Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 31 January 2018

SCERT - British Council Training for Teacher's | Director Proceedings7th Pay Commission: Central Government Employees Might Get Additional Pay Hike in Budget 2018

The 7th Pay Commission had recommended that Rs 18,000 minimum salary must be given to the Central government employees. 

However, the recommendations of the seventh CPC were not accepted by the employees union that wanted more salary for employees. Now, it seems that the demand might get approved in Budget 2018. The government might pay up salary beyond what was recommended by the 7th Pay Commission, but without arrears.

A source told a news website that the government was committed to paying the hiked salary beyond the suggestion of the 7th Pay Commission in April. The salary hike will be given to lower level employees, but no arrears will be given by the government. Finance Minister Arun Jaitley will table the proposal before the Cabinet in April.
The minimum salary for central government employees was increased to Rs 18,000 as recommended by the 7th pay commission. The highest salary was increased from Rs 90,000 to Rs 2.5 lakh with a fitment factor of 2.5 times. The unions demanded that the minimum salary should be Rs 26,000 with a fitment factor to be 3.68 percent. The employees had gone on a strike in 2016. Finance Minister Arun Jaitley had assured that their demands will be looked into.

The unions content that Rs 18,000 was not enough to live. Also the ratio from highest to lowest salary had dipped to 1:14, which was 1:12 in the 6th pay commission.

It was reported recently that the government might make the allocation for the revised salary in the upcoming Budget and raise the salary beyond 7th pay commission recommendation in April..

110 B.T Assistant Express pay order for one year!!!More reads

Click here
https://drive.google.com/file/d/17EAdWmLKF2jIFENkv_G-ZYzf3ImqlfG5/view?usp=drivesdk


ஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்!!!

மாணவர்களுக்கு சொந்த செலவில் புத்தகம் வழங்கி உதவும் அரசுப்பள்ளி ஆசிரியர் திரு.சரவணன்


ஆசிரியரை வாழ்த்த
9597063944

5th std january third & fourth week lesson plan

Hello English Videos

ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம்.


ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.


தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை.


அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.


அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..??


தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 600 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve)  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..??


எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.


கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன...
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்...
2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
கல்வி மானியக் கோரிக்கையில் கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா தமிழக அரசு??                                                       
G. RAJKUMAR, MCA., BEd.,
மாநில இணைய ஆசிரியர்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
  பதிவு எண் ® 655/2014.


நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு:

தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு அளித்து மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு 

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்வு. 

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்வு - மத்திய அரசு. ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.

ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.


வணக்கம். ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும். 

பொருள்: 

1. வழக்கு நிதி. 

2. அடுத்த கட்ட நடவடிக்கை. 

இடம்: TNPTF சங்க அலுவலகம். எல்லீஸ் சாலை. சென்னை. 

உயர்நிலைக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவண்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.சுப்பிரமணியன், முத்துச்சாமி,மாயவன், மீனாட்சி சுந்தரம்,தாஸ்,மோசஸ், தியாகராஜன், தாமோதரன், வெங்கடேசன்,அன்பரசு. 

ஜாக்டோ- ஜியோ .

DEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்தல்- அறிக்கை அனுப்பகோருதல் சார்பு

'ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு'

''அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய, குழு அமைக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார்,'' 

என்று, ஜாக்டோ - ஜியோ கிராப்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சண்முகராஜன் கூறினார்

.

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின், அவர் கூறியதாவது:

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, முதல்வரை சந்தித்து பேசினோம். சட்டசபையில், கவர்னர் உரையில் தெரிவித்தது போல, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். 'அடுத்த மாதம் இறுதிக்குள், குழு அமைக்கப்படும்; இதுகுறித்து, அதிகாரிகளுடன் பேசி, ஓரிரு நாட்களில், அரசாணை வெளியிடப்படும்' என, முதல்வர் தெரிவித்தார்.

இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.

அம்மா இருசக்கர வாகன திட்டம் : ஓட்டுனர் உரிமம் பெற சலுகை

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க பழகுநர் உரிமம்(எல்.எல்.ஆர்.,) இருந்தாலே போதும், என திருத்தம் செய்யப்பட்ட நிலையில், பிப்.,24ல் மகளிருக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெ., தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும், என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற, எட்டாவது படித்த, ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கும் குறைவான மகளிர் இத்திட்டத்திற்கு தகுதியானவர்.

இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும், பழகுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், என விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 

பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்த நிலையில், நடப்பு ஆண்டில் மார்ச் 31 வரை தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வாகன மதிப்பில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய். இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். ஜெ., பிறந்த நாளான பிப்.,24ல் அம்மா இருசக்கர வாகனம் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு

பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அமைச்சர் செங்கோட்டையன் தீவிரப்படுத்தி உள்ளார். புதிய பாடத்திட்டப்படி, தரமான புத்தகங்கள் தயாரிப்பது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்ட அம்சங்களை, புத்தகங்களில் இடம் பெற செய்வது போன்ற, பணிகள் நடந்து வருகின்றன.

பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது; புதிய கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, துறையின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட, பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை, ஆன்லைனுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்துக்கு, மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுதல், பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டத்தை விரிவுபடுத்துவது என, பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

ஏற்கனவே, 26 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிலையில், பாடத்திட்ட மாற்றம் உட்பட, புதிய திட்டங்கள் உள்ளதால், 30 ஆயிரம் கோடி வரை, நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

சித்தா படிப்புக்கும் 'நீட்'

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான

மாணவர் சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.நாடு முழுவதும்,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் சித்தா, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல், அறிவித்தது.
ஆனால் தமிழக அரசு, இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவாகி உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:உலகம் முழுவதும் சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ
சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருகிறது; சிறந்த டாக்டர்களை உருவாக்கும் வகையில் இதில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடக்கிறது. இளநிலை படிப்பையும், நீட் தேர்வுஅடிப்படையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.எனவே நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் தான், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனி நீட் நுழைவு தேர்வு கிடையாது. பொதுவான நீட் தேர்வே
இதற்கும் பொருந்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'

நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க,

அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.
'டெண்டர்' விடுவதில், ஏற்பட்ட பிரச்னைகளால், 2016 - 17ம் கல்வியாண்டு முதல், லேப் - டாப்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதிய பின், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' உள்ளிட்ட, பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. இத்தேர்வுகளில், தமிழக பாடத்திட்டத்தில் இல்லாத, பல்வேறு கேள்விகள் இடம் பெறுகின்றன.அதற்கேற்ப, அரசு பள்ளிகளில் பயில்வோர், தங்களை தயார்படுத்திக் கொள்ள, லேப் - டாப்கள் மிக அவசியம். அதற்காக, அவசர தேர்வாக கருதி, 70 ஆயிரம் பேருக்கு, இலவச லேப் - டாப்களை, விரைவில் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக,

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:நீட் தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் - டாப் தேவைப்படுவது தெரிய வந்துள்ளது.
அதனால், இந்த கல்வியாண்டில் தரவேண்டிய, 5.43 லட்சம், லேப் - டாப்களில், முதல் கட்டமாக, 70 ஆயிரம் லேப் - டாப்களை, உடனடியாக கொள்முதல் செய்து, ஒரு மாதத்திற்குள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, புதிய, 'டெண்டர்' கோராமல், ஏற்கனவே, 'லேப் - டாப்'களை வினியோகித்துள்ள நிறுவனத்திடம், உடனடியாக கொள்முதல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


மாணவர்களை லட்சாதிபதியாக்கும் இன்ஜி., படிப்பு

மாணவர்களை லட்சாதிபதியாக்கும் வகையில், இன்ஜி., மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபாய் சம்பளத்தில்

