Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 24 February 2018

விரைவில் 16000 தலைமை ஆசிரியர்களுக்கு நற்பண்பு கற்பிக்கும் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்கவேண்டிய 'றெக்கை' - சிறார் கலகல மாத இதழ்ஐந்து முதல் பதினைந்து வயது வரையிலான குழந்தைகள் வாசிக்க, விளையாட, வரைய ஏற்ற மாத இதழ்... வண்ணத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது...

சிறுகதைகள், துணுக்குகள் என்று குழந்தைகளை படிப்பதில் ஈடுபடுத்தும் விஷயங்கள்...

பெற்றோர்களே குழந்தைகளுக்கு வாசித்துக்காண்பியுங்கள்...


ஆண்டு சந்தா ரூ.400.


வங்கிக் கணக்கு:

THOORIKA THE CREATIVE STUDIO,

A/c No: 357201010036527,

Union Bank of India,

Besant Nagar Branch,

IFSC: UBIN0552721


ஆண்டு சந்தா செலுத்துவோர் வங்கிக் கணக்கு எண்ணுக்கு ஆன்லைனில் தொகையை பரிமாற்றம் செய்து, அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டை 9884208075 எண்ணுக்கு வாட்ஸப் செய்க. பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றைத் தெளிவாக அனுப்புங்கள்.


rekkaimagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள்.

இன்ஜினியர் கவுன்சிலிங்- ஆன்லைனில் எவ்வாறு நடைபெறும்?

DSE PROCEEDINGS-பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு நீக்க நாள்-உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., உள்ளது. இந்த வாரியத்தில், பள்ளிக் கல்வித் துறையினர் மட்டுமேஇருப்பதால், உயர் கல்வித்துறை பணி நியமனங்களை மேற்கொள்ள, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு, தனி அமைப்பை உருவாக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், புதிய பணியிடங்களை நிரப்ப, புதிய திட்டங்களை யோசித்து வருகிறோம். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பேராசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்; இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தற்போதைய சூழலில், ஆசிரியர்கள்பற்றாக்குறையை போக்க, அண்ணா பல்கலையில் இருந்து, உபரி பேராசிரியர்களை, அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லுாரிகளுக்கு மாற்றி வருகிறோம். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,640 பணியிடங்களை, விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கூடாது அரசு ஆலோசிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2 மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக அரசு 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இந்த உத்தரவால் பிளஸ்–1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் ‘இதுதொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பிளஸ் டூ இயற்பியல் தேர்வை எளிதாக அணுகுவதற்கு தேவையான சில டிப்ஸ்

