Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 7 February 2018

2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல் ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


TNTET NEW WEIGHTAGE CALCULATION METHOD

உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.

(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும்? மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா?என்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள்.


கோரிய விவரங்கள்:
(i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணி நியமணம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது தமிழகத்தில் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? அல்லது எப்பொழுது கட்டாயமாக்கப்படும்? ஒரு சமயம் தாங்கள் இந்த தகவலை தெரிவிக்க இயலாது என்றால், யாரிடம் இதனை கேட்பது.
(ii) பல்கலைக்கழக மானிய குழுவானது முழு நேரம் முறையில் (Full-Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் (Research Experience) நாட்களை கற்பித்தல் அனுபவமாக (Teaching Experience) கருத்தில் கொள்கிறது. இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளதா? இந்த கணக்கீடானது உதவி பேராசிரியர் (Assistant Professor) நேர்காணலின் போது பொருந்துமா அல்லது இணை பேராசிரியர் (Associate Professor) நேர்காணலின் போது பொருந்துமா?
கடித எண் 19648/எப்.2/2017-1 நாள் 13.12.2017 வாயிலாக பெறப்பட்ட பதில்கள் 
(i) அரசு கடித எண்.13792/எப்.2/2017-10 நாள். 13.01.2017 -ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் தெரிவு செய்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரிய அறிவுறுத்துங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ii) முழு நேரமுறையில் (Full Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக எடுத்துக் கொள்வது குறித்து தமிழக அரசால் தனியே ஆணைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.


விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!!

உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. 

நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.


EMIS - Android App - ல் ID Card Entry செய்யும் முறை!

Emis ID card entry செய்யும் முறை

1)உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.  

         2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.        

3)உங்கள் போனில் நெட் கார்டு ,பேட்டரி சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.                                      

4)போனில் மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும்.                                

5)போனில் play store க்குச் செல்லவும்.                                        

6)play store ல்"emis tamilnadu"என type செய்து search பண்ணி,அதை பதிவிறக்கம் செய்யவும்.                                            (ஒருசிலர் போனில் update செய்யச்சொன்னால் செய்து கொள்ளவும்).                                    

7)இப்போது உங்களுக்கு "அடையாள அட்டை செயலி"என்றொரு பக்கம் open ஆகி இருக்கும்.                                 

8)இப்போது அப்பக்கத்தை touch செய்தால் ,username,password கேட்கும்.                                       

9)உங்க பள்ளியின் DISE code மற்றும் emis பதியும் போது நீங்கள் பயன்படுத்திய password பதியவும்.   

10)இப்போது உங்க பள்ளியின் பெயர் &முகவரியுடன் புதிய பக்கம் open ஆகி இருக்கும்.                        

11)அப்பகுதியில் உள்ள.        "student ID card"ஐ touch செய்யவும்.         
                               
12)இப்போது புதிய பக்கம் open ஆகி அதில்.                               "data approval"&"Id approval"என்ற இரு பகுதிகள் வரும்.                                                 

13)நீங்க இப்போ"data approval "ஐ touch செய்யவும்.                               

14)இப்போது உங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை.                            (emis பதிவு செய்துள்ளபடி)வகுப்புவாரியாக காட்டப்படும்.                                    

15)இப்போது முதல் வகுப்பை touch செய்யவும்.                                       

16)இப்போது முதல்வகுப்பு மாணவர்களின் ஒவ்வொரு பெயரும் வரிசையாக emis எண்ணுடன் தெரியும்.                                           

17)நீங்க இப்போ வரிசையாகவோ,அல்லது நீங்க விருப்பப்பட்ட மாணவரையோ touch செய்யவும்                                         

18)இப்போ நீங்க தேர்வு செய்த மாணவனின் விபரம் திரையில் தெரியும்.                                          

19)அம்மாணவனின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்திற்கு மேல்"Edit"என இருக்கும்.                

20)அதை touch செய்யவும்.               

21)அம்மாணவனின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் உள்ள "camera"அடையாளத்தை touch செய்யவும்.                                         

22)இப்போது போட்டோ எடுக்க வேண்டுமா அல்லது போனில் உள்ள போட்டோவைத் தேர்வு செய்ய வேண்டுமா?என கேட்கும்.                

23)போட்டோ நமது போனிலேயே உள்ளதால் "Gallery "என touch செய்யவும்                                          

24)இப்போது உங்களது போனில் உள்ள அனைத்து போட்டோக்களும் open ஆகும்.                                 

25)இப்போது உங்களுக்கு தேவையான மாணவனின் பகைப்படத்தினை touch செய்தால்,அப்படம் அம்மாணவனின் விபரங்கள் அடங்கிய (போட்டோ இருக்க வேண்டிய வட்டத்தில் சென்று சேர்ந்து விடும்,).                   