, 'கேம்பஸ் இன்டர்வியூ' என்ற, வளாக நேர்காணலில், வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. அண்ணா பல்கலை மாணவியர் இருவருக்கு, 39 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில், 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2.5 லட்சம் மாணவ, மாணவியர், பல்வேறு பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர்.
அவர்களில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும், 'கேம்பஸ் இன்டர்வியூ' என்ற, வளாக நேர்காணல் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான வளாக நேர்காணல் தேர்வு, நவம்பரில் துவங்கியது. அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
மைக்ரோசாப்ட், டி.சி.எஸ்., காக்னிசன்ட், டைட்டன், மகிந்திரா, மிந்த்ரா, ரெனால்ட் நிசான், அடோப் என, பல கார்பரேட் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளித்துள்ளன.
பல்கலை மற்றும் தொழிற்துறை கூட்டு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட, வேலைவாய்ப்பு முகாமில், அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவர்களில், 'அடோப்' நிறுவனத்தில், வேலைவாய்ப்பு பெற்றவர்களில், அண்ணா பல்கலையின், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் படிக்கும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை சேர்ந்த இரண்டு மாணவியருக்கு, ஆண்டுக்கு, 39.12 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 'மிந்த்ரா' நிறுவன வேலைவாய்ப்பில், ஆண்டுக்கு, 27.50 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இதுதவிர, காக்னிசன்ட், டி.சி.எஸ்., மைக்ரோசாப்ட் நிறுவனங்களும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கி, லட்சக்கணக்கில் சம்பளம் நிர்ணயித்துள்ளன. 'இன்போசிஸ்' நிறுவனம் சார்பில், அண்ணா பல்கலையின் சென்னை, மதுரை, கோவை மண்டல கல்லுாரிகளில், வரும், 7ம் தேதி முதல், பிப்., 24 வரை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள், மாணவர்களுக்காக, அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வுக்கு தயாராவது எப்படி
இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்கள் வளாக நேர்காணல் தேர்வில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதற்காக காக்னிசன்ட், டைட்டன், தேர்ட் வேர், டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன், திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு தயாராகும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும் 'சாப்ட் ஸ்கில்' மற்றும் 'பிகேவியர் ஸ்கில்ஸ்' என்ற இன்டர்வியூவுக்கான நடை, உடை, பேச்சு பயிற்சிகளுக்கான வழிகாட்டி விபரமும் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எதற்கு முன்னுரிமை
கடந்த ஆண்டுகளில் கணினி அறிவியல், ஐ.டி., துறை சார்ந்த மாணவர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிகல், சிவில், பயோ மெடிக்கல் துறை மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.


பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவிப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி

பிளஸ் 1 பொது தேர்வு மாணவர்களுக்கு, வரும், 14 முதல்

, 26ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாடத்திட்ட மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், இந்தாண்டு முதல், பிளஸ் 1 வகுப்பிற்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 200 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டிய தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிளஸ் 1க்கு, அக மதிப்பீடு எண் வழங்க, தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி ஆய்வகங்களில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி, 'எக்ஸ்டர்னல்' என்ற, செய்முறை மதிப்பெண் வழங்குவது குறித்து, நேற்று முன்தினம் வரை, எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை.
அதனால், பிளஸ் 1க்கு செய்முறை தேர்வு உண்டா அல்லது அடுத்த ஆண்டு சேர்த்து நடத்தப்படுமா என, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினமும் செய்தி வெளியானது.
இதையடுத்து, அமைச்சர்
செங்கோட்டையன் மற்றும் துறை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவுப்படி, பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான சுற்றறிக்கை, அரசு தேர்வுத்துறையில் இருந்து, நேற்று பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
 பிப்., 14 முதல், 26ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். அகமதிப்பீடுக்கு, அதே பள்ளி ஆசிரியரும், செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு, மற்ற பள்ளி ஆசிரியரையும் பணியில் அமர்த்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
 பிளஸ் 1க்கு, ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டப்படி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். பிளஸ் 2வில் பின்பற்றப்படுவது போல், செய்முறை மதிப்பீடு வழங்க வேண்டும்
 தேர்வுகளில், எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது; மாணவர்களின் மதிப்பெண்களை ரகசிமாக பதிவு செய்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், ஆன்லைனில், தேர்வுத்துறைக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!