Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 4 February 2018

தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளி மாணவி!!!

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பொது அறிவு திருவிழாவில் தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுகளை அளித்துள்ளது. .

விண்வெளி சம்பந்தமான பயிற்சிகளுக்கு மாணவ மாணவியரை தயார் செய்யும் நோக்கில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பும், சத்யபாமா இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியும் இணைந்து பிப்ரவரி 2 ஆம் தேதி பொது அறிவு போட்டியை நடத்தின.

இதில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 8, 9, 11 வகுப்பு மாணவ மாணவியரை உள்ளடக்கிய அணிகள் பங்கெடுத்தனர். ஐ.நா. சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினர், சர்வதேச க்விஸ் மாஸ்டர் ஜஸ்டின் இந்த போட்டிகளை நடத்தினார்.

இந்தியாவின் எதிர்கால தூண்களாக இளைஞர்களை செதுக்குதல் என்ற கருத்தை மையமாக வைத்து, சத்யபாமா பல்கலை கழகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியிலும் 2 பேர் வீதம் முதற்கட்ட போட்டி நடத்தப்பட்டு, 5 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதியாக இந்த 5 அணிகளுக்கும் அறிவியல், விளையாட்டு, இலக்கியம், அரசியல், சுதந்திர போராட்டம், விரைவு சுற்று, முக்கிய நிகழ்வுகள் என பல சுற்றுகளாக போட்டி நடைபெற்றதோடு, இந்த 10 மாணவ மாணவியருக்கும் 2 நிமிட பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

பொது அறிவு மற்றும் பேச்சுப்போட்டியில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக்கொண்டு புனித ஜான்ஸ் பள்ளி மாணவர் எடிசன் முதற்பரிசை வென்றார். இதைதொடர்ந்து, இலங்கையில் நடைபெறும் சர்வதேச தலைமை பண்பு பற்றிய சர்வதேச கருத்தரங்கில் எடிசன் பங்கெடுக்கவுள்ளார்.

பெண்கள் பிரிவில் திருவொற்றியூர் அரசு பள்ளி மாணவியர் தமிழ்செல்வி மற்றும் சாலினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேசிய முன்மாதிரி மாணவியர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் டெல்லியில் நடைபெறும் 3 நாள் கருத்தரங்கில் பங்கெடுக்கவுள்ளனர்.

இதற்கான அனைத்து செலவுகளையும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஏற்குமென அதன் இயக்குநர் சீமதி கேசன் தெரிவித்துள்ளார்.

வேலம்மாள் பள்ளி மாணவர் வினய் முரளி பிரசாத், ஜி.டி.ஏ.வித்யா மந்திர் மாணவர் பவான் ஆகியோர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாட்டின் சிறந்த இளைஞர் விருது - 2018 (யூத் ஐகான் அவார்ட் - 2018) வழங்கப்பட்டன. மேலும்,. போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பரிசுகளை சத்யபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறை இயக்குநர் ஷீலா ராணி, ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இளம் வானவியலாளர் அஷ்டன்பால், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீர சனுஷ் சூர்யதேவ் ஆகியோர் வழங்கினர்.


Video Lesson- போரைத் தடுத்த புலவர்- நாடகம்,Tamil-5th std 3rd term

Thanks Mr.Gurumurthi

ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் வழக்கு மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றம்!!!IT FORM VERSION 8.3 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும்வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 8.3 ..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... (OPTION IS PROVIDED TO DEDUCT CPS AMOUNT UNDER SECTION 80CCD(1B) )01/02/18 இல் Play storeஇல் வெளியான EMIS app update பிரச்சனைக்கானதீர்வு:

1)Play store க்குச் சென்று EMIS appஐ அப்டேட்செய்த பிறகு open செய்யும் போது Stopped என்றுசெய்தி வந்தால் அதனை close செய்துவிட்டு மீண்டும் Play store க்குச் சென்று EMIS appஐ uninstall செய்து விட்டு புதிதாக அதே EMIS appஐinstall செய்து பிறகு open செய்து பள்ளியின் username, password கொடுத்து login செய்து பழையபடி EMIS appஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

2) மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் EMIS appஐ open செய்த பிறகு stopped என வந்தால் முதலில் EMIS app ஐ uninstall செய்துவிட்டு செல்போனை Restart ( சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்வது) செய்யவும். இப்போது மீண்டும்play store க்குச் சென்று EMIS appஐ புதிதாக install செய்யவும். இனி வழக்கம்போல் username password மூலம் login செய்து பயன்படுத்தலாம்.ஆகையால் 01/02/18இல் வெளியான EMIS app ஐ இப்போது அப்டேட் செய்யலாம். அதில் சிரமமிருந்தால் மேலே சொன்ன வழிமுறைகளின்படி அதை நிவர்த்தி செய்து போட்டோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். டேட்டாக்களை பதிவேற்றிய பிறகு டேட்டா அப்ரூவல் கொடுக்க வேண்டும். டேட்டா அப்ரூவல் கொடுத்த பிறகு ID அப்ரூவல் கொடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இதை செய்த பிறகே EMIS பணி நிறைவு பெற்றதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

VIDEO LESSON- "பகைவனுக்கு அருள்வாய்"-5th std-Tamil lll term


VIDEO LESSON - "களப்பயணம் செல்வோம்" - 5th Std - Term III - Tamil

Thanks Mr.Gurumurthi

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசுநிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும்,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்: அக்டோபர் 2 முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு!!!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒரு நபர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

தேசிய அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமான இது, வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவத்துக்கு தற்போது அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்கும்.   


கடிதம் எழுதி கலக்டரை சந்தித்த 9ஆம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!