Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 19 December 2017

DEE PROCEEDINGS-தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்தல் சார்பு
ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை (20.12.2017) கோர்ட் எண் 1 ல் மதியம் 2.15 க்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது

SSA - 2017 - 18 ஆம் ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்களுக்கான ( SRG ) | மாநில அளவிலான பயிற்சி ஒத்தி வைத்தல் - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா - தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் கோரி ஆணை வெளியீடு

EMIS FLASH NEWS;Important Message:Our official android app will launch soon at Google Play Store. Till that please dont share any app.

DSE PROCEEDINGS-DATE:19.12.2017 - BRTE CONVERSION TO BT COUNSELLING and BRTE GENERAL COUNSELLING REG2018ல் 23 நாட்கள் அரசு விடுமுறை - தமிழக அரசு பட்டியல் வெளியீடு.

ஆண்டுதோறும் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை, தமிழ்நாடு அரசு வெளியிடும். இது முன்கூட்டியே தயாராவதற்கு உதவியாக அமையும். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தை பொங்கல் ஞாயிறு அன்று வருவதால் ஒருநாள் லீவு போச்சே என்று கவலைப்படுகின்றனர் அரசு ஊழியர்கள். 2018ஆம் ஆண்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பண்டிகை நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது.

2018ஆம் ஆண்டு மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது. மற்றவை வார மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 8.6.1957 அன்று நாளிட்ட பொது-1, 20-25-26-ம் எண் அறிவிக்கையின்படி, 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் 25-ம் பிரிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட விளக்கம் ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும், 2018-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

விடுமுறை நாட்கள்:

01.2018 ஆங்கில புத்தாண்டு - திங்கட்கிழமை

14.01.2018 தை பொங்கல் - ஞாயிற்றுக்கிழமை

15.01.2018 திருவள்ளுவர் தினம் - திங்கட்கிழமை

16.01.2018 உழவர் திருநாள் - செவ்வாய்க்கிழமை

26.01.2018 குடியரசு தினம் - வெள்ளிக்கிழமை

8.3.2018 தெலுங்கு வருடப்பிறப்பு - ஞாயிற்றுக்கிழமை

29.3.2018 மகாவீர் ஜெயந்தி - வியாழக்கிழமை

30.3.2018 புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை

1.4.2018 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - ஞாயிற்றுக்கிழமை

14.4.2018 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் - சனிக்கிழமை

1.5.2018 மே தினம் - செவ்வாய்க்கிழமை

15.6.2018 ரம்ஜான் - வெள்ளிக்கிழமை

15.8.2018 சுதந்திர தினம் - புதன்கிழமை

22.8.2018 பக்ரீத் - புதன்கிழமை

2.9.2018 கிருஷ்ண ஜெயந்தி - ஞாயிற்றுக்கிழமை

13.9.2018 விநாயகர் சதுர்த்தி - வியாழக்கிழமை

21.9.2018 மொகரம் - வெள்ளிக்கிழமை

2.10.2018 காந்தி ஜெயந்தி - செவ்வாய்க்கிழமை

18.10.2018 ஆயுத பூஜை - வியாழக்கிழமை

19.10.2018 விஜயதசமி - வெள்ளிக்கிழமை

6.11.2018 தீபாவளி - செவ்வாய்க்கிழமை

21.11.2018 மிலாது நபி - புதன்கிழமை

25.12.2018 கிறிஸ்துமஸ் - செவ்வாய்க்கிழமை

இந்த ஆண்டு 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொங்கல், தெலுங்கு வருடப்பிறப்பு கிருஷ்ணஜெயந்தி ஆகிய 4 பண்டிகை நாட்கள் ஞாயிறு கிழமைகளில் வருகிறது. பண்டிகை நாட்கள் சண்டே வந்தா டேக் இட் ஈசி அரசு ஊழியர்களே!


கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாநில மாநாடு(07.1.2018)....


கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஈரோடு மாநில மாநாடு (07.01.2018)...

அன்பார்ந்த!..

