Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 22 January 2018

EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்




Directorate of Government Examinations - DEE June 2017 - Scan copy / Retotal Application - at DIET



Flash News : NEET Exam Date Announced

NEET Exam - மே 6 ந்தேதி நடைபெறும் - CBSC இணை ஆணையர் அறிவிப்பு

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018 ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6 ம் தேதி நடைபெறுகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

EMIS - அனைத்து மாவட்ட  மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

FIND UDISE NUMBERS OFALL SCHOOLS INTAMILNADU
பள்ளியின் UDISE NUMBER தெரியாதபள்ளிகளை எளிதில் அறிந்து கொள்ளவழிமுறைகள்..
கீழே உள்ள படத்தின்படி UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின்மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும்முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBERஇன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…
தீர்வு : பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ளதமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத்தேடவும்...
Click Here

MSK FREE EDUSOFT version 6 IT Software 2017-2018 @ MSKedusoft

IT Software 2017-2018 @ MSKedusoft 

Flash News : "கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது" - பள்ளி கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை

"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது"

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது

எம்.எல்.ஏ-மந்திரிகளின் குழந்தைகள் கட்டாயம் அரசுப் பள்ளியில் படிங்க வேண்டும்.!!!



DEE PROCEEDINGS-Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு

லட்சக்கணக்கில் சிறுவர்களுக்கான புத்தகங்கள்... பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டியது என்ன?

"Home work " குறும்படம்


"Home work " குறும்படம்


JACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல! மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே! - திண்டுக்கல் எங்கெல்ஸ்

*மாண்புமிகு நீதியரசர்களே! மதிப்புமிகு அமைச்சர்களே! பொது மக்களே!*

☀JACTTO-GEO CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி போராடவில்லை.

☀அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPS திட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே JACTTO-GEO-வின் கோரிக்கை.*

_CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?_ என்றால் இரண்டிற்கும் ஒரே பதில்,

*ஆம்!* என்பதே.

_பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காக எவ்விதத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை._

ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான 10% தொகையை ஊழியர் பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரை அரசு செலுத்தியாக வேண்டும்.*

☀இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம் வரை CPS திட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.9,000 கோடி.

☀இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத் தொகை ரூ.9,000 கோடி.

☀அரசு & அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின் கூடுதலான இந்த ரூ.18,000 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக் கேட்டுப் போராடவில்லை.

மாறாக,

CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டிய கட்டாயப் பங்குத் தொகையால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,

*CPS-ஐ முற்றிலுமாக நீக்கிவிட்டு, எங்களின் ரூ.9,000 கோடியை வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே JACTTO-GEO-வின் 4 அம்சக் கோரிக்கைகளுள் ஒன்று.*

☀TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப் பணியேற்கும் நபர்களின் சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.

☀அதே நபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம் என்பது சராசரியாக 10 - 15 ஆண்டுகளே.

CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35 ஆண்டுகளும் மாதாமாதம் அரசு பெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயம்* உள்ளது.

ஆனால், *பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் ஓய்வுக்காலத்திற்குப் பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி* ஒதுக்கினாலே போதுமானது.

☀இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களை கடந்துள்ள நிலையிலும் ஒட்டுமொத்த செலவினத்தில் 14% மட்டுமே ஆகும்.

மேலும்,

☀NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின் ஊழியர்களின் பெற்றோர்கள், அதன் பயன்களைத் துய்க்க இயலாத அனாதைகளாக அரசே கொள்கை வகுத்துள்ளது.

இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,

*❌குடும்பநலநிதி*

*❌மருத்துவக் காப்பீடு*

*❌பணிக்கொடை*

*❌மாதாந்திர ஓய்வூதியம்*

*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்* அவரிடமிருந்து பிடித்த தொகையிலும் *100%-தையும் திரும்பப் பெறும் உத்தரவாதம் ஏதுமற்ற பங்குச்சந்தையில் முதலீடு* செய்வது என்பது,

*இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின் உயிருடன் வாழத் தகுதியற்றோர் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.*

☀இவ்வாறாக, அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும்,

☀CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு,

☀மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல் கால & சட்டசபை அறிவிப்பின்படி,

☀அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது

*அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்திட வேண்டியே JACTTO-GEO போராடி வருகிறது.


சேலம் விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற படிப்புகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஊக்க ஊதியம் பெற தகுதி வாய்ந்ததா? முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு!!!

தூய்மை விருதுக்கு தேர்வான பள்ளிகளை ஆய்வு செய்ய குழு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது.

நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், இணை இயக்குனர்கள், மாவட்டதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தேசிய துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பராமரிப்பு, கழிப்பறை துாய்மை, மாணவர்கள் கை கழுவும் முறை என, பல பிரிவுகளில், ஆய்வு செய்வதோடு, ஐந்து நிமிட வீடியோ பதிவு செய்யப்படும். இதில், சிறந்த பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு, தகுதி பெறுவதோடு, தேசிய அளவிலான போட்டிக்கும் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன.

இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில்,பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், இணை இயக்குனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!