Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 28 February 2018

SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன் திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு

நான்காம் வகுப்பு- செம்மொழி பண்பாட்டுமொழி... வில்லுப்பாட்டு-வீடியோ


District Level training on phonetics and instructional strategies"Time schedule"

District Level training on phonetics and instructional strategies for primary Teachers:- District wise Batches.

மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2018-உபரி அறைக் கண்காணிப்பாளர்களில் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

திருகாஞ்சியில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும், பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


நீட் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் : அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மாநில பாடத்திட்டதின் 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். 


புதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டாம் என விண்ணப்பித்தஆசிரியர்களின் வழக்கில் எதிர்வாதியாக AEEO , DEEO அவர்கள்சேர்க்கப்பட்டுள்ளார்களா???SSA-RMSA இணைகிறது.அதிகாரிகள் பதவிகள் குறைக்கப்படுகின்றன

நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை!!!

நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ 

வெளியிட்ட அறிவிக்கைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொது பிரிவினர் எழுத முடியாது என்ற விதிமுறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை


தேர்விற்காக... சில டிப்ஸ்

1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.

2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.

4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

அதிகளவில் நீர் பருக வேண்டும்.

6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.

7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.
8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.

10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.

11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.

12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.

13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.
புதியவை படிக்க வேண்டாம்.

14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .

15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது  ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.
16. விடை குறிப்புகளில் இடம் பெற கூடிய முக்கிய கருத்துகளை மையப்படுத்தி தேர்வு எழுதுங்கள்.
17. என்னால் முடியும் என்ற நம்பிக்கை போதும் எதையும் சாதித்து விடலாம்.

வாழ்த்துகளுடன் கனவு பள்ளி பிரதீப்

வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்'

வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மருத்துவ மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

டில்லியை அடுத்த சண்டிகர் மருத்துவ கல்லுாரியில், பட்ட மேற்படிப்பு படித்து வந்த, தமிழகத்தை சேர்ந்த, டாக்டர் கிருஷ்ண பிரசாத், 24, தங்கியிருந்த விடுதியில், மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். இது, சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.

இதேபோல,2017ல், டில்லியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த, திருப்பூரை சேர்ந்த, இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். முதலில், தற்கொலை என, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரி மாணவர், சரவணனின் வழக்கு, மர்ம மரணம் என, மாற்றப்பட்டது. வெளி மாநிலங்களில் படிக்கும், தமிழக மாணவர்கள், மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது.இது குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:மாணவர் இறப்பு, துயரத்தை ஏற்படுத்திஉள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த மாநில மருத்துவ கல்வி இயக்குனரிடம், தொலைபேசியில் பேசினேன். மாணவர் இறப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தவும், அவரது உடலை, தமிழகம் கொண்டு வர உதவும்படியும் கோரியுள்ளேன். தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளும், அவரது பெற்றோருடன் சென்றுள்ளனர்.

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின், மன அழுத்தத்தை குறைப்பது குறித்தும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள், அங்கே சந்திக்கும் சவால்களை எப்படி அணுகுவது என்பது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வரும் கல்வியாண்டு முதல், வெளி மாநிலங்களில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில், 'கவுன்சிலிங்' நடத்தப்படும். மேலும், மூத்த பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்திற்கு அரசு நிதியுதவிராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கிருஷ்ண பிரசாத். இவர், ஹரியானா மாநிலம், சண்டிகரில் உள்ள, நேரு மருத்துவ கல்லுாரியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், மருத்துவ கல்லுாரி விடுதியில், துாக்கிட்டு இறந்தார்.

இதையறிந்த முதல்வர் பழனிசாமி, அவரது உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வர, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாணவனின் குடும்ப சூழ்நிலையை கருதி, அவரது குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


'நீட்' தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்!!!!

புதுடில்லி: 'நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும் 

இந்திய மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, வரும், மே, 6ல் நடக்க உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, மார்ச் 9, கடைசி நாள். இந்நிலையில், 'தேசிய மற்றும் மாநில திறந்தநிலைப் பள்ளிகளில் படித்தோர் மற்றும் உயிரியல் பாடத்தை கூடுதல் பாடமாக படித்தோர், நீட் தேர்வு எழுத முடியாது' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பல்வேறு கேள்விகள், விளக்கங்கள் கோரப்பட்டு வருவதால், சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நீட் நுழைவுத் தேர்வை மட்டுமே நாங்கள் நடத்துகிறோம். அதற்கான தகுதி உள்ளிட்டவற்றை, இந்திய மருத்துவக் கவுன்சிலே நிர்ணயிக்கிறது. நுழைவுத் தேர்வுக்கான தகுதி தொடர்பாக சந்தேகம் இருந்தால், எம்.சி.ஐ.,யிடம் கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, 'கடந்தாண்டு, 107 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது; இந்தாண்டு, 150 நகரங்களில் நடத்தப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், சமூகதளத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதலாக, இரண்டு மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை!!!

சென்னை, ஐ.ஐ.டி., யில், வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆடை கட்டுப்பாடு

கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரை டிரவுசருடன் வந்த மாணவர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை

மத்திய துறைமுகம், சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனை அமைப்பாக, சென்னை, ஐ.ஐ.டி., தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம், சென்னை, ஐ.ஐ.டி.,யில் நடந்தது. இதில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.விழா துவக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, 'மஹா கணபதி' பாடல்

பாடப்பட்டது சர்ச்சையை எழுப்பிஉள்ளது.

அநாகரிகமான உடை

இந்நிகழ்ச்சிக்கு வந்த பல மாணவர்கள், அரைக்கால் டிரவுசர் மற்றும் சாதாரண, 'டி ஷர்ட்' அணிந்து பங்கேற்றனர்.மேலும் பலர், நிகழ்ச்சியை கவனிக்காமல், கைகளில் மொபைல் போனுடன், 'சாட்டிங்' செய்தபடி இருந்தனர். இது, ஐ.ஐ.டி., பேராசிரியர்களையும், அதிகாரி
களையும் அதிர்ச்சி அடைய செய்தது.இந்நிலையில், அரைக்கால் டிரவுசருடன் நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களை, அந்தந்த துறை பேராசிரியர்கள் எச்சரித்து உள்ளனர்.இனி வரும் காலங்களில், ஐ.ஐ.டி.,யில் நடக்கும் நிகழ்ச்சிகளில்,அநாகரிகமான உடை அணிந்து வரக்கூடாது என, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதற்கிடையில், வகுப்புகளுக்கு கூட மாணவர்கள், அரைக்கால் டிரவுசர் அணிந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

பல கட்டுப்பாடுகள்

விடுதியில் தங்கி இருக்கும்மாணவர்கள், உடை மாற்றாமல் கூட வகுப்புக்கு வருவது, ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு தெரிய வந்துஉள்ளது. மாணவர்களின் இந்த செயல், சென்னை, ஐ.ஐ.டி.,யின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஐ.ஐ.டி.,க்கான அரசின் உதவிகள் தடுக்கப்படும்

அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து, வகுப்புகளுக்கு மாணவர்கள் வரவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், ஆடை கட்டுப்பாடு கொண்டு வர, ஐ.ஐ.டி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சென்னை அண்ணா பல்கலையை போன்று, ஐ.ஐ.டி.,யிலும், மாணவர்கள் வகுப்புகளில் மொபைல் போனை பயன்படுத்த மற்றும் அரைக்கால் டிரவுசர் அணிந்து வர தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும், வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முழுக்கை சட்டை மற்றும், 'பார்மல்' பேன்ட் அணிந்து வர வேண்டும் போன்ற, பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு!!!

'அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்' 

என, மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. அதில், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேசியதாவது:அனைத்து கல்வி மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மாணவர் எண்ணிக்கை மற்றும் பதிவேடுகளை, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தினமும், அரசு குறிப்பிட்ட நேரத்தில், ஆசிரியர்கள், பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு துவங்கும் முன், பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உதவியுடன், பள்ளி செல்லா குழந்தை களை, அடையாளம் காண வேண்டும். அவர்களை பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.பள்ளிகளில், சரியான மாணவர் எண்ணிக்கையை மட்டும், பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்; போலி பதிவுகள் இருக்க கூடாது. பள்ளிக்கு வராமல், வேலை நேரத்தில் வேறு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை, அரசு கவுரப்படுத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


பக்கம் அடிப்படையில் முக்கோணத்தின் வகைகள்- வீடியோ


தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ்.அறிவியல் பாடப்பகுதிகளை எளிதில் புரியும்படி பாடம் நடத்தும் ஆசிரியைதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் யூனியனில் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி. பெரியகுழிப்பட்டியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் க.சித்ரா. இவர்வகுப்பறையில்  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ்.அறிவியல் பாடப்பகுதிகளை நடத்துகிறார்.


4D அனிமேஷன்.4D quiver . போன்ற செயலிகளை பயன்படுத்தி பறவைகள், விலங்குகள் மற்றும் அவற்றின் ஒலிகளையும் மாணவர்களுக்கு இந்த செயலிகளின் மூலம் காட்டப்படும் போது நேரில் பார்ப்பது போல உள்ளதால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மேலும்  VR கிளாஸ் மூலம் பாடங்களுக்கு ஏற்ப சில வீடியோக்களை டவுன்லோட் செய்து கற்பிக்கிறார். இந்த கிளாஸ் மூலம் அந்த காட்சியை பார்க்கும்போது நேரில் பார்த்த உணர்வு, மாணவர்களால் நேரில் சென்று பார்க்க முடியாத இடங்களை இந்த கிளாஸ் மூலம் பார்க்கும்போது மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.மெல்ல கற்கும் மாணவர்களுக்காக சில செயலிகளை டவுன்லோட் செய்து பயிற்சி கொடுக்கிறார்.

இது மட்டும் அல்லாமல் மாணவர்கள் வாசிப்பு பயிற்சிக்காக வீட்டில் இருந்து சிறுவர் மலர். சிறுவர் மணி. தங்க மலர் போன்ற புத்தகங்களை எடுத்து சென்று வாசிப்பு பயிற்சி கொடுக்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் இவருடைய தலைமையாசிரியர் உறுதுணையாக உள்ளார்.

தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.. CM CELL பதில்.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக "கிராமங்கள் பட்டியல்" தயாரிக்க உத்தரவு.!!!பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது; ஏப்., 6ல், முடிகிறது. தேர்வின் முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2,756; புதுச்சேரியில், 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 278 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில், 6,754 மற்றும் புதுச்சேரியில், 147 என, மொத்தம், 6,901 பள்ளிகளை சேர்ந்த, 4.63 லட்சம் மாணவியர் உட்பட, 8.67 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும், 8,215 மாணவியர் உட்பட, 15 ஆயிரத்து, 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல் அடங்கிய பாட பிரிவில், 4.28 லட்சம்; உயிரியல் பிரிவில், 2.97 லட்சம்; வணிகவியலில், 2.42 லட்சம்; தொழிற்கல்வியில், 62 ஆயிரம்; வரலாறு பிரிவில், 14 ஆயிரம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு கண்காணிப்பு


தேர்வை முறைகேடு இன்றி, அமைதியாக நடத்தி முடிக்க, 30 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில், மேற்பார்வை பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். தேர்வை சுமூகமாக நடத்த, 6,402 முதன்மை கண்காணிப்பாளர்களும், 937 கூடுதல் கண்காணிப்பாளர்களும், 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும், தேர்வு பணிகளில் 

அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளை கண்டுபிடிக்க, 1,700 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் இடம் பெற்றுள்ள, 8,500 ஆசிரியர்கள், தேர்வு அறைகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆள் மாறாட்டம் செய்வது, காப்பி அடிப்பது, வினாத்தாளை, 'லீக்' செய்வது போன்றமுறைகேடுகளில் ஈடுபட்டால், அந்த மாணவருக்கு, 5 ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. 

