Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 16 February 2018

RMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெழுச்சிகளை களைதல் தொடர்பான RMSA மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்,CPS NEWS:16.02.2018தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய(PFRDA)த்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் 22.01.2018 தேதி உத்தரவுப்படி 6 மாத கால காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.
PRIME MINISTER "SHRI.NARENDRA MODI's" TODAY (16/02/2018) INTERACTION WITH STUDENTS - FULL VIDEO


ABACUS பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கையும் ஆசிரியர்கள் பட்டியலும்!!!

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று 

ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.

1. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சாய்ஸ் கிடையாது என்பதால், எல்லாப் பாடங்களின் புக் பேக் ஒரு மதிப்பெண் கேள்விகளுடன், பாடங்களின் உள்ளே இருக்கும் ஒன் வேர்டுகளையும் படியுங்கள்.

2. இரண்டு மதிப்பெண் கேள்விகள் 32 கொடுத்து, இருபதுக்கு மட்டும்தான் பதில் கேட்பார்கள். ஸோ, தெரியாத கேள்விகளை ஸ்கிப் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

3. 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, ஜோடி ஜோடியாக, அதாவது 2 மற்றும் 3-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 4 மற்றும் 7-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 10 மற்றும் 13-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 15 மற்றும் 17-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும் கேட்கப்படும். அதனால், 2, 4, 10, 15 ஆகிய பாடங்களிலிருந்தோ அல்லது 3, 7, 13, 17 ஆகிய பாடங்களிலிருந்தோ ஏதேனும் நான்குப் பாடங்களின் புக் பேக் கேள்விகளோடு, பாடங்களுக்குள்ளே இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளையும் நன்குப் படியுங்க.

4. கணக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதும்போது, அதற்கான அலகு போட மறந்துவிடாதீர்கள். மறந்தால், மதிப்பெண் குறைந்துவிடும்.

5. சரியா, தவறா? தவறாக இருந்தால் திருத்தி எழுதுக, அல்லது காரணம் கூறு என்று கேட்கப்படுகிற வினாக்களுக்கு, விடை எழுதும்போது சரி/ தவறு என்று குறிப்பிட்டுவிட்டே, கேள்விக்கான பதிலை எழுதவும்.

6. பெரிய கேள்விகளில், உப கேள்விகளாக அ அல்லது ஆ, i அல்லது ii என்று கேட்டிருந்தால், கேள்விகளுக்கான நம்பரை போட்டுவிட்டு, பதில் எழுதுங்கள். கேள்விக்கான நம்பரை போடாமல் இருப்பதோ, அல்லது தவறாகப் போடுவதோ உங்கள் மதிப்பெண் குறைய காரணமாகிவிடும்.

7. பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதுவதால், இன்னொரு தவறையும் செய்து, நேரத்தையும் மதிப்பெண்ணையும் வீணடிக்கிறார்கள். அதாவது, கேள்வி 'அ' அல்லது 'ஆ', 'இ' அல்லது 'ஈ' என எழுத வேண்டும் என்கிற பகுதியில் அவர்களுக்கு 'அ' மற்றும் 'ஆ' தெரிந்திருக்கும். 'இ' மற்றும் 'ஈ' தெரிந்திருக்காது. உடனே, மாணவர்கள் 'அ' மற்றும் 'ஆ'வை எழுதிவிடுகிறார்கள். இதில், ஒரு கேள்விக்கு மட்டும்தான் மதிப்பெண் கிடைக்கும்.

8. ஒரு படத்தை வரையச்சொல்லி, அதன் பாகங்கள் இரண்டைக் குறி என்று கேட்டால், மூன்று, நான்கு பாகங்கள்கூட குறிக்கலாம் தவறில்லை. அதேபோல, ஒரு தனிமத்தின் பயன்கள் இரண்டினைக் கூறு என்கிற கேள்விக்கும் மூன்று, நான்கு பயன்களைக் கூறலாம்.

9. ஒரு மதிப்பெண் கேள்விகளில் வரும் 'பொருத்துக' பகுதிக்கு, வெறுமனே பதிலை மட்டும் எழுதாமல், இரு பக்கத்தையும் சேர்த்தே எழுதுங்கள்.

10. பாடங்களின் உள்ளே வருகிற அறிந்துகொள்வோம், செயல், அறிஞர்களின் குறிப்புகள், சிந்திக்க படிக்க பின்னர் அறிக போன்ற பகுதிகளைக் கட்டாயம் படியுங்கள்.

