Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 9 February 2018

"நம்ம கோயில்.. நம்ம தொன்மம்.. நாம்தாம் பாதுகாக்கணும்!" - அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் அறிவுரைபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மரிங்கிபட்டி மற்றும் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாகப் பிரசித்திப் பெற்ற குடுமியான்மலை கோவிலுக்குச் சென்றனர்.

அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குப் புதிதாக 'களப்பயணம்' என்ற பாடம் வந்துள்ளது. அதன்படி, அந்தந்த ஊர்களில் உள்ள வேளாண்மை ஆய்வு மையம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குக் களப்பயணம் செல்ல வேண்டும். அங்கு மாணவர்கள் பார்த்தவை குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் அல்லது, அங்கு ஆசிரியர்களின் உதவியுடன் எடுத்த புகைப்படங்கள், செய்திகளைத் திரட்டி, தொகுப்பேடு ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மரிங்கிபட்டி, உருவம்பட்டி ஆகிய இரண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களும் இன்று (8.2.2018) உற்சாகம் ததும்ப அருகில் உள்ள உலகப் புகழ் பெற்ற குடுமியான்மலை கோவிலுக்குச் சென்றனர். ஏதோ கோவிலுக்குச் செல்கிறோம் என்று சாதாரணமாக நினைத்து வந்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அங்குள்ள சிலைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்டவையின் பெருமைகளை உடன் வந்திருந்த ஆசிரியர்கள் விவரித்து சொன்னபோது, பிரமிப்போடும் ஆச்சர்யத்தோடும் கவனித்தனர். இந்தக் களப்பயணம் குறித்து மாணவர்கள் மிக உன்னிப்பாக உள்வாங்கிக் கொண்டனர். இதுகுறித்து தர்ஷினி என்ற மாணவியிடம் பேசினோம்."இக்கோவிலுக்கு அப்பா, அம்மாவுடன் பல முறை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் சாமி கும்பிட்டுட்டு போறதோட சரி. ஆனால், இந்தத் தடவைதான் இங்குள்ள இக்கல்வெட்டுகளை முதன்முதலாகப் பார்க்கிறோம். இங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தைப் பார்க்கும் போது எப்படி இந்த மண்டபத்தை நம் முன்னோர்கள் கட்டினார்கள் என்று ஆச்சர்யப்பட்டோம். குடவரைக்கோயிலில் உள்ள இசைக் கல்வெட்டுகளை முக்கியத்துவம் பற்றி எங்கள் ஆசிரியர்கள் கூறினார்கள். 'இந்த இசைக்கல்வெட்டுகளை தேனீக்கள் கூடு கட்டி இயற்கையாகவே காப்பாற்றி வருகிறது. இல்லையெனில் கல்வெட்டினை காணவரும் மக்கள் சுரண்டியே அழித்திருப்பார்கள் என்றும் இதுபோன்ற நம் வரலாற்றைக் கூறும்  தொன்மங்களை மக்களாகிய நாம்தாம் பாதுகாக்க வேண்டும்' என்று எங்கள் ஆசிரியர்கள் மூலமாக நாங்கள் தெரிந்துகொண்டோம். அது உண்மைதான். நம் கோயில். நம் தொன்மம். அதை நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.

குடவரைக் கோயிலில் உள்ள பெரிய சிவன்சிலை, மலையின் மேல் ஒரே நேர் பார்வையில் பார்க்கும்படி செதுக்கப்பட்டிருந்த 63 நாயன்மார்கள் சிலைகளையெல்லாம் பார்த்து நாங்கள் பிரமித்துவிட்டோம். இங்குள்ள கிளிவாகனம், மயில் வாகனம், சிங்க வாகனமும், கோயில் இராஜகோபுரமும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது" என்று மகிழ்ச்சி பொங்கும் குரலில் கூறினார் அந்த மாணவி.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த மரிங்கிபட்டி ஆசிரியர் கவிமதி சோலச்சி பேசும்போது," பாடம் சார்ந்து, வகுப்பு சார்ந்து பிள்ளைகள் இப்படியான களப்பயணம் வரும்போது, அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. தங்களது ஊரைச் சார்ந்த வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் அவர்கள் அறிந்துக்கொள்ள இதுபோன்ற பயணங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது" என்றார்.

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment