Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 3 February 2018

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!!!வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை 
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


21ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO

பங்களிப்பு ஊதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை - பிப். 21 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடம்


தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக JactoGeo அமைப்பு அறிவிப்பு*


SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

டிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

CLICK HERE FOR COURT ORDER COPY


பிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். 

மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4,603 நூலகங்கள் டிஜிட்டல் மயம்: பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தகவல்

'தமிழகம் முழுவதும், 4,603 நுாலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நுாலகம் சார்பில், 'நுாலகங்கள் மற்றும் தகவல் மையங்களின் முன்னேற்றத்துக்கான சர்வதேச தற்போதைய நிகழ்வுகள்' என்ற தலைப்பிலான, தேசிய மாநாடு, நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:  

அண்ணா நுாற்றாண்டு நுாலக பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய்; மதுரை தமிழ் சங்கத்திற்கு, ஆறு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 312 நிரந்தர நுாலகங்களின் புத்தகங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட உள்ளன. அவற்றில், 119 நுாலகங்களுக்கு, கணினி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 4,603 நுாலகங்களும் கணினி மயமாக்கப்படும். 32 மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., அகாடமியை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார். 12 மாவட்டங்களில், நடமாடும் மொபைல் நுாலக திட்டம் துவங்கப்பட உள்ளது. 
மொபைல் நுாலகங்கள், காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளி என, மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பயிற்சி அளிக்கும். பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கூறும் ஓலைச்சுவடிகள், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக நுாலகங்களில், மூன்று மாதங்களில், ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண நுாலகத்துக்கு, ஒரு லட்சம் புத்தகங்களை அரசு வழங்க உள்ளது.மற்ற நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதி நுாலகங்களுக்கு, 2,500 முதல், 5,000 வரையில் புத்தகங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். 
விழாவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பொது நுாலகத்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன்; இணை இயக்குனர், நாகராஜ முருகன் பங்கேற்றனர்.
நேற்று அமைச்சர்செங்கோட்டையன் அளித்த பேட்டி:  
'நீட்' தேர்வில் விலக்கு பெறுவதற்கு, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எதிர்கொண்டு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற, முதல்வர் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நுாலகத் துறைக்கான, 'செஸ்' வரி விகிதத்தை, 4 சதவீதமாக, மத்திய பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளனர். இதன்மூலம், உள்ளாட்சி துறைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.தற்போது, நுாலகத்துறை வளர்ச்சிக்கு, உள்ளாட்சித்துறை வழியாக கிடைக்கும், செஸ் வரியின் நிலுவைத் தொகையை பெற, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.  
உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு, இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தான் கண்டுபிடித்தது. தேர்வு பணியில் ஈடுபட்ட, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம்.வரும் காலங்களில், தேர்வு பணிகளில் தனியார் துறையை ஈடுபடுத்து வது குறித்து, பரிசீலித்து முடிவு எடுப்போம். இந்த பிரச்னையில், நாங்கள் எந்த விதமான விசாரணைக்கும், தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'

மாவட்டக் கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும், கல்வித் தரத்தை கண்காணிக்கவும், நிர்வாகப் பணிகளை, விரைவாக மேற்கொள்ளவும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில், 32 புதிய ஜீப்புகள் வாங்கப்பட்டன. 

அவற்றை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது நுாலகத் துறையில் பணியாற்றி, பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள், 20 பேருக்கு, கருணை அடிப்படையில், பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி, நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய செஸ் வரிக்கு ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.

ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்(ECO CLUB) சார்பில் உலக ஈர நில தினம்சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்(ECO CLUB) சார்பில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது இதன் நினைவாக பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்கள்  தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார், பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் உடனிருந்தனர்

*ஆங்கில அகராதி வழங்கும் விழா *சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிக்கு  SMC உறுப்பினர்கள் திரு லக்ஷ்மி நாராயணன், திரு.சத்தியக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ரூபாய் 14,000 மதிப்பிலான 69 ஆங்கில அகராதி களை  பெத்தநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. மாலதி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கினார்கள் மேலும் திரு.கோட்டீஸ்வரன் ரூபாய் 3000 மதிப்பிலான பொம்மைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் .  தலைமை ஆசிரியர் திரு.ஜெயக்குமார், தலைமை தாங்கினார் பட்டதாரி ஆசிரியர் ஜோசப் ராஜ் நன்றி கூறினார்

தொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை,படிநிலைகள் மற்றும் logo

பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்EMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்

CPS NEWS: தமிழக அரசு ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய (PFRDA)த்திடம் செய்து கொண்ட ஒப்பந்த நகலினை RTI சட்டப்படி பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!!!

2018 வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை!!கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

அனைவருக்கும் இடைநிலைக் கல்விதிட்டம் IMPART தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்கள் (Special Project)சிறப்பு செயல் திட்டம் நடைபெறுதல் சார்ந்து திட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவரின் செயல்முறைகள்!!!
தேர்வுகாலப்பணி/ விடைத்தாள் திருத்தும் முகாமில் ஈடுப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தினம் வழங்கப்படும் உழைப்பூதியம்/ மதிப்பூதியம் அரசானைகளுடன்!!!
EMIS-Report as on 02.02.2018 - All Districts

நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்​!!!

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வுஎன்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா? என்றால் முடியாது.

 இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!