இயற்பியல் பாடம் கணிதப் பாடத்தோடு தொடர்புடைய பாடம் . பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இயற்பியலை புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். 
இரண்டு தொகுதிகளாக இருக்கும் இயற்பியல் பாடபுத்தகத்தில் மொத்தம் பத்துப் பாடங்கள். இந்த பத்து பாடங்களிலிருந்து 230 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றது. அதில் 150 மதிப்பெண்களுக்கு பதிலளித்தால் போதுமானது. முதல் தொகுதியிலிருந்து 115 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் இரண்டாவது தொகுதியிலிருந்து 115 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் கேட்க்கப்படுகின்றன. எனவே திட்டமிட்டு முதல் தொகுதில் இருக்கும் ஐந்து பாடங்களை படித்தாலே 150 க்கு 115 மதிப்பெண்களை பெற வாய்ப்பு இருக்கிறது.
முதல் பகுதி :
ஒரு மதிப்பெண் கேள்விகள். ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டிருக்கு தன் மதிப்பீடு பகுதியில் இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து 134 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதிலிருந்து 12 முதல் 16 கேள்விகள் இடம்பெறுகிறது. நான்கு கேள்விகள் இந்த 134 கேள்விகளில் சற்று மாற்றியமைத்து கேட்கப்படுகிறது. 5 கேள்விகள் புத்தகத்தில் இருக்கும் சூத்திரங்கள், விதிகள் மற்றும் நிறுவப்பட்ட சூத்திரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான வரிகள் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படுகிறது. மீதமிருக்கும் 5 கேள்விகள் உயர்நிலைச் சிந்தனைத்திறனை (Higher-order thinking) பயன்படுத்தி செய்யக் கூடியனவாக இருக்கும். இந்த ஐந்து கேள்விகள் ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக இருக்கும். இந்த ஐந்து கேள்விகளும் தான் பெரும்பாலும் மாணவர்கள் முழு மதிபெண்கள் எடுப்பதை முடிவு செய்யும் கேள்விகளாக இருக்கும்.
இரண்டாவது பகுதி:
இரண்டாவது பகுதி மூன்று மதிப்பெண் கேள்விகள். 20 கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். 15 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். 5 அல்லது 6 கணக்குகள் இந்த பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது. புத்தகத்தின் பின்பகுதியில் இருக்கும் கேள்விகள் தவிர வரையறைகள், கருத்துக்கள், எடுகோள்கள், பண்புகள், பயன்கள், குறைபாடுகள் போன்றவைகளை ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் தனியாக பிரித்துப் படித்தால் சிறப்பு.
குறை கடத்தி சாதனங்களும் அவற்றின் பயன்பாடுகளும் பாடத்தில் இருந்து அதிகபட்சமாக நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது. மின்னூட்டவியல் பாடத்தில் இருந்து மூன்று கேள்விகள் கேட்க்கப்படுகிறது. புத்தகத்தில் இருக்கும் சூத்திரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தால் 6 கணக்குகளையும் செய்துவிடலாம். சூத்திரத்தை எழுதி அதில் கொடுக்கப்பட்ட மதிப்புக்களை பிரதியிட்டு விடையை கண்டுபிடிப்பதாகவே பெரும்பாலான கணக்குகள் இருக்கும்.
மூன்றாவது பகுதி:
ஐந்து மதிப்பெண் கேள்விகள். மொத்தம் 12 கேள்விகளில் 7 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒரு கேள்வி (கணக்கு) கண்டிப்பாக பதிலளிக்க கூடியதாக இருக்கும்.
மின்னூட்டவியல் மற்றும் கதிர்வீச்சு பருப்பொருட்களில் இரட்டை பண்பு மற்றும் சார்பியல் ஆகிய இரு பாடங்களிலும் தலா இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே இந்த இரு பாடங்களில் இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளைப்  படித்தாலே 4 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். மீதமுள்ள 8 பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி வரும். ஏதாவது இரண்டு பாடங்களை தெரிவு செய்து அதிலுள்ள எல்லா  ஐந்து மதிப்பெண் கேள்விகளை படித்தாலே இரண்டு கேள்விக்களுக்கு பதிலளிக்கலாம். ஆகவே ஆறு கேள்விகளை இவ்வாறு தெரிவு செய்து படிக்கலாம். புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இருக்கும் பண்புகள் மற்றும் பயன்கள் ஆகியவற்றில் ஒன்று கேள்வியாக கேட்கப்படும்.
