Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 23 January 2018

அரசுப்பள்ளி ஆசிரியர் விவரங்களை இணையம் மூலம் 30 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்-இயக்குநர் உத்தரவு!!



பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை தொடர்ந்து வழங்குவது குறித்த போக்குவரத்து துறையின் செய்தி வெளியீடு.



படைப்பாற்றல் கல்வி முறை

படைப்பாற்றல் கல்வி முறை


தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு

படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology)

அறிமுகம் :

படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் *ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு* கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளடைவில் பிறபாடங்களும் இம்முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

படைப்பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி *ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.*

படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும்.

அவை, 

அறிமுகம் : (10 நி)

முந்தைய பாடங்களில் தொடர்புடைய கருத்துகள் இருப்பின் அதனை நினைவுகூர்ந்தும், ஆர்வமூட்டும் செயல்பாடுகளின் வாயிலாகவும் பாடத்தினை அறிமுககப்படுத்துதல்.

படித்தல்: (10 நி)

பாடப்பகுதியை முதலில் ஆசிரியர் படித்தல். பின்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவர் படித்தல். மாணவர் அடிக்கோடிட்ட புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். (மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்).

மனவரைபடம்: (15 நி)

பாடக்கருத்துக்கு ஏற்ற மன வரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மன வரைபடத்தை வழங்குதல். விடுபட்ட கருத்துகளுடன் ஆசிரியர்தம் மன வரைபடத்தினை வழங்குதல்.

தொகுத்தலும் வழங்குதலும்(10 நி)

பாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில்

தொகுத்தல்

1.வார்த்தை வலை(Word web

2. அட்டவணை(Tables).

3. குறிப்புகள்(Hints).

4. வரிசைமுறையில் எழுதுதல்.

5. படங்கள் வரைதல்.

6. உண்மைத் தகவல்கள்.

7. காலங்கள்.

8. மீன்முள்

9.தகவல் பலகை

மாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.

வலுவூட்டுதல்: (15 நி)

பாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல்.

மதிப்பீடு: (15 நி)

மாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.

குறைதீர் கற்றல்: (15 நி)

கற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.

எழுதுதல்:

பாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.

தொடர்பணி

பாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

சிறப்புக்கள்:

படைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாகவும் இம்முறையானது கருதப்படுகிறது

குடியரசு தினம் என்றால் என்ன? - மாணவர்களுக்கான குடியரசு தின உரை

குடியரசு தினம் என்றால் என்ன? அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?


ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்துவந்தார்கள். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது; சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். 


மாணவர் பஸ் பாஸ் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


INSPIRE AWARD 2017 - 18 | Selected Students List Published ( All District )

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாதஇறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும்என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம். பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம்.

ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களைஅரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில்விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.


600 காலி இடங்களை நிரப்ப கோரி போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகம் முடிவு

தொழிற்கல்வி பாடத்திற்கு, 600 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக,ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விஆசிரியர் கழகத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இது குறித்து, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொது செயலர், ஜனார்த்தனன் கூறியதாவது:அரசு பள்ளிகளில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிற்கல்வி பாடங்களில் படிக்கின்றனர். இதற்காக, 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான, 600 இடங்கள், 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், வகுப்புகள் நடத்தப்படாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 600 காலியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, 30 ஆண்டுகளாகநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்.ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளில், அனைத்து பள்ளிகளிலும், தொழிற்கல்வி கட்டாய பாடமாக்கப்பட்டு, அதற்காக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நாடு முழுவதும், ஜூலை, 8ல்,நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது.

இந்த ஆண்டுக்கான தேர்வு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற உள்ளன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறுகின்றன.தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்.,1ல், https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச், 6 முதல், ஏப்., 25 வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி.,அறிவித்துள்ளது.

வயது வரம்பில் சலுகை : இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற, நெட் தேர்வு எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி, 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.


