Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 17 February 2018

“500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!”- செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள நாமக்கல் தெற்கு அரசுப்பள்ளியின் 125-வது ஆண்டுவிழா இன்று (17.2.2018) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டவும், லாரி தொழில் முதன்மையாக உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு அசோக் லைலேண்டைப் போல் மேலும் ஒரு பயிற்சிப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.


All High & Hr.Sec. School - BT Asst Vacant Details - CM CELL Reply

ஒருமை பன்மை

Thanks- Sugadev

 ஒருமை_பன்மை....
 Class:2
    சொல் அட்டைகள் : 20
    பகுதி நிரப்பப்பட்ட சொற்கள்  : 4
     #உருவாக்கப்படும்_சொற்கள்: 20

   ஒருமைச் சொல்லானது, பன்மைச் சொல்லாக மாறும் போது   ' கள் ' விகுதியானது எவ்வாறெல்லாம் அமைந்து வரும் என கற்பிக்க உதவும் செயல்பாடு...
   
     * சொற்களஞ்சியத்தை பெருக்கும்....
     * மொழி கற்பதில் ஆர்வத்தை வளர்க்கும்.....

பிப்ரவரி 21 முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் போஸ்டர் மற்றும் ஜாக்டோ ஜியோ வின் மனுVideo Lesson-The Great Cultural Expo-3rd std English 3rd term


அரசுப்பள்ளியில் ஆட்சியர் மகள்-வீடியோ


PRIME MINISTER SPEECH IN ENGLISH

வீணாகும் காகிதத்தில் பென்சில் தயாரிக்கும் பட்டதாரி


விருதுநகர் அங்கன் வாடியில் படிக்கும் கலெக்டர் மகள்


விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் சிவஞானம், தனது மகள் ரித்திஷாவை
நகராட்சி பள்ளி அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.விருதுநகர் பாவாலி ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி அங்கன்வாடி மையத்தில், கலெக்டர் சிவஞானம் தனது மகள் ரித்திஷா, 3, வை சேர்த்துள்ளார். நேற்று மகளுடன் கலெக்டர் பள்ளிக்கு வந்தபோது தான், ரித்திஷா குறித்து அனைவருக்கும் தெரிந்தது. 'இது குறித்து தகவல் வெளியாவதை கலெக்டர் விரும்பவில்லை,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை

பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், இரு வாரங்களில் துவங்க உள்ளன. கோடை காலத்தில், வழக்கத்தை விட, மின் தேவை அதிகம் இருக்கும்.அதனால், 'ஓவர் லோடு' காரணமாக, மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.இதையடுத்து, பள்ளிகளுக்கு தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல இடங்களில், பள்ளிகளுக்கு மின்சாரம் செல்லும் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், தரைக்கு அடியில்உள்ள, 'கேபிள்' வெளியில் தெரிவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, பிரிவு அலுவலக பொறியாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, மின்சார வழித்தடங்களில்ஆய்வு செய்து, தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்

பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது. பலர், தேர்வு எழுதும் முன்பே நன்கொடை கொடுத்து, இடங்களை முன்பதிவு செய்கின்றனர். 

தமிழகத்தில், 10 - பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு முடிந்து, 'ரிசல்ட்' வந்த பின்னே, மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில், அடுத்த வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளி கள், பிளஸ் 1 சேர்க்கையை, முன்கூட்டியே துவக்கி விட்டன. குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை, நாமக்கல், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின், பிரபல பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரம் அடைந்துஉள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விண்ணப்பங்கள் வழங்கி, பொதுத் தேர்வில் எடுக்க உள்ள மதிப்பெண்ணை, தற்போதே தோராயமாக கேட்கின்றனர். அதன்படி,பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பல பெற்றோர், ஒரு லட்சம் ரூபாய் வரை, நன்கொடை கொடுத்து, பிளஸ் 1 இடங்களை, 'புக்' செய்வதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: பலர் பணம் கொடுத்து, இடங்களை முன்கூட்டியே புக் செய்வதால், ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற்றாலும், விரும்பும் பள்ளிகளில், விரும்பும் பாடப்பிரிவுகளில் இடங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வித் துறை தலையிட்டு, விதிகளை மீறி, தற்போது மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகளை, உடனே ரத்து செய்ய வேண்டும். மேலும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விதிகள் மற்றும் விண்ணப்பம் வழங்கும் தேதியை, அரசே நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அதன்படி, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்பு, பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பள்ளிகளில் நடமாடும் நுாலகம் மற்றும் புத்தகக் கண்காட்சி, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு சான்றிதழ் என, பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.அதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு என, பிரத்யேகமாக, சிற்றிதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதில், 6 - 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஓவியம், கட்டுரை, கவிதை என, தங்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்தலாம்.இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்கு, பள்ளிக்கல்வித் துறைசமர்ப்பித்து உள்ளது

நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு

நீட்' நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம் செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தீர்வு குறித்து, சி.பி.எஸ்.இ., வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். 'எய்ம்ஸ்' மற்றும் ஜிப்மர் கல்லுாரிகளில் சேருவதற்கு, அந்தந்த கல்லுாரிகள் நடத்தும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன் லைன்' பதிவு, பிப்., 9ல் துவங்கியது; மார்ச், 8 வரை நடக்கிறது. இதில், மாணவர்கள், ஆன் லைனில் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.இந்த நடைமுறையின் போது, சில சிக்கல்கள் எழுகின்றன. பல மாணவர்களின் வங்கிக் கணக்கில் கட்டண தொகை பிடிக்கப்பட்டாலும், தேர்வு குழுவுக்கு, அது சேராமல் நின்று விடுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.இதற்கான தீர்வுகள் குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

அந்த வழிகாட்டுதல்கள், சி.பி.எஸ்.இ.,யின், https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.அதில், 'கட்டணம் செலுத்தியது குறித்து, ரசீது கிடைக்காவிட்டால், 24 மணி நேரத்திற்குள் மீண்டும், ஆன் லைனில் ரசீதை பெற, மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். 'அப்போதும் ரசீது கிடைக்காவிட்டால், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே செலுத்திய கட்டணம், ஏழு நாட்களுக்குள் வங்கிக்கணக்கில், வரவு வைக்கப்படும்' என, கூறப்பட்டு உள்ளது.

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-அறை கண்காணிப்பாளர்களுக்கான கடமைகள்!!!தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்!!!தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-துறை அலுவலர்களுக்கான கடமைகள்!!!பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டம்-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் !!!பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!ENTRANCE EXAMINATION -2018எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!