Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 9 February 2018

தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!!!

*+1 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த நேரடி தனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால் 

டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*

*2018 மார்ச் மாதம் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

*ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*


TRB-PRESS RELEASE- 16.09.17 அன்று நடைபெற்ற அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் எழுத்துத்தேர்வு ரத்து.மீண்டும் தேர்வு ஆகஸ்ட் 2018 -ல் நடைபெறும்

2017 - 2018 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன்   ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்

அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்

10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

✍வரி விபரம்....

2,50,000 வரை - இல்லை

2,50,001 - 5,00,000 : 5%

5,00,001 - 10,00,000 : 20%

✍Taxable income 3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு

விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்பட 133 கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வி ஆண்டில் திரும்பப் பெறப்பட்டது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.


இதுதொடர்பாக அந்த அவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா அளித்த எழுத்துப்பூர்வமான பதில்:
ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சிலின் (என்சிடிஈ) விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாடு முழுவதும் 133 ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் திரும்பப் பெறப்பட்டது.

தமிழகத்தில் 20 கல்வி நிறுவனங்கள், கர்நாடகத்தில் 29, மகாராஷ்டிரத்தில் 28, மத்தியப் பிரதேசத்தில் 17 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டது
இந்தப் பட்டியலில் தில்லியைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இல்லை என்று அந்தப் பதிலில் உபேந்திர குஷ்வாகா குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு ஓராண்டு வரை அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.


அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறார்கள் சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 


ரத்தம் சிந்தும் வகுப்பறைகள்- நாம் என்ன செய்ய வேண்டும்


அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்!



அடுத்த ஆண்டு, தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் அதிக 
மாணவர்கள் சேரும் வகையில் அவற்றின் தரம் உயர்த்தப்படும் என்று சென்னையில் இன்று (பிப்ரவரி 8) தெரிவித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

“பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதுவதற்காக, இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாணவர்கள் அதிக தூரம் பயணித்து தேர்வெழுதுவதைத் தவிர்ப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், எல்லா வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்படும். அப்போது, அரசுப்பள்ளிகளைத் தேடி மாணவர்கள் வரும் நிலைமை உண்டாகும். அடுத்த ஆண்டு தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேரும் வகையில் அவற்றின் தரம் உயர்த்தப்படும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், சில துறைகளை அரசு கொண்டுவரவுள்ளது” என்று கூறினார்.

மேலும், நாட்டிலேயே முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்தார் செங்கோட்டையன். ”விபத்தில் மாணவர் சிக்கி உயிரிழந்தால் 1 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தால் 50ஆயிரம் ரூபாயும், சிறு காயமடைந்தால் 25 ரூபாயும் வழங்கப்படும். 48 மணி நேரத்தில், உடனடியாக இந்த இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இது, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை” என்று கூறினார்.

சமீபத்தில் சில பள்ளிகளில் நிகழ்ந்த ஆசிரியர் – மாணவர்கள் இடையேயான வன்முறை குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் செங்கோட்டையன். அப்போது, இதுபோன்ற குற்றச்சாட்டு இனிமேல் வராத வகையில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். “நீதிபோதனை வகுப்புகள், யோகா, விளையாட்டுப் பயிற்சிகளுக்கென நேரம் ஒதுக்கப்படும். மாணவர்களின் பிரச்சனைகள், மன அழுத்தத்தைப் போக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். ஆசிரியர் மாணவரையும் மாணவர் ஆசிரியரையும் நேசிக்க, இந்த அரசு கற்றுத்தரும் என்று தெரிவித்தார்.


பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த

அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் வரும்மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்வு மையங்கள் அமைப்பது, முறைகேடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 32 மாவட்ட முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: மாணவர்கள் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இப்போது 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொத்தம் 27.29 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

நீதிபோதனை புத்தகம்:

பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் வருத்தமளிக்கிறது. மன அழுத்தம் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிதல், மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நீதிபோதனைகள்குறித்த புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். ஒழுக்கத்துடன் நல்ல பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம்.

48 மணி நேரத்துக்குள்...

தமிழக மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். விபத்தில் உயிரிழக்கும் மாணவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன், பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


"நம்ம கோயில்.. நம்ம தொன்மம்.. நாம்தாம் பாதுகாக்கணும்!" - அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் அறிவுரை



புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மரிங்கிபட்டி மற்றும் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாகப் பிரசித்திப் பெற்ற குடுமியான்மலை கோவிலுக்குச் சென்றனர்.

அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குப் புதிதாக 'களப்பயணம்' என்ற பாடம் வந்துள்ளது. அதன்படி, அந்தந்த ஊர்களில் உள்ள வேளாண்மை ஆய்வு மையம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குக் களப்பயணம் செல்ல வேண்டும். அங்கு மாணவர்கள் பார்த்தவை குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் அல்லது, அங்கு ஆசிரியர்களின் உதவியுடன் எடுத்த புகைப்படங்கள், செய்திகளைத் திரட்டி, தொகுப்பேடு ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.




அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மரிங்கிபட்டி, உருவம்பட்டி ஆகிய இரண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களும் இன்று (8.2.2018) உற்சாகம் ததும்ப அருகில் உள்ள உலகப் புகழ் பெற்ற குடுமியான்மலை கோவிலுக்குச் சென்றனர். ஏதோ கோவிலுக்குச் செல்கிறோம் என்று சாதாரணமாக நினைத்து வந்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அங்குள்ள சிலைகள், பாறைகளில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்டவையின் பெருமைகளை உடன் வந்திருந்த ஆசிரியர்கள் விவரித்து சொன்னபோது, பிரமிப்போடும் ஆச்சர்யத்தோடும் கவனித்தனர். இந்தக் களப்பயணம் குறித்து மாணவர்கள் மிக உன்னிப்பாக உள்வாங்கிக் கொண்டனர். இதுகுறித்து தர்ஷினி என்ற மாணவியிடம் பேசினோம்.



"இக்கோவிலுக்கு அப்பா, அம்மாவுடன் பல முறை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் சாமி கும்பிட்டுட்டு போறதோட சரி. ஆனால், இந்தத் தடவைதான் இங்குள்ள இக்கல்வெட்டுகளை முதன்முதலாகப் பார்க்கிறோம். இங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தைப் பார்க்கும் போது எப்படி இந்த மண்டபத்தை நம் முன்னோர்கள் கட்டினார்கள் என்று ஆச்சர்யப்பட்டோம். குடவரைக்கோயிலில் உள்ள இசைக் கல்வெட்டுகளை முக்கியத்துவம் பற்றி எங்கள் ஆசிரியர்கள் கூறினார்கள். 'இந்த இசைக்கல்வெட்டுகளை தேனீக்கள் கூடு கட்டி இயற்கையாகவே காப்பாற்றி வருகிறது. இல்லையெனில் கல்வெட்டினை காணவரும் மக்கள் சுரண்டியே அழித்திருப்பார்கள் என்றும் இதுபோன்ற நம் வரலாற்றைக் கூறும்  தொன்மங்களை மக்களாகிய நாம்தாம் பாதுகாக்க வேண்டும்' என்று எங்கள் ஆசிரியர்கள் மூலமாக நாங்கள் தெரிந்துகொண்டோம். அது உண்மைதான். நம் கோயில். நம் தொன்மம். அதை நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.

குடவரைக் கோயிலில் உள்ள பெரிய சிவன்சிலை, மலையின் மேல் ஒரே நேர் பார்வையில் பார்க்கும்படி செதுக்கப்பட்டிருந்த 63 நாயன்மார்கள் சிலைகளையெல்லாம் பார்த்து நாங்கள் பிரமித்துவிட்டோம். இங்குள்ள கிளிவாகனம், மயில் வாகனம், சிங்க வாகனமும், கோயில் இராஜகோபுரமும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது" என்று மகிழ்ச்சி பொங்கும் குரலில் கூறினார் அந்த மாணவி.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த மரிங்கிபட்டி ஆசிரியர் கவிமதி சோலச்சி பேசும்போது," பாடம் சார்ந்து, வகுப்பு சார்ந்து பிள்ளைகள் இப்படியான களப்பயணம் வரும்போது, அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. தங்களது ஊரைச் சார்ந்த வரலாற்று உண்மைகளையும் பெருமைகளையும் அவர்கள் அறிந்துக்கொள்ள இதுபோன்ற பயணங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது" என்றார்.

சாலை விதிகள் பாடலை சினிமா பாடல் மெட்டில் பாடி அசத்தும் PUMS VADASIRUVALUR பள்ளி மாணவர்கள்

Thanks Rajesh

DEE PROCEEDINGS-ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31.03.2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல் நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளும் 28.02.2018 க்குள் முடித்து அனுப்ப இயக்குனர் உத்தரவு




NEET (UG) 2018- DATE OF ENTRANCE TEST NEET (UG) - 2018  06-05-2018 (SUNDAY) 10:00 am (IST)- FULL DETAILS - DIRECT LINK....

