Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 26 February 2018

பள்ளிக்கல்வி - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு சுற்றுலா - மாணவர்களை தேர்வு செய்யும் முறை - இயக்குனர் செயல்முறைகள்




CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்!



ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சென்னை நகரில் போராட்டத்துக்கு தடை கோரி நயினா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர் நயினா முகமது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO???

அரசு பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை


மார்ச்சில் பொதுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வுத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து தேர்வெழுதும் மாணவர்கள், கண்காணிப்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்வுத் துறை விதித்துள்ளது. அதன் விவரம்: 

தேர்வுப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளில் பக்க எண்ணிக்கையை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத் தாளின் முகப்பு பக்கத்தில் புகைப்படம், பெயர் ஆகியவை தங்களுடையதுதானா என்றும், தேர்வு எழுத உள்ள பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். தேர்வுக் கூடத்துக்கு துண்டுச் சீட்டுகள் எடுத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு: மாணவர்கள் தேர்வு எழுதும் போது விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்களில் எழுதுவதற்கு முன்னதாக கூடுதல் விடைத் தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் அந்தந்த பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர "ஓவர் சாய்சில்' எழுதிய விடைகளைக் கோடிட்டு அடித்தால், அந்த விடை தன்னால் எழுதப்பட்டது என்று குறிப்பு எழுத வேண்டும். அதில் அறைக் காணிப்பாளர் கையொப்பம் இடக்கூடாது. மேலும் மாணவர்கள் வராத இடத்தில் வேறு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதக் கூடாது.

தேர்வு அறைக்குள் நுழையும் முன்பே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபார்த்து காலணி, பெல்ட் ஆகியவற்றை வெளியில் விட்டுவிட்டு இருக்கையில் சென்று அமர வேண்டும். தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தாங்கள் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தாமே அடித்து விட்டால் அது ஒழுங்கீனச் செயலாக கருதப்படும். விடைத் தாளில் விடைகள் எழுதி முடித்த பிறகும் மீதம் உள்ள வெற்றுப் பக்கங்களில் குறுக்கே கோடிட வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகள் தேர்வுத் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் முடியும் வரை மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தம்

பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளதால், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொதுத தேர்வுகள் நிறைவடையும் வரை தாற்காலிகமாக மின்பராமரிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின்வாரிய மண்டல தலைமைப் பொறியாளர்கள் உள்ளி ட்டோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் மின் வாரியத்துக்குச் சொந்தமாக 1,600 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பணி நடக்கும் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்நிலையில் பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற உள்ளதால், துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அவசியமாக பராமரிப்பு செய்ய வேண்டி இருந்தால், அதற்கு முறைப்படி மின் பகிர்மான இயக்குநரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் காலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் இந்தப் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வு: மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மார்ச் 7-ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 7-ஆம் தேதி முதல் இணையம் (ஆன்-லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய பரிசோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆள் மாறாட்டத்தைத் தடுப்பதற்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் நிழற்படம் எடுக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுன் 27 முதல் 29-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் நடைபெறும். செப்டம்பர் 30-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017-ஆம் ஆண்டு 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு



'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 'அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது

ENGLISH PUBIC EXAM STUDY PLAN | 2018

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவம் பயில்வதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில விரும்பும் மாணவர்களுக்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ல் இந்திய மருத்துவ கவுன்சில் இதழில் வெளியான அறிவிப்பில், மருத்துவக் கல்வியை வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் பலரும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் சந்தேகம் எழுப்பி வந்தனர். எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமா அல்லது எம்டி, எம்எஸ் போன்ற உயர் கல்விக்கும் நீட் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம்(எம்பிபிஎஸ்) பயில விரும்பும் இந்திய மாணவர்கள் அனைவரும் 2018 மே முதல் ‘நீட்’ தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்திய மருத்துவ கவுன்சில் சான்றிதழ் பெற்று ஏற்கெனவே வெளிநாடுகளில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.நீட் தேர்வில் மொத்த மதிப்பெண் 220-ல் 108 பெறும் மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி பெறுகின்றனர். இனி இந்த மதிப்பெண் பெறுவோர் மட்டுமே வெளிநாடு சென்று படிக்க முடியும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 6-ல் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மேற்படிப்பு மற்றும் தொழில்புரிவதற்கு ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ எனும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டில் பயின்ற மாணவர்கள் மட்டுமின்றி உள்நாட்டில் படித்தவர்களுக்கும் ‘எக்சிட் டெஸ்ட்’ என்ற பெயரில் திறனாய்வு தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. 


கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. 

முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர். 

மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

'பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பாடத்திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2; மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வின் போது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், ஒரு லட்சம் ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: * உள்ளூர் மின் வாரிய அதிகாரிகளுடன் பேசி, அனைத்து தேர்வு மையங்களுக்கும், தடையில்லா மின் வசதி பெற வேண்டும் * அனைத்து தேர்வறைகளின் முன்புறமும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஓட்டை, உடைசல் பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகளை மாற்றி, மாணவர்களுக்கு வசதியான பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகள் வைக்க வேண்டும் * தேர்வின் போது, மாணவர்களின் காலணிகள், உடைமைகளை வைக்க, தனி அறைகளை ஒதுக்க வேண்டும். * அனைத்து தேர்வறைகளிலும், இயங்கும் நிலையில், மின் விசிறி மற்றும் சுவர் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்!!!

பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் 

அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., உள்ளது. இந்த வாரியத்தில், பள்ளிக் கல்வித் துறையினர் மட்டுமேஇருப்பதால், உயர் கல்வித்துறை பணி நியமனங்களை மேற்கொள்ள, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு, தனி அமைப்பை உருவாக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், புதிய பணியிடங்களை நிரப்ப, புதிய திட்டங்களை யோசித்து வருகிறோம். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பேராசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்; இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தற்போதைய சூழலில், ஆசிரியர்கள்பற்றாக்குறையை போக்க, அண்ணா பல்கலையில் இருந்து, உபரி பேராசிரியர்களை, அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லுாரிகளுக்கு மாற்றி வருகிறோம். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,640 பணியிடங்களை, விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


TN SET EXAM - 2018 Hall Ticket Published Now: Exam Date:04/03/2018.

Click here


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் திரிபுரா மாநிலம் சேரவில்லை......(RTI LETTER)

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!