Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 21 February 2018

EMIS PHOTO STATUS REPORT AS ON 21.02.2018

BRTE'S Seniority List-22.12.2017



Tamil Letters Teaching with Dance


ஜூலை1 முதல் மொபைல் நம்பர் 10 எண்களில் இருந்து 13 எண்களாக மாற்றம்..!

இந்திய தொலைத்தொடர்பு சேவையில் கூடுதல் பாதுகாப்புகளைக் கொண்டு வரும் நோக்கில் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களையும் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 இலக்க எண்கள் கொண்ட மொபைல் நம்பரை 13 இலக்க எண்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. இப்புதிய மாற்றங்கள் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 8 தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி 8ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 எண் கொண்ட மொபைல் நம்பரை 13 எண்களாக மாற்ற வேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், அதன் படி அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தற்போது அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.   ஜூலை 1 முதல் மொபைல் நம்பரை 13 இலக்க எண்களாக மாற்றும் பணிகள் ஜூலை 1, 2018 முதல் துவங்கும் என்றும், இனி வரும் புதிய எண்கள் அனைத்தும் 13 இலக்க எண்களாகவே வெளியாகும். இந்தப் பணிகள் ஜூலை 1ஆம் தேதி துவங்கவில்லையெனில் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ள முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இணைப்பு தற்போது இருக்கும் 10 இலக்க எண்களுடன் புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள 13 இலக்க எண்களுடன் இணைக்கப்படுவதால் கால் இணைப்பில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. முக்கிய நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருக்கும் மொபைல் நம்பர்களை 13 இலக்க எண்களாக மாற்ற நோக்கியா மற்றும் ZTE டெலிகாம் நிறுவனங்களிடம் உதவியை நாடியுள்ளது பிஎஸ்என்எல். இந்தியா டாப்பு தற்போது உலகளவில் சீனாவில் 11 இலக்க எண்களை மொபைல் நம்பராகப் பயன்படுத்தும் நிலையில் புதிதாகக் கொண்டு வரப்போகிற மாற்றங்கள் உலகிலேயே அதிக இலக்க எண்களை வைத்துள்ள நாடுகளில் இந்தியா இடம்பெறும். சீனாவைத் தாண்டி பிரான்சில் Gaudeloupe, Martinique மற்றும் Reunion ஆகிய பகுதிகளில் 13 இலக்க கொண்ட மொபைல் எண்களைப் பயன்படுத்தப்படுகின்றன.   பாதுகாப்பு இந்த மாற்றத்தின் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் அதிகப்படியான பாதுகாப்பு உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. தற்போது மொபைல் எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதின் மூலம் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும்.

10,+2.வகுப்பில் கேள்விகள் குறைப்பு!!!

DGE- +2 Hall Ticket regular Student -HSE 2018 - Download -Reg

1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியீடு.

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்கட்டமாக 1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

From July 2018 Mobile number will be of 13 digit.All 10 digit existing mobile number will be changed to 13 digit number max by October 2018.

+2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கு இலவச டிவிடி மெட்டிரியல்- அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர் கரூர் கார்த்திகேயன்

+2 கணக்குப்பதிவியல் பாடப்பொருளைமாணவர்கள் புரிந்துகொள்ளும்வண்ணம் டிவிடி வடிவில் தயாரித்துகரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன்என்பவர்  வெளியிட்டுள்ளார்.இதுஆசிரியர்கள், மாணவர்கள் நல்லவரவேற்ப்பை பெற்றுள்ளது.



கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கானபுத்தாக்கப்பயிற்சியும், பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில்கணக்குப்பதிவியல் பாடத்திற்கான’வெற்றிகொடிகட்டு +2 கணக்குப்பதிவியல் பாட வீடியோ மெட்டிரியல்’ (டிவிடி)வெளியிடப்பட்டது.


இந்த வீடியோ மெட்டிரியலை தயாரித்துவழங்கிவரும் கரூர் மாவட்டம் ஈசநத்தம்அரசுமேல்நிலைப்பள்ளியின்வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன்இது குறித்து நம்மிடையேபேசுகையில்..,

"கடந்த ஐந்து ஆண்டுகளாக வணிகவியல் மற்றும்கணக்குப்பதிவியல் பாடங்களில் 100% தேர்ச்சியும், பல மாணவர்களை 200க்கு200 மதிப்பெண்கள் பெறவைத்தும்வருகிறேன்.முன்பு கோடைபண்பலைவானொலியில் அறிவிப்பாளராகவும், தூர்தர்ஷனின் பொதிகைதொலைக்காட்சியில்செய்திவாசிப்பாளராகவும்பணியாற்றிய அனுபவத்தோடு புதியதொழில்நுட்பங்களோடு  புதியஅணுகுமுறைகளைக் கையாண்டுபாடங்களை நடத்திவருகிறேன்.

