Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 7 March 2018

CLASS ROOM LANGUAGE FOR TEACHERS AND STUDENTS

கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்விச் சீராக கொடுத்த நிகழ்ச்சி


பெரம்பலூர்: பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி அரசு பள்ளி ஒன்றிற்கு, கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்விச் சீராக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லக்குடி அரசு பள்ளி 2012ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட இந்த பள்ளிக்கு தனியாக கட்டிடம் இல்லாததால் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்த அதே பள்ளியில் உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வந்தது. கூடுதல் கட்டிட வசதி இல்லாமல் இட நெருக்கடியில் தவித்ததால் தனியாக பள்ளி கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஊர்மக்களே 5 ஏக்கர் நிலம் வழங்கியதை அடுத்து 12 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பழைய இடத்தில் இருந்து 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.

இந்த நிகழ்வினை ஊர்மக்கள் ஒன்றுகூடி விழா எடுத்தனர். பள்ளிக்கு தேவையான பீரோல், டேபில், இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை மேள தாள முழங்க ஊரைச்சுற்றி வந்து கல்விச் சீராக வழங்கினர். தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து பள்ளிகளிளும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று கிராம மக்களே முன்வந்து கல்விச் சீர் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக பள்ளி தலைமையாசிரியர் சங்கீதா கூறியுள்ளார். பெரம்பலூரில் கொத்தவாசல் மற்றும் கத்தாலைமேடு அரசு பள்ளிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. அடிப்படை வசதியே இல்லதா கிராமங்களில் கல்விச் சீர் நிகழ்வுகளால் 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற ஒளவையாரின் வாக்கு மெய்யாகிறது என்றால் மிகையல்ல


144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்

சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் இயங்கி வந்த தனியார் மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரத்தை, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., ரத்து செய்தது. இதுகுறித்து, மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், '2016 -17 கல்வியாண்டில், தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரியில், இடமளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தனியார் கல்லுாரியைச் சேர்ந்த, 144 மாணவர்களுக்கும் சிறப்பு கவுன்சிலிங், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில், நேற்று நடந்தது. இதில், அனைத்து மாணவர்களும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து, தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறியதாவது:அரசு மருத்துவ கல்லுாரிகளில், சென்னை, ஸ்டான்லி மற்றும் புதுக்கோட்டை மருத்துவ கல்லுாரிகளை தவிர, பிற மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் இடங்களை அதிகரித்து கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதன்படி, 144 மாணவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம்'

சென்னை : 'மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர்.

நாளைய தேர்வு குறித்தும், முதல் நாளில் சந்தேகங்கள் பெறலாம்' என, சேவை மைய அதிகாரிகள் கூறினர்.தமிழக மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவும், மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், சேவை மையத்தை, பள்ளிக்கல்வித் துறை துவக்கி உள்ளது. இந்த மையத்தில், '104' மருத்துவ சேவை மையத்தின், மனநல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:மாணவர் சேவை மையம் துவக்கப்பட்ட, ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன் பெற்றுள்ளனர். தற்போது, மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, பாடத்திட்டம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்கள், தீர்க்கப்பட்டு வருகின்றன.இதில், நாளைய தேர்வு குறித்த சந்தேகங்களை, மாணவர்கள், முதல்நாளே கேட்டு தெளிவு பெறலாம். இதற்காக, சேவை மையத்தில், பாட வாரியான ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கென தனியே சங்கங்கள் அமைத்து செயல்படுகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தேர்தல் வரும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை, சங்க நிர்வாகிகள் சந்தித்து, கோரிக்கை மனு அளிப்பது வழக்கம். தேர்தல் முடிந்ததும், ஆட்சிக்கு வரும் கட்சியின் தலைவர்களுக்கு, சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடக்கும்.இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு சாதகமாக செயல்படும் ஆசிரியர்களால், அரசு நிர்வாகத்தின் ரகசியங்கள், கட்சி தலைவர்களுக்கு கசிவதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துஉள்ளன. இதனால், சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.இதன் ஒரு கட்டமாக, 2014 பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்ததாக கூறி, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டு, கல்வித் துறை அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு, ராஜ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், தேர்தலில் கட்சி தலைவர்களை சந்தித்த ஆசிரியர்கள் குறித்தும் வெளியான செய்திகளையும், கல்வித் துறையிடம் கடிதமாக கொடுத்து, தன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதா என, கேட்டுள்ளார்.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றும் செயல்படும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டியல் வந்ததும், அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். அந்த விளக்கத்திற்கு பின், அவற்றில் விதிமீறல் இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.


ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திராசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் கே.ேக.வேணுகோபால், ‘‘கடந்த காலத்தில் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையில் காலக்கெடுவை நீட்டித்துள்ளோம். அதேபோல், இம்முறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால், இம்மாத இறுதியில்தான் அதை அறிவிக்க முடியும்

இதன் மூலம் மனுதாரர்கள் தங்கள் இறுதிவாதத்தை முன்வைக்க முடியும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘அட்டர்னி ஜெனரல் சிறப்பான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் மூலம் மனுதாரர்கள் மீண்டும் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க முடியாது’’ என்றனர்.

