Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 26 February 2018

தேர்வுகள் முடியும் வரை மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தம்

பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளதால், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொதுத தேர்வுகள் நிறைவடையும் வரை தாற்காலிகமாக மின்பராமரிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரிய மண்டல தலைமைப் பொறியாளர்கள் உள்ளி ட்டோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் மின் வாரியத்துக்குச் சொந்தமாக 1,600 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பணி நடக்கும் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்நிலையில் பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற உள்ளதால், துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அவசியமாக பராமரிப்பு செய்ய வேண்டி இருந்தால், அதற்கு முறைப்படி மின் பகிர்மான இயக்குநரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் காலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் இந்தப் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment