Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 23 December 2017

அமைதி வழியில் சென்று பகுதிநேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம், போராட்டத்தை தவிர்ப்போம்.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாஅவர்களால் பள்ளிக்கல்வித்துறைஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் MHRD SCHEMEல் அரசாணை 177 பிறப்பிக்கப்பட்டு2012ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் முழுவதும்100 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள இடைநிலை


 வகுப்பு மாணவர்களுக்குஉடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்விபாடங்களை நடத்திட 16549 பகுதிநேரஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில்வாரம் 3 அரைநாட்கள் வீதம் மாதம் 12அரைநாட்கள் பணிபுரியும் வகையில்பணியமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகள்கடந்த நிலையில் அரசாணை 186பிறப்பிக்கப்பட்டு ரூ.2000 உயர்த்தி ஏப்ரல் 2014முதல் 6 மாத நிலுவைத்தொகையுடன் நவம்பர்2014 மாதம் ரூ.7000 தொகுப்பூதியமாகதரப்பட்டது. தற்போதைய முதல்வர்அவர்களால் ஆகஸ்டு 2014 மாதத்தில் ரூ.700உயர்த்தி ரூ.7700 தொகுப்பூதியமாகதரப்படுகிறது.

இந்த நிலையில் 7வது ஊதியக்குழுஅரசாணை 303ல் குறிப்பிட்டுள்ளபடி பகுதிநேரதொகுப்பூதிய திட்ட வேலையில்உள்ளவர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதில்அனைவருக்கும் கல்வி இயக்க திட்டவேலையில் பகுதிநேர தொகுப்பூதியத்தில்வேலை செய்துவரும் பகுதிநேரஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வை வழங்கிடதொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.தொகுப்பூதிய வேலையில் உள்ள யாருக்குமேஇதுவரை 30% ஊதிய உயர்வுவழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.இதற்கிடையில் சில விஷமிகள் பகுதிநேரஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுகிடைத்திடக்கூடாது என்ற எண்ணத்தில்தவறான தகவல்களை பரப்பி பகுதிநேரஆசிரியர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திவருகிறார்கள். 7வது ஊதியக்குழு அரசாணை303ல் உள்ளபடி பகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வை வழங்குங்கள் என இவர்கள்கேட்டதுமில்லை, கேட்பதுமில்லை. மேலும்குழப்பும் நோக்கத்தில் ஊதிய உயர்வு உண்டா?இல்லையா? அரசாணை வருமா? எனஅதிகாரிகளையும், அமைச்சர்களையும்கேள்விமேல்கேள்வி கேட்டு தர்மசங்கடத்தைஏற்படுத்தி வருகிறார்கள்.


அதைப்போலவே அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர், தமிழ்நாடுஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களுடன், நமது தமிழ்நாடு அனைத்துபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்புநிர்வாகிகள் இணைந்து சென்று, மாண்புமிகுபள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை கடந்த24.10.2017 மற்றும் 25.10.2017ல் நேரில்சந்தித்தபோது  மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர் அவர்கள்  பணிமாறுதல்வேண்டுகிறவர்கள் பட்டியல்  கொண்டுவந்துகொடுத்தால் மாண்புமிகு முதல்வர்அவர்களிடம் பரிந்துரை செய்து ஒரேஅரசாணை மூலம் அவரவர் இருப்பிட பகுதிக்குஅருகில் உள்ள பள்ளிகளுக்கு விருப்பமாறுதல் வழங்கப்படும் என்றார். ஆனால்விஷமிகளால் சிக்கலும், குழப்பமும்உருவாக்கி தர்மசங்கடத்தை ஏற்படுத்திவருகிறார்கள்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேரஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்செந்தில்குமார் ஆகிய நான் தொடர்ந்துபகுதிநேர ஆசிரியர்கள் அரசின் சலுகைகளைபெறும் வகையில் பாடுபட்டுவரும்போது,அதனை கெடுத்திடும் எண்ணத்தில்விஷமிகள் சதி செய்துவருவதை இனியாவதுஅனைவரும் உணர்ந்து என்னுடன் இணைந்துகளப்பணி ஆற்ற வாருங்கள் என அன்புடன்அழைக்கிறேன்.

