Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 6 March 2018

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு



தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

DGE-10ம் வகுப்பு Hall ticket நாளை முதல் download செய்து கொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு

பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலக ஊழியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்!!!



தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.
சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்


பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கிட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிதி அனுமதித்து அரசாணை வெளியீடு

மாணவர்களுக்கு சிறப்பு சலுகை

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மணவர்களுக்கு

சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதிப்பீடு, தியரி தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெறவேண்டிய அவசியமில்லை.இரண்டிலும் சேர்த்து மொத்தமாக 33% மதிப்பெண் பெற்றாலே போதும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்..!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.


TN School Attendance - பள்ளி வருகைப்பதிவேடு- Android செயலியில் மாணவர்களின் புகைப்படங்கள் தெரியும் வண்ணம்தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.



5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வு: மத்திய அரசு திட்டம்

டெல்லி: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத் தேர்வை

அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சிக்கிம், புதுச்சேரி, டெல்லி, ஹிமாச்சல், குஜராத், பஞ்சாப் உட்பட 22 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ல் ஆரம்பம்: தேர்வுத்துறை!!!

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் 

பணி ஏப். 12ல் ஆரம்பிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 70 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!