எனது மாணவர்களுக்கு  வணிகவியல்பாடம் தொடர்பாக எனது குரலில் பேசிநானே தயாரித்த வீடியோக்கள் மூலமாகபாடங்களை நடத்தி வந்தேன். தேர்ச்சிவிழுக்காட்டிலும் நல்ல முன்னேற்றம்கண்டேன்.அதை  ஒரே டிவிடிதொகுப்பாக்கி அனைத்து அரசு பள்ளிமாணவர்களும் பயன்பெறும் வண்ணம்இலவசமாக வழங்கவேண்டும் என்றஎண்ணத்தில் பாடப்பொருளைஉள்ளடக்கிய இந்த டிவிடியை சேவைநோக்கோடு  வழங்கி வருகிறேன்.

பாடப்பொருளை படமாக பார்ப்பதால்  படிப்பதில் மாணவர்களின் ஆர்வம்கூடும் என்பதோடு பாடத்தையும்  அவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்பது எனது பள்ளிமாணவர்கள் மூலம் கிடைத்தஅனுபவம்.

கடந்த ஆண்டு +2 வணிகவியல் பாடத்திற்கு வீடியோ மெட்டிரியல் தயாரித்து அதை அனைத்து அரசு மற்றும் பார்வையற்றோர் பயிலும் பள்ளிகளுக்கும் வழங்கினேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சொன்னார்கள். இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், அதிக தேர்ச்சி விழுக்காடும் அடைந்துள்ளதாக ஆசிரிய பெருமக்கள் தெரிவித்துள்ளனர்.குற்ப்பாக பார்வைதிறனற்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியிலும் இந்த வீடியோ மெட்டிரியல் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல இந்த ஆண்டும் +2 கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் வீடியோ மெட்டிரியல் தயாரித்து வெளியிட்டுள்ளேன். அனைத்துஅரசுபள்ளி மாணவர்களும் அதிகமதிப்பெண்கள் பெறவேண்டும்என்பதற்காகவே இந்த டிவிடியை எனதுசொந்த செலவில் தயாரித்துவழங்கிவருகிறேன். மேலும் இதில் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்து முனைவர்.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் பிரத்யேகமான வீடியோ உரையையும் இணைத்து வெளியிட்டுள்ளேன்.இந்த டிவிடி தேவைப்படுவோர் 9943149788 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லதுkarthikeyancommerce என்கிற  Youtubeசேனலை Subscribe செய்து, இலவசமாகபதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றார்


பிப்ரவரி 21 இன்று உலக தாய்மொழி தினம் - தாய் மொழி காக்க உறுதியேற்போம்..

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’

ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி கல்வி என்பது மிகவும் அவசியமாகும். ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் தொழில் வளர்ச்சியில் மேலோங்கி இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களின் சொந்த தாய்மொழியில் கல்வி கற்பது மட்டுமே என்று உலக வரலாற்றில் பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக திகழ்கிறது. 

உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. சமீபத்தில் எடுத்துள்ள ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு ஒரு மொழி அழிந்துவருவதாக கண்டறியபட்டுள்ளது. நமது நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருமொழி அழிந்தால் அதன் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம் ஆகியவையும் அழிந்துவிடும்.

தாய்மொழி என்பது நமது தாய்க்கு நிகரானது. நம் தாய்மொழியை அழிப்பது, தாய்க்கு செய்யும் துரோகம் என்பதில் சந்தேகமில்லை. தாய் மீது அன்பு செலுத்தவோ அல்லது அவளின் தேவையை சந்திக்கவோ இன்னொருவரின் ஆலோசனை அவசியமில்லை. அதேபோல் தான் தாய்மொழியும், நமது மொழியை காப்பாற்ற வேண்டும். “தாய்மொழியை சுவாசியுங்கள், பிறமொழியை நேசியுங்கள்“ என்று தேசியகவிஞர் குவெம்பு சொல்லியுள்ளதை நூற்றுக்கு நூறு மனத்தில் தாங்கி ஒவ்வொரு மொழியினரும் செயல்பட வேண்டும்.

ஆங்கிலம் உள்பட பிறமொழிகள் மீது நான் பற்றுகொள்வதின் மூலம், சொந்த மொழியை அழித்துவருகிறோம். வர்த்தக ரீதியில் தற்போது ஆங்கிலம் உள்பட பல மொழி கல்வி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளை நீச மொழியாக பாவிப்பதுடன், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் சொந்த மொழியில் பேசுவதற்கும் தடை விதித்து வருகிறார்கள். சில பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறுமொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அதன் மூலம் தங்களின் மூல அடையாளத்தை தொலைத்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் உள்பட பிறமொழியில் கல்வி கொடுத்தாலும், வீட்டில் தாய்மொழியை கற்றுகொடுக்க வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று அதற்கான உறுதிமொழியை ஏற்போம்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312 இடங்களில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படஉள்ளது.இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக அரசு பள்ளிகளில் வைபை வசதி கிடைக்கும். மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் விபத்திற்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் என 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சலிங் மேற்கொள்ள உள்ளோம்.தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

10 வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்விற்கு கேள்விகள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரமும் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித பயமுமின்றி தேர்வை சந்திக்கலாம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.


