Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 27 January 2018

ஆசிரியர்களுக்கான இரண்டு youtube தளங்கள்!

 YOU TUBE தளத்தில்  SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ளது.
1675 க்கும் மேற்பட்ட
SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே  600 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம், கணினி  சார்ந்த காணொளிகள்,
1.Arvind Gupta Videos (தமிழ்) -219
2. +2 வேதியியல் (தமிழ்). - 12
3.+2 இயற்பியல்  (தமிழ்). - 12
4. +2 தாவரவியல்  (தமிழ்). - 12
5. வேதியியல் மற்ற வகுப்பு  (தமிழ்). - 42
6. இயற்பியல் மற்ற வகுப்பு  (தமிழ்). - 49
7. தாவரவியல்  (தமிழ்). - 35
8.அண்டவியல்  (தமிழ்). - 10
9. Health and Hygiene (தமிழ்) -35
10. M.S. Word tutorial (தமிழ்) -13
   
 மற்றும் EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை  அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து  வீடியோக்களும் வகைப்படுத்தப்பட்டு PLAY LIST சென்று தங்களுக்கு தேவையானவற்றை பார்வையிடவும்.

Channel link

http://www.youtube.com/user/smspms2020

Hello English, Phontic
 Videos
 Channel link
Karthikeyan rk

https://www.youtube.com/channel/UCnFMcMlCy95w1dUQ-Fc5GRg

போலியோ சொட்டு மருந்து முகாம்-நடைபெறும் இரு நாட்களிலும் ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவுலிம்கா சாதனை: 900 மாணவர்கள் பங்கேற்பு!!!பொள்ளாச்சியில் லிம்கா சாதனை முயற்சிக்காக 900 மாணவர்கள் 
இணைந்து மூவர்ண குடைகளுடன் தேசியக்கொடி மாதிரியை ஏற்படுத்தினார்கள்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நேற்று(ஜனவரி 26) குடியரசு தின விழாவையொட்டி சர்க்கஸ் மைதானத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 900 பேர் இணைந்து "லிம்கா" சாதனைக்காக முயற்சியை மேற்கொண்டார்கள். இதில், 900 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மூவர்ண குடையுடன் தேசியக்கொடி மாதிரியை ஏற்படுத்தினார்கள். ஐந்து நிமிடம் நடந்த இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

''லிம்கா சாதனைக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று நதிகளை இணைக்க வலியுறுத்தி, பிரதமருக்குக் கடிதம் அனுப்பும் முயற்சியும் துவங்கப்பட்டுள்ளது'' என்று விழா ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்தார்.


அனுமதியின்றி தொடர்ந்து ஆப்சென்ட் ஊழியர் பணி நீக்கம் சரியே: ஐகோர்ட்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

 தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க முதல்கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறுவதற்காக 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்கூறினார்.

போட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியங்களிலும் துவக்கம்!5th std 3rd term Science Mind Map

6வது ஊதியக்குழுவில் 9300-34800+4200 ஊதிய கட்டுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கல்வி தகுதி என்ன? RTI- தகவல்English Action Words for Primary Students


தமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...

தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். 

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து "கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது .

. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing),  இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc. போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.

இன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது;  இதனால், பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers) கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது, தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.

தகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.

”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”

தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு பள்ளிகளுக்கு  பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை..?? தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை..??

பிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது…

நவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும், கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும் பின்தங்குகிறது.

தமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும் கணினி!! எதிலும் கணினி!!” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வரை இல்லை.

இந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுகிறோம்..!!

செல்வி ரங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

DGE- +1 Public Exam March 2018- Main Answer Sheet Instruction-Reg


IT Software 2017-2018 @ MSKedusoft Version 7.0

MSK FREE EDUSOFT

IT Software 2017-2018 @ MSKedusoft

Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?id=1eFccAt7yJNtY4QHMknYW-c6ll8GmZ4ZA

