Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 22 February 2018

மாணவர்களுக்கான "சிரிப்பு யோகா"


6ம் வகுப்பு, அறிவியல் ,நமது சுற்றுச்சூழல் மன வரைபடம்

செந்தில் குமார் ,அறிவியல் பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி வடக்கு கொளக்குடி
குமராட்சி ஒன்றியம்
கடலூர் மாவட்டம்

பொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் - பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்-நூலக உறுப்பினர்களாக மாணவ,மாணவியர்களை சேர்த்தல் சார்புபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது

தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ட்ரம்ப் 
பள்ளிகளில் ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத்
தவிர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்கள் மீது வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அமெரிக்க அதிபருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். முதல் கட்டமாக ஒரு நிமிடத்துக்குள் நூற்றுக்கணக்கான குண்டுகளைப் பாய்ச்சும் வகையில் துப்பாக்கிகளின் வேகத்தை அதிகரிக்கும் 'பம்ப் ஸ்டாக்' எனப்படும் கருவியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் மற்றொரு முடிவாக ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறையும் என்றும், இந்தத் திட்டம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணியும், அவர்களது மன நிலையம் ஆராயப்படும் என்று வெள்ளை மாளிகையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்திப்பின்போது கூறியுள்ளார்.


ஆசிரிய பயிற்றுனருக்கு பணிமாறுதல் கலந்தாய்வு 4ஆண்டுக்குப்பின் நடக்கிறது!!!

Video Lesson-English-My India-Poem 3rd std 3rd term


அத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு - தமிழக அரசு

தமிழக அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலை கிடைக்கும் என பதிவு செய்துள்ள சுமார் 80 லட்சம் பேர் கதி கேள்விக்குறியாகி உள்ளது. 

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று முன்தினம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அரசின் வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு அரசு துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களை குறைக்க, அரசு பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கலாம் என்ற பரிந்துரையை அரசு பரிசீலித்தது.

 அதன்படி அரசு ஊழியர் சீரமைப்பு குழுவை அமைக்க அரசு முடிவு செய்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் முதன்மை செயலாளருமான எஸ்.ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் நிதித்துறையின் செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் உறுப்பினராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தனது அறிக்கையை 6 மாதத்தில் அரசிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:  தமிழக அரசு பணியிடங்களில், அத்தியாவசியமற்ற பணியிடங்களை அடையாளம் கண்டு அந்த பணிகளை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால் குறைவான சம்பளம் வழங்க முடியும். அதே நேரம் தற்போது பணியில் உள்ள எந்த அரசு ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். ஆனால், தனியாருக்கு வழங்கப்பட்டால் அந்த துறையில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் வேறு துறைக்கு அனுப்பப்படுவார்கள்.

எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கலாம் என்று இந்த குழு அரசுக்கு பரிந்துரைக்கும். இப்படி தனியாருக்கு வழங்குவதன் மூலம் கூடுதல் சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் வழங்காமல் இருக்கலாம். தற்போது 10 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் செக்‌ஷன் அதிகாரிக்கு கீழ் உள்ள ஊழியர் பணியிடங்கள் மட்டுமே தனியாருக்கு வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும். ஆனாலும், அரசுக்கு வேறு வழியில்லை. தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை ரூ.67 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்பட்டது. சமீபத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்றப்பட்ட பிறகு சம்பளமாக மட்டும் ரூ.88 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இது தமிழக அரசின் மொத்த வருவாயில் 50 சதவீதம் சம்பளத்துக்கே செலவு செய்யும் நிலை உள்ளது என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக கடந்த 31-1-2018ம் தேதி வரை சுமார் 80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 

அதன்படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20,69,337 பேரும், 18 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17,09,845 பேரும், 24 முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டிய காத்திருக்கும் வேலை தேடுபவர்கள் 30,466,19 பேரும், 36 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் 11,468,98 பேர்களும், 57 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 5,730 பேர் மொத்தம் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து இன்னும் காத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், இனி அரசு வேலைவாய்ப்புகளை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது, இவர்களின் அரசு வேலைவாய்ப்புக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அதேநேரம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பணிகளில் தற்போது 10 லட்சம் பேர் உள்ளதாகவும், 2.5 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளதாகவும் அரசு சங்கங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

பணியாளர் நிர்வாக சீரமைப்புக் குழுவை உடனே கலையுங்கள்: தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறும்போது, “தமிழக அரசால் பணியாளர் நிர்வாக சீரமைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு பணியில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை அரசு அறவே ரத்து செய்வதுடன், பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுைவ உடனடியாக கலைத்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில தலைவர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 7வது ஊதிய குழுவில், அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதிய முரண்பாடு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதேநேரம், ஒப்பந்த அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் 30.46 லட்சம் பேர் வேலையில்லா பட்டதாரிகள்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் நிலோபர் கபில் கூறினார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

தமிழக தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் நிலோபர் கபில் இந்த முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது :தமிழகத்தில் 85 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 20 லட்சத்து 9 ஆயிரத்து 337 பேர். 

இவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறவர்கள். 23 வயதுக்குட்பட்டவர்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேர். 24 வயதில் இருந்து 35 வயதுக்குள் உள்ள பதிவுதாரர்கள் தான் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள். அவர்கள் 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் தான். 

எனவே எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கிறார்கள். குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 23 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.வேலை வாய்ப்பு பதிவை, தமிழக அரசு எளிதாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த முகாமில் 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பணியாளர்களை தேர்வு செய்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் திரண்டனர். பெரும்பாலானவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது

JACTO JEO நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மறியல் போராட்டம். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பு.

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் வரையில் இந்த மறியல்போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த மதுரை உயர்நீதி மன்ற நீதிமன்றம், அந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், அது தொடர்பான வழக்கில் அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

 இதையடுத்து, மீண்டும் போராட்டங்களை நடத்தப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். அதன்படி 21ம் தேதி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். நேற்று முன்தினம் அரசியல் தலைவர்களையும் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர். 

இதையடுத்து, நேற்று காலை 10 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மறியல் போராட்டத்தை நடத்தினர். மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்றைய போராட்டத்துக்கு தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சுரேஷ், மோசஸ் ஆகிய மூன்று பேர் தலைமைப் பொறுப்பு வகித்தனர். 

அவர்கள் தலைமையில், ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி கோஷமிட்டபடி சென்றனர். பின்னர் பீச் சாலையில் மறியல் நடத்தவும் முயன்றனர். ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு முன்னதாகவே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் குறித்து மோசஸ்,சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: மறியல் போராட்டம் என்று அறிவித்த பிறகு நேற்று அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒன்று, ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதான அறிவிப்பு. குழு அமைக்க நாங்கள் எப்போதும் கோரிக்கை வைக்கவில்லை. 

அலுவலர்களை குறைக்கும் விதமாக ஸ்டாப் ரேஷனிசேஷன் கமிட்டி என்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு எதிரான ஒரு அரசாணையை இந்த அரசு வெளியிட்டுள்ளது. பணியிடங்களை குறைத்து தனியார் மூலம் ஆட்களை நிரப்பும் ஒரு ஆணை இது.  இதை எதிர்த்தும் இந்த மறியல் போராட்டம் நடக்கும். நாளை முதல் இந்த மறியல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். அதனால் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும். இவ்வாறு மோசஸ், சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

'நாட்டா' தேர்வு விண்ணப்பம் : 10 நாள் தான் அவகாசம்!!

பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு

விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கட்டடவியல் இன்ஜினியரிங் படிப்பான, பி.ஆர்க்., பாடப்பிரிவில் சேர, நாட்டா நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வை, மத்திய அரசின், தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்துகிறது. வரும் கல்வி ஆண்டில், நாட்டா தேர்வு, ஏப்., 29ல், நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது.

இந்த முறை, கணினி வழி தேர்வுகள் கிடையாது. எழுத்து தேர்வு முடிவுகள், ஜூன், 1ல் வெளியாகின்றன. தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு, www.coa.gov.in என்ற இணையதளத்தில், ஜன., 18ல் விண்ணப்ப பதிவு துவங்கியது; மார்ச், 2ல் முடியும் என, ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளன. தேர்வு கட்டணத்தையும், மார்ச், 2க்குள் செலுத்தி விட வேண்டும். எனவே, பிளஸ் 2 மாணவர்கள், பி.ஆர்க்., படிக்க விரும்பினால், இன்னும், 10 நாட்களுக்குள், விண்ணப்ப பதிவை முடித்து கொள்ளும்படி, கட்டடவியல் கல்லுாரிகள் தரப்பில், பள்ளி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


புதிய பாட புத்தகத்தில் சர்ச்சை கருத்து கூடாது!'