26) அம்மாணவனின் முகம் நன்கு தெரியும் படி அவ்வட்டத்தில் adjust செய்யவும்.                                          

27)அதன்பின்,அம்மாணவனின் போட்டோவுக்குக் கீழே உள்ள ரத்த வகை,ஆதார் விலாசம் ஆகியவற்றில் ஏதேனும் இல்லையெனில் பதிவு செய்யவும்.                                          

28)இறுதியாக அப்பக்கத்தின் அடியில் உள்ள "data approval "என்ற இடத்தை touc செய்தால் அம்மாணவனின் விபரம் பதியப்பட்டு விட்டதாக "successfully "என வரும்                                               

29)அதே போல் ஒவ்வொரு மாணவனுக்கும் பதிவு செய்யவும்.     

30) அனைத்து மாணவர்களுக்கும் பதிவிட்டவுடன் "செயலி"யை விட்டு வெளியேறவும்.                                 

31)இப்போது உங்கள் பள்ளி மாணவர்களுக்கு "data approval "(35 மாணவர்களுக்கான பதிவு செய்துவிட்டோம்,வேறு எவரும் இல்லையென்றால் 35/0 என காட்டும்.                                             

32)இப்போது data approval க்கு கீழ் உள்ள "ID card "ஐ தேர்வு செய்தால் ,நீங்கள் தற்போது பதிவிட்ட மாணவர்கள் விபரம் போட்டோவுடன் வரும்.                     

33)அம்மாணவர்களின் விவரங்களுக்கு அடியில் தெரியும். "id card approval "என்பதை touch செய்தால் I'd card approval successfully "என வரும் .              

34)இதை ஒவ்வொரு மாணவனுக்கும் touch செய்யவும்.     

35)எல்லாம் முடித்து முதல் பக்கம் சென்று பார்த்தால் (eg. 35 students).    Data approval 35/0.     I'd card approval 35/0 என காட்டும்.                                               

36)இப்போது நாம் முடித்து விட்டோம் என அர்த்தம்.                    

STATE TEAM VISIT - PEDAGOGY - SCHOOL NAME LIST & VISITING OFFICERS LIST
கற்றுக் கொடுப்பதில் மாற்றம் தேவைTET - "வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!

அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது.இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 
இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி இருந்ததால், வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.இந்த வழக்கின் விசாரணையில், ‛வெயிட்டேஜ் முறை சரியானதுதான்.

இனி, தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசு குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில் வெயிட்டேஜ் முறையைத் தொடரவே தற்போது அரசு முடிவுசெய்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ் முறையைத் தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் நியமனம் 'டெட்' முறையிலா அல்லது வெயிட்டேஜ் முறையிலா என்ற குழப்பத்தைத் தற்போது அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 சதவிகிதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40 சதவிகித வெயிட்டேஜ் மதிப்பெண்களிலிருந்து கணக்கிடப்படும். டெட் தேர்வில் எடுக்கப்பட்ட 60 மதிப்பெண்களுடன், 12 -ம் வகுப்பிலிருந்து 15 மதிப்பெண்களும், டிப்ளமோவிலிருந்து25 மதிப்பெண்களும் சேர்த்து, வெயிட்டேஜ் கணக்கிடப்படும்.

குறுவள பள்ளிகள் - குழு பார்வை தொடர்பான திருவாரூர் -CEO செயல்முறைகள்

Video Lesson- ENGLISH-"A FRIEND INDEED"-5th std 3rd term


அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இரு மாதங்களுக்கான நாளிதழ்களை வாங்கிக் கொள்ள வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்ப -பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!!!

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக 31 ஆயிரத்து 322 அரசு, தொடக்க, 

நடுநிலைப்பள்ளிகளுக்கு செய்தித்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப் பேரவையில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது மாணவர்கள் தங்களது பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், மொழித்திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு தமிழ் நாளிதழ், ஒரு சிறுவர் இதழ் வழங்க ரூ.4.83 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும் இந்தக் கல்வியாண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணி நாள்களுக்கு நாளிதழ் வாங்கிக் கொள்வதற்கான தொகையை அரசுக்கு தமிழ்நாடு பாடநூல், பணிகள் கழகம் வழங்கியுள்ளது.

இதையடுத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இந்த இரு மாதங்களுக்கான நாளிதழ்களை வாங்கிக் கொள்ளலாம், அதற்கான தொகை அவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் பட்டியல்!!!


Click here


11ம் தேதி, 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 494; இளநிலை உதவியாளர் பணியில், 4,301; தட்டச்சர் பணியில், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, குரூப் - 4 போட்டி தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். குரூப் - 4 தேர்வுகளில், இதுவரை, 12 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்வில், கிராம நிர்வாக அதிகாரி பதவியும் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

மாநிலம் முழுவதும், 3,500 மையங்களில் தேர்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். பெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல், தேர்வு அறைகளில், வீடியோ பதிவும் எடுக்கப்பட உள்ளது.தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள், தனியார் அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்டவை, குரூப் - 4 தேர்வுக்கு சிறப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பல்வேறு மையங்களில், தினமும் மாதிரி தேர்வு வைத்து, தேர்வர்கள் தயார் செய்யப்படுகின்றனர்.