அரசு பள்ளியில் புகுந்து மர்ம நபர் துணிகரம் : தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு!!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர், தலைமை ஆசிரியை அணிந்திருந்த,

8 சவரன் தாலி செயினை பறித்து தப்பியோடினான்.
அவனை பிடிக்க முயன்ற மாணவன் மீதும் தாக்குதல் நடத்தினான்.திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த கிரிதரன் மனைவி சுஜாதா, 42. குண்ணத்துார், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை.இவரும், இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியையும், நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.குறும்படம் : அப்போது, டிப் - டாப்பாக உடையணிந்து, பள்ளிக்கு வந்த மர்ம நபர், நேராக தலைமை ஆசிரியை சுஜாதா, பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்றான். அவனை பார்த்த சுஜாதா, 'யார் நீங்கள்... என்ன வேண்டும்?' எனக்கேட்டார். அதற்கு, அந்த நபர், 'நான், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதியுடன் வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், பள்ளியில் குறும் படம் திரையிட வேண்டும்'என்றான். அத்துடன், 'குறும் படம் திரையிட, 'டிவி' எடுத்து வர வேண்டும்; அதற்கு, 150 ரூபாய் கொடுங்கள்' என, கேட்டுள்ளான்.சந்தேகம் : அவனின் பேச்சில் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியை, பள்ளியில் உள்ள தன் அறைக்கு வேகமாக சென்றார்.

அவரை பின்தொடர்ந்த மர்ம நபர், 'மேடம், என் மொபைல் போன் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்' என கூறியபடியே, சுஜாதா அணிந்திருந்த, 8 சவரன் தாலி செயினை, திடீரெனபறித்தான். சுதாரித்த தலைமை ஆசிரியை சுஜாதா, நகையை தன் கைகளால் பிடித்தபடி, 'திருடன் திருடன்...' என, கூச்சலிட்டார். அவரின் அலறலைக்கேட்ட, 4ம் வகுப்பு மாணவன், விஷ்ணு, மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ள முற்பட்டான்.உடன் ஆத்திரமடைந்த மர்ம நபர், மாணவனை எட்டி உதைத்து, சுஜாதாவின் செயினை பறித்து வெளியே ஓடி, அங்கு நிறுத்தி வைத்திருந்த, இரு சக்கர வாகனத்தில் தப்பினான்.அவன் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது, தடுத்த ஒரு பெண்ணையும் கடுமையாக தாக்கினான். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, மப்பேடு போலீசில், தலைமை ஆசிரியை சுஜாதா, நேற்று புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். வருத்தமாக உள்ளதுபள்ளிக்கு வந்த மர்ம நபர், தலைமை ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென ஆசிரியை சத்தம் போடவே, மர்ம நபரை பிடிக்க முயன்றேன். என்னை உதைத்து தள்ளி, தப்பிவிட்டான்.

அவனை பிடிக்க முடியாதது வருத்தமாக உள்ளது. எஸ்.விஷ்ணு 4ம் வகுப்பு மாணவன், குண்ணத்துார்ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லைதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு, உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும், செயின் பறிப்பு திருடர்களால் பாதிக்கப்படுகிறோம். தற்போது, பள்ளிக்குள்ளேயே திருடர்கள் வந்துள்ளது, எங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.பெயர் தெரிவிக்க விரும்பாத ஆசிரியைதொடரும் வழிப்பறி : திருவள்ளூர் அருகே, வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது, திருமணம் கிராமம்.

இங்குள்ள அரசு பள்ளிக்குள், 2017 டிச., 18ல், புகுந்த மர்ம நபர், ஆசிரியை ருக்மணி என்பவரிடம், ஐந்தரை சவரன் நகையை பறித்து சென்றான். அந்தக் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறும் நிலையில், இரண்டாவது முறையாக, இச்சம்பவம் நடந்துள்ளது.


இன்று ஜாக்டோ ஜியோ மறியல் நடைபெறும் இடம்

இன்று மறியல் நடைபெறும் இடம்... 


சென்னை எழிலகம் அலுவலக வளாகம் , 
ஆவின் பாலகம் முன்பு 
சேப்பாக்கம், 
சென்னை -5 

மெரினா கடற்கரை சாலை ,எதிரில். இவண். ஜாக்டோ-ஜியோ .


ஐடி ஊழியர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி!!!