கடைசியாக இருக்கும் ஏழாவது ஐந்து  மதிப்பெண் கேள்வி கணக்கு. பத்துப் பாடங்களில் எந்தப் பாடத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம். இது அல்லது அது வகையில் கேட்கப்படும் இந்த கேள்வி இரண்டு கேள்விகளும் ஒரே பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. அதில் ஒரு சலுகை இருக்கிறது. இரண்டு கேள்விகளில் ஒரு கேள்வி எடுத்துக்காட்டு பகுதியில் இருந்தும் அடுத்த கேள்வி பயிற்சியில் இருந்தும் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்தில் இருக்கும் எடுத்துக்காட்டு கணக்குகள் அல்லது பயிற்சி கணக்குகள் இரண்டில் ஒன்றை படித்தாலே போதுமானது.
நான்காவது பகுதி:
பத்து மதிப்பெண் கேள்விகள். இரண்டு மற்றும் ஏழாவது பாடம் தவிர மீதமுள்ள எட்டு பாடத்திலுலிருந்து  ஒரு கேள்வி வீதம் எட்டு கேள்விகள் கேட்கப்படுகிறது. நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எனவே உங்களுக்கு பிடித்த நான்கு பாடங்களை தெரிவு செய்து அதிலுள்ள அனைத்து பத்து மதிப்பெண் கேள்விகளை படித்தாலே போதுமானது.
இயற்பியல் தேர்வுக்கு முக்கியமான கேள்விகளை படிப்பதைவிட பாடங்களை தெரிவு செய்து அதில் உள்ள அனைத்து கேள்விகளையும் படிப்பதே சிறந்த பலனைத் தரும். உதாரணமாக பத்து மதிப்பெண் கேள்விகளைப் படிக்கும் போது பத்து பாடங்களில் உள்ள முக்கியமான கேள்விகளை தெரிவு செய்து படிப்பதை விட பத்தில்  4 பாடங்களை மட்டும் தெரிவு செய்து அந்த 4 பாடங்களில் இருக்கும் அனைத்து கேள்விகளை படிப்பதே அதிக பலன் தரும்.
அது போல 3 மதிப்பெண் கேள்வி படிக்கும் போது 9 பாடத்திலுள்ள அனைத்து 3 மதிப்பெண் கேள்விகளை படித்தால் 15 கேள்வியில் 4 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். படிக்கும் பாடத்தை முழுமையாக படிக்கும் போது மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
அடிக்கடி செய்யும் தவறுகள்:
சில சமன்பாடுகளையோ அல்லது சூத்திரங்களையோ  நிறுவும் போது அதன் கடைசியில் அதனுடைய திசை, விதி அல்லது சிறப்பு நேர்வுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை மறந்து விடாமல் எழுதவேண்டும்.
ஹைட்ரஜன் அணுவின் ஆரத்துக்கான கோவையை காணுதல் போன்ற கேள்விகளில் சிலநேரங்களில் கணகிடுதலில் ஏற்படும் குழப்பத்தினால் கடைசியில் நிறுவப்படும்  கோவை தவறாகிவிடும். நிறுவப்படும் கோவையின் மதிப்பை தனியாக படித்து வைத்திருந்தால் அந்த தவற்றை சரி செய்து விடலாம்.
கால நீட்டிப்பு, நீளக் குறுக்கம் ஆகிய இரு கேள்விகளில் ஒன்று பெரும்பாலும் அனைத்து கேள்வித்தாள்களிலும் இடம் பெறுகிறது. இரண்டு கேள்விகளின் பதிலையும் மாணவர்கள் சிலநேரங்களில் மாற்றி எழுதி விடுகின்றனர்.
ஐன்ஸ்டின் ஒளிமின் விளைவு சமன்பாடு நிறுவுவதில் சிலநேரம் சிக்கல் ஏற்படுகிறது.
அச்சுக் கோட்டில் மின்புலம், நடுவரைக் கோட்டில் மின்புலம் இரண்டையும் புரிந்து கொள்ளாமல் மாற்றி எழுதுகிறார்கள்.
சீரான காந்த புலத்தில் மின்னூட்டம் பெற்ற துகள்களின் இயக்கம் மற்றும் காந்தப்புலத்தில் மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசை ஆகிய கேள்விகளையும் சரியாக புரிந்து கொள்ளாமல் சில மாணவர்கள் மாற்றி எழுதுகிறார்கள்.
புத்தகத்தின் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகளை சிறிது மாற்றம் செய்து கேட்பார்கள். மாற்றத்தை கவனிக்காமல் சிலர் தவறாக பதிலளித்து விடுகிறார்கள்.
கேள்விகளை கவனமாக படிப்பதும் புத்தகத்தில் இருக்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கான பதிலை படிப்பதும் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள்.
150/ 150 மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்பவர்களுக்கு:
2, 7 வது பாடம் தவிர மீதமுள்ள எட்டு பாடங்களில் நான்கு பாடங்களை தெரிவு செய்து அதில் உள்ள அனைத்து கேள்விகளையும் படியுங்கள் (4 X 10 =40)