3 மணி நேரம் தேர்வு

பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 மணிக்கு துவங்க உள்ளது. முதல், 10 நிமிடங்கள், வினாத்தாளை வாசித்து பார்க்கலாம். அடுத்த, ஐந்து நிமிடங்கள், மாணவர்களின், சுயவிபரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் விபரங்கள் சரிபார்க்கப்படும். ஹால் டிக்கெட்டில், புகைப்படம் மாறியிருந்தால், அவர்கள், தங்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்து செல்வது நல்லது.

இதுகுறித்து, தலைமை ஆசிரியரிடம், முன்கூட்டியே ஆலோசனை பெற வேண்டும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதலாம். அதன்பின், விடைத்தாள்கள் பெறப்பட்டு, மாணவர்கள் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்படுவர். 


'காப்பி' , பிட் வேண்டாம்


'பொது தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், அதிக பட்சம், ஐந்தாண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும்' என, அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.* தேர்வறையில், 'பிட்' வைத்திருந்து, அதை பயன்படுத்தாமல், கண்காணிப்பாளர் சோதனை செய்யும் முன்பே கொடுத்து விட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்; அந்த மாணவர், இரண்டு தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்* மற்ற மாணவரை பார்த்து எழுதியது

கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆண்டு தேர்வு எழுத முடியாது. 'காப்பி' அடிக்க, கண்காணிப்பாளரிடம் பேரம் பேசினால், அந்த மாணவர், இந்த பொது தேர்வு முழுவதும் எழுத முடியாது

* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த மாணவர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அதிக மதிப்பெண் தரும்படி, விடைத்தாளில் எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், விடைத்தாள்கள் ரத்து செய்யப்படும்

* கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விடைத்தாள்களை திருப்பி தராமல் எடுத்து செல்வது, கிழித்து சேதப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மாணவரின் தேர்வு, ரத்து செய்யப்படும்

* வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர், விளக்கம் எழுதி தர மறுத்தால், அந்த தேர்வு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும்

* விடைத்தாள்களை மற்ற மாணவர்களிடம் மாற்றி, எழுதி வாங்கினால், ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. விடைத்தாள்களில் பெயர், 'இனிஷியல்' அல்லது சிறப்பு குறியீடுகள் கண்டறியப்பட்டால், அந்த விடைத்தாள்களின் மதிப்பீடு நிறுத்தப்படும்.


கட்டுப்பாட்டு அறை அமைப்பு


பிளஸ் 2 பொதுத் தேர்வு, நாளை துவங்கும் நிலையில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் செயல்படும் என, இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்து உள்ளார்.

காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள், பெற்றோர், தங்கள் சந்தேகம் மற்றும் குறைகளை, கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். அதற்காக, 80125 94105, 80125 94115, 80125 94120 மற்றும் 80125 94125 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை

நபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணிணி மயமாக்கப்படும் என்றார்.


தேசிய அறிவியல் தினம்

இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?

தேசிய அறிவியல் தினம்“.

இது எத்தனைப் பேருக்கு தெரியும்? நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. (காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை), ஆனால் அறிவியல்தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?

இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன ்விளைவு கண்டுபிடித்த தினம். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்(1930) இவருக்கு கிடைத்தது. இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. மேலும் சில விவரங்கள்:

முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்
பிறப்பு இறப்பு : நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970

சென்னை மாகாண முதன்மைக் கல்லூரில்(Presidency College) இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசுபணியில் சேர்ந்தார். அதன் பின்னர் கொல்கத்தா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தார். 1934ல் பெங்களூர் இந்திய அறிவியல்கழக முதல்வராக பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர்.

தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். அவன் வாழ்கை தரம் உயர வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும்,
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள அறியவேண்டும். வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, அவற்றை நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அறிவியலின் சாராம்சம் இது தான்.

ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். அது தான் கல்லோடு வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. என்று கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும்.

அனைவருக்கும்  தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!