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல்,

நாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.)
காலை :9.36மணி.
இடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம்   அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.
[மதிய உணவு வழங்கப்படும்]

வெளி மாவட்டத்திலிருந்து வருகின்ற நபர்களுக்கு 6.01.2018 இரவு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..

குறிப்பு:
மாநாடிற்கு வருகை தருகின்ற கணினி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.

இலவச உறுப்பினர் சேர்க்கைகான முக்கிய குறிப்பு:
1.இரண்டு புகைப்படம்,
2.பி.எட் சான்றிதழ் நகல்,
3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)

மாநில மாநாடு பற்றிய செய்தியை அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும்  கொண்டு செல்வது உங்கள் கடமை நமது வாழ்விற்காக..

மேலான விபரங்களுக்கு:
9789180422,
9894372125,
9945586698,
9751894315,
9698339298.

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

Hello English Unit 4 (3 videos)

Phonetic songs collection (41 videos)Thanks
Mr.Iyappan
And
Mr.Amalan Jerome

கல்வி சார்ந்த விடியோகளுக்கு subscribe செய்யுங்கள்.
Click Here Phonetic songs collection (41 videos)

தேர்வில் முறைகேடு ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை - TRB முடிவு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.  


தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுவில், தேர்வில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது. 

மேலும் தேர்வில் இடம் பெற்ற ஓ.எம்.ஆர் தாள்கள் அனைத்தையும்  ஸ்கேன் செய்து ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.  அத்துடன் இறுதி விடைக்குறிப்பில் தரப்பட்டுள்ள மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக 18ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து திருத்திய சான்று சரிபார்ப்பு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது. 

நேற்று மாலைவரை எத்தனைபேர்  கருத்து தெரிவித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் தயாரிக்க உள்ளது. இந்த பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிகிறது. மதிப்பெண்களில் மாற்றம் வந்தவர்கள் தாங்களாக முன் வந்து மதிப்பெண் மாற்றம் குறித்து ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் போடும் போது அதில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பம் செய்யும் நபரே பொறுப்பு என்பதால், சான்றுகள், முகவரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் சரிபார்ப்பு நடத்தவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது. விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகப்படியாக மதிப்பெண்களில் திருத்தம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், என அனைத்து தரப்பினர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் டிபிஐயில் ஆர்ப்பாட்டம்

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இனியும் காலம் கடத்தினால், தீவிர போராட்டம் நடத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது. 

பள்ளிக் கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம் பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன் கூறியதாவது:  பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்க வேண்டும், விதிப்படி பதவி உயர்வு, பணிவரன் முறை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இது தவிர முன்தேதியிட்டு பணி வரன்முறை, நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நெருக்கடிகளை நீக்குதல், உதவியாளர் பதவியில் நேரடியான நியமனத்தை ரத்து செய்வது, குறித்தும் கேட்டு வருகிறோம். 

அத்துடன் ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அரசும் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு பிறகு எங்கள் கோரிக்கை நிறைவேற்றாமல் அரசு காலம் கடத்தி வந்தால் தீவிர போராட்டத்தை நடத்துவோம்.  இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார். 

2017-18 நிதி ஆண்டு - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வருமான வரி படிவம் - மாதிரி மற்றும் முழுமையான விளக்கங்கள்

SSA - புதிய கற்றல் முறை சார்ந்து முன்னோட்ட ஆய்வு ( Pilot Study ) பள்ளிகளை தேர்வு செய்தல் - செயல்முறைகள்!

DEE PROCEEDINGS-2018-19 கல்வியாண்டில் விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் கொள்முதல் தேவைப்பட்டியல் கோருதல் சார்பு!!

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை விடைத்தாள் நகலுடன் வெளியிட வேண்டும்!!!

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த 
திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​

​மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.​


அரசின் EMIS App அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை

☀கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின் கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.


☀மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

☀சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.

☀அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.

☀முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.

_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,
State EMIS Team_

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!