Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 2 January 2018

INCOME TAX DEDUCTION | 2017 - 18

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியலுக்கு உயர்நீதி மன்றம் தடை . பதவி உயர்வு பெற்ற  பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.

450 தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி - மாநில திட்ட இயக்குநர் கடிதம்2009 & TET ஊதிய மீட்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழைய ஊதியம் தொடர செயல்முறைகள்!!!

750 தனி ஊதிய முரண்பாடுகளை களைய முதல்வர் தனிப்பிரிவு மனு!!!

நாம் இன்று பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் என்ன..

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்குதல்...


MR., PAY BILL, AQUETENCY முடித்து அலுவலகத்தில் சமர்பித்தல்...


விழா முன்பணம் விண்ணப்பத்தினை அலுவலகத்தில் சமர்பித்தல்


EMIS சார்ந்த பணிகளை முடித்தல்


CCE RECORD கள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல் .....


அந்தந்த பாடத்திற்கான TLM தயார் செய்தல் ....மற்றும் திட்டமிடுதல் ....

EMIS சார்ந்த பணிகள் ....

EMIS – மாணவர்கள் விவரம் சரிபார்த்தல்...

EMIS – ஆதார் எண் அணைத்து மாணவர்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் ... ஆதார் எண் இணைக்காத மாணவர்கள் விவரம் தாயார் செய்து அதில் இணைக்க வேண்டும் ...

EMIS – ENROLLMENT மட்டும் உள்ள மாணவர்கள் 147  (HELP LINE NO)ஆதார் உதவி மையத்தினை தொடர்பு கொண்டு மாணவனின் ஆதார் எண் பெற முயற்சி செய்யலாம்..

EMIS- CASTE மற்றும் SUB CASTE விவரங்கள் சரிபார்க்க வேண்டும் தவறு ஏற்பட்டிருப்பின் அதை திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

EMIS – மாணவர்கள் புகைப்படம் நல்ல HIGH RESOLUTION CAMERA PHONE பயன் படுத்தி புகைப்படம் பிடித்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்...IMPORTANT BACKGROUND COLOR  (WHITE OR BLUE)

EMIS – இப்பணியினை முடிக்க நமக்கு EMIS ANDROID APPLICATION வெளியிட்டுள்ளார்கள் இந்த APPLICATION ஐ INSTALL செய்து மேற்காணும் பணியினை  விரைவாக முடிக்கலாம்.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக தொடர் மறியல் : ஜாக்டோ ஜியோ குழு முடிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் மறியலில் ஈடுபட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பு குழு நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறது. இதை கண்டித்து, கடந்தாண்டு நடந்த போராட்டம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவால் திரும்ப பெறப்பட்டது. இவ்வழக்கு, நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 11 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட சென்னையில்நடந்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலருமான பேட்ரிக் ரெய்மண்ட் ஆகியோர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில், ஜன., 6 தொடர் முழக்க போராட்டம், ஜன., 3ல் மாவட்ட கூட்டங்கள், ஜன., 9, 10 ல் அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள், சட்டசபை கட்சித் தலைவர்களை சந்திப்பது, பிப்., 4ல் சென்னையில் கருத்தரங்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 

கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், மதுரையில் இம்மாத இறுதிக்குள் நடக்கும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்ட தேதியை அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு கூறினர்.


350 இளநிலை உதவியாளர் பதவி : மின் வாரியம், 'கட் ஆப்' வெளியீடு

மின் வாரியம், காலியாக உள்ள, 350 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 'கட் ஆப்' மதிப்பெண்ணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, கள உதவியாளர், இளநிலை உதவியார் உள்ளிட்ட, 10 பதவிகளில் காலியாக உள்ள, 2,175 இடங்களுக்கு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம் முடிவு செய்தது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பணியிடங்களுக்கும், 2016 ஜூன் - ஆக., இடையே, எழுத்து தேர்வு நடந்தது. ஆனால், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், இளநிலை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு, நேர்காணல் நடத்த முடியவில்லை.மற்ற பதவிகளுக்கு, நேர்காணல் உட்பட, அனைத்து பணிகளும் முடித்து, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை உதவியாளர் நிர்வாகம் ஆகிய, 350 பதவிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உள்ளோர், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.நேர்காணல் முடிந்ததும், எழுத்து, நேர்காணல், கல்வி தகுதி ஆகியவற்றில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில், இடஒதுக்கீட்டின்படி, ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர். தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கும், விரைவில் நேர்காணல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறப்பு

பத்துநாள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த டிச., 7ல் துவங்கிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, 23ம் தேதி நிறைவு பெற்றது.அனைத்து பள்ளிகளுக்கும், 23 முதல் ஜன., 1 வரை பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. 

அதே நேரம், பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் அந்தந்த வகுப்பாசிரியர் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவருக்கு, 98 ஆயிரத்து, 897 செட் புத்தகம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 57 ஆயிரத்து, 967 செட் புத்தகங்களும் தருவிக்கப்பட்டுள்ளன.

இவற்றை, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி கடந்த வாரத்தில் நடந்தது.'புத்தக தட்டுப்பாடு தவிர்க்கப்பட வேண்டும்,கூடுதலாக ஒவ்வொரு பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று பள்ளி திறக்கப்பட்ட பின் மாணவ, மாணவியருக்கு புத்தகம் வினியோகிக்கப்படும்

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே : அரசு உத்தரவு

தமிழகத்திலுள்ள அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்கள் நடத்த அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், எனக் கூறியுள்ளார்.

SBI - வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் குறைத்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்து உள்ளது எஸ்.பி.ஐ வங்கி. 

இதுவரை 8.95% இருந்த வட்டி விகிதம் 8.65% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து இந்த வட்டிக்குறைப்பு விகிதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வீடு கட்ட கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ள நிலையில் இந்த வட்டிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதன் மூலம் பலர் தங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும் அதே சமயம் வங்கிக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வங்கியின் சில்லறை மற்றும் இணைய வங்கி சேவைப்பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா கூறுகையில், எங்களின் நேர்மையான வங்கி வாடிக்கையாளர்கள் நாங்கள் கொடுக்கும் புத்தாண்டு பரிசு இது. இதனால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். வட்டிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு விடுத்த அழைப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். 


கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

நமது மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவோம்!!!!

**

நாள்:07/01/2018.,

நேரம்:09.36 காலை,

இடம்:மல்லிகை அரங்கம் (ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).

ஈரோடு மாவட்டம்.

**

தொடர்பு எண்கள்:

9789180422,

9945586698,

9698339298,

9894372125,

9751894315,

ஒன்றுபடுவோம்! நாம் வாழ்வில் வெற்றி அடைவோம்!

திரு வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச்செயலாளர்,

9626545446,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

பதிவு எண்:655/2014.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!