2, 7 பாடங்களில் உள்ள அனைத்து 5 மதிப்பெண் கேள்விகளையும் (கணக்குகள் உட்பட )படித்து மீதமுள்ள எட்டு பாடங்களில் இரண்டு பாடங்களை தெரிவு செய்து கோள்ளுங்கள். கட்டாய வினாவுக்கு புத்தகத்தில் உள்ள அனைத்து பயிற்சி அல்லது எடுத்துக்காட்டு கணக்குகளில் ஒன்றினை தெரிவு செய்து படியுங்கள். (7 X 5=35)
9, 2, 4, 6,1, 8 ,3 ஆகிய பாடங்களில் உள்ள 3 மதிப்பெண் கேள்விகள் மற்றும் இதுவரை பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆகியவற்றை தயார் செய்யலாம். இதுவரை பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் சுமார் 10 கேள்விகள் வரை மீண்டும் திரும்ப கேட்கப்படலாம். (3 X 15=45 )
பகுதி ஒன்றில் குறிப்பிட்டது போல 30 ஒரு மதிப்பெண் கேள்விகளை தயார் செய்ய வேண்டும் (1 X 30=30 )
இவ்வாறு நீங்கள் தெரிவு செய்து படித்தால் நிச்சயமாக 150 க்கு 150 ஐ பெறலாம்.
150 மதிப்பெண் தேவையில்லை 130 க்கும் 145 க்கும் இடையில் எடுத்தாலே போதும் என்று நினைப்பவர்கள் கட்டாய வினாவைத் தவிர்த்து மற்றப் பகுதியைப் படித்தாலே போதும்.
100 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று நினைப்பவர்கள் நான்கு 10 மதிப்பெண் கேள்விகள், இரண்டு மற்றும் ஏழாவது பாடத்தில் இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகள், 9, 2, 4 பாடத்தில் இருக்கும் 3 மதிப்பெண் கேள்விகள், புத்தகத்திற்கு பின்னால் இருக்கும் ஒரு மதிப்பெண் கேள்விகள் படித்தாலே போதுமானது.
50 மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்பவர்களுக்கு புத்தகத்தின் பின்னால் இருக்கும் ஒருமதிப்பெண் கேள்விகள் (15 மதிப்பெண்கள்) , இதுவரை பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 3 மதிப்பெண் கேள்விகள் (சுமார் 7 கேள்விகள் வரை திருமப வரும்) , 2 மற்றும் 4 ஆவது பாடத்தில் இருக்கும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் (20 மதிப்பெண்கள்) , இரண்டு பாடங்களை தெரிவு செய்து அதிலுள்ள பத்து மதிப்பெண் கேள்விகள் (20 மதிப்பெண்கள் ) படித்தாலே போதுமானது.
எவ்வாறு வழங்குவது?
ஒரு வருடம் தயார் செய்ததை மூன்று மணிநேரத்தில் வழங்க வேண்டும். பதறாமல் நிதானமாக நம் தயார் செய்ததை வழங்க பயிற்சி தேவை.
எந்த பகுதியில் இருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்காமல் எந்த பகுதியில் நன்றாக பதில் தெரிந்த கேள்விகள் இருக்கிறதோ அந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.
தேவையான இடத்தில் படங்கள் வரையவேண்டும். படத்திற்கு தனியாக மதிப்பெண் இருக்கும். படங்கள் வரைய குறைவாக நேரத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக வரைந்து பாகங்களை அடையாளப்படுத்டினாலே போதுமானது.
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 30 நிமிடம், மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு 40 நிமிடங்களும், ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு 40 நிமிடங்களும், பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு 60 நிமிடங்களையும் ஒதுக்கிக் கொள்ளுங்கள். மீள் பார்வைக்கு 10 நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள்.
30+40+40+60+10 = 180 நிமிடங்கள். முழு மதிப்பெண்கள் பெற நேர மேலாண்மை மிகவும் முக்கியம், 180 நிமிடங்களில் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதாவது ஒரு மதிப்பெண்களுக்கு 1.2 நிமிடங்கள் தான் கிடைக்கிறது. கவனமாக செலவு செய்யுங்கள்.
தேர்வு எழுதுவதற்கு முன் கேள்வியை படித்து புரிந்து கொள்ளுங்கள். தவறான பதிலை எழுதுவது , பின் வெட்டி விட்டு வேறு பதிலை எழுதுவது போன்ற செயல்கள் நேரத்தை விரயம் செய்யும்.
கணக்கு செய்யும் போது விடையோடு சேர்த்து அலகு எழுதுவது முக்கியம். அதற்கு தனி மதிப்பெண் இருக்கிறது. அது போல கொடுக்கப்பட்ட தரவுகளை எழுதி கணக்குக்கான சூத்திரத்தை எழுதினாலே மதிப்பெண் இருக்கிறது.
வரைபடம் (Graph) வரையும் போது X, Y அச்சுக்களின் இயற்பியல் அளவு குறிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பண்புகள், நன்மைகள் போன்ற கேள்விகளை தெரிவு செய்து எழுதினால் குறைவான நேரத்தில் விடைகள் எழுத முடியும்.

