Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 14 March 2018

கூகுள் மேப்ஸ்-ன் 4 புதிய அப்டேட்ஸ் என்ன தெரியுமா?

கூகுள் மேப்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய அப்டேட்டில் நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

பிளஸ் கோடுகள்:

கூகுள் மேப்ஸ் செயலியில் பிளஸ் கோடுகள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் இந்தியவிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபா நியூமெரிக் கோடுகளின் முதல் நான்கு இலக்க எண்கள் பகுதியை குறிக்கும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதனுடன் கூடுதல் எண்களை பதிவிடும் போது குறிப்பிட்ட பகுதியின் சரியான இடத்தை சூம் செய்யும். பிளஸ் கோடுகளை மேப்ஸ் செயலியில் இருந்தபடியே உருவாக்கி அதனை அனைத்து வகையான குறுந்தகவல் சேவை மூலமாகவும் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். 

மேலும் பிளஸ் கோடுகளை கூகுள் சர்ச் பாரிலும் பேஸ்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட இடம், கூகுள் மேப்ஸ் சேவையில் தானாக திறக்கும்.

முகவரி சேர்க்கலாம்:

கூகுள் மேப்ஸ்-இல் இதுவரை சேர்க்கப்படாத முகவரியை சேர்க்கும் சேவையை இந்த வசதி வழங்குகிறது. இந்த அம்சம் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பின் வைத்து அதனை மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய முடியும். இந்த அம்சத்துடன் வெரிஃபிகேஷன் ஃபில்ட்டர் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட் அட்ரெஸ்:

ஸ்மார்ட் அட்ரெஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் இடத்தின் அருகாமையில் இருக்கும் புகழ் பெற்ற அல்லது அனைவருக்கும் தெரிந்த இடங்களை காண்பிக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தேடும் குறிப்பிட்ட இடத்தின் அருகாமையில் சென்றிட முடியும்.

கூடுதல் மொழிகள்:

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆறு இந்திய மொழிகளுக்கான சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் நேவிகேஷன் வசதியை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் தேட முடியும். முன்னதாக இந்தியாவில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது.

05-04-2018 க்குள் CCE சார்பான அனைத்து பதிவேடுகளும் முடிக்கப்பட்ட வேண்டும்- DEEO

குரூப் 3 தேர்வு முடிவு: 5 ஆண்டுக்கு பின் வெளியீடு

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே தனது நோக்கம்: சார் ஆட்சியர் கே.எம். சரயு பேச்சு.

மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம்


வளர்ந்த மாணவர் ஒருவர், தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம்

இந்தக் காட்சியின் அழகே ஆசிரியர்களிடம் நிகழும் பெருமிதம் தோய்ந்த பதட்டம்தான்.

வளர்ந்த அந்த மாணவர் தற்போதைய திருவண்ணாமலை ஆட்சித் தலைவர் என்பதே இந்தக் காட்சியின் சிறப்பு.

அரசு பேருந்தில் பயணிக்க சீட் பெல்ட் கட்டாயம் : விபத்தை தவிர்க்க கர்நாடக அரசு புதிய திட்டம்

அரசு பேருந்துகளில் பயணிகள் சீட் பெல்ட் அணிவதை கர்நாடகா அரசு கட்டாயமாக்கியுள்ளது. சாலை விபத்துகளை தவிர்பது குறித்து அம்மாநில போக்குவரத்து உயரதிகாரிகள் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது நெடுஞ்சாலைகளில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளின் போது ஓட்டுநர் பிரேக் பிடிக்கும் போது கீழே விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கர்நாடகத்தில் விபத்துக்களை குறைக்க பேருந்துகளில் சீட் பெல்ட் கட்டாயமாக்க போக்குவரத்து அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதனையடுத்து கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கர்நாடக போக்குவரத்து துறையால் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சராசரியாக ஆண்டு தோறும் பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகளில் 270 பேர் உயிரிழப்பதாக புள்ள விவரங்கள் தெரிவித்துள்ளன.


IGNOU-BED MERIT LIST January 2018: Second PhaseMerit List

Waitlisted Candidates

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி, தேர்வு முறை, உளவியல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர்-ஆசிரியர்கள் கலந்துரையாடல், பிற திறன்களில் மாணவர்களின் நிலை, கல்விச்சூழலில் சந்திக்கும் சவால் குறித்தும் ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு, ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

 

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.


அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

பிளஸ் 1 ஆங்கிலம் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 படிப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த 7ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்தது. அன்றைய தினம் மொழி பாட தேர்வுகள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 27,994 மையங்களில் 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் பொது தேர்வை எழுதினர். அதில், 1 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கூறினர்.

இதேபோல், இன்று ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 1 பொது தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் நுழைவு தேர்வுக்கு தயார் ஆவதிலேயே முணைப்பு காட்டி வந்தனர். இந்நிலையில், பிளஸ் 1 படிப்பை பொது தேர்வாக நடத்த முடிவு செய்தது அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 பாடத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வைத்துள்ளது. 

குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்

ஆசிரியர் மாணவர் கண்நலன் மற்றும் உடல் நலன் குறித்துஇயக்குனர் சுற்றறிக்கை

பள்ளிகளில் புத்தக வங்கி ஏற்படுத்தும் நடவடிக்கை சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்

பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்!!!

கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கூட்டுறவு சங்க தேர்தல்: பாதுகாப்பு வேண்டும்

'தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழக அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:தற்போது, 

பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும், 7,297 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில், 450 சார் - பதிவாளர்கள்; 600 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 1,150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள பலர், புதியவர்களாகவும், பெண்களாகவும் உள்ளனர். அதனால், தேர்தல் பணியில் அனுபவம் உள்ள, பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டு எண்ண, வட்டார அளவில் மையங்களை அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணி ஊழியர்களுக்கு, இயல்பு பணிகளில் இருந்து விலக்களித்து, கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

 புதிய ஊழியர்களுக்கு, தேர்தல் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளைஅரசு ஏற்காவிட்டால், தேர்தல் பணியை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி??

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய 


கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத் திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆய்வு செய்ய கூடுதல் நிதி ஒதுக்குவது எப்போது? எவ்வளவு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து மார்ச் 27-க்குள் பதிலளிக்க உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பல்கலை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'

சென்னை: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி யில்,

இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
தேர்வர்கள், www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மறுமதிப்பீடுக்கு விரும்புவோர், இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்புவோர், பாடத்துக்கு, 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு, நாளை முதல், 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


நீட்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளை முதல் அவகாசம்!!!

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால்

அதனை வியாழக்கிழமை (மார்ச் 15) முதல் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ மூலம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், பல மாணவர்கள் விண்ணப்பங்களில் தவறான விவரங்களை அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தவறான விவரங்கள் அளிப்பதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, 100 சதவீதம் சரியான விவரங்களை உறுதி செய்து கொள்ளும் வகையில், விண்ணப்பங்களில் ஒருமுறை திருத்தம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி மார்ச் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இணைதயளத்திலேயே திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றொரு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது.
திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, மாணவர்கள் அந்தத் திருத்தத்துக்கான விவரங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றோர் கவனமாகப் படித்து, தங்கள் பிள்ளைகள் திருத்தங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!