Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 30 January 2018

INCOME TAX OFFICER -TRICHY CIRCULAR- TDS on Salary- Claim Made by Employees-Reg


தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை!!!

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 
'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

 *தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!*

கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை
பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

*வருகைப்பதிவு எப்படி?*

புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

DEE PROCEEDINGS-கலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு ஒத்துழைப்பு நல்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு இயக்குனர் உத்தரவு



TNOU-BEd ADMISSION -NO ENTRANCE EXAM-NEW METHOD FOR The Selection of candidates will be on the basis of the marks secured in the qualifying UG / PG Degree examination.



20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்



சென்னை: தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம்
பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

மாணவர்களை தயார்படுத்துவதற்காக, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, பிளஸ் 2 முடித்ததும், அரசு பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும்,

ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.

தொழிற்கல்வி பயிற்சி

'லெண்ட் அஹேண்ட் இந்தியா' என்ற, பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியைதுவக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவர்கள், படிப்பை முடிக்கும் போது, வேலை வாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், 20 லட்சம் மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, மாணவர்களை தயார்படுத்த வசதியாக, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி தரப்படுகிறது.

260க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி

வேலைவாய்ப்புக்கான தொழிற்கல்வி பயிற்சியில், விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்; கட்டாயமில்லை. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சிறு வணிகம், ஆட்டோ மொபைல்ஸ், அழகு, உடல்நல பராமரிப்பு கலை என, 260க்கும் மேற்பட்ட தொழிற்கல்விகளில்

Advertisement
ஒன்றை, மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, மூன்று கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கிறது. மேலும், 30 கோடி ரூபாய் வரை நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான, 'நீட்' தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்கள், 2,000 பேருக்கு, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், சிறப்பு பயிற்சி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர், ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


குரூப் 4 தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன?



தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் 
அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது. இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.

சுமார் 20.8 லட்சம் பேர் எழுதவுள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்

மேலும் விண்ணப்ப கட்டணம் கிடைக்க பெறாதவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய லானுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் இமெயில் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு தமிழக அரசின் தேர்வுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பள்ளிகுளத்தில் அறுவடைத் திருவிழா...





பள்ளியில இருக்கிற பெரிய  தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்துல இருந்து வெளியேற தண்ணீ எப்படி பாத்தாலும் காகாணி பாயும் போல... பள்ளிய சுத்தியிருக்கிற செடிகளுக்கு விட்டது போக ஏகப்பட்ட தண்ணி வீணாவது மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது.
தோட்டம் போட்டு பாய்சலான பள்ளியில இடமில்ல. என்ன செய்லானு யோசிச்சப்பதா.. பள்ளிக்கு பின்னாடி இருக்கிற நிலத்த குத்தகை எடுத்தா என்னனு  தோனிச்சி...

 நிலத்து உரிமையாளர் திரு. ஏழுமலைய பார்த்து கேட்டப்ப எதுவேணா செய்துகங்கனு அவுரும் சம்மதிச்சது ரொம்ப சந்தோசமா போச்சி..
ரொம்ப வருசமா நம்மாழ்வார் ஐயாகிட்டையும், ஜுரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்கிட்டையும் கற்றுக்கொண்ட இயற்கை விவசாயத்த, பசங்களுக்கு ஒரு மாதிரி தோட்டம் அமைச்சி கத்துகொடுக்கனுன்ற ஆசைக்கு பெரிய தீனிபோட்டமாதிரி இருந்திச்சி.

