Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 10 January 2018

Flash News : ஜனவரி 12 முதல் 16 வரை பொங்கல் விடுமுறை



Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)


1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை

2.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது

3. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method

4. முழுமையான பாடம் பல அலகுகளாக(Unit) பிரிக்கப்படுகிறது

5.ஒரு  பாடவேளைக்கு 90 நிமிடங்கள்.காலையில் இரண்டு பாடவேளைகளும்,மதியம் ஒரு பாடவேளையுமாக பிரித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

6.அட்டைகளை கற்பித்தல் துணைக்கருவிகளாக பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி ஏடுகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் கொடுக்கப்படும்

7.Low level,கம்பிப் பந்தல்,புத்தகப் பூங்கொத்து,வீட்டுப்பாடம்,காலநிலை அட்டவணை இவைகளில் மாற்றம் இல்லை

8.பொதுவாகக் குழந்தைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும்,வகுப்பறை நிலைமைக்கேற்ப மெதுவாகக் கற்போருக்காக ஒரு குழு,மீத்திறன் குழந்தைகளுக்காக ஒரு குழு ஆசிரியர் அமைத்துக் கொள்ளலாம்

9.Long leave முடிந்து குழந்தை வரும்போது குழந்தையின் கற்றல் திறனுக்கேற்ப அக்குழந்தையினை பொருத்தமான அலகிலிருந்து தொடங்கச் சொல்லலாம்

10.இரண்டாம் பருவத்திலேயே பரீட்சார்த்த முறையில் சென்னை,காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 16 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது

2017-18 ஆண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருது" வழங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் | நாள்:- 09.01.2018

TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வெயிட்டேஜ் முறையில்தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால்அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களின்மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.


அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தொகுப்பு எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு, இணையதள செலவாக, துவக்க பள்ளிகளுக்கு, 200 ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு, 400, உயர்நிலை பள்ளிகளுக்கு, 600, மேல்நிலை பள்ளிகளுக்கு, 800 ரூபாய், ஒருமுறை செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: 

தற்போது, அலுவல் தொடர்பாக, அனைத்து விபரங்களை அனுப்புவது, பெறுவது, கணினி மூலம் நடக்கிறது. இதுமட்டுமின்றி, 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்ற, பல மணி நேரம் பிடிக்கிறது. சர்வர் கோளாறால், பல நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது. 

தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒரு பள்ளிக்கு, 200 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் இணையதள பயன்பாடு தேவைப்படும்போது, 200 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். துவக்கப்பள்ளிகளுக்கு கணினி வசதியும் இல்லை. இதனால், பிரவுசிங் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதுபோல், மாதந்தோறும் இணையதள வசதிக்கு நிதி ஒதுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்

Part Time Teachers ஆக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு கால முறை ஊதியம் வழங்க ஆணையர் உத்தரவு!

பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார். 

Hello English Videos (1st Part 3 videos)


அனைத்து பள்ளிகளிலும் இளம் செஞ்சுலுவைச் சங்கம் செயற்படுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!



வாசித்தல் .,எழுதுதல் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கான பயிற்சி நூல்



ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் வாசித்தல் .,எழுதுதல் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கான பயிற்சி நூல்  வெளியிட்டு உள்ளார். நூறு சதவீதம் வெற்றியை காணலாம்  தொடர்புக்கு 9443819813
,8754197759 நல்லாசிரியர் திருமதி முழுமதி

2009&TET ஆசிரியர்களின் வழக்கில் ஒவ்வொரு ஆசிரியர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா?

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!