Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 29 January 2018

+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-கல்வித்துறை!!!

Emis Appல் அனைத்து பணிகளும் முடித்த பிறகு ஏதேனும் தவறு இருந்தால் எவ்வாறு மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோ


SPD proceedings regarding PINDICS & QMT



பசுமைப்பள்ளி குட்டிவிவசாயிகள் இணையம்முதல் இயற்கை வரை










பசுமைப்பள்ளி குட்டிவிவசாயிகள்
இணையம்முதல் இயற்கை வரை

இன்றைய இளைய சமுதாயம் *இணையத்தின்* காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. அந்த இளைய சமுதாயத்திற்கு *இயற்கையின்* மீதும் நேசத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு
*ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு* இருக்கிறது. மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் போதாது. விளையாட்டும் வேண்டும். விவசாயமும் வேண்டும்.

எனவே தான் நாங்கள் இணையத்தின் மூலம் Smart Class, Smart Board, Skype மூலம் கலந்துரையாடல் போன்ற கற்பித்தல் செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் அதே வேளையில், இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளியில் நிழல் தரும் மரங்கள், மலர் தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தி அதில் மாணவர்களை ஈடுபடுத்தினோம். மாணவர்கள் ஓய்வு நேரங்களில் *குட்டிவிவசாயிகளானார்கள்*.
சட்டமன்ற உறுப்பினர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் வந்து மரக்கன்றுகளை நட்டார்கள்.
நான்கு வருடங்களுக்கு முன்பு *பாலைவனம்* போல காட்சியளித்த எங்கள் பள்ளி இப்போது மாணவர்கள்,  ஆசிரியர்கள் முயற்சியினால் *பசுமைப்பள்ளியாக* மாறி
*சோலைவனமாக* காட்சி அளிக்கிறது.

அதற்கு முத்தாய்ப்பாக மிகச்சிறிய காலி இடத்தில் மாணவர்கள் தாங்களே விதைத்து, உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கை முறையில் வளர்த்த காய்கறி தோட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பூசணிகளை *அறுவடை* செய்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரும் வாரத்தில் அவற்றை சத்துணவில் சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளோம். இத்துடன் சேர்த்து கடந்த இரண்டு மாதத்தில் 25 பூசணிகளை விளைவித்துள்ளனர். குட்டி இடத்தில் குட்டி விவசாயிகளின் குட்டி அறுவடை...
குடியரசு தினத்திலும் 25 மலர் செடிகள் நட்டோம்.

இணையம் மன உளைச்சலைத் தரும்.
இயற்கை மன அமைதியைத் தரும்.

இயலும் வரை இணையம் இன்பம் தரும்.
இருக்கும் வரை இயற்கை இன்பம் தரும்.

இயற்கையை போற்றுவது
தமிழர்களின் பண்பாடு.

இயற்கையை நேசிப்போம்.
விவசாயத்தை பாதுகாப்போம்.

ஊ.ஒ.தொ.பள்ளி,
*பள்ளிகுப்பம்,*
மாதனூர் ஒன்றியம்.

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி

ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி:

கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கற்றல் குறைபாடுள்ள 1 லட்சம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ம் தேதி வரை சிறப்பு பயிற்சிவழங்கப்படும். தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இருப்பினும், மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி, மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள ஏற்கனவே 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 312 மையங்கள் பிப்ரவரி 4ம் தேதிக்குள் திறக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, சென்னையில் உள்ள 4 கல்லூரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி‘நீட்’ தேர்வு பயிற்சி வழங்கப்படும். அம்மாணவர்கள் தங்கவும், உணவுக்கும் அரசு ஏற்பாடு செய்யும். வரும் காலங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும் என்றார்.

புதிய கல்விக்கொள்கை:

 போலியோ சொட்டு மருந்து முகாமை கோபியில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், லண்டனில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்'..


150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்' வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழவுள்ளது.
பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும் நிகழ்வே, 'ப்ளூ மூன்' சந்திர கிரகணம் எனப்படுகிறது. மிகவும் அரிதான நிகழ்வான இது, 150 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும் என கூறப்படுகிறது. கடந்த 1886ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி நிகழ்ந்த இந்த 'ப்ளூ மூன் சந்திர கிரகணம்', தற்போது மீண்டும் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ப்ளூ மூன் சந்திர கிரகணம் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கலாம். சந்திரன், பூமிக்கு மிக அருகில் உள்ள அதன்சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும். இதன் மூலம், வழக்கமான நிலவொளியை விட 14 சதவித கூடுதல் வெளிச்சத்தை நாம் காண முடியும். மேலும் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினைக் காண முடியும். ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும். ஆனால், ஜனவரி 1ஆம் தேதியே தோன்றிய முழு நிலவு, மீண்டும் மாதக் கடைசியான 31ஆம் தேதி தோன்ற உள்ளது.இதுவே 'ப்ளூ மூன்' என்று கூறப்படுகிறது. இதனால் சந்திரகிரகணத்துலேயே 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்' ஸ்பெஷல்எனலாம்.


February 2018 Calendar

TNPSC-HALL TICKET DOWNLOAD-GROUP-IV and VAO COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV 

GROUP-IV and VAO

COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV 


Download Admit Card 

Application Status

Online Payment Verification

Application Print

DEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

5th std 3rd term Maths Mind Map

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
சிறப்பு பயிற்சிதனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது. வினாத்தாள்எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆதார் எண் பெற சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என,ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல்சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகாரசான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

போலியை நீக்க உத்தரவு

பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி,தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான,'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். தொடர்பான தகவல்களை அறிய...



அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களில் எந்தெந்த தலைவர்கள் புகைப்படங்களை வைக்கலாம் ?அரசாணை இதோ



திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல்- கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் கடிதம்!!!





நீட் தேர்வு: விலக்கு வேண்டும்!!!



"நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு 
வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு வரும் மே மாதம் 6 தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் கேட்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற போதே நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக சட்டப்பேரவையில் இரண்டு சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் இன்று (ஜனவரி 28) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில், அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "நீட் தேர்வில் விலக்கு கோரி மத்திய அரசை இப்போதும் வலியுறுத்தி வருவதாக" கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், 'மத்திய அரசின் எந்த தேர்வையும் எதிர்கொள்ள தமிழக மாணவர்களை தயார்படுத்தும்நோக்கில், பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது.இதனால் மார்ச் மாத இறுதிக்குள் 72000 தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவார்கள்' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


TET - ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!!!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!