Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 27 January 2018

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

 தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க முதல்கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறுவதற்காக 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்கூறினார்.

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1 comment:

  1. அய்யா முதலில் எல்லாப் பள்ளிகளிலும் தடையில்லா த்ண்ணீர் கிடைக்கிறதா என பாருங்கள். நீச்சல் பாடத்திட்டம் சேர்ப்பது பற்றி யோசிங்க. தரையில் நீச்சலா தண்ணீரில் நீச்சலா என யோசிங்க.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!