 குத்தகைலா பெருசா ஒன்னுமில்ல விளையருதுல பங்கு மட்டும் தா.
பள்ளி முடிஞ்சி, நம்ம சுற்றுச்சூழல் மன்றம் சார்பா தினம் ஒரு வகுப்புக்கு(6,7,8) விவசாயப்பாடவேளைனு ஒதுக்கி அரை மணி நேரம்,  நம்மாழ்வாரின் இருமடி பாத்தி, நவீன சொட்டுநீர் பாசனம்,தெளிப்புநீர் பாசனம், மூடாக்கு முறை, ஊடுபயிர், மற்றும் ஜீவாமிர்தம், மூலிகை பூச்சிவிரட்டிகள்னு கத்துகிட்டு, முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கை விவசாயத்தாலேயே கடந்த ஒரு மாசமா நம்ம பசங்க உருவாக்கி இருக்கிற, பாரதி கனவு கண்ட *காணிநிலத்தோட்டத்தின்* முதல் அறுவடை(ஊடு பயிர் மட்டும்) இன்னிக்கி சிறப்பா  திருவிழாவா கிராம பெரியோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் கரங்களால் நடந்தது.

அவரை,கொத்தவரை,வெண்டை,பீன்ஸ், சிறுகீரை, அரைகீரை,தண்டுகீரை,புளிச்சகீரை குறிப்பா முள்ளங்கி அரை டன்னுக்கு விளைஞ்சிட பள்ளிகுடத்துல படிக்கிற பசங்க 160 பேருக்கு மட்டுமில்ல, வண்டியல எடுத்துகிட்டு போயி வீடு தோறும் இயற்கை விவசாயத்துல விளைஞ்சது சாப்பிட்டு பாருங்க, நீங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கனு சொல்லி, நம்ம சுற்றுச்சூழல் மன்ற பசங்க ஊர் பூரா இலவசமா கொடுத்து பெரிய பிரச்சாரமே பண்ணி பூட்டானுங்க...

*வீடு தோறும் கழிப்பறை, வீதிதோறும் மரங்கள்,காடுதோறும் இயற்கை பண்ணையம்* என்ற பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் இலக்கை
நோக்கி தொடர்ந்து பயணிக்கிறோம்.

*மண்ணும் மனிதனும் மலடாகாமல் காக்க* இயற்கை விவசாயம் செய்வோம்..
செய்ய வைப்போம்...

*நன்றி... **
திரு. *ஏழுமலை* நில உரிமையாளர்.

*சுற்றுச்சூழல் மன்றம்*,
*ஊ.ஒ.ந.நி.பள்ளி.*
*பள்ளிகுளம்.*

+2 படிக்கும் மாணவர்களுக்கு தேவையான வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடத்தில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களுக்கான தமிழ் காணொளிகள்

அறிவியல் சோதனை- காற்றின் அழுத்தத்தால் மேலே கீழே செல்லும் பொம்மை


கல்விச்சிறகுகள் இணையதள வாசகர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி சாதனை



கல்விச்சிறகுகள் இணையதள வாசகர்களின் எண்ணிக்கை
1 கோடியை தாண்டி சாதனை

1,00,00,000 பார்வையாளர்கள்

467 Whatsapp குழுக்கள்

14,000 posts

10 நாடுகளில் பார்வையாளர்கள்

கல்விச்சிறகுகள் உடனுக்குடன் செய்திகளை தருகிறது.

கல்வி சார்ந்த செய்திகள் மட்டுமே இத்தளத்தில் இடம்பெறுகிறது.

ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், மாணவர்களின் திறமைகள் இத்தளத்தில் வெளியிட்டு அனைவருக்கும் உதவுகிறது.

karthikeyan rk என்ற பெயரில் Youtube channel உருவாக்கப்பட்டு Hello English, Phonetic Videos, Science videos, 200 கும் மேற்பட்ட வீடியோக்கள் இடம் பெற்றுகின்றன.

Youtube link
https://www.youtube.com/channel/UCnFMcMlCy95w1dUQ-Fc5GRg

Website link
www.kalvisiragukalrk.com

Playstore link
https://play.google.com/store/apps/details?id=kalvisirugugal3834.vinebre

ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும்  பள்ளிகளின் செயல்பாடுகள் இத்தளத்தில் இடம்பெற அழையுங்கள்
9843398567

DEE PROCEEDINGS-தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!