Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 5 January 2018

EMIS UPDATION 03.01.2018 குள் முடிக்க வேண்டும் - பிறகு தான் STUDENT ID CARD விண்ணப்பித்தல் வேண்டும் - செயல்முறைகள் :



DEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலையில் பணி!!!



பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 
விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 41

பணியின் தன்மை: Guest Lecturer

பணியிடம்: கோயம்பத்தூர்

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 12.01.2018

மேலும் விவரங்களுக்கு பாரதியார் பல்கலை இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.


ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் வேலையிழக்கும் அபாயம்!



‘தொடக்கப் பள்ளிகளில் 
பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி சட்டம் 2009இன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இரண்டாண்டு டிப்ளோமா ஆசிரியர் (டிஎல்ஈடி) பயிற்சியை முடிக்காதவர்கள் வேலையிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி மண்டல இயக்குநர் ரவி, “தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்வயம் பிரபா என்கின்ற சேனல் மூலம் இதற்கான பாடங்களை கற்க முடியும். பணியில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் பயிற்சிக்கான டிப்ளோமா படிப்பை பயில முடியும். மேலும், மொபைல் ஆப் மூலமாகவும் படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களும், தமிழகத்தில் 25,600 பேரும் டிஎல்ஈடி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடக்க இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


குரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் 

தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


GPF Interest Rate from January 2018 to March 2018

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

இதில் 450 பதிப்பாளர்கள் வரை ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தக திருவிழா 10 நாட்கள் நடக்கும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் கொண்டாட்டமாக இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகத்தினரும் தங்கள் புத்தகங்களை அரங்குகளில் விற்பனைக்கு வைப்பார்கள்.

கடந்த ஆண்டு கண்காட்சி நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நுழைவுக்கட்டணம் அரங்குகள் மற்ற விபரங்கள் பற்றி தெரிவிப்பதற்கு வரும் ஜன.5 அன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு






INCOME TAX FROM 2017 -18



பிளஸ் 2 பொதுத்தேர்வு: கால்குலேட்டருக்கு அனுமதி!



பிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர்
கால்குலேட்டர் கொண்டு வரலாம் என நேற்று (ஜனவரி 3) அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, “பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2018 மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 2 மாணவர்களில் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகம் கொண்டுவர வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு எழுதுவோர் முழு கிராப் பேப்பரும் கொண்டுவர வேண்டும். புள்ளியியல் தேர்வு எழுதும் மாணவர்கள் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு சாதாரண ‘கால்குலேட்டரும்’, இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகமும் கொண்டு வர வேண்டும். அதேபோல் வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் கொண்டு வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுவரை மாணவர்கள் தேர்வறைக்குள் கால்குலேட்டர் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மழை விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 06/01/2018 அன்று வேலைநாள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் சுற்றறிக்கை!


மழை விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 06/01/2018 அன்று வேலைநாள் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை!



மாற்றுத் திறனாளிகள் மற்றும் இராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் (மனைவி) அரசூழியர்களுக்கு தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!