Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 23 February 2018

10 ஆம் வகுப்பு மிகவும் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2017-18

DGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்

GO 11 DSE Dt:20.02.18- Internal for +1 amendmentதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சிநீட் தேர்வில் வெற்றிக்கான சில ஆலோசனைகள்

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன்

இன்று சென்னையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ள வேண்டாம் தேர்வில் தோல்வியடைந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வழியுள்ளது என தெரிவித்தார்.


வேதாரண்யத்தில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வேதாரண்யம் தாலுகாவில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேதாரண்யம் கோவிலில் வரும் 26ம் தேதி தேரோட்ட விழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்!!

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.


சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.
மக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள்.
தமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.


DEE PROCEEDINGS- TEACHERS TPF ACCOUNT REGDEE PROCEEDING-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்புDEE PROCEEDING-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்புTRB - வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு

Non-Teaching Staff Profile - Online Entry Form

 

ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான,எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு, ஆசிரியர் பணி வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் பயிற்றுனர்கள், 385 பேருக்கு, ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான,'ஆன்லைன் கவுன்சிலிங்' இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது.

'முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்ற அனைவரும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பணி மாறுதல் வேண்டாம் என்றால், கவுன்சிலிங்கில் பங்கேற்ற பின் தெரிவிக்கலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார். 


தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமனம்!!!

சென்னை, தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக  சத்யபிரதா சாஹுநியமனம்

செய்யப்பட்டுள்ளார்.  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானிக்கு பதில் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். சத்யபிரதா சாஹு  1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் . சத்யபிரதா சாஹுதற்போது சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.

தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஷ்லக்கானிக்கு வேறொரு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.


12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!தமிழக அரசு 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும்,
6 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்பி பதவியில் பணியாற்றிய 12 பேர் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, அசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி மற்றும் காமினி ஆகியோர் டிஐஜிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கடலோரக் காவல்படை டிஐஜியாக பவானீஸ்வரி, விழுப்புரம் சரக டிஐஜியாக சந்தோஷ் குமார், கோவை சரக டிஐஜியாக கார்த்திகேயன், திண்டுக்கல் சரக டிஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக அன்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஐஜியாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்


தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்!!!

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே,

ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது!!!

தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 
'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச பொருட்கள், ஏழு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, இவை வழங்கப்படுகின்றன. இதில், பள்ளி படிப்பு முடிந்த பின், உயர் கல்விக்காக இடமாறும் மாணவர்கள், லேப் - டாப்பை வாங்க முன்வருவதில்லை. சிலர், பள்ளிகளில் இருந்து சரியான தகவல் கிடைக்காததால், வாங்காமல் விடுகின்றனர்.இந்த வகையில், விடுபட்ட மாணவர்களுக்கான, லேப் - டாப்களை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில், அவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட லேப் - டாப்கள், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்து உள்ளது.இதையடுத்து, எத்தனை மாணவர்களுக்கு, லேப் - டாப் வழங்கப்பட்டு உள்ளது என்ற விபரத்தை, ஆதாரத்துடன் அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதோடு, வழங்கப்படாத லேப் - டாப்களை, திரும்ப ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு!!

கோவை: ''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று!!!

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக

பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும், 40 ஆயிரம் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கும், 50 லட்சம் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.பப்பாளி மற்றும் முருங்கையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு, நீர்சத்து அதிகம் உள்ளது. இதனால், மையத்திற்கு ஒரு பப்பாளி, ஒரு முருங்கை மரக்கன்றை இலவசமாக வழங்க, தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்து வருகிறது. கன்றுகள் வளர்ந்தபின், மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் முருங்கை கீரை, முருங்கை குழம்பு, பப்பாளி பழம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.சத்துணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் மரம் வளர்ப்பது, நிழல் தர மட்டுமின்றி, மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவ வேண்டும். எனவே, பப்பாளி, முருங்கையை உணவோடு சேர்க்க, அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இட வசதியிருந்தால், கூடுதல் மரங்களை நடவு செய்யலாம்' என்றார்.


பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு!!!

'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்'

என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும், மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும்.கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது 


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!