இம்மாதம் 31ம் தேதிக்குள் செல்போன், வங்கிக் கணக்குகள், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் ஆதாரை இணைக்காத ஏராளமானவர்கள் நிம்மதி மூச்சு விடலாம்.


நீட்' தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு!!!

சென்னை: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, 

'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 9ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் இரவு, 11:30 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கான கட்டணத்தை, மார்ச், 10 இரவு, 11:30 மணிக்குள் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.


செட்' தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்

தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே 

இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, கவர்னர் விசாரணை நடத்த, பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்ச்சை : உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படுகிறது. அதனால், தமிழக அரசின், செட் தேர்வில், அதிக பட்டதாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான, செட் தேர்வு, மார்ச், 4ல், மாநிலம் முழுவதும் நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சர்ச்சை எழுந்துள்ளது.
சந்தேகம் : மொத்தம், 50 கேள்விகளில், புதிதாக, ஏழு கேள்விகள் மட்டுமே இடம் பெற்றன; 43 கேள்விகள் முந்தைய ஆண்டுகளின், நெட் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றவை என்ற, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. நெட் தேர்வில், 2012 மற்றும், 2013ம் ஆண்டு வினாத்தாள்களில், தலா, 13; 2014ம் ஆண்டு வினாத்தாளில், ஏழு; 2016ம் ஆண்டு வினாத்தாளில், 10 கேள்விகள் என, மொத்தம், 43 கேள்விகள் பழைய வினாத்தாள்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலை, நெட், செட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுஉள்ளது.உயர்கல்வியில், ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக உயர்கல்வித் துறை நடத்திய, செட் தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகள் இடம் பெற்றதில், முறைகேடு பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை : இது குறித்து, விசாரணை நடத்துமாறு, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் அளிக்க உள்ளதாக, நெட், செட் சங்கத்தின் ஆலோசகர், பேராசிரியர், நாகராஜன் தெரிவித்தார்.


பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள்,

மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று
மார்ச் 07-2018

       

*◼மார்ச் 7 (March 7) கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.*


           *🏵 நிகழ்வுகள் 🏵*

◼1793 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.

◼1798 - பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

◼1799 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.

◼1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும்எதிரான போரில் வெற்றி பெற்றான்.

◼1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.

◼1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

◼1902 - இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.

◼1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.

◼1912 - தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.

◼1918 - முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது.

◼1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தைஜெர்மனி கைப்பற்றியது.

◼1951 - கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.

◼1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.

◼1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

◼2006 - காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

◼2007 - இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடாவிமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

 

          *🏵 பிறப்புகள் 🏵*

◼1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)

◼1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)

1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)

◼1886 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)

◼1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)

◼1938 – ஆல்பெர்ட் ஃவெர்ட், பிரான்சிய இயற்பியலாளர்

◼1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

◼1945 – தி. வே. சங்கரநாராயணன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்

◼1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி

◼1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், கரிபியன் துடுப்பாளர்

◼1958 – ஆலன் ஃஏல், அமெரிக்க வானியலாளர்

◼1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குனர்

◼1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை


 

          *🏵 இறப்புகள் 🏵*

◼203 – பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா( கிறித்தவ மறைசாட்சிகள்

◼1274 – தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225)

◼1625 – ஜோஹன் பாயர், செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572)

◼1832 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777)

1924 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857)

◼1944 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1860)

◼1961 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)

◼1969 – சம்பூர்ணாநந்தர், இந்திய அரசியல்வாதி (பி. 1891)

◼1990 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897)

◼1999 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)

◼2014 – பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்

 

          *🏵 சிறப்பு நாள் 🏵*

◼ஆசிரியர் நாள் (அல்பேனியா)

               

TNSET 2018 - Official Answer Key Download

Click here

Download          

 COMMON  - PAPER I   

(ALL SUBJECTS) - PAPER II

              SET E - Answer Keys

              SET F - Answer Keys

http://www.motherteresawomenuniv.ac.in/TNSET%202018%20Ans%20Keys/All%20Papers.html


ஆசிரியர் தகுதித்தேர்வு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!

கல்வியாளரான நடிகர் தாமு வழங்கும்


ஆசிரியர் தகுதித்தேர்வு
ஒரு நாள் இலவச விழிப்புணர்வு முகாம்!

இடம் : சென்னை

வரவிருக்கும் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற  விரும்பும் ஆசிரியர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். TET தேர்வில் வெற்றி பெற விடாமல் முட்டுக்கட்டையாக இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுலபமாக வெற்றியை அடைய வைக்கும் இந்த சிறப்பு பயிற்சி .

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி!!

முன்பதிவு செய்ய அழைக்கலாம்: 044 4863 7811/ 2432 7811, 81444 47811


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!