Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 28 February 2018

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ்.அறிவியல் பாடப்பகுதிகளை எளிதில் புரியும்படி பாடம் நடத்தும் ஆசிரியை



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் யூனியனில் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி. பெரியகுழிப்பட்டியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் க.சித்ரா. இவர்வகுப்பறையில்  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ்.அறிவியல் பாடப்பகுதிகளை நடத்துகிறார்.






4D அனிமேஷன்.4D quiver . போன்ற செயலிகளை பயன்படுத்தி பறவைகள், விலங்குகள் மற்றும் அவற்றின் ஒலிகளையும் மாணவர்களுக்கு இந்த செயலிகளின் மூலம் காட்டப்படும் போது நேரில் பார்ப்பது போல உள்ளதால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மேலும்  VR கிளாஸ் மூலம் பாடங்களுக்கு ஏற்ப சில வீடியோக்களை டவுன்லோட் செய்து கற்பிக்கிறார். இந்த கிளாஸ் மூலம் அந்த காட்சியை பார்க்கும்போது நேரில் பார்த்த உணர்வு, மாணவர்களால் நேரில் சென்று பார்க்க முடியாத இடங்களை இந்த கிளாஸ் மூலம் பார்க்கும்போது மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.



மெல்ல கற்கும் மாணவர்களுக்காக சில செயலிகளை டவுன்லோட் செய்து பயிற்சி கொடுக்கிறார்.

இது மட்டும் அல்லாமல் மாணவர்கள் வாசிப்பு பயிற்சிக்காக வீட்டில் இருந்து சிறுவர் மலர். சிறுவர் மணி. தங்க மலர் போன்ற புத்தகங்களை எடுத்து சென்று வாசிப்பு பயிற்சி கொடுக்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் இவருடைய தலைமையாசிரியர் உறுதுணையாக உள்ளார்.

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!