Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 5 February 2018

Video Lesson-நூறு வயது தருவன- பாடல்- 5th std- 3rd term


அரசுப்பள்ளி மாணவர்களாக மாறி வரும் கேரள மாணவர்கள்...

கேரள மாநிலத்தில் 1,40,000மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு ஒரே ஆண்டில் அரசுப்பள்ளியை நோக்கி வந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் முதல் வகுப்பிலிருந்தே கணினி கல்வி மற்றும்  கணினி வழிக்கல்வி அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதால் புதிய மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது.

கல்வியில் கணினி அறிவியல் பாடம்.

இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.  இதற்காக , 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி, எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, கற்றுக் கொடுக்கின்றனர்.

கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலம்....

2016-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக் கல்வி பயின்றவராக உள்ளனர்.

கேரளாவில் 49 சதவீதத்தினர் அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில், தலா ஒருவர் கணினி அறிவு பெற்றிருப்பதால் அம்மாநிலம் கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக உள்ளது. பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.

கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், அம்மாநிலத்துக்கு முன்னோடியாக 2011-ம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் இன்று பல புரட்சிகளை செய்தாலும், கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குரியது. மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் 
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை

அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆண்டில் 300 நாட்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விடுமுறை விட அரசு தயக்கம் காட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பிப்., 6 முதல் பிப்., 8 வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.பிப்., 1 சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும், மையங்கள் மூடாதபடி மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் விடுமுறை விடப்படும் என, தெரிவித்தனர். விரைவில் விடுமுறைக்கான அரசாணை வெளியாக உள்ளது.

அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரம்: தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தை, அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமா என்பதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், நெற்குன்றத்தில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, கிரீன் பீல்டு கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கான அனைத்து செலவுகளையும், கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், கல்விக் கட்டண நிர்ணயக் குழு தற்போது தங்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. 

தனியார் பள்ளிகளின் சார்பில் வழக்குரைஞர்கள் தங்கசிவன், அருள்மேரி மற்றும் மூத்த வழக்குரைஞர் சேவியர் அருள்ராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு வலியுறுத்துகிறது.

அதனடிப்படையில், ஆசிரியர்களின் நியமனத்தைக் கணக்கிட்டு அக்குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதலான ஆசிரியர்களை நியமிக்கின்றன. இதனால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதைக் கட்டண நிர்ணயக் குழு கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்துள்ள உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இப் பள்ளிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க, கல்விக் கட்டண குழுவுக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும். 

கல்வி உரிமைச் சட்டத்தில் குறைந்தபட்ச ஆசிரியர் நியமனம் பற்றிய விவரம் உள்ளது. ஆனால் அதிகபட்சமாக எத்தனை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற தனியார் பள்ளிகளில் உள்ள கூடுதல் ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கட்டண நிர்ணயக்குழு பரிசீலிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மாணவர்களின் நலன் கருதி, தனிப்பட்ட மாணவர்களிடம் கவனம் செலுத்தும் வகையில், அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்கள், சிறப்பான ஆசிரியர், மாணவர் விகிதாசாரத்தை அளிக்க விரும்பினால், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. 

எனவே அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தைப் பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்து 3 நீதிபதிகள் விசாரிப்பது உகந்ததாக இருக்கும். எனவே இதை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!