Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 15 March 2018

ஒரே பள்ளியை சேர்ந்த 9 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து DEEO உத்தரவு


01.01.2018 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முதல் 7% வரை உயர்த்தப்பட்டது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது


அசத்தும் SSA மேற்பார்வையாளர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மைய வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக புதர்களும்,
செடிகளுமாய் காட்சியளித்தது..

கழிப்பிட வசதியும்,தண்ணீர் வசதியும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.. இதெல்லாம் பழைய செய்தி...

ஆனால் மேற்பார்வையாளராக பொறுப்பேற்ற திருமதி.சிவயோகம் அவர்களின் ஆர்வம் மற்றும் பணி ஈடுபாடு காரணமாக இன்று பளிச்சிடுகிறது..
பராமரிப்பிற்கான மொத்த செலவையும் தான் ஒருவரே ஏற்றுக்கொண்டு செய்துள்ளார் என்பது மிகவும் வரவேற்கத்தக்க விசயமாகும்..

தவறு செய்யும் அலுவலர்களை எளிதில் குறைசொல்லி விடுகிறோம்.. நல்லது செய்தால் எவருக்கும் ஏனோ பாராட்ட மனம் வருவதில்லை..
தன் அலுவலகத்தை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது அதிகாரியின் கடமை என்றாலும்கூட சிறு சிறு அங்கீகாரங்கள் அவர்களை மேலும் செம்மைப்படுத்தும்..
பாராட்டி மகிழ்வோம்..

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

Budget Speech for the year 2018-2019 - Tamil Versionமருத்துவ மாணவ சேர்க்கையில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்: பட்ஜெட்


சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதிருக்கும் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களில் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி தொடர்பான அறிவிப்புகள்:

உயர்கல்வித் துறைக்கு ரு.4,620 கோடி நிதி ஒதுக்கீடு.

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு.

இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கீடு


தமிழ்நாடு மாநில அளவில் கல்லப்பாடி CRC மையம் சாதனை

ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் 2 பணி ஒதுக்கீடு- தேர்வு பணி, தேர்தல் பணி. கூட்டுறவு தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க கோரிக்கை


2018-19ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள் உடனுக்குடன்!

100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்

கல்வித்துறை ஊழியருக்கு சலுகை? தேர்வு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2 தேர்வில், கல்வித்துறை பணியாளர் குடும்பத்தினருக்கு, மறைமுக சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகாரை யடுத்து, அனைத்து தேர்வு மையங்களிலும், சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி அதிகாரியிடம் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மகன், கடலுார் மாவட்டத்தில், பிளஸ் ௨ தேர்வு எழுதுவதாகவும், அவருக்கு தேர்வு மையத்தில் சலுகை தரப்படுவதாகவும், தேர்வுத்துறைக்கு, மொட்டை கடிதம் வந்தது.இதையடுத்து, அதிகாரிகள், தேர்வு மையத்தில் ரகசிய சோதனைநடத்தி, சம்பந்தப்பட்ட மாணவரின் விடைத்தாளை, தனியே சேகரித்து வைத்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களிலும், தனியார் பள்ளி தேர்வு மையங்கள் மீது வந்த புகார்களிலும், சந்தேகத்திற்கிடமான விடைத்தாள்கள் தனியே, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, தேர்வுக்கு பின், தனியாக திருத்தி, உண்மையை கண்டறிய, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.'தேர்வில் எந்த முறைகேடுகளுக்கும் இடம் தரக்கூடாது. மீறினால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று 2018-19ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்

வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.


இந்நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஏழாவது ஊதியக் குழு நடைமுறை, புதிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட செலவினங்களைச் சமாளிக்க வருவாயைத் திரட்டுவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது.
கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நண்பகலில் கூடவுள்ளது. இதைத் தொடர்ந்து, பேரவை கூட்டத் தொடர் தேதிகளை பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பார்.

துறை வாரியான மானியக் கோரிக்கைகள்: அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான நிதியைக் கோர பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக, தினந்தோறும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 முதல் 25 நாள்களுக்கு நடைபெறும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பதிலுரை முடிக்கப்பட்ட பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றிய பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
காவிரி விவகாரம்: நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை கூட்டத் தொடர் நான்கு நாள்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் உள்பட பல முக்கியப் பிரச்னைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கு அரசுத் தரப்பில் இருந்து உரிய பதில்களை அளிக்க முதல்வரும், அமைச்சர்களும் தயாராகி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் எத்தகைய செயல்பாடுகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க அதிமுக, திமுக எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் தனித்தனியாக வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்திலும் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த கட்சிகளின் தலைமைகள் வழங்கவுள்ளன.


10ம் வகுப்பு தேர்வு நாளை துவக்கம் : 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. இதில் 10 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.இத்தேர்வுக்கு தமிழகத்தில் 3,560 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

புதுச்சேரியில் 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தாண்டு, மாணவர்களின் வசதிக்காக அருகருகே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால், 237 தேர்வு மையங்கள், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இத்தேர்வை, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 10 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து, 1,096 பேர் எழுதுகின்றனர். அவர்களில், ஐந்து பேர் திருநங்கையர். ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 465 பேர் மாணவியர். இந்த தேர்வில் 3,659 மாற்று திறனாளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்றாலும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள, 8,303 மாணவர்கள், அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம், அரபிக், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழி பாட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளது. தேர்வு கண்காணிப்புக்கு 6,000 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 6,402 துறை அதிகாரிகளும், 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும், தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியிடப்படுகின்றன.

கட்டுப்பாட்டு அறை திறப்பு : பத்தாம் வகுப்பு மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க 12 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

தேர்வர்களின் சந்தேகங்களுக்கு, 93854 94105, 93854 94115, 93854 94120, மற்றும், 93854 94125 என்ற, எண்களில் விளக்கம் பெறலாம்.நாளை முதல் ஏப்., 20 வரை, காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, கட்டுப்பாட்டு மையம் இயங்கும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!