ஐடி ஊழியர்களுக்குத் தொழில்நுட்ப திறன் பயிற்சிகள் அளிக்கும் வகையில் பியூச்சர் ஸ்கில் என்ற 

ஆன்லைன் பயிற்சி மையத்தை நாஸ்காம் உருவாக்கியுள்ளது.

அண்மைக்காலமாகத் திறமையின் பெயரால் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கையால் ஐடி ஊழியர்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஐடி ஊழியர்களுக்குத் திறன் பயிற்சி வழங்க ஆன்லைன் வலைத்தளம் ஒன்றைத் தகவல் தொழில்நுட்ப தொழில்துறை அமைப்பான நாஸ்காம் வடிவமைத்துள்ளது. பியூச்சர் ஸ்கில் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வலைப்பக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்ரவரி 19) டெல்லியிலிருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஐடி ஊழியர்களும், ஐடி துறை மாணவர்களும் படித்துக் கற்றுக்கொள்ளும் விதமாக பியூச்சர் ஸ்கில் இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நாஸ்காம் கூறுகிறது. இதுகுறித்து அதன் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறுகையில், "அடுத்த சில வருடங்களில் 40 லட்சம் ஐடி துறை சார்ந்த பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது தான் எங்கள் நோக்கமாகும்" என்றார்.


750 பதவி உயர்வு முரண்பாடுகளை நிதித்துறை தீர்க்க கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு!!!

CPS நண்பர்களின் கவனத்திற்கு....



*ஓய்வூதிய வல்லுநர் குழுவின் 
அறிக்கையை தமிழக அரசிடம்  தாக்கல் செய்யக்கோரி  திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று 21.02.2018  விசாரணைக்கு  வருகிறது.*

For order
வரிசையில் 52வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.


ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம் : பொது தேர்வு மாணவர்கள் அச்சம்




சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில் தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என, அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன.

இந்தத் தேர்வுகளில், மொத்தம், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோரிக்கை : இந்நிலையில், பொது தேர்வு மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், சில மாணவர்களின் ஹால்டிக்கெட்டில், புகைப்படம், தந்தையின் பெயர் உள்ளிட்டவை தவறாக இடம் பெற்றுள்ளன. எனவே, தவறை சரி செய்து தரும்படி, மாணவர்கள் தரப்பில், தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில தலைவர், ரா.இளங்கோவன் கூறியதாவது: பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், எழுத்துப் பிழை மற்றும் புகைப்படம் மாறி இருப்பதை சரி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை அவகாசம் அளித்தது. சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உரிய காலத்தில் தவறுகளை கண்டுபிடிக்காமல், கவனக்குறைவாக இருந்து விட்டனர். இதனால், மாணவர்கள் சிலரின், ஹால் டிக்கெட்டுகளில் உள்ள தவறுகள் சரிசெய்யப்படவில்லை. இதை, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.'தற்போது பிழைகளை திருத்த முடியாது.

மாணவர்கள், தேர்வு மையத்துக்கு சென்று, ஹால் டிக்கெட்டுடன், தங்களது புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டையை இணைந்து, தேர்வை எழுதி கொள்ளலாம். 'தேர்வு முடிவுகள் வந்த பின், பிழைகள் சரிசெய்யப்படும்' என, தெரிவித்து உள்ளனர்.சிக்கல் : இதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், புகைப்படம் மாறிய மாணவர்கள், தங்களால் தேர்வு எழுத முடியுமா என, அச்சம் அடைந்துள்ளனர். எனவே, தேர்வுக்கு முன், ஹால் டிக்கெட் மற்றும் விடைத்தாளின் முகப்பு சீட்டில் உள்ள, தவறுகளை சரிசெய்து, புதிய ஹால் டிக்கெட் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் -மாணவர் உறவில் விரிசல் அதிகரிப்பை தடுப்பது அவசியம்'



பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் அவர் பேசியதாவது: 

ஆசிரியர்கள் சொந்த விருப்பு வெறுப்பின்றி அவர்களது கடமைகளை உணர்ந்து செயல்படும்போது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், 

அனைவராலும் சிறந்த ஆசிரியர் என்று பாராட்டும், நன்மதிப்பு, மரியாதையையும் பெற முடியும். மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், நன்நடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றையும் மேம்படுத்த உறுதுணையாக இருந்துவரும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார் ராமமூர்த்தி. 

விழாவில், சேலையூர் சீயோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் என்.விஜயன், குரோம்பேட்டை எஸ்.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ்.பேபி சரோஜா, செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் எம்.அஞ்சனாதேவி, மார்க் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன், ஏகனாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியை என்.சுதா உள்ளிட்ட 30 பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி தாளாளர் வி.ஆர்.தனலட்சுமி, இயக்குநர் ஏ.ராஜலட்சுமி, முதல்வர் கே.எல்.சண்முகநாதன், டீன் ஆர்.கே.நடராஜன், பேராசிரியர் கே.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!