புதிய பாடப் புத்தகத்தில், சர்ச்சையான கருத்துகள் மற்றும் பிழைகள் இருக்கக் கூடாது என, பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரான, அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நேரடி பார்வையில், புதிய பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதற்கான புத்தகங்கள் எழுதும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, முதல் பருவ புத்தகங்கள் மட்டும், அச்சிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில், பாடத்திட்ட குழுவுக்கு, தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர், பிரதீப் யாதவ் ஆகியோர், வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளனர்.'புதிய பாடத் திட்டத்தில், கலைத் திட்டத்தை மீறாமல், தமிழக அரசின் அரசாணைக்கு உட்பட்டு, பாடங்களை எழுத வேண்டும். எழுத்து மற்றும் பொருள் பிழைகள் ஏற்பட்டு விடக் கூடாது. வரலாறு, புவியியல் போன்ற பாடங்களில், ஆண்டு, எல்லை, குறிப்பிட்ட இனத்தவரின் வரலாறை சொல்லும் விதம் போன்றவற்றில், எந்தவித சர்ச்சையான, பாரபட்சமான கருத்துகள் இடம்பெறக் கூடாது' என, அறிவுறுத்தி உள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு: புதிய புத்தகங்களுக்கான சி.டி. வெளியீடு

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 9-ஆம் வகுப்பு புத்தகங்களுக்கான குறுந்தகட்டை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.

தமிழகத்தில் மாநில கல்வி வாரியத்தின் கீழ் 1,6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டம் வரும் 2018-19 கல்வியாண்டில் மாற்றியமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதோடு இதற்கான பாடத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்களை தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 9-ஆம் வகுப்புக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடநூல்களின் முதல்பாகம் தயாரிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து குறுந்தகடு வடிவில் தயாராகி உள்ளது. இந்த குறுந்தகட்டை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதனிடம் அச்சிடும் பணிக்காக அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை வழங்கினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'மத்திய அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் புதிய பாடத்திட்டங்கள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பல்வேறு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டத்தை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

இந்த நிகழ்ச்சி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

'நீட்' தேர்வு இணையதளம் 1.13 கோடி பேர் பார்த்தனர்

'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தை, 12 நாட்களில், 1.13 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், 2.5 லட்சம் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத உள்ளனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த, ஒரு லட்சம் மாணவர்களும், 'நீட்' தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில், பிப்., 9ல் வெளியானது. அதேநாளில் இருந்து, 'ஆன் லைன்' பதிவும் துவங்கியது. தேர்வு அறிவிக்கப்பட்டு, 12 நாட்கள் முடிந்துள்ள நிலையில், நேற்று வரை, 1.13 கோடி பேர், 'நீட்' தேர்வு இணையதளத்தை பார்வையிட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., இணையதளத்தை, ஒன்றரை ஆண்டுகளில், 5.26 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், தமிழக பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தை, ஏழு மாதங்களில், 1.53 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இந்த தளங்களை விட, குறுகிய காலத்தில், 'நீட்' இணையதளத்தை, அதிகம் பேர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு நாளைக்கு, 10 லட்சம் பேர், 'நீட்' தளத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது.


தமிழகம், புதுச்சேரியில், 8.66 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தேர்வுத்துறையின், dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. 'தலைமை ஆசிரியர்கள், வரும், 26ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 'பிப்., 26க்கு பின், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் வசதி கிடைக்காது' என, இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள்

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஒரே வகையான வினாத்தாள் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன. இந்த தேர்வுகளில், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வு பணியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுக்கு, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வில், இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றில் உள்ள கேள்விகள் எதுவும் மாற்றப்படாது. ஆனால், கேள்விகளின் வரிசைகள் மாற்றப்பட்டுஇருக்கும். மாணவர்கள், ஒருவரையொருவர், 'காப்பி' அடிப் பதை தடுக்க, இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேர்வு அறைகளில், மாணவர்களை அருகருகே அமர வைக்க கூடாது. ஒவ்வொரு பெஞ்சிலும், இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். ஒரு பெஞ்சில் அமரும் இரு மாணவர்களுக்கு, ஒரே வகை வினாத்தாள் வழங்கக் கூடாது. முன் பெஞ்சில் உள்ள மாணவருக்கு, ஒரு வகை வினாத்தாளும், அவருக்கு பின் அமரும் மாணவருக்கு, மற்றொரு வகை வினாத்தாளும் வழங்க வேண்டும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!