11. எல்லாப் பாடங்களிலும் உள்ள கணக்குகள், அட்டவணைகள், வேறுபாடுகள், பயன்கள், சிறப்பியல்புகள். விதிகள் மற்றும் வகைகளை நன்றாகப் படித்துவிடுங்கள், சிறு வினாக்களில் ஆரம்பித்து, பெருவினாக்கள் வரை இவை உதவியாக இருக்கும்.

சி.பி.எஸ்.சி.க்கான டிப்ஸ்...

1. அறிவியல் கேள்விகளை பொறுத்தவரை மேம்போக்காக படிக்காதீர்கள் மாணவர்களே... ஒரு மார்க் கேள்விகளிலும் லேசாக டிவிஸ்ட் வைத்துதான் கேள்வித்தாளை செட் செய்திருப்பார்கள்.  ஸோ, முதல் 15 நிமிடங்கள் கேள்விகளை கவனமாகப் படியுங்கள்.

2. வேதியியல் ஈக்குவேஷன்களில் எதையும் மிஸ் பண்ணாதீர்கள்.

3. இயற்பியல் பாடத்தில் டயகிராம் வரையும்போது நீட்டாக வரையுங்கள்.

4. உயிரியல் பாடத்தின் டயகிராம்களை வீட்டில் வரைந்து பிராக்டிஸ் செய்திருப்பதே நல்லது. திடீரென்று எக்ஸாம் ஹாலில் ஒரு படம் வரைய வேண்டுமென்றால், பதட்டமாகி விடுவீர்கள்.

5. முந்தைய வருட பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களை கட்டாயம் ரிவிஷன் செய்யுங்கள். அதிலும் திரும்பத்திரும்ப கேட்கப்படுகிற கேள்விகளை படிக்கத் தவறாதீர்கள்.

6. இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்துப் பாடங்களிலும் உள்ள டெஃபனிஷன்களை மறக்காமல் படித்துவிடுங்கள்.

7. இயற்பியலில் உள்ள பிராப்ளம்களுக்கு பதில் எழுதும்போது, பதிலுக்கான யூனிட்டை எழுத மறந்துவிடாதீர்கள்.மறந்தால் அரை மார்க் போய்விடும். 

Video Lesson-Tamil- கனவு தந்த தீர்ப்பு- கதைப்பாடல்-5th std 3rd term


தமிழ் நூல்கள் மற்றும் நூல்களின் ஆசிரியர்கள்

Click here


பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!(பத்திரிகை செய்தி)கல்விச்சிறகுகளின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

கல்விச்சிறகுகளின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.kalvisiragukalrk.com

ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரிய வேண்டும்! : துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ் பேச்சு

''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன் யாதவ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், ஏழாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில், நேற்று நடந்தது.இதில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித், உயர் கல்வி அமைச்சர், அன்பழகன், உயர் கல்வி முதன்மை செயலர், சுனில் பாலிவால், பல்கலை துணை வேந்தர், தங்கசாமி, பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, குஜராத்தில் உள்ள, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணைவேந்தர், சசிரஞ்சன் யாதவ், பட்டங்களை வழங்கினார்.

அவர்பேசியதாவது:ஆசிரியர் கல்வியை பொறுத்தவரை, சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். பல்கலைகள், வெறும் பட்டதாரிகளை உருவாக்காமல், திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.இணையதளம் வந்து விட்ட பின், அனைத்து நிலைமைகளும் மாறி விட்டன. மனிதர்களை விட, இயந்திரங்களுக்கு, அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கற்பிக்கும் முறையிலும், கற்றல் முறையிலும் மாற்றம் வேண்டும்.தற்போது, 'கூகுள், வாட்ஸ் ஆப்' தலைமுறைகளாக உள்ளனர். இன்றைய இளம் பட்டதாரிகள், மிக துடிப்புள்ளவர்களாகவும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நிலையிலும் உள்ளனர்.எனவே, அவர்களுக்கு ஏற்ப, கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வகுப்பறைகளை தாண்டி, பாடம் கற்றுக் கொடுக்கும் முறை தேவை. உலக விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

வகுப்பறையில், மாணவர்களுக்கு நடனம் ஆடியும், நாடகம் நடத்தியும் பயிற்றுவிக்க வேண்டும்.எங்கள் கல்வி நிறுவனத்தில், ஆசிரியர் பயிற்சி அளிப்போருக்கு, கணினி பயிற்சி மட்டுமின்றி, குதிரை ஓட்டவும், நீச்சல் அடிக்கவும், துப்பாக்கி சுடவும் பயிற்சி அளித்துள்ளோம். எனவே, ஆசிரியர்கள், மிகவும் படைப்பு திறன் மிக்கவர்களாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பல்கலையின் துணை வேந்தர், தங்கசாமி, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், 44 ஆயிரத்து, 994 பேருக்கு, பி.எட்., பட்டம்; 1,473 பேருக்கு, எம்.எட்., பட்டம்; 118 பேருக்கு, எம்.பில்., மற்றும், 21 பேருக்கு, பிஎச்.டி., பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 162 பேர் பதக்கம், பரிசுகளுடன் சான்றிதழ் பெற்றனர்.


தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கஉள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ம் தேதி வரை நடக்கும்.தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதே பள்ளியில், செய்முறை தேர்விலும் பங்கேற்க வேண்டும்.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி, விபரம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று பிற்பகலில், ஹால் டிக்கெட்வெளியாகும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை வரை, ஹால் டிக்கெட் வெளியாகாததால், தேர்வர்கள் நீண்ட நேரம் அவதிப்பட்டனர்.


அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தல்!!!

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக்

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.

நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். பதிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர், புத்தகப் பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெறும். இதற்கான நாள், நேரத்தை இருவரும் இணைந்து முடிவு செய்வர்.
நடமாடும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து தலைமையாசிரியர் உரிய முன்னறிவிப்பு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களைக் கலந்து கொள்ள செய்வார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சியை அவரவர்தம் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான அறைகளில் வைத்தோ நடத்தலாம். இதற்கான தக்க இடவசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பள்ளிகளிலேயே தலைமையாசிரியர் செய்து கொடுப்பார்.
நடமாடும் புத்தகக் கண்காட்சிக்குப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் தேவையெனில் அவற்றைப் பதிப்பாளர்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
சாதி, மத நூல்களுக்கு இடமில்லை: புத்தகக் கண்காட்சியில் சாதி, மதம் சார்ந்த பகைமைகளைத் தூண்டும் அல்லது சட்டத்துக்குப் புறம்பாக அமையும் நூல்கள் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல்நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத்திறன்கள், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். பள்ளிகளில் நடத்தப்பெறும் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளுக்கு இருதரப்பினரும் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்: நடமாடும் புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலையில் குறைந்தது 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் இந்த நடமாடும் புத்தகக் கண்காட்சிகளில் பள்ளிகளுக்குத் தேவையான நூல்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு நூல்களை நன்கொடையாகவும் வழங்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 13,096 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 39.93 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றார் அமைச்சர்.
இந்த விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தியாகராயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சத்தியநாராயணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ஆர்.இளங்கோவன், பொதுநூலகத்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளியின் தலைமையாசிரியை இரா.தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காப்பீடு திட்டம் எப்போது?
மாணவர்களுக்கான காப்பீடு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, அவர் கூறியது: நடமாடும் நூலகங்கள் காலையில் ஒரு பள்ளியிலும், மாலையில் ஒரு பள்ளியிலும் இயக்கப்படும். இந்தத் திட்டம் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். புதிய பாடத்திட்டம், புதிய சீருடைகள் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். மாணவர்கள் காப்பீடு திட்டப் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.


தொடக்க கல்வி டிப்ளமா: இன்று விடைத்தாள் நகல்!!!

சென்னை: 'தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு

விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை இயக்குனர்,
வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் படிப்பை முடித்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், விடைத்தாள் நகல் கேட்டு, ஜன., 22 முதல், 25 வரை விண்ணப்பித்தனர்.அவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை,scan.tndge.inஎன்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், 20ம் தேதி வரை, விடைத்தாள் நகலை பிரதி எடுக்க, அவகாசம் அளிக்கப்படும்.நகல் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரதி எடுக்க வேண்டும்.அதில், கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், வரும், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில்

பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.


ONE DAY TRAININIG FOR BT's - PROC

Directorate of Government Examinations - March / April 2018 SSLC Exam conducting Science Practical for Private Candidatesஇன்று மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி இன்று (பிப்ரவரி 16) வேலைநிறுத்தப் போராட்டம்
நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மின் ஊழியர்களுக்குக் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதியன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள் 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் இடையே அதிகாரிகள் திடீரென வெளியேறியதாகத் தகவல் பரவியது. பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது. அதன் பின்பு, மூன்றாவது கட்டமாக, இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்துள்ள மின் வாரிய ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 16) திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், மின்சார வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!