Online Services

கெடுபிடியால் 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை!



உத்தரப் பிரதேசத்தில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் 
வைத்து மாணவர்கள் கண்காணிக்கப்படுவதால், காப்பி அடிக்க முடியாது என்பதால் நேற்று (பிப்ரவரி 7) ஐந்து லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் பொதுத்தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, பெற்றோர்களே மாணவர்களுக்கு பிட் எழுதிக் கொடுப்பது போன்ற மோசமான சம்பவங்கள் நடந்ததாகப் பலமுறை புகார்கள் எழுந்துள்ளன. அதனால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அம்மாநில அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், சிறப்புப் பரிசோதகர்கள் திடீரென்று சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கின.

கடுமையான கண்காணிப்புகளுக்கிடையே முதல் நாள் நடந்த தேர்வன்று 1.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. முதல் நாளில் நடந்த கெடுபிடிகளுக்கு பயந்து நேற்று (பிப்ரவரி 7) ஐந்து லட்சம் மாணவர்கள் வரை எழுதவில்லை.

இதுகுறித்து கல்வி துணை இயக்குநர் விகாஸ் ஸ்ரீவாஸ்தவா, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தேர்வில் காப்பி அடிப்பதைத் தவிர்க்க, முன்னெடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

முதல் நாள் தேர்வில்,1, 80,826 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதில் 53,100 உயர்நிலைப் பள்ளி மானவர்கள் மற்றும் 1.27 லட்சம் இடைநிலைப் பள்ளி மாணவர்கள். பனிரெண்டாம் வகுப்பில் மொத்த மாணவர்களில் 29, 81,387 பேரும், பத்தாம் வகுப்பில் 36, 55,691 பேரும் தேர்வு எழுதினர் எனக் கூறினார்


தமிழில் வினாத்தாள்கள் இடம் பெறாது!!!



ஜேஇஇ, நுழைவுத் தேர்வில், தமிழில் வினாத்தாள்கள் 
இடம் பெறாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐஐடி,என்ஐடி,ஐஐஐடி,ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பிஇ, - பிடெக், போன்ற இன்ஜினியரிங், படிப்பில் சேர்வதற்கு, ஜேஇஇ பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத்தேர்வு, மெயின், அட்வான்ஸ்டு என 2 நிலைகளைக் கொண்டது. அதில், என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஐஐடியில் சேருவதற்கு மட்டும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண் வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. , எழுத்து தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி ஆன்லைன் வழி தேர்வு, ஏப்ரல் 15, 16ல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜேஇஇ, தேர்வில், ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி மொழியிலும் வினாத்தாள்கள் இடம் பெற உள்ளன. குஜராத், டாமன், டையூ ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் மட்டும், 2013 முதல், குஜராத்தி மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.ஜேஇஇ, தேர்வின் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, குஜராத் மாநில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடப்பதால் குஜராத்தி மொழியில் ஜேஇஇ, எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த முறையை எந்த மாநிலம் பின்பற்றினாலும், அந்த மாநில மொழியில், தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால், தமிழில் வினாத்தாள்கள் இடம் பெறாது என மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குஜராத்தி மாணவர்களுக்கு குஜராத்தியில் வினாத்தாள் வழங்குவதைப் போல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டு தமிழக கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை மத்திய அரசின் செவிக்கு எட்டவில்லை. எனவே, அவர்கள் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசுப் பணியில் அயல் மாநிலத்தார் கூடாது: முதல்வருக்குக் கடிதம்!!!



தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு
அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு முதலமைச்சரின் சென்னை இல்ல அலுவலகத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (பிப்ரவரி 8) கடிதம் அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கண் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் இந்தக் கடிதத்தை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் அளித்தனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட வெளிநாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் வலியுறுத்தல்.

கடந்த பிப்ரவரி 3 அன்று, சென்னை அண்ணா அரங்கில் நடைபெற்ற “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்க்கு அல்ல!” – சிறப்பு மாநாட்டின் தீர்மானங்களும், இந்தியாவெங்கும் அந்தந்த மாநிலங்களில் செயலில் உள்ள மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்கும் சட்டங்கள், ஆணைகள், தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுச் சட்டம் ஆகியவற்றையும் முதலமைச்சருக்கு இந்தக் கடிதத்தோடு இணைத்துக் கொடுத்துள்ளார் பெ. மணியரசன்.


பிள்ளை போல மாணவரை நேசியுங்கள்! : ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை!!!



''பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை, பெற்ற குழந்தையை
விட, மேலாக நேசிக்கும் நிலை வர வேண்டும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முயற்சி : சென்னையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஒழுக்கமும், உயர்ந்த பண்பும் வளர, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இளம் வயதிலான மாணவர்களை நல்வழிப்படுத்த, நல்லொழுக்க கல்வி வர உள்ளது. உயர்ந்த போதனைகளும், யோகா மற்றும் விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.பாடத்திட்டம் இல்லாமல், நீதிபோதனை வகுப்பு தனியாக எடுக்கப்படும். இதற்கான புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும்.
நெகிழ்ச்சி : ஆசிரியர்கள், மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, நானும், பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவும், பிரிட்டன் சென்றிருந்த போது, நேரில் கண்டு நெகிழ்ச்சி அடைந்தோம். அங்குள்ள பள்ளிகளில், மாணவர்கள், மாற்று திறனாளி குழந்தைகள், சிறப்பு குழந்தைகள் என அனைவரிடமும், ஆசிரியர்கள், மிக நேசமாக பழகுகின்றனர்.அவர்களின் இளம் வயது செயல்களை பொறுத்து கொண்டு, அவர்களை தங்கள் குழந்தைகளை விட மேலாக, அன்பு செலுத்தி, நல்வழிப்படுத்துகின்றனர். இதை பார்த்து, எங்களை போன்று, வெளிநாடுகளில் இருந்து சென்றவர்கள் நெகிழ்ந்து போனோம். அதேபோன்று, இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், மாணவர்களை, ஆசிரியர்கள் தங்கள் குழந்தைக்கும் மேலாக, பாசத்துடன் வழிநடத்தும் நிலை வர வேண்டும் என்பதே, அனைவரது விருப்பம்.இவ்வாறு அவர் பேசினார்.


பல்கலை, கல்லூரிகளில் புதிய நியமனங்கள் நிறுத்தம்!!!

முறைகேடு பிரச்னை எதிரொலியாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர் 

மற்றும் பணியாளர் பதவிகளுக்கான, புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
உயர்கல்வி துறையில் நடந்த முறைகேடு பிரச்னைகளின் உச்சகட்டமாக, பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அதேபோல, அண்ணா பல்கலையில், மக்கள் தொடர்பு அதிகாரி பதவிக்கு, போலி கடிதம் தயாரித்து, ஒரு கும்பல் வசூல் வேட்டை நடத்தி உள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறையும், உளவுத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மேலும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், புதிய நியமனங்களை நிறுத்தி வைத்து, உயர்கல்வி செயலர், சுனில் பாலிவால் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை, எந்த பல்கலையிலும், கல்லுாரியிலும், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கு பணி நியமனங்கள் செய்ய வேண்டாம் என, பல்கலைகள் மற்றும் கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கு, உயர்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.புதிய நியமனங்கள் நிறுத்தப்பட்டதால், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், உபரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை, மற்ற பல்கலைகள், கல்லுாரிகளில் உள்ள காலி இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.


தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்!!!

சென்னை: ''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு

கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

மாவட்ட கல்வி அதிகாரி களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று நடந்தது.
இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: பொது தேர்வுகளை முறையாக நடத்த, அதிகாரி களும், ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாணவர் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் சரிவதே காரணம். தேர்வு மையங்களை கண்காணிக்க, பல பள்ளிகளில், 'கேமரா' வசதி உள்ளது. அடுத்த ஆண்டில், தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ள, 3,000 மையங்களிலும், ஒவ்வொரு அறையிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். பழுதான பள்ளி கட்டடங்கள் இருந்தால், அதுகுறித்து, தகவல் அனுப்புங்கள். அவை, மாணவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் இடிக்கப்படும்.மேலும், 3,000 அரசு பள்ளிகளில், 437 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்க, விரைவில், 'டெண்டர்' வெளியிடப்பட உள்ளது.தேர்வு மற்றும் மாணவர்களின் பிரச்னைகள், குறைகளை போக்க, விரைவில், உதவி மையம் துவங்கப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.'காப்பி' அடிக்கும் நிலை வராது!

அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பொது தேர்வுகளை முறையாக நடத்தும்படி, அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதுவரை, மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
'நீட் தேர்வுக்கு விலக்கு வராவிட்டால், அந்த தேர்வில், மாணவர்களை காப்பியடிக்க வைப்போம்' என, சிலர் பேசியுள்ளனர். தமிழக மாணவர்கள், எந்த தேர்விலும் காப்பியடிக்கும் நிலை ஏற்படாது. அந்த அளவுக்கு, கல்வித் தரத்தை மேம்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!