Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 12 January 2018

கல்விச்சிறகுகளின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது.

இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான  நாளாகும்.

மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி,  கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல்  கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும்.

போகி:-

போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால்  கொண்டாடப்படும் விழாவாகும். போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதத்தின் இறுதி நாளாகும். பழையன கழிந்து புதியது  புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக,  கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.

மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள்  இந்திரவிழாவை முடித்து சூரிய வழிபாடை தொடர்ந்தனர். அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும்  பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த  தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்:-

பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்டிகையாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால்  சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தமிழர் திருநாளாக தமிழர்களாலும்,  தமிழர் வாழும் அனைத்து  நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றி தெரிவிக்க கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை  மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள்  வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.

மாட்டுப் பொங்கல்:-

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயலை உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய்  கொடுக்கவும், காரணமாக இருக்கும் எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம்,  சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவனுக்கு துணையாக இருந்த  கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல்  என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை  சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்  உண்ணுவதற்கு வழங்கப்படும்.

காணும் பொங்கல்

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி  பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நடத்துவதுண்டு, குறிப்பாக ஜல்லிக்கட்டு, பட்டி மன்றம், உரி  அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில்  முகத்தில் பூசிக்கொள்வார்கள்

இவ்வாறு நான்கு நாள் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல்,  குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான  மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். நான்காம் நாளான காணும் பொங்கல் அன்று வெளீ இடங்களுக்கும், உறவினர்கள் இல்லங்களுக்கும் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களின் வீடுகளில் கழிவறை உள்ள விவரங்களை கோருதல் சார்ந்து-மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!

புதுமை பள்ளி விருதுக்கான கருத்துருக்கள் 17/01/2018 க்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தல் சார்பு

ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று வந்த SPECIAL ALLOWANCE ரூ 500/- ரூ 30,50,60 ஏழாவது ஊதிய குழுவில் தொடர்ந்து பெற்று கொள்ள அனுமதிக்கலாமா ? - RTI
DGE - Diploma in Elementary Education Examination June 2018- First & Second Year Time Tableதொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'

தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர், வரும், 17ம் தேதி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல், தேர்வர்கள், தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

அதில், குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை, வரும், 22 முதல் 25ம்தேதிக்குள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்

பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் அரசு பொதுத்தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாகத்தான் கடந்த ஆண்டு வரைநடத்தப்பட்டு வந்தது.இதனால் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரிவர நடத்துவதில்லை என்றும், பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் அறவே நடத்தப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தன. ஆனால் நீட் தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பாடத்தில் இருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் 2018 மார்ச் மாதம் முதல் அரசு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ்-2 வகுப்புக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் ஆண்டு விரயமின்றிபிளஸ்-2 வகுப்புக்கு செல்லவும், தோல்வியுற்ற பாடங்களைஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி ஆண்டு தேர்வின் போதோ எழுதலாம் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு

தமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வைநடத்த, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், மத்திய அரசின் சலுகை கிடைக்காததால், 2017ல், 'நீட்' தேர்வின்படியே, மாணவர் சேர்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வை, தமிழகம் உட்படஎந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. இந்த தேர்வு, மே மாதம் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில், வினாத்தாள் இருக்கும்.

 தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, எந்த மொழி என்பதை குறிப்பிட்டால், அந்த மொழியில் வினாத்தாள் வழங்கப்படும். அதே மொழியில், விடைகளை எழுதலாம். இந்த தேர்வுக்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

STATE TEAM VISIT : ஏற்கனவே ஆய்வு செய்த பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

நிதி உதவி பெறும் பள்ளிகளின் EMIS மற்றும் மாணவர் வருகையை ஆய்வு செய்ய சிறப்பு குழு -விதிகள் வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் SALM,ALM பயிற்சி அறிவிப்பு!!!

G.O.Ms.No.11, Dated 10th January 2018 Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2017-2018 is 7.6% – Orders – Issued*
BRC ல் ஆதார் மையம் அமைக்க உத்தரவு!!வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்.-மத்திய அரசு பரிசீலனை.!!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!