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 

தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.


மானிய ஸ்கூட்டி திட்டம் இன்று (24.02.2018) தொடக்கம்!மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 
சென்னை கலைவாணர் அரங்கில் நாளைக் காலை அம்மா ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான ஸ்கூட்டி மானியத் திட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. சென்னையில் மட்டும் 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து முதல் கட்டமாகத் தற்போது 1000 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

சென்னையில் நாளை மாலை 5.30 மணிக்குக் கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் `அம்மா ஸ்கூட்டி திட்டம்' தொடக்க விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்கூட்டி மானியம் வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

தற்போது 1000 ஸ்கூட்டிகளும் கலைவாணர் அரங்கத்தின் பின்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டி மானிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அனைவருக்கும் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை பிரதமர் மோடியிடமிருந்து பயனாளிகள் ரூ.25 ஆயிரம் மானியம் பெற்றுக்கொண்ட பின்னர் ஸ்கூட்டியை எடுத்துச் செல்வார்கள். மோடியை வரவேற்கும் விதமாக கலைவாணர் அரங்கத்தின் இருபுறமும் வரவேற்பு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுவருகின்றன. பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்டில் இருந்தபடி, 'அட்மிஷன்' பெறலாம்!!!


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள்


அமைத்து, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்தப்படுவது வழக்கம். வரும் கல்வி ஆண்டில், அதாவது, 2018 ஜூனில் துவங்கும், மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. விருப்ப பாடம் இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி:வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன் கவுன்சிலிங்' மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது. மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்து, கணினி வழியாக விண்ணப்பித்து, ஆன்லைனில் விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். கணினி இயக்குவதில் சிரமம் உள்ளவர்கள், ஆன் லைன் வசதி கிடைக்காதவர்கள் மற்றும் கிராம மாண வர்களின் வசதிக்கு, மாநிலம் முழுவதும், 44 கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைக்கப்படும்.அரசு இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலை யின் உறுப்பு கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக் குகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் என, 44 இடங்களில், மையங்கள் இயங்கும். இதில், மாவட்டத்திற்கு ஒரு மையம் அமைக்கப்படும். பெரிய மாவட்டமாக இருந்தால், அவற்றில், இரண்டு மையங்கள் அமைக்கப்படும்.இந்த உதவி மையங்களில், எந்த காரணத்திற்காக வும், தனியார் கல்லுாரிகள் ஈடுபடுத்தப்பட மாட்டாது. இந்த மையத்தில், ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு, வழிகாட்டும் குழுவினர் இருப்பர். அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன், மாணவர்கள், தங்களின் சொந்த விருப்பத்தில், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்.இந்த மையங்களை, கவுன்சிலிங் நாளுக்கு மட்டுமின்றி, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் பயன்படுத்தலாம்; அதற்கும் வசதிகள் செய்யப்படும். இந்த திட்டத்தால், 21 ஆண்டுகளாக நடந்த, ஒற்றை சாளர கவுன்சிலிங் முடிவுக்கு வருகிறது.கவுன்சிலிங்குக்கான தேதி, விண்ணப்ப பதிவு துவங்கும் நாள், கடைசி நாள், துணை கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'ரேண்டம்' எண் மற்றும் தரவரிசை வெளியிடப்படும் தேதி போன்றவை, விரைவில் அறிவிக்கப்படும். கவுன்சிலிங் தொடர்பாக, விரிவான வழிகாட்டுதல், அண்ணா பல்கலையால் வழங்கப்படும்.மேலும், கவுன்சிலிங்குக்கு பதிவு செய்வோருக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு நாளில், கல்லுாரிகளின் பட்டியல் அடங்கிய, கையேடுகள் தரப்படும். அதில் இருந்து, கல்லுாரிகளின் பதிவு எண், பெயர், மாவட்டம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், கவுன்சிலிங்கை எப்படி அணுகுவது என்ற வழிகாட்டுதல், விண்ணப்ப படிவத்தின் மாதிரி, நிரப்பும் முறை போன்றவை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார். கவுன்சிலிங் நடப்பது எப்படி? ஆன்லைன் முறையில் இன்ஜி., கவுன்சிலிங் முறை குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:* ஆன்லைன் கவுன்சிலிங்கை, மாணவர்களுக்கு எந்த சிரமமும் இன்றி நடத்த, ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக, விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள், தங்கள் வீட்டில் உள்ள கணினி வழியாகவோ, அரசின் கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்* ஒவ்வொரு மாணவரும், பயனாளர் அடையாள குறியீடு மற்றும் ரகசிய எண்ணை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் தயாரித்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஆன்லைனில் பதிவு செய்ய படும். அதை, 'யூசர் ஐடி' வழியே மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்* விண்ணப்ப பதிவுக்கு பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். வீட்டில்இருந்தே, ஆன் லைனில் பதிவு செய்தவர்கள், சான்றிதழ் சரி பார்ப்புக்கு,உதவி மையம் வர வேண்டும். உதவி மையத்திலேயே பதிவு செய்தவர்களும், சான்றிதழ் சரி பார்ப்புக்கு வர வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நகல்கள், புகைப்படத்துடன் வரவேண்டும்* பின், மதிப்பெண் தரவரிசையை உறுதி செய் வதற்கான, ரேண்டம் எண்; தரவரிசை பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும். தர வரிசையின்படி, ஐந்து சுற்றுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கும். ஒவ்வொரு மாணவருக்கும், ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடவடிக்கைகள் இருக்கும்* முதல் மூன்று நாட்கள், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விருப்ப பட்டியலில், ஒவ்வொரு மாணவரும், கணினியில் காட்டும் கல்லுாரிகள் மற்றும் இடங்களில், விருப்பப் பட்ட எண்ணிக்கையில், கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்* முதல் நாள் முதல், மூன்றாம் நாள் மாலை, 6:00 மணி வரை, விருப்ப பதிவுக்கு, 66 மணி நேரம் அவகாசம் தரப்படும். * மூன்றாம் நாளில், மாலை, 6:00 மணியுடன் விருப்ப பட்டியல் பக்கம், 'லாக்' செய்யப்படும். அன்று இரவே, மாணவர்களுக்கான தோராய மான இட ஒதுக்கீட்டை, இன்ஜி., கமிட்டி, ஆன்லைனில் வழங்கும். மாணவர்கள் அதை பார்த்து, நான்காம் நாளில் உறுதி செய்து, ஆன்லைனில் பதில் அளிக்க வேண்டும்* ஐந்தாம் நாளில், அவர்கள் உறுதி செய்த இடம் ஒதுக்கப்பட்டு, டிஜிட்டல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். ஒரு முறை ஒதுக்கீடு பெற்றவர் கள், அதை ரத்து செய்யலாம்; மீண்டும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது* தரவரிசைப்படி, மாணவர்களுக்கு ஒதுக்க பட்ட நாட்களில், ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களின் பெயர், மதிப்பெண் அடிப்படையில்,அடுத்த சுற்றுக்கு வந்துவிடும். அடுத்த சுற்றில், எந்த கல்லுாரிகளில் இடங்கள் இருக்கிறதோ அவற்றில்,இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்!!!