பகுதிநேர ஆசிரியர்களைபணியமர்த்திய அரசு இரண்டுமுறை ஊதியஉயர்வு வழங்கி உள்ளதை அனைவரும்உணருங்கள். மேலும், அனைவருக்கும் கல்விஇயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களை,கடந்த 14.12.2017ல்  அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர் ,தமிழ்நாடுஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களுடன், பகுதிநேர ஆசிரியர்களின்பிரதிநிதி என்ற முறையில் நானும், இணைந்துசென்று சந்தித்து கோரிக்கைகளைமுறையிட்டபோது, நிறைய முன்னேற்றமானநடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுவருவதாக சொன்னார். குறிப்பாக 100மாணவர்கள் என்ற எண்ணிக்கையைகுறைத்து மாவட்டத்திற்குள் பணிமாறுதலும்,மாவட்டம் விட்டு மாவட்டமும் பணிமாறுதலும்துறைரீதியாக நடத்தப்பட உள்ளதாகதெரிவித்துள்ளார். இதனால் தொலைதூரபள்ளிகளில் பணிபுரிவோர்களும், விரும்பும்மாவட்டங்களுக்கு  செல்வோரும் சிரமமின்றிபணிமாறுதல் பெற்று   இனி அருகில் உள்ளபள்ளிகளில் பணிசெய்யும் வாய்ப்பு கிடைக்கஉள்ளது. ஆசிரியர் பயிற்றுநர்களுக்குபணிமாறுதல் முடிந்த பின்னர் பகுதிநேரஆசிரியர்களுக்கு விரைவில் நடத்தப்படஉள்ளது என்பதை அனைவருக்கும்இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர், தமிழ்நாடுஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களுடன், நமது தமிழ்நாடு அனைத்துபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்புஇணைந்து சென்று தொடர்ந்துகோரிக்கைகளை கேட்டு வலியுறுத்திமுறையிட்டு வந்ததின் பயனாக , இனிவருங்காலங்களில் பகுதிநேரஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கும் சேர்த்துஊதியம், EPF தொழிலாளர் வைப்பு நிதிபிடித்தம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தசலுகைகள், வாய்ப்புகள் வழங்கஅனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்டஇயக்குநர் அவர்கள் முன்னேற்றமானநடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

          

           ஜீன் 2ல் 7வது ஊதிய மாற்று அலுவலர்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்  முன்னேற்றபேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ்அவர்களின் அழைப்பின் பேரில் தமிழ்நாடுஅனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்என்ற முறையில் செந்தில்குமார் ஆகிய நானும்மற்றும் நமது நிர்வாகிகளும் பங்கேற்றபோதுதிரு.பா.ஆரோக்கியதாஸ் அவர்கள்பேசும்போது பகுதிநேர ஆசிரியர்களுக்குமத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமானரூ.18000 நிர்ணயித்து அனைத்துவேலைநாட்களிலும் பணிவழங்கி சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்தகேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில்7வது ஊதியக்குழு அரசாணை 303லே 6வதுபக்கம் 23ம் பத்தியிலே பகுதிநேரதொகுப்பூதிய திட்ட வேலையில்உள்ளவர்களுக்கும் ஊதிய உயர்வுவழங்கப்பட்டுள்ளது. எத்தனை குழப்பங்களைவிஷமிகள் செய்தாலும் நிச்சயமாக பகுதிநேரஆசிரியர்களுக்கு 30%  ஊதிய உயர்வுகிடைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்துஅமைதி காக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

...இவண்,

செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல்:9487257203

விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் 

மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை -பள்ளி கல்வி இயக்குநர்!!!


*அரசு ,தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்த மாணவர்கள் விபரங்களை தருமாறு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.*

*உண்மை தகவல்களை  மறைத்தால் கடும் நடவடிக்கை எனவும் 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை.*


இடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்

அழகாகும் அரசுப்பள்ளிகள்... அறப்பணியாற்றும் ஆசிரியர்கள்

Educational videos (145 videos )

TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

TET Weightage-ஆல்  வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'


''பொதுத் தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:மேல்நிலை கல்வி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேசிய போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள மாநில அளவில் 412 மையங்கள் செயல் படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, 100 மையங்கள் செயல்படுகின்றன. மீதி 312 மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்.இதற்காக, பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு தேசிய அளவிலும், 17 நாடுகளில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

TRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணிக்கு தேர்வு நடத்தி, நவ.,7ல் முடிவு வெளியிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, சிலர் ஆதாரங்களுடன், டி.ஆர்.பி.,க்கு புகார் மனுக்கள் அனுப்பினர். டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, பல தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர், விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 1.33 லட்சம் பேர், இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும், டி.ஆர்.பி., அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு; முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். 

புகார் மீது வழக்கு பதிவு செய்து, குற்றம் செய்தோரை கைது செய்து, சிறையில் அடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு

பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, எத்தனை பக்கங்களில் விடைத்தாள் வழங்கப்படும் என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி, செய்முறை தேர்வு, அகமதிப்பீட்டு முறை, தேர்வுக்கான மொத்த மதிப்பெண் ஆகியவை குறித்து, ஏற்கனவே அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, முதன்மை விடைத்தாள்களில் எத்தனை பக்கங்கள் இருக்கும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு, 90 மதிப்பெண்களுக்கு, 30 பக்கங்களில் கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும். உயிரியலில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண்களுக்கு, தனித்தனியாக எழுத, தலா, 22 பக்கங்களில், இரண்டு முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும்.

கணக்கியல் என்ற அக்கவுன்டன்சி பாடத்துக்கு, 90 மதிப்பெண்களுக்கு, தலா, 15 பக்கங்கள் கோடிட்டும், கோடிடப்படாமலும், மொத்தம், 30 பக்கங்கள் வழங்கப்படும். கணினி அறிவியல் உள்பட மற்ற பாடங்களுக்கு, 30 பக்கங்கள் கோடிடப்படாமல் வழங்கப்படும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு....

💸இனி மாதாமாதம் செலுத்தி வந்த PLI தொகைக்கு சேவை வரி பதிலாக GST வரியாக மாற்றப்பட்டுள்ளது.


📱 எப்படி கணக்கிடுவது என்ற விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!