Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 27 February 2018

A Simple BlackBoard App

Thanks Shanmugam ICT

மார்ச்-2018 மாத நாட்காட்டி விபரம்!!!

SET - மாநில அளவிலான தகுதித் தேர்வு : கால அவகாசம் தேவை - உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

மதுரை : மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு(செட்) விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க கோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்க்கல்வித் துறை செயலர், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


DEEO பதவி ஒழிப்பு: தமிழக அரசு முடிவு.-4ஒன்றியங்களுக்கு ஒரு DEO நியமனம்,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முழு அதிகாரம்!

அரசுப் பள்ளிகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை -கேள்விக் குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!

பொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்

தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ளநீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல்கட்டமாக 25 மையங்களும், இதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதி முதல் 100 பயிற்சி மையங்களும் செயல்பட்டன. அவற்றில் சுமார் 14,000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேலும் 312 மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த 412 மையங்களும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 72,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குஇலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த வாரங்களில் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன.

இதன் காரணமாக பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. கடந்த பிப்.24,25 ஆகிய நாள்களில் பெரும்பாலான பயிற்சி மையங்கள் செயல்படவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இதையடுத்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் தாற்காலிகமாக செயல்படாது.

தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்.3-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் மே.3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சிகள், கையேடுகள் வழங்கப்படும் என்றனர். நீட்தேர்வு நாடு முழுவதும் மே.6-ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது துணையாளரை அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்
Aadhaar Enrollment in Emis as on 26-02-2018

Emis Enrollment Status Report as on 26-02-2018

Emis Photo Status Report as on 26-02-2018

சத்துணவுக்கு குக்கர்

தமிழகத்தில் 19 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு தலா 2,500 ரூபாய் மதிப்பிலான குக்கர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு குறைவாக சத்துணவு அருந்தும் 19 ஆயிரம் மையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் இவை வழங்கப்படும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்


சித்தா படிக்க ஆசையா? : 'நீட்' தேர்வு எழுதுங்க!

'சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக ஆயுஷ் டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர், சுகதன் கூறியதாவது:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதேபோல, இந்தாண்டு முதல், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேரவும், நீட் தகுதி தேர்வு கட்டாயமாகியுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கும், ஆயுஷ் அமைச்சகம் அனுப்பியுள்ளது. அலோபதி மற்றும் ஆயுஷ் என, இரண்டிற்கும், ஒரே நீட் நுழைவு தான் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, மார்ச், 9 கடைசி நாள். எனவே, ஆயுஷ் எனப்படும், இந்திய மருத்துவ முறை படிக்க விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்'


''மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறைஅமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், காராப்பாடியில், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் துவங்கவுள்ளது. பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிடவும், மேல்நிலை படிப்புக்கு பின், எந்த கல்லுாரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, 'ஹெல்ப்லைன்' வசதி விரைவில் துவக்கப்படும்.

மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும், 'சிநேகா' என்ற தொண்டு நிறுவனத்துடன், கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் வீட்டிற்கே சென்று, 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு

மத்திய அரசு பல்கலைகளுக்கான. 'கியூசெட்' நுழைவு தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின், 

நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, 10 பல்கலைகளில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசின் பொது நுழைவு தேர்வான, 'கியூசெட்'டில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இந்த தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய அரசு சார்பில், ராஜஸ்தான் மத்திய பல்கலை நடத்துகிறது. தேர்வுக்கான பதிவுகள், www.cucetexam.in என்ற, இணையதளத்தில் துவங்கியுள்ளன.தேர்வுக்கு, மார்ச், 26 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மே, 25ல், தேர்வு முடிவை வெளியிட, ராஜஸ்தான் மத்திய பல்கலை திட்டமிடுள்ளது.

திருவாரூரில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலையில், இளநிலை முதல், பிஎச்.டி., வரை, 60க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், வரும் கல்வி ஆண்டில் சேர, கியூசெட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விபரங்களை, http://cutn.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல், பெங்களூரு, அம்பேத்கர் பொருளியல் கல்லுாரியிலும், கியூசெட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

Vellore District SPD Team visit |01.03.2018 & 02.03.2018

SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள் மட்டும் இரண்டு கட்டங்களாக.... (12.3.2018.மற்றும் 14.3.2018 )

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!