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் 

மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும்,
அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு மட்டும் நேரடியாக கவுன்சிலிங் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அமைச்சர் கூறியதாவது: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 21 ஆண்டுகளாக பொறியியல் கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஆனால் தற்போது மாணவர்கள் வசதிக்காக, அவர்கள் சந்தேகங்களை முழுமையாகத் தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆண்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதற்கான வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்காக மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு இடத்திலும் பெரிய மாவட்டமாக இருந்தால் 2 இடங்களிலும் கவுன்சிலிங் மையங்கள் செயல்படும்

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்


பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!!!

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்து ஏற்கெனவே அரசாணை
வெளியிடப்பட்டது. அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்கள்படி, மாணவர் வருகைப் பதிவேடு, கல்வி இணைச் செயல்பாடுகள் போன்றவற்றில் வழங்கப்பட்டு வந்த அதிக மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
அகமதிப்பீட்டுக்கு தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து 10 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:
மாணவர் வருகைப் பதிவேடு - 2 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகைக்கு 2 மதிப்பெண்கள், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 1மதிப்பெண் வழங்கப்படும்.
உள்நிலைத் தேர்வுகள் - 4 மதிப்பெண்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் நான்கு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் - 2 மதிப்பெண்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
கல்வி இணைச் செயல்பாடுகள் -2 மதிப்பெண்; மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், தேசிய மாணவர் படை, விளையாட்டுச் செயல்பாடுகள் என ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் 33 செயல்பாடுகளில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளதை கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.
தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அக மதிப்பீடு: மொத்தம் 25 மதிப்பெண்கள்
மாணவர் வருகைப் பதிவு - 5 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகை- 5 மதிப்பெண்கள்; 75 முதல் 80 சதவீதம் வரை- 3 மதிப்பெண்கள்.
உள்நிலைத் தேர்வுகள்- 10 மதிப்பெண்கள்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் 10 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம்- 5 மதிப்பெண்கள்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
கல்வி இணைச் செயல்பாடுகள்- 5 மதிப்பெண்கள்; ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஏதேனும் மூன்று மட்டும். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!