 Instruction for Enable Macro

Click Here to Download

https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing

மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தகவல்களைத் திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கல்வியியல் மேலாண்மை, தகவல் முகமை ("எமிஸ்') கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது.இதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் களையும் வகையில் அண்ணா பல்கலை. தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் வலைதளம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக எமிஸ் இணையதளத்தில், பதிவேற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாகப் புகார் எழுந்தது. இதனால், விடுபட்ட மாணவர்களுக்கு புதிய பதிவு எண் உருவாக்க கடந்த 17-ஆம் தேதி முதல் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்."எமிஸ்' வலைதளம் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலான மாணவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஒரு சில மாணவர்களின் விவரங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், " எமிஸ்' தொகுப்பில் வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயரும் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும்; ஏதேனும் மாணவர்கள் பள்ளியில் பயின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றிருப்பின் அவர்களது பெயர்களை "எமிஸ்' தொகுப்பிலிருந்து நீக்க வேண்டும்.விடுபட்ட மாணவர்களின் பெயரை பதிவேற்றம் செய்தல், வருகைப் பதிவேட்டில் இல்லாத மாணவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல் போன்ற பணிகளில் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் தொடர்புடைய தலைமையாசிரியர், வட்டார வளமையப் பயிற்றுநர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பணிகள் தலைமையாசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இந்தப் பணியை ஜன.29-க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டுநீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. 
தமிழகம் ஓராண்டுக்கு விலக்கு பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் மே 7ம் தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் 11,35,104 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 103 மையங்களில் 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 88,000 மாணவர்களில், 15,206 பேர் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல்,இந்த ஆண்டு நீட் 2018 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஜனவரிஇறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமுதல் அடுத்த 30 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதை சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு விதிமுறைகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவரின் ஆதார் எண், உபயோகத்தில் உள்ள மொபைல் எண், உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி அவசியம்.

கடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விதிமுறைகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.
தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு, மார்ச்சில், பொது தேர்வு துவங்குகிறது; ஏப்ரலில் தேர்வு முடிகிறது.தேர்வுக்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியில், ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலை, மாலையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பிளஸ் 2வுக்கு, முதலாம் திருப்புதல் தேர்வும், மாநில அளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தினசரி சிறப்பு பயிற்சியுடன், காலை அல்லது மாலை நேரங்களில், மாதிரி தேர்வுகளையும் நடத்த வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தினசரி தேர்வு நடத்தி, அன்றே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும்.எந்த பாடத்தில் மாணவர்கள் திறன் குறைந்து உள்ளனரோ, அதில், கூடுதல் முயற்சி எடுத்து படிக்க மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்த வேண்டும் என, ஆலோசனை வழங்கி உள்ளனர்.

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறைதேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு,மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில்,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறைதேர்வைதுவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய,தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு,தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்புபணி நடந்துவருகிறது.
வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம்,கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலகவளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார்.

பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.

பிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் செலுத்த உத்தரவு

பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 
பிளஸ் 2 தேர்வு பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, ஏப்., 6ல் முடிகிறது. இத்தேர்வில், எட்டு லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன.தேர்வு கட்டணமாக, செய்முறை பாடங்கள் அடங்கிய மாணவர்களுக்கு, 225 ரூபாய்; செய்முறை அல்லாத பாட மாணவர்களுக்கு, 175 ரூபாய்; மதிப்பெண் பட்டியலுக்கு, 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை, 29க்குள் வசூலித்து, தாமதமின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டு உள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.தமிழ் வழி அல்லாத மாணவர்களில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக கட்டண விலக்கு உண்டு.

பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் மாணவர்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பெறுவோர் மட்டும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் அனைவரும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த

நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்


4சுழி 5சுழி போட்டானாம்! 

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு? 

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 

மூனுசுழி ண என்பதும் தவறு!

 இதன் பெயர் டண்ணகரம்,

 இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.ண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழிகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்குடண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து  வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 

இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 

(வர்க்க எழுத்து-ன்னா, 

சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 

இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 

எழுத்துப் பிழையும் குறையும். 

எப்புடீ?

ண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி  தான் வரும்.

ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி  தான் வரும்.

ஏன்னா அது றன்னகரம். 

இதே மாதிரித்தான் ந கரம் என்பதை,தந்நகரம்னு சொல்லணும்

ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 

வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 

நெனைக்கிறவங்க மட்டும்

தொடர்ந்து படிக்கலாம். 

(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 

அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)

நல்ல உச்சரிப்புக்கு..
செய்தியாளர் ஷோபனா ரவி

தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)

இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?

உதாரணமாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்

இதை எல்லாரும் படித்திருப்போம்-

வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து 

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க 

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் 
அவற்றின் பெயருக்கேற்ப 
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 
மென்மையாகவும் இன்றி இடையினமாக) 
செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ 
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!

நெட்டை னா குட்டை

பள்ளம் னா மேடு

தொப்பை னா சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?

முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன ர என்பதும் தவறு!

பெரிய ற என்பதும் தவறு! 

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது 

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி 

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!
சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!
பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் 

இடையில வர்ரது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான் ! 

இதே மாதிரித்தான் 

உயிரெழுத்தில் 

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

 ஐ-இ  

ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள் 

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை 

(ஓசை ஒழுங்கு) அறிந்து 

எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும், 

படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

அப்பறம் நீங்க வேற ஏதாவது கேட்டா,

எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.

எனக்குத் தெரியலன்னா -

தெரிஞ்சிகிட்டு வந்து சொல்றேன். 

சரீங்களா? 

வணக்கம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!