்வி அமைச்சர் மற்றும் முதன்மை கல்வி செயலர் அவர்களால் எமது பள்ளிக்கு மாவட்டத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.


🌹01-04-17 அன்று சைகை ஒலிப்புமுறை படப்பிடிப்பானது தாயெனப்படுவது தமிழ் இயக்குனர் ஜெரோம், கலைமுருகன் மற்றும் ஷாம் அவர்களால் எமது பள்ளியில் படப்பிடிப்பு செய்யப்பட்டது.  
🌹தொடக்கப்பள்ளியில் 203 மாணவர்களை கொண்டு சிறப்பானக்கல்வி அளித்துவருகிறோம்.

Hello English Unit 1(3 videos)


ஆசிரியருக்காகப் போராடிய மாணவர்கள்!

தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி

தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த தமிழ்ச்செல்வி, பணியிலிருந்து ஓய்வுபெறும் தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாகத் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவரைக் குறித்து கல்வி அலுவலரிடம் அப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 13) விசாரணைக்கு வந்த கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்திய விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி விருப்ப ஓய்வு கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.

இதையறிந்த மாணவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள். தலைமையாசிரியை மீது முகுந்த அன்பும் மதிப்பு வைத்திருந்த அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியர் பள்ளிக்கு வராததால் மனமுடைந்த மாணவர்கள் நேற்று (டிசம்பர் 14) தங்கள் பெற்றோருடன் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். “எங்களுக்கு இதுபோன்ற ஒரு ஆசிரியர் உலகத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம்” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவர்களை சமாதானம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் பொதுமக்களுக்கு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறுகையில், “ ஜாதியைச் சொல்லித் திட்டுவதாக என் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி விசாரணை என்ற பெயரில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர். எனவே, பணி ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தேன். ஆனால், மாணவர்கள் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் நேரடியாகக் கண்டேன். என் மாணவர்களுக்காக விருப்ப ஓய்வைத் திரும்பப்பெறுவதாக மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களும் என் முடிவை வரவேற்றனர். தற்போது மீண்டும் பணிக்குத் திரும்புகிறேன்” எனக் கூறினார்.

விலகியது ஏன்?

விருப்ப ஓய்வுக் கடிதம் கொடுத்த டிசம்பர் 13ஆம் தேதி அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “தோழர்களே, தொடர்ந்து 28 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது பணிக்காலத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். இதில் மூன்றரை ஆண்டுக் காலம் தலைமையாசிரியர் பணி. தலைமையாசிரியராகப் பணியாற்றிய இரண்டு பள்ளிகளையும் எனது சொந்த செலவிலும் நண்பர்கள் உதவியோடும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளப்படுத்தியுள்ளேன்.

கல்வித் தரத்தில் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் விதத்தில் வளர்த்தெடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டு எமது பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றது.

ஒரு ஆசிரியராக மட்டுமின்றி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு படைப்பாளியாக முக்கியமான பங்களிப்புகளை செய்திருக்கிறேன். முக்கியமான விருதுகளை, வாசக அபிமானத்தைப் பெற்றிருக்கிறேன்.

இந்நிலையில் இரண்டுமுறை மாவட்ட அளவிலான அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டேன். இவற்றின் விளைவாக எனக்கான நீதி மறுக்கப்பட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.

அரசு, அதிகாரம் என்பது ஒரு இறுகிய பாறை. நான் ஒரு சிட்டுக்குருவி. பாறையோடு மோதி என் தலையை உடைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதிகாரத்தின் நிழலில் அமர்ந்து நீதியை, அறத்தைப் பேச முடியாது என்பதை உணர்ந்த தருணமிது. நேற்று ஒரு விசாரணைக்காக வந்திருந்த மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் முன்னிலையில் எனது விருப்ப ஓய்வுக் கடிதத்தினைக் கொடுத்துவிட்டேன். விட்டு விடுதலையான சிறு பறவையாக இப்போது என்னை உணர்கிறேன்.

இனி... ஒரு படைப்பாளியாக படைப்புகள் வாயிலாகவும் இலக்கிய அரங்குகள் வாயிலாகவும் உங்களோடு உரையாடுவேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இன்று (டிசம்பர் 15) அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!