பிளஸ்1 தேர்வு அகமதிப்பெண் பட்டியல் : மார்ச் 28 க்குள் ஒப்படைக்க உத்தரவு

பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் விபரங்களை பதிவு செய்து இயக்குனரகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு இக் கல்வியாண்டு முதல் முறையாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வு பிப்., 16ல் துவங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது. செய்முறை தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.மாணவர் வருகையை கல்வியாண்டின் ஆரம்ப நாள் முதல் 31.1.2018 தேதி வரை கணக்கிட்டும் 3 மதிப்பெண் வழங்கப்படும்.

தலைமையாசிரியர்கள் பிளஸ் 1 மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று அக மதிப்பெண் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மதிப்பெண்களை பதிவு செய்தபட்டியலை தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் பிப்.6 முதல் 13 ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யவேண்டும். மார்ச் 15 முதல் 23 ம் தேதி வரை இணையதளத்தில் மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அகமதிப்பீட்டு பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மார்ச் 26 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர்கள், மண்டல தேர்வு துணைஇயக்குனரிடம் மார்ச் 28 ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். மண்டல துணை இயக்குனர்கள் அகமதிப்பீடடு பட்டியலை ஏப்ரல் 2 ம் தேதி தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக, 2,500 தமிழ் வார்த்தைகள் :தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

'புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, 2,500 தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட உள்ளன,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீநிகேதன் பள்ளி, டென்மார்க்கில் உள்ள பள்ளியுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, டென்மார்க் நாட்டை சேர்ந்த, 13 மாணவ, மாணவியர், மூன்றுஆசிரியர்கள், கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற சுற்றுப்பயணமாக, கடந்த வாரம் சென்னை வந்தனர்.அவர்கள், புதுச்சேரி, மாமல்லபுரம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்கு நடக்கும் வகுப்புகளை பார்வையிட்டனர். மாணவ, மாணவியருக்கு, திருக்குறள் வகுப்புகள் நடத்தப்பட்டன. நேற்று, சென்னை, தலைமை செயலகத்தில், அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்தனர். அப்போது அவர்கள், திருக்குறள் ஒப்புவித்து அசத்தினர். அவர்களுக்கு, ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நுாலை, அமைச்சர் வழங்கி பாராட்டினார்.

பின், அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள, ஹார்வர்டு பல்கலையில், தமிழ் இருக்கை அமைய, 40 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். தமிழகஅரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், 6,800 பேர்,நிதி அளித்துள்ளனர். இதுவரை, 36 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.தமிழகத்தில், தனி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களில், 82 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. மீதித் தொகை, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என, நம்புகிறோம்.நிதி தர விரும்புவோர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கணக்கிலும் செலுத்தலாம். ஹார்வர்டில் அமைய உள்ள தமிழ்இருக்கைக்கு, பேராசிரியராக சிங்கப்பூர் தமிழர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.உலகம் முழுவதும், பல்வேறு பல்கலைகளில் நடைபெறும், தமிழ் ஆராய்ச்சிகள் குறித்து அறிய, ஆராய்ச்சி நுழைவாயில் அமைக்க, தமிழ் வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில், அதற்கான இணையதளம் துவக்கப்படும்.திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள், மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில், அந்த ஆய்வு முடிவுகள் பெறப்படும். பின், தொல்லியல் துறைக்காக, புதிய இணையதளம் தொடங்கப்பட்டு, அவை வெளியிடப்படும்.தற்போது உருவாக்கப்பட்டுள்ள, 2,500 புதிய தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட உள்ளன. ஆதிமனிதன் வாழ்ந்ததாக கூறப்படும், திருவள்ளூர்மாவட்டம், பட்டறை பெரும்புதுாரில் அகழாய்வு நடத்த, மத்திய அரசின் அனுமதி கோரி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

SSA-SPD PROCEEDINGS-Video Conference EMIS Data entry and U-DISE data entry progress Instructions – reg

Video Lesson- WHY? Poem-5th std 3rd term


ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்திய மாணவிகள்


திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு இணையாக 9-ம் வகுப்பு மாணவிகள் நடத்திய பாடத்தை தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்வத்துடன் கவனித்தார்.

திருவண்ணாமலை பாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வைஷ்ணவி, பூஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுச்சூழல் குறித்த கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், தங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

இந்த கடிதத்தினை பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவிகளை சந்திக்க நேரம் ஒதுக்கினார். 

இதையடுத்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வைஷ்ணவி, பூஜா ஆகிய இருவரும் மற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும், வகுப்பறையில் பாடம் நடத்தினார். 


அப்போது ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மாணவிகள் பாடம் நடத்துவதை உன்னிப்பாக கவனித்தனர். 

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 9-ம் மாணவிகள் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது, கல்லூரி மாணவர்களும் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

CM CELL REPLY- A,B பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தற்போது வழங்க இயலாது - தமிழக அரசு பதில்+1 Internal Mark -  DGE Letterமார்ச் 2018 - இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்- அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்தல்- ஆணை வெளியிடப்படுகிறது
மதுரை மாவட்டம் கருவூல அலுவலர் செயல்முறைகள்- 80CCD  1(B) -ல் பென்சன் திட்டத்திற்கான ரூ 50000 கழிவு என்பது மத்திய அரசின் பென்சன் திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!