அனைத்து ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய "மக்கு" குறும்படம்


வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை

நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உயர்த்தப்பட்டு உள்ளதால், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம், இந்நகர்வில் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோன்று வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் விலக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை ரூ.2.50 லட்சமாக உயர்த்துவதால் வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள் இதில் அரசுக்கு செலவு ரூ.7,500 கோடியாவே இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம், பட்ஜெட்டில் விவசாயம், சிற மற்றும் குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்திய தொழிற் கூட்டமைப்பினர் (சி.ஐ.ஐ.) தெரிவித்த தகவல்கள் வருமாறு:–

தற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான ரூ.2½ லட்சம், ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படலாம். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயராது. இதுதவிர, வருமான வரி செலுத்துவதில் உள்ள அடுக்கில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கு, குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும்.

கடந்த ஆண்டு வருமான வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் (இது தற்போது 20 சதவீதம்). இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.

இதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டும் தனிநபருக்கு மட்டும் 20 சதவீத வரி விதிக்கப்படலாம் (தற்போது 30 சதவீதம்). ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 30 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் இந்த பிரிவினருக்கு இதைவிடவும் அதிக சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி அடுக்கு இல்லை என்பதும், மாதச் சம்பளம் பெறுவோர் ரூ.10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் அடுக்கிற்குள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வருமான பிரிவுகளில் தொகையை அதிகரித்து அதன் மூலம் மாதச்சம்பளம் பெறுவோரின் வருமான வரிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

அதே நேரம், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க கோரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் கோரிக்கையை கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தம் செய்திடவும் பகுப்பாய்வு அறிக்கையினை தயார்நிலையில் வைத்திடவும் அறிவிப்பு!!!



தனி ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு ..திருச்சி மண்டல தணிக்கை அலுவலரின் நிர்ணயம்படியே ஆணைகள் வழங்க வேண்டும் .நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை. நாள் .09.01.2018





நீட் தேர்வில் எந்தப் பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்படும்?- மீண்டும் குழப்பம்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடக்கும் என்று அறிவித்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம் (CBSE). இன்று, இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வார ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நீட் மே 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த வாரம், மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு, வட இந்தியாவில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 'பிள்ளைகள் கடந்த ஓராண்டாக மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவரும் நிலையில், திடீரென தேர்வில் மாநில பாடத்திட்டத்தை சேர்ப்பது மாணவர்களுக்குப் பாதகமாய் அமையும். கடந்த ஆண்டு எந்தப் பாடத்திட்டத்தை கடைப்பிடித்ததோ, அதே பாடத்திட்டத்தில் தேர்வை நடத்த வேண்டும்' என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, சி.பி.எஸ்.இ அமைப்பு தனது இணையத்தளத்தில், 'நீட் பாடத்திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் தேர்வு நடத்தப்படும்' என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை, ``நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தைச் சேர்க்கப்படும். இதுகுறித்து, மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேசி இருக்கிறேன். மத்திய அமைச்சர் மாநில பாடத் திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்க உறுதியளித்துள்ளதாக" தெரிவித்துள்ளார். இந்தத் தகவலால், மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் மீண்டும் குழப்பமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.


கடந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். கடைசி வரை நீட் தேர்வு இருக்காது என்று பேசி வந்தனர். சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கும் சட்ட மசோதாவுக்குக் கடைசி வரை குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவச் சேர்க்கை நடைபெற்றது. அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த ஆண்டு, நீட் தேர்வு நடைபெறுமா என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. மருத்துவம் படிக்க ஆர்வம் உள்ள அனைவரும் கட்டாயம் தேர்வு எழுதியாக வேண்டும்.

எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் தனித்தனி தேர்வு எழுத வேண்டும்.

தற்போது, தேர்வு பாடத்திட்டங்கள் குறித்து குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. சி.பி.எஸ்.இ அறிவித்துள்ள பாடத்திட்டமா அல்லது மாநில பாடத்திட்டத்தையும் சேர்த்து நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுமா என்பது குறித்து விரைவில் மனித வளத்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். அதுவரை, தமிழக அரசியல்வாதிகள் மாணவர்களைக் குழப்பாமல் இருப்பது நல்லது.

உச்ச நீதிமன்றம், `நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகள் கொண்ட தேர்வை நடத்த வேண்டும்` என்று தீர்ப்பு வழங்கி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!