Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 24 January 2018

DSE PROCEEDINGS-69-வது குடியரசுத் தின விழா-2018: தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்: நாள்: 24/01/2018


GO 913 - National Pulse Polio Camp on 28.1.18 and 11.3.18- Reg


DSE PROCEEDINGS-412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பூதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு ஆணை


CLICK HERE

தமிழகம் முழுவதும் பிளஸ்2 செய்முறை தேர்வை பிப்.13க்குள் நடத்த உத்தரவு.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை வருகிற பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 
இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து செய்முறை தேர்வுகளை வரும் பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.மேலும் 14ம் தேதி மதிப்பெண் அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆலோசனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். 

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


SPD - STATE TEAM VISIT - SCHOOL VISITING OFFICERS NAME LIST PUBLISHED - DIR PROC

IAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

IAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் சோதனை" வானவில் உருவாக்குவோம்" வீடியோ


இராணுவம் , கப்பல்படை , விமானப்படையில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில் 12-06-1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்:-


கலெக்டர் ஆன அரசுப்பள்ளி மாணவர்


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஜனவரி-2018 சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை!!!நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு!!!டெல்லி: தேசிய தகுதித் தேர்வு எழுத வயது 
வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றவும், ஜூனியர் ஆய்வு மாணவராக சேரவும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ அமைப்பு இந்த தேர்வை கண்காணித்து வருகிறது.

இந்த தேர்வு முறையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும் இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை எழுதுவோருக்கும் வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த தேர்வு பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நெட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதே போல் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.


பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்!!!

தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு

அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், ௧ - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 14 ஆண்டுகளாகவும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை.
எனவே, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் அளவுக்கு, பாடத்திட்டங்களை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
அதன்பின், சில மாற்றங்கள் செய்து, இறுதி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கும், பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலாகிறது.
எனவே, முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு அமலாகும் வகுப்புகளுக்கான புத்தக தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதத்துக்குள், புத்தக பணிகளை முடித்து, தமிழ்நாடு பாடநுால் கழகத்திடம், புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!!!

அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் 

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.
விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன.
குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


GO No. 2 for Smart class rooms for 3000 Primary and Middle schools attached


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!