Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 5 March 2018

அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் வாக்குச்சாவடி பொறுப்பு: ஆசிரியர்கள் கோரிக்கை.!

SPD PROCEEDINGS- School team visit- to Dharmapuri & Krishnagiri Districts





12th Standard March 2018 Public Exam Answer Keys Tamil

NEET 2018 Syllabus














பேராசிரியர் பணிக்கான தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னை: பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் தேசிய தகுதி தேர்வான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.


தமிழகத்தில், தெரசா மகளிர் பல்கலை சார்பில், நேற்று மாநில அளவிலான, செட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 44 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.நேற்றைய தேர்வுக்கு, சென்னையில், 11 உட்பட, தமிழகம் முழுவதும், 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும், 41 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.'விரைவில், வினாத்தாளுக்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். 'அதில், தேர்வர்களின் கருத்து கேட்கப்பட்டு, விடை குறிப்புகள் இறுதி செய்யப்படும். பின், விடைத்தாள் திருத்தம் துவங்கும்' என, பல்கலை பதிவாளரும், தேர்வு குழு உறுப்பினர் செயலருமான, பேராசிரியை, சுகந்தி தெரிவித்துள்ளார்.

இன்று சி.பி.எஸ்.இ., பொது தேர்வு : 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. இதில், 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2வுக்கு, இன்று பொதுத் தேர்வு துவங்குகிறது. பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 4 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, ஏப்., 13 வரையிலும் தேர்வுகள் நடக்கின்றன. இத்தேர்வுகளில், நாடு முழுவதும், 11 ஆயிரத்து, 574 பள்ளிகளைச் சேர்ந்த, 27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். 10ம் வகுப்புக்கு, 1,564; பிளஸ் 2வுக்கு, 1,252 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பில், 6.71 லட்சம் மாணவியர் உட்பட, 16.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், ஐந்து மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 4.95 லட்சம் மாணவியர் உட்பட, 11.86 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மண்டலத்தில், 71 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 15 ஆயிரத்து, 700 பேர், சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

வரும் மாதங்களில் தமிழகத்தில் வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை!!!



தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு 0.5 டிகிரி 
செல்சியஸ் முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து மார்ச் மாதம் முதல் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும். நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக வெப்பத்தின் அளவு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோடை மழை தொடங்குவதற்கான காலம் ஏப்ரல் இறுதிவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தென் மாநிலங்களை விட அதிக அளவு வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் வெப்பம் இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை உணர தொடங்கினர்.
குமரியில் கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று பதிவாக வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியிருந்தது. இப்போது இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சாதாரணமாக அனுபவிக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக மே மாதமே இந்த அளவு வெப்பம் இருக்கின்ற நிலை மாறி மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதும், இரவு நேரங்களிலும் வெப்பம் தகிப்பதும் மக்களை கடுமையாக வாட்டத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் ஓகி புயல் வேளையில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல ஆயிரக்கணக்கான மரங்கள் மீண்டும் வளர்த்தெடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பசுமை போர்த்திய நிலையில் காணப்பட்ட பகுதிகள் வெட்ட வெளியாக மாறியுள்ளதும், கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் தொடக்கத்திலேயே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.


வாட்ஸ் அப் தளத்தில் செய்தி அனுப்பிய 1 மணி நேரம் வரை செய்தியை நீக்கும் வசதி!!!


_வாட்சப் தளத்தில் நாம் அனுப்பிய செய்திகளை 7 நிமிடத்திற்குள் நீக்கும் வசதி தற்போது உண்டு._

_சோதனை முறையில் முதல் கட்டமாக இந்த 7 நிமிட முறை அமலில் இருந்தது._

_தற்போது இந்த வசதி  1 மணி நேரமாக நீட்டிக்கப்பட உள்ளது._

_அதேபோல வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதிலும் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது._

_இனி நாம் பேசி முடிக்கும்வரை மைக் பட்டனை அழுத்திக் கொண்டே இருக்க தேவையில்லை. மாறாக மைக்கை ஒருமுறை அழுத்திவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்._

_விரைவில் வாட்சப்பில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரவுள்ளது._


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!